Friday, August 18, 2017

 
உள்ளதை சொல்வோம் சொன்னதை செய்வோம்

நீங்க இந்து ,இஸ்லாமிய, அல்லது  கிறிஸ்துமதத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.. நீங்க எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் உங்கள் மத தலைவர் தங்கள் மதத்தில் உள்ள கருத்துக்களை எடுத்துரைத்து உங்களை வழி நடத்த வேண்டும் அப்ப்டியில்லாமல்  மாற்று மதத்தை பற்றி பேசி துவேசித்தால் அவர் மதத்தலைவராகவே இருக்க அருகதையில்லாதவர் அவரை ஒதுக்கிவிட்டு உங்கள் மத போதிக்கும் நல்வழியில் செல்லுங்கள் அவர் மாற்று மதத்தை பற்றி துவேசிப்பது தம் மதத்தை வளர்க்க அல்ல தன் வயிற்றை வளர்க்கவே


அது போல நீங்கள் மேல் ஜாதி இடைப்பட்ட ஜாதி அல்லது கீழ்ஜாதியினராக இருக்கலாம் அல்லது எந்த ஜாதியினராகவும் இருக்கலாம். ஆனால் உங்கள் ஜாதி தலைவர்கள் மற்ற ஜாதியினரை பற்றி துவேசித்துதான் தன் ஜாதியை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தன் ஜாதியினர் முன்னேற வழி வகுத்து மற்ற ஜாதியினரிடம் அன்பாக நடந்து ஜாதிக் உள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி எல்லோரும் நலமாக வாழ் செய்பவராக இருக்க வேண்டும் அப்படி அவர் செய்லபடவில்லை என்றால் அவர் உங்கள் ஜாதியினரின் வளர்ச்சிக்காக பாடுபடவில்லை தன் வயிற்றுக்காக பாடுபடுகிறார். அதனால் அவரால் உங்களுக்கு எந்த வித முன்னேற்றமும் இல்லை அவர் குடும்பத்தினர்தான் ஜாதியின் பெயரால் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்



அது போல நீங்கள் காங்கிரