Saturday, September 9, 2017

நடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி
@avargal unmaigal


சேலம மாவட்ட ஆட்சியாளரான ரோகினி நேற்று சுகாதார பணி ஆய்வுகளை ஒரு பள்ளி வளாகத்தில் நடத்திய போது ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வகுப்பில் இல்லாததால் அங்குள்ள மாணவர்களுக்கு டிராமா குயின் ரோகினி பாடம் எடுத்திருக்கிறார்.



இவர் மாவட்ட ஆட்சியாளர்தானே அவருக்கு ஜாக்டோ-ஜியோ  போராட்டம் பற்றி ஏதுமே தெரியவில்லையா என்ன? அவருக்கு அந்த போராட்டம் பற்றி தெரிந்திருந்தால் அந்த மாவட்டத்தில் எந்தெந்த பள்ளி கூடங்களில் ஆசிரியர்கள் வாராமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அந்த ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிகமாக படித்தவர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிதர ஏற்பாடு செய்து இருக்கலாம். ஆனால் அதைவிட்டுவிட்டு ஆசிரியர் இல்லாததால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக நாடகமாடி இருப்பது ஏதற்க்காக? யாரை கவர்வதற்காக? சரி அவர் பாடம் நடத்தும் வகுப்பிற்குள் மாணவர்கள் அல்லாதவர்கள் எப்படி நுழைந்து இருக்கிறார்கள். அவர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கைகளையும் அவர் ஏன் எடுக்கவில்லை..


சரி இன்று ஆசிரியர் வராததால் பாடம் எடுத்த அவர் நாளை அவர் துப்புரவு தொழிலாளிகள் ஸ்டிரைக் செய்தால் அவர்களுக்கு பதிலாக அவர் துப்புரவி தொழிலை செய்வாரா என்ன?


நல்ல வேளை இவர் தமிழக கலெக்டராக இருந்துவிட்டார் ஒரு வேளை டெல்லியில் வேலை பார்த்து அவர் போகும் போது பிரதமர் அங்கு இல்லாவிட்டால் அவர் வேலையையும் இவர் செய்து இருப்பார் போல..

இவரை போல கலெக்டர்கள் டெல்லியில் இல்லாதவரை மோடியின் பதவிக்கு ஆபத்து இல்லை மேலும் மோடியும் எந்தவித கவலையில்லாமல் வெளிநாட்டு பயணம் மேற்க் கொள்ளலாம்...


உண்மையிலே மாணவர்கள் மீது இவருக்கு அக்கறை இருப்பதாக வைத்து கொண்டால் நீட் தொடர்பாக இவர் ஏதும் குரல் கொடுத்து இருக்கிறாரா என்ன?


ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழகத்தில் பல புதுமுக நடிகைகள் தோன்றி வருகின்றனர் ஜல்லிகட்டு போராட்டம் பொது ஜுலியில் ஆரம்பித்து இப்போது இந்த ரோகினி வரை வந்து கொண்டே இருக்கின்றனர்




தமிழகத்தின் நிலமையை நினைச்சால்தான் பரிதாபமாக இருக்கிறது


இந்த பதிவை படித்த நீங்க இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவையும் இங்கே களிக் செய்து படியுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. இப்படியும் ஒரு அரசியல் உள்ளதா?

    ReplyDelete
  3. Ungaluku Vara valai eruntha pakavum

    ReplyDelete
  4. என் எண்ணம் உங்கள் சொல்லில்

    ReplyDelete
  5. En da nenga lum ethum seiya mateanga yarachu etha chu senjalum kura soluveanga... Ipadi En neanga padichu collector agi nalathu panaveandi yathu thana....

    ReplyDelete
  6. துப்ப்ரவு தொழிலாளர்கள் வாவிட்டால் இவர் ஸ்வச் பாரதுக்காக குப்பை அள்ளி இருப்பார்

    ReplyDelete
  7. நாடகத்துக்காக செய்ததாக நான் நினைக்கவில்லை. அந்த நிமிடம் தோன்றியத்தைச் செய்திருக்கலாம். இவர் செய்ததை பார்த்து வேறு யாராவது அப்புறம் தொடரலாம்! பாசிட்டிவாக நினைப்போமே...

    ReplyDelete
  8. neegalum onnum seiya mattinga...yaravathu ethavathu sencha kurai solluvinga.....

    ReplyDelete
  9. Atleast avangalala mudinjatha avanga seinjanga. But neenga enna pandreengale.... Korai kandupidikureenga. Intha pozhappukku athu evalavo parava illa

    ReplyDelete
  10. இந்தச் செய்தியை வாசித்ததும் அவர் செய்தது சரியாகத்தானே இருக்கிறது...அதைப் பார்த்து நாலு பேர் செய்வதற்கு ஒரு உதாரணமாகவும் எடுத்துக் கொள்லலாமோ...நேர்மறையாகவும் எடுத்துக் கொள்ளலாமோ...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.