Tuesday, November 7, 2017

@avargalUnmaigal
ரெஸ்டராண்ட் ஸ்டைல் ஹோம் மேட் ஆனியன் ராவா தோசை செய்வது எப்படி?


ரவா தோசை பிடிக்காதவர்கள் அதிலும் ஆனியன் ரவா தோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். நாம் எந்த ஹோட்டலுக்கு சென்றாலும் என்ன ஆர்டர் பண்ணுவது, எதை சாப்பிடுவது என்று தெரியவில்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு ஆர்டர் செய்வது ஆனியன் ரவா தோசைதான்.
ஆனியன் ரவா தோசை சுடுவது என்பது கம்ப சூத்திரம் அல்ல .அதை சுடுவது மிக மிக எளிது . அதிலும் வீட்டிற்கு தீடிரென்று விருந்தாளிகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் மிகவும் கை கொடுப்பது இந்த தோசைதான். தோசை சுட்டு போடுவதற்குதான் டைம் எடுக்குமே தவிர அதை தயாரிக்க எடுக்கும் நேரம் 3 நிமிடங்கள் கூட ஆகாது.




#avargalunmaigal
இதோ உங்களுக்காக நான் சொல்லப் போகும் மிக எளிய முறை..


தேவையான பொருட்கள் :

ரவை  -  1 கப்
அரிசி மாவு 1 கப்
மைதா - 2 டீஸ்பூன்
சீரகம்  - 3 ஸ்பூன்
மிளகு தூள் 2 ஸ்பூன் (மிக நைஸாக இருக்க கூடாது அரைகுறையாக பொடித்தது )
பெருங்காயப்பவுடர்  டேஸ்டுக்காக
உப்பு தேவையான அளவு
வெங்காயம் 2 அல்லது 3 (பொடியா நறுக்கி கொள்ளவும்)
பச்சை மிளகாய் 5  ( பொடியாக நறுக்கி கொள்ளவும்)
எண்ணெய் தேவையான அளவு


முதலில் ரவை ,அரிசி மாவு, மைதா மாவு, சீரகம், மிளகு தூள், பெருங்காயபவுடர் இதை எல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு மிக்ஸ் செய்துவிட்டு அதன் பின் அதில் தண்ணீர் வீட்டு கரைக்கவும்.. அந்த கரைசல் எப்படி இருக்கவேண்டுமென்றால் நாம் மோர் கடைந்து வைப்பது போல மிக தண்ணிராக கரைத்து கொள்ளவும்.


அதன் பின் அடுப்பில் தோசைக்கல்லை போட்டு, கல் காய்ந்ததும் முதலில் கல்லில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை அதில் தூவி, அதன் பின் கரைத்து வைத்த மாவை எடுத்து கல்லில் வீட்டு வாசலில் தண்ணிர் தெளிப்பது மாதிரி தெளிக்கவும் அல்லது கரண்டியால் சுற்றி ஊற்றவும். அதன் பின் அந்த தோசையை சுற்றி நன்றாக எண்ணெய் விட்டு தோசை நன்றாக முறுகலாக வந்ததும் எடுத்துவிடவும். திருப்பி போட வேண்டிய அவசியம் இல்லை.

வெளிநாட்டில் உள்ளவர்கள் தோசை கல்லு இல்லை என்றால் கவலைப்படவேண்டாம் பேன்கேக் செய்யும் நீண்ட எலக்ட்ரிக் கல்லில் போட்டு எடுக்கலாம்.. இந்த எலக்ட்ரிக் கல்லில் செய்தால் தோசை மிக நீளமாக ரெஸ்டரண்டில் செய்வது போல பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இன்று நேரம்மில்லாததால் ரெகுலர் தோசைக் கல்லில் செய்து படம் போட்டு இருக்கிறேன்.

புதிதாக செய்பவர்களுக்கு தோசை ரவுண்டாக வரவில்லை அல்லது பிஞ்சு போய் வருகிரது என்று கவலைப்பட வேண்டாம். அப்படி பிஞ்சு வந்தாலும் இந்த முறையில் தோசை செய்தால் தோசை மிக டேஸ்டாக இருக்கும். எப்படியும் ரவுண்டாக வந்தாலும்கடைசியில்  பிய்த்து பிய்த்துதானே சாப்பிட போகிறோம்..


