Friday, November 17, 2017

வெற்றியின் மிதப்பில் உளறுவது சரியா? கோபி நையினார்


சமுக வலைத்தளங்களையும் ஊடகங்களையும் பார்க்கும் போது அறம் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்று தெரியவருகிறது. இதற்க்காக அதன் டைரக்டர் கோபி நையினாரை பாராட்டலாம். ஆனால் ஒரு படம் வெற்றி பெற்றதும் அந்த வெற்றியின் மிதப்பில் தாம் என்ன வேண்டுமானலும் உளறலாம் என்பது  சரியா?


கோபி நையினார் அறம் படத்தை பற்றிய பொது மக்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது தடுப்பூசி பாம்பை விட  மிகவும் மோசமானது  அது குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது என்று... அவரின் இந்த தவறான கருத்துதான் பாம்பின் விஷத்தை விட மிக மோசமாக இருக்கப்போகிறது .அவரின் இந்த தகவலை வாட்சப் மூலம் அறியும் தமிழக முட்டாள்களில் அறம் படத்தில் மூலம சமுக கருத்துகளை பேசிய இவர் சொன்னால் மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணி தங்கள் குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசியை நிறுத்தலாம். அதனால் அந்த குழந்தைக்கு உடல் நல குறைவுற்று இறக்கலாம். அப்படி நடந்தால் கோயி நையினார் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வாரா என்ன?

கோபி நையினார் அவர்களே உங்கள்  இந்த படம் வெற்றி அடைய காரணம் வழக்கமாக வரும் மசாலா போல இல்லாமல் சற்று மாறுபட்டு ஒரு சமுக பிரச்சனைகளை பற்றிய தகவலை சொல்லுவதால் அந்த படம் வெற்றி அடைந்திருக்கிறது. இது சினிமா உலகில் எப்போதுமே நடக்க கூடியது. அந்த காலங்களில் இருந்து பல படங்கள் சமுக பிரச்சனைகளை பேசி இருக்கிறது அது அந்ததெந்த காலங்களில் ஒரு டைம் பாஸாகவே இருந்துவந்திருக்கிறது அதனால் இந்த சமுகத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை .பாலசந்தர் தண்ணீர் தண்ணீர் படம் எடுத்தார் பரப்பரப்பாக பேசி வெற்றி அடைந்தது அதனால் மக்கள் விழிப்புணர்வு பெற்று தண்ணீர் பிரச்சனையை தீர்த்ததா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. அதற்காக நாம் சமுக பிரச்சனைகளை பற்றி பேசாமல் இருக்க முடியுமா என்றால் இருக்க முடியாதுதான். அதனால்தான் பாரதிராஜா கருத்தம்மா என்று ஒரு படம் எடுத்து பெண் சிசு கொலை பற்றி ஒரு படம் எடுத்தார் அதுவும் வெற்றி பெற்றது அதனால் அந்த பிரச்சனை முற்றிலும் தீர்ந்ததா என்றால் இல்லை என்று சொல்லாம் ஆனால் சிசு கொலை பிரச்சனை பற்றி பலரால் பேசப்பட்டு அதன் அளவு குறைந்தது என்று சொல்லாம் . இப்படி பல படங்களை அன்றைய கால சுழலுக்கு ஏற்று படங்களை தாயரித்து மக்களிடம் நல்ல கருத்துகளை விதைத்து அந்த படங்கள் வெற்றி பெற்றன. ஆனால்  எந்தவொரு டைரக்டரும் பட வெற்றி மிதமிதப்பில் மக்களிடம் உடனே தவறான கருத்துகளை உங்களைப் போல பேசவில்லை


உண்மையிலே தடுப்பு ஊசிகள் போடுவதால் குழந்தைகள் கொஞ்சம்  கொஞ்சமாக சாகின்றன என்றால் அந்த விஷயத்தை ஆராய்ந்து அதை வைத்து படம் எடுத்து ஒரு வெற்றிப்படமாக கொடுத்திருக்கலாமே? அதைவிட்டுவிட்டு எந்த வித ஆதாரம் இல்லாமல் ஒரு தவறான கருத்தை அதுவும் ஒரு பட வெற்றியின் போது மக்களிடம் விஷத்தை விதைப்பது போல மனதில் விதைக்கலாமா என்ன? நீங்கள் இப்படி பேசிய செய்தியை எத்தனை பேர் வாட்சப் மூலம பரப்ப  போகிறார்களோ அதை பார்க்கும் எத்தனை முட்டாள்கள் தடுப்பூசி போடுவதை நிறுத்தப் போகிறார்களோ அப்படி செய்வதால் ஒரு குழந்தையின் உயிர் போகுமானால் அது உங்கள் மீது ஏற்படும் ஒரு சாபம்தான்.


