Saturday, September 9, 2017

@avargal unmaigal
கலெக்டர் ரோகினியிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்


நேற்று  நான் கலெக்டர் ரோகினி பற்றி ஒரு பதிவு இட்டு இருந்தேன் அந்த பதிவை 18 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் இதுவரை பார்வையிட்டதாக ஸ்டேடஸ் தெரிவிக்கிறது...


அந்த பதிவில் நான் சொன்னது சரி என்று அநேக பேரும், இல்லை தவறு என்று சொல்லி  என்னை அசிங்கமாக திட்டி பலரும் மற்றும் பலர் அவருக்கு வாழ்த்து சொல்லியும் கருத்துக்கள் இட்டு இருந்தனர்.


நான் ஏன் இந்த பதிவை வெளியிட்டேன் என்பதற்கான காரணத்தை இங்கே சொல்லிவிடுகிறேன் முதலில் நேற்று வேலையில் இருந்து வந்ததும் சமுக வலைதளங்களில் உள்ள செய்திகளை படித்து கொண்டு இருக்கும் போது இவர் இந்த பள்ளியிக்கு சென்று பாடம் எடுத்தாக சொல்லி பல தளங்களில் நான் நேற்றையை பதிவில் பகிர்ந்த போட்டோவை இட்டு அவரை நையாணடி செய்து இருந்தனர். இந்த தகவல் என் கண்ணில் பட்டதும் என் மனதில் உதித்தது இதுதான்


தமிழகத்தில் மக்களுக்கு பணியாற்ற வேண்டிய முதல்வர் ,அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கொஞ்சம் கூட கவலைபடாமல் கோடி கணக்கான பணத்திற்காகவும், பதவிக்காகவும், டில்லி சென்றும் ரிச்சார்ட்டில் தங்கியும் இருக்கும் நிலையில். வருங்கால சமுதாயத்தை உருவாக்கி கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் ,தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராட்டத்தில் இறங்கி பள்ளி செல்லாத நிலையில், இந்த கலெக்டர் அங்கு சென்று பாடம் நடத்தியாக செய்தியை அறிந்த எனக்கு, இவர் அந்த ஆசிரியர்களின் போராட்டத்தை இழிவு படுத்துவதாக என் மனதிற்கு பட்டது.

. அதுமட்டுமல்லாமல் அவர் பாடம் நடத்தும் போது அனைத்து மாணவர்கள் நின்றும் ,அவர் பாடம் நடத்தும் போது பல ஆண்கள் கைலி கட்டி சுற்றி நிற்பதை பார்த்ததும் ,உடனே இவர் நடிப்பதாகவே எனக்கு தோன்றியது. அதனால்தான் நடிகையாக மாறிய கலெக்டர் என்று பதிவுகள் இட்டேன் அந்த பதிவு இட்ட நேரம் அமெரிக்காவின் இரவு 1 மணி... அதன் பின் நான் டிவி பார்த்துவிட்டு தூங்கும் போது 2   இரண்டாரை இருக்கும் .அந்த ஒரு சில மணிநேரங்களில் என் பதிவை பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தொட்டது.

அந்த பதிவில் நான் சொன்னது சரி என்று அநேக பேரும் இல்லை தவறு என்று சொல்லி  என்னை அசிங்கமாக திட்டி பலரும் மற்றும் பலர் அவருக்கு வாழ்த்து சொல்லியும் கருத்துக்கள் இட்டு இருந்தனர். அப்படி என்னை திட்டியவர்களிடம் நான் பதிலுக்கு கேட்டது இதுதான். இந்த கலெக்டர் உங்களின் கூற்றுப்படி நடிக்கவில்லை நல்லவர் என்றால் என்னை திட்டிவிட்டு போங்கள். அதற்காக நான் கவலைப்படவில்லை ஆனால் அவர் செய்த நல்ல செயல்களை இங்கே சுட்டிக்காட்டுங்களேன் என்று மறு கருத்துகள் இட்டு இருந்தேன் .ஆனால் இதுவரை அவர் செய்த நல்ல செயல்கள் பற்றி ஒருவரிகள் கூட யாரும் பகிரவில்லை

அப்படி என்னை திட்டியவர்களிடம் அடேய்  ஜல்லிகட்டு ஜூலியை ஆதரித்தது போல கண்மூடித்தனமாக இவரையும் தலையில் தூக்கி ஆடாதீர்கள் என்று சொல்லி சென்று தூங்க சென்றுவிட்டேன்.


