Saturday, September 16, 2017

@avargal unmaigal
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முகத்தில் சாணியால் அடித்த தமிழர்கள்


ஒரு சட்டமன்ற இடைத்தேர்தல்  அளவுக்கு பரபரப்பை உண்டாக்கி விட்டது சாரண-சாரணியர் தேர்தல். இப்படி அமைப்பு இப்போதும் பள்ளிகளில் செயல்படுகிறதா என்று மக்கள்  கேட்கும் அளவுக்கு  மட்டுமே இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது அதுமட்டுமல்லாமல் . இந்த அமைப்புபின்  தலைவர் பதவிக்கு  தேர்தல் மூலம்தான் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதும் கூட யாரும் அறிந்திராத செய்தி.

ஆனால் இப்படி யாரும் அறிந்திருக்காத தேர்தல் இப்போது தமிழக தலைப்பு செய்திகளில் வந்து பரபரப்பாகி கொண்டிருக்கிறது இதற்கு முக்கிய காரணம் தமிழக சாரணர்_சாரணியர் இயக்க தலைவர் பதவியில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவை கொண்டு வர முயல்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்திய பின்னர்தான் இந்த தேர்தல் தமிழக மக்களால் மற்றும் ஊடகங்களால் கவனிக்கப்பட்டது.


சாரண _சாரணியர் இயக்கத்தில் பயிற்சி பெற்று வளரும் இளம் பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதைத்து அவர்களை ஆர்.எஸ்.எஸ் இயக்க ஷாகாக்களுக்கு திருப்பி விடும் நோக்கோடு சிலர் அந்த இயக்கத்தை குறி வைத்திருக்கிறார்கள்.  அதிமுக அரசு பாஜக கட்டுப்பாட்டில் வந்த நாள் முதலே அரசுப்பதவிகள் வாரியப்பதவிகளை அவர்கள் குறிவைத்து விட்டார்கள். அதன் முதல்படியாகதான் சாரண சாரணியர் இயக்கத்தி எச்.ராஜா குறி வைத்தார். ஆனால் அவரது வாய் அவருக்கு வினையாக முடிந்து விட்டது.


இந்த தேர்தலில் இவர் ஜெயித்தால் மத வெறியை குழந்தைகளிடம் பரப்புவார்கள்.இதில் இவர் வெற்றி பெற்றால் தமிழகமே இவர்களுக்கு ஆதரவு தருகிறது என்று ஒரு மாயையை க்ரியேட் பண்ணி நிச்சயம்  இவர்கள் ஆட்டம் போடுவார்கள் அதனால் இவருக்கு மட்டுமல்ல பாஜகவிற்கும் தலையில் கொட்டு வைக்க வேண்டுமென்ரு முடிவு செய்து அதனால் 30 ஆண்டுகள் சாரண இயத்திற்காக வாழ்க்கையை தியாகம் செய்த மணியை வெல்ல வைக்க வேண்டும்” என்று கூடிப் பேசி வாக்களிக்க தகுதி பெற்றவர்களிடம்   போய் மணிக்காக பேசி வெற்றி பெற்று சாதித்து காட்டியிருக்கிறார்கள்.


சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட சாரணர் இயக்கத்திற்கு குறிப்பிட்ட ஒரு மத அமைப்பின் தலைவராக வர விடாமல் தடுத்திருகிறார்கள் அரசு ஊழியர்கள்.ஆனால் இது ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அது மிக அதிக மகிழ்ச்சியை சமுக இணையதள வாசிகளுக்குக் கொடுத்திருக்கிறது ,

இந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் மணி, 234 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜா, வெறும் 46 வாக்குகள் மட்டுமே பெற்றார். தமிழ்நாடு சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு அரசியல்வாதி ஒருவர் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும்.

.வாக்களிக்கும் தகுதி படைத்தோரை  நேரடியாக மிரட்டியும் வாக்காளர்கள்   எச்.ராஜாவை தேர்தலில் தோல்வியடைய செய்து இருக்கின்றனர்..

மக்கள் ஆதரவோடு வெல்லாமல் குறுக்கு வழியில் தமிழகத்தை பிடிக்க பாஜக சதி செய்தாலும் இதைவிட மிகப் பெரிய தோல்வியை அவர்களுக்கு தமிழக மக்கள் கொடுப்பார்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை என்றுதான் நான் சொல்வேன்


தோல்விக்கு பிறகு  சாரண, சாரணிய இயக்கத்திற்கான தேர்தல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது - எச். ராஜா சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லும் தேச பக்தர் ஏன் சட்டவிரோத தேர்தலில் பங்கு பெற்றார் என்பதை அவரே சொல்ல வேண்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்


8 comments:

  1. கல்வித் துறையில் இவர்களின் பித்தலாட்டத்தை அனுமதிக்க தடை போட்ட வாக்காளர்களுக்கு நன்றி :)

    ReplyDelete
  2. சாரணர் இயக்கத்திற்கு அரசியல்வாதிகளை போட்டியிட அனுமதிப்பதே தவறு.எச்.ராஜா தோல்வி அடைந்தது மகிழ்ச்சிக்குரிய செய்தி.திரு மணி அவர்கள் ஒய்வு பெற்ற கல்வித் துறை இயக்குனர். ஒய்வு பெற்றவர்களை இது போன்ற பதவிகளில் அமர்த்துவதும் சரியல்ல என்றே கருதுகிறேன்.ஒய்வு பெற்று பின்னும் கல்வித் துறையில் மூக்கை நுழைத்துக் கொண்டிருப்பவர்.இவருடனான எனது அனுபவம் சற்று கசப்பானது. தற்போது பணி புரிந்து கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கே இந்தப் பொறுப்பை கொடுக்கலாம்.

    ReplyDelete
  3. இந்து மஹாசபையின் முக்கிய தலைவர் அகில இந்திய சாரணர் அமைப்பின் தலைவராகிவிட்டார் என்ற செய்தி புதியது. இனி rss அமைப்பின் பயிற்சி மையமாக சாரணர் இயக்கம் செயல்படும். இந்தியா நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக ஆகிவிட்டது.

    ReplyDelete
  4. நல்ல காலம் தமிழக சாரண்ர் இயக்கம் பா ஜ க வின் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை

    ReplyDelete
  5. தற்போது ஆளும் கட்சியினர் தமிழ் நாட்டை என்று விலை பேசி விற்கப் போகிறார்களோ தெரியவில்லை !?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.