Friday, December 15, 2017

@avargalUnmaigal
கவர்னரா கழிவறை ஆய்வாளாரா?


200 அறைகள் கொண்ட எங்கள் ஹோட்டலில் கழிவறைகளை ஆய்வு செய்ய அனுபவம் வாயந்த ஆளுநர்கள் தேவை

ஆய்வின் போது குளிப்பதை பார்த்து விட்டதாக தமிழக ஆளுநர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
நல்லா அழுக்கு தேய்ச்சு குளிக்கிறாரா என்று சோதனை செய்து பார்ப்பது தவறா என்ன?  அடேய் இதற்கு எல்லாம் ஆளுனரை குறை  சொன்னா நாம் எப்படிடா வல்லரசு ஆவது.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தரத்தை அறிய கல்வி துறை அதிகாரிகள் வருவது போல இனிமேல் பள்ளிகளில் இருக்கும் கழிவறைகளின் தரத்தை அறிய ஆளுநர் வரக் கூடும் அதனால் கல்வி நிறுவனங்களே ஜாக்கிரதை!

தமிழக ஆளுனரை முன் உதாரணமாக எடுத்து கொண்டு மற்ற மாநில ஆளுனர்களும் கழிவறைகளை ஆய்வு செய்ய வேண்டும்#மத்திய அரசு அறிவிப்பு

2017 சிறந்த கழிவறை ஆய்வாளராக ஆளுனர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு  இந்த ஆண்டின் சிறந்த  தேசிய ஆய்வாளர்  விருது கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது



கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்

பார்த்தீங்களா எப்படி எல்லாம் ஆளுனரை பாதுகாக்கிறார்கள்




அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : கன்னியாகுமரி புயலால சின்னாபின்னாமாகி இருக்கிறது அங்கு நிவாராண பணிகள் நன்கு நடக்கிறதா என்று ஆய்வு செய்வதைவிட்டுவிட்டு கழிவறைகளை ஆய்வு செய்யப் போய் அசிங்கப்பட்டு இருக்கிறார்...கழிவறைகளுக்கு பதிலாக சட்டமன்றத்தை ஆய்வு செய்து அங்கு அசிங்கங்களாக இருக்கும் ஆட்களை தூக்கி போட்டு இருந்தாலாவது கவர்னரை வாழ்த்தலாம் ஹும்ம்

7 comments:

  1. தரமற்ற வார்த்தைகளைத் தவிர்த்தும் பகடி செய்யலாம். இன்னும் ரசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தரமற்ற வார்த்தைகள் ஏது என்று சுட்டிக்காட்ட்டினால் அது சரி என்று என் மனதிற்குப்பட்டால் திருத்தி கொள்கிறேன்....சுத்த தங்கத்தால் நகைகள் செய்ய இயலாது...

      Delete
  2. மானக்கேடு வேறென்ன செய்வது ?

    ReplyDelete
    Replies
    1. அவரவர்களுக்கு என்ன பணிகள் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறதோ அதை மட்டும் செய்தாலே போதுமானது அல்லவா ? அதை மீறினால் இப்படி அவமானப்பட வேண்டியதுதான்

      Delete
  3. தமிழக ஆட்சியே தற்போது தலைகீழாகத்தானே நடக்கிறது

    ReplyDelete
  4. பலமில்லாத அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட கட்டடம் ஆட்டம் காணத்தான் செய்யும்

    ReplyDelete
  5. ஐயோ பாவம் ஆளுனருக்கு வந்த சோதனை! கூட வந்த அதிகாரிகள் அப்ப எதைப்பார்த்தார்களோ?)))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.