@avargal_unmaigal #avargalunmaigal
அதன் பின் காலையில் எழுத்திருந்து பார்த்த போது நான் இட்ட பதிவை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 15000 தை தொட்டது.... முகநூலில்  என்ன கருத்துக்கள்  சொல்லி இருக்கிறார்கள் அவரை பற்றி ஏதும் நல்லது சொல்லி அது நம கண்ணில் படாமல் போய்விட்டதா என்று பார்த்த போதும் என் பதிவீற்கு ஆதாரவாகவும் எதிராகவும் மட்டுமே கருத்துகள் வந்திருந்ததே ஒழிய அவர் நல்லது செய்தது பற்றி  யாரும் எதுவும் சொல்லவே இல்லை..


@avargal_unmaigal
சரி இவரை பற்றி நாமே கொஞ்சம் சர்ச்  செய்து பார்க்கலாம் என்று நினைத்த பார்த்த போது இவர் செய்ய பல நல்ல செயல்கள் கண்ணில்பட்டது அதுவும் கடந்த வாரத்தில் பல செய்திகள் இவரை பற்றி வந்திருப்பது தெரிந்தது... இவர் ஆகஸ்ட் மாத இறுதியில்தான் http://www.agaram.tn.gov.in/ias/201708250126.pdf பதவி ஏற்று இருக்கிறார். அவர் பதவி ஏற்ற பின் பல நல்ல செயல்களை செய்து இருப்பதாக ஷோசியல் மீடியாவில் செய்திகள் வலம் வருகின்றன அது மட்டுமல்லாமல் செய்தி நாளிதழ்களிலும் டிவியிலும் சில செய்திகள் வந்து இருக்கின்றன. அந்த செய்திகளை பார்ததும் எனக்கு முழு நம்பிக்கை இன்னும் வரவில்லை ஆனால் முழு நம்பிக்கையை இவர் மேல் வைக்க இன்னும் சிறிது காலம்போன பின் இவர் செயல்களை பார்த்து அறிந்த பிந்தான் முடியும் ,காரணம் இது மக்களை கவர செய்யும் டிராமாவா அல்லது உண்மையிலே இவர் நல்லது செய்யதான் வந்து இருக்கிறார என்பது உறுதியாக தெரியவில்லை. ஜல்லிகட்டு ஜூலியை போல உடனே இவரை தலையில் தூக்கி வைத்து ஆடவும் விரும்பவில்லை அல்லது உடனே தூக்கி தரையில் போடவும் விரும்பவில்லை

ஆனாலும இவர் நல்ல செயலகளை செய்ய ஆரம்பித்து இருக்கிறார் என்பதை அறிந்த  பின் நாம் இவரை பற்றி சரியாக அறியாமல் தகவல் பகிர்ந்துவிட்டோமோ அதுவும் அதை ஆயிரக்கணக்கில் மக்கள் பாரவையிட்டு இருக்கிறார்கள். அதில் பலரும் இவரை பற்றி  ஏற்கனவே நெகட்டிவாக நினைத்து இருக்கிறார்கள் நாமும் அதை மேலும் வளர்ப்பது போல இருக்கிறது என்று நினைத்து அது மிகவும் தவறு என்று நினைத்ததால் ரோகிணியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு அவரை பாராட்டி வாழ்த்துகிறேன்