உங்களிடம் ஒரு கேள்வி உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் ஒரு தடுப்பூசி கூட போடவில்லையா அல்லது உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நீங்க ஒரு தடுப்பூசி கூட போடவில்லையா என்ன? ஒரு வேளை நீங்கள் போட்டு இருந்தால் அதனால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்பட்டு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாகுகிறார்கள் என்பதை இந்த் வெளி உலகத்திற்கு எடுத்து சொல்ல முடியுமா?

தடுப்பூசிகளால் எத்தனை விதமான நோய்கள் அறவே ஒழிக்கப்பட்டு இருக்கின்றன என்பதுபற்றி  உங்களுக்கு கொஞ்சம் கூட தெரியாமல் இப்படி உளறுவது சரியா?


பலராலும் பாராட்டப்படும் உங்களின் படத்தை பார்க்கலாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால் இப்ப தோன்றுகிறது இப்படி உளறுபவரின் படத்தை கண்டிப்பாக பார்க்கதான் வேண்டுமா என்று?

ஒரு படத்தின் வெற்றி களிப்பில் உளற வேண்டாம்.. மக்கள் இனிவரும் படங்களையும் பார்க்கதான் போகிறார்கள் அதில்தான் உங்களின் வெற்றி ஒரு நிரந்தர வெற்றியா  இல்லையா என்று..


அன்புடன்
மதுரைத்தமிழன்

| Aramm Review Meet | Nayanthara, Gopi Nainar


7 comments:

  1. ஒரு வெற்றி கிடைத்ததும் போதையில் மேதாவிகளாகி விடுகிறார்கள்.

    ReplyDelete
  2. போச்சு நயன்தாராவின் பட விமர்சனம் இப்படி மண்ணள்ளி போட்டுட்டாரே டைரக்டரு

    ReplyDelete
  3. எதிலும் சற்று நிதானம் வேண்டும்.

    ReplyDelete
  4. உண்மை அண்ணா....
    வெற்றியின் மிதப்பில் எதையும் பேசலாம் என்ற எண்ணம்.
    நாமெல்லாம் தடுப்பூசி போட்டுத்தானே வளர்ந்தோம். என்ன பக்க விளைவுகளைப் பெற்று விட்டோம்.
    இப்போது கூட ஊசி போடுவதால் பிரச்சினை இருக்கு. பள்ளியில் போடக்கூடாதென ஒரு குரூப் கிளப்பி விட்டது.
    என் குழந்தைகளுக்கு போடச் சொன்னேன். எந்த பக்க விளைவும் இல்லை.
    இவரின் பேச்சும்... இவர்களை தூக்கி வைத்து ஆடுபவர்கள் பேச்சும்...
    எனக்கும் அறத்தின் மீதான ஆர்வம் குறைந்து விட்டது.

    ReplyDelete
  5. உங்கள் அறியாமையையே இது காட்டுகிறது. தடுப்பூசியினால் எவ்வித பயனுமில்லை. பிரான்சு நாட்டில் இதை தவிர்க்க மருத்துவ கவன்சில் அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியினால்சின்னம்மை, போலியோ போன்றவை தடுக்கப்படுகின்றன என்பது எவ்வித ஆதாரமுமில்லை என நிருபிக்கப்பட்டுள்ளது. வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் தோன்றி பாதிப்பை ஏற்படுத்தி பின்பு தானாகவே மறைந்துவிடுகிறது என்பதுதான் நிதர்சனம். அதற்கு உரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பன்றிக்காய்சல் டெங்கு உதாரணம். மாறாக, போலியோ சொட்டுமருந்தால் போலியோ வரும் என்ற உண்மையும் மருத்தவ உலகை திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ஆனால் இவைகளை மீடியாக்கள் ஜனங்களுக்கு கொண்டு செல்வதில்லை. மாறாக சொட்டு மருந்து வினியோகத்தால் கம்பேனிகள் இலாபம் பார்க்கவே தீவிரமாக இருக்கின்றன. கோபி சொன்னதில் எவ்வித தவறுமில்லை என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள்

    ReplyDelete
    Replies
    1. france official website says, most of the vaccines are given in their country.

      Delete
  6. evidence for your statement?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.