செஞ்சு பாருங்க... சுவைத்து மகிழுங்க....பதிவு பிடித்து இருந்தால் உங்கள் கருத்தை சொல்லிட்டு போகவும் இல்லையென்றாலும் சொல்லிட்டு போங்கள்

ஆனால் பார்த்துவிட்டு பேசாமல் போனால் நீங்கள் வைத்திருக்கும் செல்போன் அல்லது நகைகள் பறி போகும் வாய்ப்புக்கள் உள்ளது என்று என் உள் மனம் சொல்லுகிறது... ( ஹீஹீ எப்படியெல்லாம் இவங்களை மிரட்ட வேண்டி இருக்குது)


அன்புடன்
மதுரைத்தமிழன்

22 comments:

  1. ரவா தோசை வார்ப்பதுஒரு கலை! ஆனியன் ரவாவும் அங்ஙனமே ! படத்தில் தோசை பார்க்க நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies

    1. நீங்கள் அந்த கலையில் மிக வல்லுனராக இருப்பீர்கள் என நினைக்கிறேன்

      Delete
    2. அப்படிச் சொல்ல முடியாது. இதெல்லாம் "வாச்சுக்கறதுதான் அமைஞ்சுக்கறதுதான்" கேஸ்!

      :)))

      Delete
  2. ஹா ஹா தோசை பிஞ்சு வந்தாலும் பரவாயில்லை பிய்த்து தானே சாப்பிட போறோம் அப்ப இதுக்கு தோசை உப்பும்மா என்று பெயர்வைத்துவிடலாமா ......

    ReplyDelete
    Replies


    1. அதுக்கு உப்புமா என்று பெயர் சுட்டினாலே போதும் இப்போது ரவா தோசையை ஆசையாக சாப்பிடுபவர்கள் அதை கண்டாலே தூர காதம் போவார்கள் அந்த பாவத்தை நாம் செய்யவேண்டாம்

      Delete
  3. வெங்காயத்தையும் மிளகாயையும் தோசைக்கல்லில் போட்டுவிட்டு, அதன் மேல் மாவை ஊற்றுவது இதுவரை செய்ததில்லை. இது நல்ல ஐடியா மாதிரித் தெரியுது. இந்த வார இறுதியில் செய்துபார்த்துவிட்டுச் சொல்கிறேன். Am impressed with the outcome. சட்னியைப் பற்றியும் ஓரிரு வரிகள் சேர்த்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சட்னி பற்றி ஒரு பதிவு போட்டு தேற்றாலாம் என்று நினைத்ததால்தான் அதைப்பற்றி இங்கே பேச வில்லை

      Delete
  4. ஆனாலும் இடுகைக்கு வருவதற்கு முன்பு, தலைப்பை மட்டும் படித்துப்பார்த்து, இவர் 'எந்த அரசியல் நிகழ்வை ரவாதோசையோடு கலந்திருக்கிறார்' என்று தோன்றியதென்னவோ நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. சமையல் எனக்கு பிடித்த பகுதி என்பதால் அதில் அரசியலை கலக்கவில்லை

      Delete
  5. ஹலோ ட்றுத் வெளில வாங்கோ... நான் களவெடுத்தாலும் பொய் சொல்ல மாட்டேன்ன் அதுதான் என் கொள்கை..... அதனால நான் சொல்ல வருவது யாதெனில் எத்தனையோ தடவை இங்கு கொமெண்ட் போட ட்றை பண்ணினேன் முடியல்ல.. இப்போதான் முடியுது... இதுக்காக ஆரும் என் வைரத் தோட்டில் கை வச்சிடக்குடா சொல்லிட்டேன்ன்:)..

    நீங்க மொபைல் காணாமல் போகும் எனச் சொன்னீங்க அது ஓகே:).. ஆனா எதுக்கு நகை ல கை வைக்கிறீங்க கர்ர்ர்ர்:).. பிறகு நாங்க பொயிங்கிடுவோமாக்கும்.. க்கும்... க்கும்... ( இது எக்கோ:)) ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காகவே அந்த கடைசி வரியே சேர்த்தேன்... ஆனால் என்ன ஆச்சுன்ன? நீங்க கமெண்ட போட முயற்சிசெய்ததால் அந்த கமெண்ட் பாக்ஸை மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சு.. நான் பதிவி போட்டுட்டு தூங்க போயிட்டேன் காலை எழுந்து பார்த்தால் என்னை திட்டி வரும் கருத்துக்கள் கூட வரவில்லை அப்பதான் கலிபோரினியாவில் வசிக்கும் நம் பதிவர் விசு அடேய் உன் கமெண்ட பாக்ஸ் வொர்க் ஆகிவில்லை என்று பேஸ்புக் மூலம் சொல்லி இருந்தார். ஆனால் அது தெரியாமல் உங்க வைர நெக்லசை நான் திருடிவிட்டேன் இப்ப் உங்கள் வீட்டில் உள்ளது டூப்லீகேட் நெக்லஸ் சாரி.... அடுத்த தடவை ஏஞ்சல் பேங்கில் ரகசிய காப்பு பெட்டகத்தில் இருக்கும் நகையை கொள்ளை அடிக்கும் போது உங்களுக்கு ஒரு சேர் கொடுத்துவிடுகிறேன்

      Delete
  6. உண்மையிலேயே ஓசை பார்க்க நல்லா இருக்கு... கவனிக்கவும் பார்க்க எனத்தான் சொன்னேன்... சாப்பிட்ட பின்புதான் தெரியும்... எனக்கென்னமோ டவுட்டாக இருக்கு அரிசி மா சேர்த்தால் ரொட்டிபோல கல்லாகிடுமோ என... இருப்பினும் இது புது முறை ஓசை..

    ReplyDelete
    Replies

    1. உங்களுக்கு இந்த தோசையை பார்க்கதான் முடியும் ஏனென்றால் அதை நாங்கள் சாப்பிட்டுவிட்டோம்

      Delete
  7. உங்க பதிவு வந்த 6 வது நிமிஷத்துலருந்து ஆஹா நம்ம மதுரையின் ரவா தோசைய பார்த்து ஆசையா சாப்பிட ஓடி வந்தா இப்ப வரை கமென்ட் போட முடியாம....பார்த்தா உங்க கமென்ட் பாக்ஸ் மாறியிருக்கு போல. நானும் ஆனியன தாவால ஸ்ப்ரெட் பண்ணிட்டுத்தான் மாவ ஊத்துவேன். மெத்தட் ஸேம்....மைதா ஆர் கோதுமை மாவு இன்னும் கொஞ்சம் போடுவேம்ன் அவ்வளவுதான்..அரிசி அண்ட் ரவா ஸேம்......இப்ப உங்க மெஷர்மென்டையும் பார்த்துட்டேன்.எனக்கு ஆனியன் ரவா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆனியன் ரவா ரொம்ப பிடிக்கும்//// அப்ப நீங்க என் கட்சிதான்

      Delete
  8. உங்க ரவா தோசை ரொம்ப அழகா இருக்கு...ஆனியன் கட்டிங்க் எல்லாமே சூப்பரா இருக்கு மதுரை...

    கீதா

    ReplyDelete
    Replies

    1. சமைப்பது எனது ஹாபின்னு சொல்லாம் அது போல மற்றவர்களுக்கு சமைத்து போட்டு அவர்கள் சந்தோஷமாக சாப்பிடுவதை பார்ப்பதிலும் எனக்கு ஒரு ஆனந்தம்

      Delete
  9. முன்னாடி இருந்த கமென்ட் பாக்ஸ் பதிவோடு வந்தது கமென்ட் போட எளிது...பதிவ பார்த்துட்டே போடலாம்.... இது கருத்து இடும் போது மீண்டும் பதிவு பார்க்கணும்னா இந்த மாதிரி வடிவமைப்புல் முடியறது இல்லை...கொஞ்சம் கஷ்டம்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ..
      கமெண்ட் பாக்கிஸில் பிரச்சனை இருந்ததால் சிறிது மாற்றம் இப்போது ப்ழைய நிலைக்கு வந்துவிட்டது

      Delete
  10. ஆஅஆவ் !!! சூப்பரா மொறுமொறுன்னு இருக்கே ரவா தோசா .எத்தனை முறை செஞ்சாலும் ஊத்தப்பம் மாதிரிதான் வரும் ரவா தோசா எனக்கு பார்ப்போம் உங்க ரெசிப்பி வொர்க்கவுட் ஆகுதான்னு :)
    அப்புறம் நான் தங்க நகைகளை அணிய விருப்பப்படுவதில்லை ஒன்லி பேப்பர் நகைகள்தான் :) கேட்டா நானே கொடுத்திடுவேன் ஆனா ஒருத்தர் கிட்ட பச்சை கல் மோதிரமும் நெக்லசும் இருக்கு அதை எடுத்திக்கோங்க :)

    ஆமா தண்ணி தெளிக்கிறமாதிரி :) அதையும் வீடியோ எடுத்து அதாவது வாசலுக்கு நீங்க தண்ணி தெளிக்கிறதை போடுங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ரொம்ப உஷாரன்னா பார்ட்டியாக இருப்பிங்க போல எங்கடா நகைகள் இருக்கின்றன என்றால் வந்து எடுத்திட்டு போய்டுவாங்க ஜாக்கிரதையாக இருக்கீங்க..... உங்க வீட்டுல என்னென்ன நகைகள் எங்கெங்கே வைத்திருக்கீங்க் என்ரு அதிரா என்னிடம் சொல்லிட்டார்

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.