மேலும் அவர் பற்றி நான் அறிந்த செய்திகளை இங்கே பகிர்கிறேன்

சேலம் மாவட்ட புதிய கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாகரே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி முகாமை திட்ட அதிகாரியாகவும் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றி வந்தவர். இவர் சேலம் மாவட்டத்தின் 171-வது கலெக்டராக பதவி ஏற்கிறார். அத்துடன் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி ஆர்.பாஜிபாகரேயின் கணவர் விஜயேந்திரபிதாரி. இவர் ஐ.பி.எஸ். அதிகாரி. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர். தற்போது மத்திய புலனாய்வுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் மராட்டிய மாநிலம் சோலாப்பூர்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த ரோகிணி, புனேவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். 2008-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக பணியை தொடர்ந்தார்.அதன் பின்னர், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராகவும் கூடுதல் கலெக்டராகவும் பணியை தொடர்ந்தார். அப்போது மத்திய அரசின், ‘தூய்மை பாரதம்‘ திட்டத்தின்கீழ் சுகாதாரத்தை காக்க, கிராமப்புறங்களில் தனிநபர் கழிவறைகள் கட்டி கொடுக்க அரும்பாடுபட்டார். அதற்காக, ரோகிணிக்கு மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகரம் பாராட்டு தெரிவித்தது.( முந்தைய பாராக்களில் அவரை முழுமையாக நம்பமுடியவில்லை என்று சொல்ல இந்த வரிகள்தான் முக்கிய காரணம் இவற்றை பார்க்காமல் இருந்திருந்தால் அவரை முழுமையாக நம்பி இருப்பேன்.. மோடி அரசால்  பாராட்டு பெற்றவர்களை என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை.இவரை பற்றி பல செய்திகளை வீடியோக்களை பகிரும் தளங்கள் பலரும் அறியாத தளங்களாக இருக்கிறது .இப்படிபட்ட தளங்கள் காவி கறை பிடித்த கரங்களை கொண்டவர்களால் மட்டும் நடத்தப்பட்டு தளமாகவே இருக்கிறது .இவரை வைத்து  காவி அரசு மறைமுகமாக  தமிழகத்தில் ஒரு தலைவரை உருவாக்க முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகமும் என்னுள் எழுகிறது. இவர் செய்த நல்ல செயல்கள் ஏது என்று பார்க்கும் போது மாற்று திறனாளிடம் குறை கேட்கும்  போது அவர்களை சேரில் உட்கார வைத்து இவர் தரையில் உட்கார்ந்து கேட்பது போல ஒரு செய்தி. அதை எல்லோரும் பாராட்டுகிறார்கள் ஆனால் அதை பார்த்த எனக்கு  ஒரு ஸ்டண்டாகத்தான் தெரிகிறது ரோகினி தரையில் உடகார்ந்து கேட்பதற்கு பதில் இன்னொரு சேரை கொண்டு வந்து போடச் சொல்லி அதில் அமரந்து கேட்டு இருக்கலாமே தரையில் உட்கார வேண்டிய அவசியமே இருக்காதே. என்னை பொறுத்த வரையில் அவர் தரையில் உட்கார்ந்தாரா அல்லது சேரில் உடகார்ந்தாரா என்பது முக்கியமல்ல அவர் அந்த மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு அது தீர்க்க இது வரை அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன எடுத்தார் என்பது பற்றி எந்த ஊடகங்களும் செய்திகள் ஏதும் வெளியிடவில்லை. அது போல இன்னொரு நிகழ்வில் அசுத்தமாக இருந்த இடத்தை இவரே சுத்தம் செய்தார் என்று ஒரு செய்தி என்னை பொருத்தவரை கலெக்டரின் வேலை சுத்தம் செய்வது இல்லை சுத்தாமக இல்லை என்றால் அதற்குரிய தொழிலாளர்களை கூப்பிட்டு அதை அவர்கள் ஏன் செய்யவில்லை அப்படி அவர்கள் செய்ய முடியாமல் இருக்க தடைகள் ஏதும் உள்ளதா என்று விசாரித்து உத்தரவு போட வேண்டியதுதான். அவர் தன்னை எளிமையாணவராக காட்ட வேண்டுமென்றால் தன் வீட்டில் வேலைக்கு ஆட்களை வைக்காமால் அல்லது அர்சு அலுவலர்களை தன் வீட்டில் வந்து வேலை செய்யாமல் அல்லது  அவருக்கு பாதுகாப்பிற்கு போடப்பட்ட காவலர்களை பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தி வீட்டு வேலைகளை செய்ய சொல்லாமல் இருப்பதுதான். அடுத்தாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு போலி டாக்டரை நடத்திய க்ளினிக்கை மூட செய்தது...சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு போலி டாக்டர்தான் உள்ளரா என்ன?இப்படி  இவர் கடந்த 10 நாட்களில் செய்த நல்ல செயல்கள் மட்டும் சமுக தளங்களில் அதுவும் யாரும் அறியாத தளங்கள் மூலம் வைரலாக பரவ விட்டதற்கு 'பின்புலம்' என்ன வென்று மனதில் பல கேளிவிகள் எழுகின்றன.


மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த இவரை பாராட்டும் மத்திய அரசு சகாயத்தை பாராட்டி ஒரு விருது கூட கொடுக்கவில்லை....மக்களுக்காக மிக எளிமையாக பணியாற்றிய சகாயத்திற்கு இன்னும் கொலை மிரட்டல் வருகிறது என்பதை நினைக்கும் போது என் மனம் மிகவும் வலிக்கிறது அதே நேரத்தில் சந்தேகமும் வருகிறது )


இப்படி நான் நினைப்பது போல அல்லாமல் இவர் நியாயமாகவே,, உண்மையாகவே இவர் மிக எளிமையாக மக்களுக்காக பணியாற்ற வந்திருக்கிறார் என்றால்  அவரை குற்றம் சொல்லி, செய்வதை முட்டுகட்டை போட்டு, அவர் ஆர்வத்தை குறைக்க விரும்பவில்லை அதனால் அவரிடம் என் மன்னிப்பை சொல்லி அவருக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லி செல்லுகிறேன் அது  மட்டுமில்ல அவருக்கு எனது ராயல் சல்யூட்டையும்செலுத்துகிறேன்



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : என்னுடைய ஆசை எல்லாம் இவர் மோடியை போல, தமிழக தலைவர்களை போல ஏன் ஜூலியை போல சாயம் வெளுத்து போகாமல் உண்மையிலே நல்ல சாதனைகளை செய்து பெருமை அடைய வேண்டுகிறேன்

12 comments:

  1. yes, am also having the same doubts .let us wait and see.
    hope only good things ...

    ReplyDelete
  2. மதுர.... இவங்க நல்லவங்களா.. கெட்டவங்களா.. அதை மட்டும் ஒரே வார்த்தையில் சொல்லு..

    ReplyDelete
  3. இதுபோன்ற நல்ல அரசியலை வரவேற்போம்.

    ReplyDelete
  4. எனக்கும் இவர் நடிக்கிறாரோ என்ற எண்ணம் உண்டு...
    ஓவராக தூக்கி வைத்து ஆடி பின்னர் தூக்கிப் போட்டு உடைக்கும் நிலையும் வரலாம்...
    ரோகிணி நட்சத்திரம் எப்பவும் சிறப்பாய் இருந்தால் நல்லதே..

    ReplyDelete
  5. பாராட்டும் பதிவு

    ReplyDelete
  6. என்னாது 18 ஆயிரம் பேஜ் வியூஸ் ஆஆ? எண்ட பெருமானேஏஏஏஏஏஏஏ... உங்களுக்கு வரும் பேஜ் வியூஸ் ஐப் பார்க்க எனக்கு மயக்கம் வருது... சமீபத்தில நான் போட்ட ஓவியா - ஆரஃப் கதைக்கு மட்டும்... அதிக பேஜ் வியூஸ் வந்திருக்குது எனக்கு, அது எத்தனை ஆயிரமென்பதை இங்கின சொல்ல மாட்டேன் ஜாமீஈஈஈஈஈஈ...

    .. அதுக்கே பெருமைப்பட்டேன்ன், இப்போ உங்களுடையதைப் பார்த்து என் வாலைச் சுருட்டிக் கொண்டு போகிறேன்ன்ன் ஹா ஹா ஹா:)..

