Tuesday, September 12, 2017



@avargal unmaigal
ஸ்டாலின் ஜாக்கிரதை - மோடி கலாட்டா



ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரட்டும், அப்போது அதனை எதிர்கொள்ள அரசு தயார் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளனர்.


ஜெயக்குமார் சவால்விடுவதை பார்த்தால் அவர் திமுக எம்.ஏல்.எக்களையும் கூவத்தூர் ரிசார்ட்டிற்கு அழௌத்து சென்றுவிடுவார் போல இருக்ககே எதுக்கும் ஸ்டாலின் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்


எதிர் கட்சிக்கு எதிராக ஆளும்  கட்சி போராட்டம் நடத்தும் அதிசயம் நடக்கும் இடம் தமிழ்நாடுதான் # மோடிசாப் ஸ்டாலினை பார்த்து பயப்படுறியா? அந்த பயம் உங்ககிட்ட இருக்கட்டும்


மருத்துவம் படிக்க 12 வருஷம் படித்து அதிக மதிப்பெண் எடுத்தால் போதாதாம் நீட் எக்ஸாம் எழுதணுமாம்  அப்படின்னு சட்டம் போடுபவர் எந்த தகுதியும் இல்லாதா டிக்கடை வைச்சு பிரதமர் ஆன ஆளாம்

@avargal unmaigal
தான் மகா பெரிய யோக்கியன் மாதிரியும்...தாம் சசிகலாவிடம் சேர்ந்தால் தம்மை எல்லோரும் அயோக்கியனாக நினைத்து கொள்ளாவர்கள் என்று நினைத்து, சசிகலாவை ஒதுக்கிவிட்டு ,சசிகலாவிடம் இருந்த அடிமைகளிடம் உறவாடிக் கொண்டு இருப்பதுமட்டுமல்லாமல் தமிழகத்தை அழித்து கொண்டி இருக்கும் தம்மை ,மக்கள் மாக யோக்கியன் என்று கருதுகிறார்கள் என்று கற்பனையில் இருக்கிறார் போல நம்ம அண்ணன் மோடி .தமிழக மக்களுக்கு தெரியாதா என்ன மோடி சசிகலாவின் அண்ணன் என்று...

avargal unmaigal
மோடி பெற்று எடுக்கும் புதிய இந்தியா என்ற  குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தாகவே இருக்கிறது அதனால்தான் சிக்கிரம் மரணித்து போகிறது அதன் பின் மீண்டும் பிறக்கிறது

நேற்றைய திருச்சி பாஜக கூட்டத்தில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டார்கள் -தமிழிிசை!
கணக்கில் ரொம்ப வீக் போல ..நல்ல வேளை இந்த அம்மா எஞ்சினியரிங்க் படித்து கட்டடம் கட்டவில்லை கட்டி இருந்தால் கட்டிடம் விழுந்து நொருங்கி இருக்கும்..



avargal unmaigal
செய்தி :திருச்சியில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசி முடிப்பதற்குள் பாதிக்கூட்டம் காலியாகிப் போனது

மதுரைத்தமிழன் :ஏதோ ஒரு பாய்  இலவசமாக பிரியாணி பொட்டலம் தருகிறார் என்றதும் கூட்டம் ஒடிவிட்டது போல

சேக்காளி பதிவர் :இதோட விடுங்க ய்யா. இல்லே ன்னா எவனாவது உச்சமன்றத்துக்கு போயி திருச்சியில் நடந்த பாஜக கூட்டத்தை விமர்சிக்கக் கூடாது ன்னு தடை வாங்கிரப் போறான்.

மடையர்களே இந்தியாவில் உள்ள நதிகளை காப்பாற்றும் முன் தமிழகத்தில் உள்ள ஆறுகளை காப்பாற்றுங்கள்டா



avargal unmaigal
வடமாநில ஆசிரியர்களை கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் - அமைச்சர் #Sengottaiyan பேட்டி..

சரி சரி நாங்களும் இவர் வழியை பின்பற்றி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் ரிசார்ட்டில் தங்கி இருக்கும் போது அவங்க் வீட்டாம்மாவிற்கு  வீடியோ கான்பரன்சிங் மூலம் நாங்களும் பாடம் நடத்துவோம் ஒகேதானா அமைச்சர்களே


கல்யாணமானவர்கள் தங்கள் ஆதார் கார்ட்டை தங்களின் வாழ்க்கை துணைவரின் ஆதார்ட் கார்ட்களுடன் இணைக்க வேண்டும்# அடே இது ஒகேதான் ஆனால் கள்ளக்காதலர்/காதலிகளின் கார்டுகளுடன் இணைக்க வேண்டுமென்று மட்டும் சட்டம் இயற்றிவீடாதீர்கள்டா


இந்தியர்கள் தங்களின் பேஸ்புக் அக்கவுண்டை ஆதார்கார்ட்டுடன் இணைக்க வேண்டும். அப்படி இல்லாத பேஸ்புக் அக்கவுண்ட்கள் டெலீட் செய்யப்படும் என்ற சட்டம் மிக சீக்கிரம் வரப் போகுதாம். இதன் மூலம் மக்களின் போலி அக்கவுண்ட்கள் ஒழிக்கபடுவதோடு அரசை எதிர்த்து கருத்து சொல்பவர்களை மிரட்டி தங்கள் வழிக்கு கோண்டுவர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாம்



போட்டோ ஷாப் மென்பொருளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மோடி சாப் என்று இனிமேல் சொல்லப்படும் என்று அடோப் நிறுவனத்தினர் அறிவித்து இருக்கிறார்கள் இதற்கு காரணம் போட்டோ ஷாப் மென்பொருளை மிக திறமையாக பயன்படுத்தியவர் மோடியும் அவரது கட்சியும்தான் என்பதால் மோடியை கெளரவிக்கும் பொருட்டு இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக போட்டோ ஷாப் நிறுவனத்தினர் அறிவித்து இருக்கிறார்கள்


அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது - பொதுக்குழுவில் தீர்மானம்

இரண்டாவது தீர்மானம். இனிமேல் அதிமுக என்ற கட்சியே கிடையாது..

அதிமுக இனிமேல் பாரதிய திராவிட முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. நக்கல்ஸ் நன்று நண்பரே...

    ReplyDelete
  2. மதுரை குசும்பு நல்லாவே இருக்கு

    குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்தா பரவாயில்ல.... பொறந்து நல்லா வெளையாடிக்கிட்டிருக்கும் குழந்தைலாம்கூட செத்து போகுதே! அதான் தாங்க முடில.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு...
    களவாணிகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து இன்னொரு களவாணியை ஒதுக்கி வச்சிருக்கானுங்க...

    ReplyDelete
  4. சொல்வதெல்லாம் உண்மை!

    ReplyDelete
  5. 2013 லிருந்தே வரும் இந்த தொலை பேசிஎண்ணின் மர்மம் என்ன

    ReplyDelete
  6. you are confusing your self...write with mental use

    ReplyDelete
    Replies
    1. மோடியை பற்றி பேசவோ எழுதவோ அறிவை யூஸ் பண்ண தேவை இல்லை ஆனால் அவரை பாலோ பண்ணுபவர்கள் மட்டும் அறிவை யூஸ் பண்ணினால் நல்லது

      Delete
  7. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு முடிந்து விட்டது,இவர்கள் நதிகளை இணைத்த லட்சணமும் ,கள்ளப் பணத்தை ஒழித்த லட்சணம்தான் தெரியுமே :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.