    ReplyDelete
  7. மதுரை உங்களின் இந்தப் பதிவை மனதாரப் பாராட்டுகிறோம்...இப்படிப் பகிரங்கமாக எழுதுவது என்பது எல்லோராலும் முடியாது. அவர் பாஜகாவினால் நல்லது செய்தாரா இல்லையா என்பதை விட்டு நல்லதைப் பாராட்டுவோம்...அவர் தவறு செய்ய நேரிட்டால் கண்டிப்போம்...ஆனால் உங்களின் இந்தக் கருத்து...அதாவது சகாயத்தைப் பாராட்டாதவர்கள் இவரைப் பாராட்டுவது...என்பது சிந்திக்க வைக்கிறது ஆனால் மக்கள் மனதில் சகாயம் இருக்கிறாரே! அதுவே பெரிய பலமாயிற்றே அது போல ரோகினி அவர்களும் மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்களா என்பதைப்பார்ப்போம் அதுதான் வேண்டும்...அதுதான் மிகப்பெரிய பலம்...

    பாராட்டுகள் மீண்டும்!!

    துளசி, கீதா

    ReplyDelete
  8. சமுக சேவைகள், சமூகத்துக்கு நல்லது செய்பவர்கள், செய்ய நினைப்பவர்கள் தாங்கள் ஏதேனும் செய்யும் முன் அவ்விடத்துக்கு பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்களை அழைத்துச்சென்றாலே அது ஸ்டண்ட் ஆகி விடுகின்றது. ரோகினி தன்னை இயல்பானவராக காட்டிக்கொண்டாலே போதுமே? அதெல்லாம் சரி இங்கே காட்டப்படும் ஸ்கிரின் சாட் லிங்குகளுக்கான ஐடி எங்கே இருக்கின்றது? பேஸ்புக் ஐடியா அல்லது வேறேதும் தளத்திலும் பகிர்கின்றீர்களா?

    ReplyDelete
  9. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  10. ஐ ஏ.எஸ் அதிகாரிகள் பலரும் ஒரு வித சைக்கோத் தனமாக நடந்து கொள்வதாகத்
    எனக்குத் தோன்றும்.அது சரியா தவறா என்று தெரியவில்லை பிறர் கருத்துகளை காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். ஆனால் மக்களிடத்தில் அதிக அக்கறை உள்ளவர்கள் போல் நடந்து கொள்வார்கள்.கண்டிப்பும் நேர்மையுமாய் நடப்பதாக தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் மரியாதையோ அங்கீகாரமோ யாரும் எதிர்பார்க்க முடியாது.பெயர் சொல்லி ஒருமையில் அழைத்து பலர் முன்னிலையில் அவமானப் படுத்துவார்கள். ஐ.ஏ.வஸ் அதிகார்களில் பெரும்பாலோர் உயர்வு மனப்பான்மையின் உச்சம் என்று கூறலாம். ஆனால் இவர்களின் செயல்பாடுகளால் அதிகம் பாதிக்கப் படுவது நல்ல அலுவலர்கள் மற்றும் பணியாளர்களே. தேவை இல்லாமல் 10 நிமிட ஆய்வுக் கூட்டத்திற்கு ஒரு நாளெல்லாம் காக்க வைப்பார்கள். காரணம் என்னவென்று தெரியாமல் கலெக்டர் வர சொன்னார் என்பார்கள். ஒரு போனிலோ மின்னஞ்சலிலோ சொல்ல வேண்டிய தகவலுக்காக கூட்டம் நடத்தி நேரத்தை வீணடிப்பார்கள். மடத் தனமான திட்டங்களையும் சிரமேற்கொண்டு செய்வார்கள். இவர்களில் சில விதிவிலக்குகள் உண்டு.
    நீங்கள் சொல்வது போல் கலெக்டர் வேலை பாடம் நடத்துவது அல்ல.இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன?. தூய்மைக்கான விருது எல்லா ஆட்சிக் காலத்திலும் ஒவ்வோர்ஏ ஆண்டும் நல்லாசிரியர் விருது போல ஏதாவது ஒரு கிராமத்திற்கு வழங்கப்படுகிறது. உண்மையில் அந்த கிராமம் தற்கான முழுத் தகுதியும் பெற்றிருக்காது. கலெக்டர் தன் கடமையை செய்தாலே பாராட்டு பெறும் நிலை உருவாகி விட்டது.

    ReplyDelete
  11. she will not be allowed to continue

    ReplyDelete
  12. மன்னிப்பு கேட்டதற்கு ஏற்கனவே வருத்தப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.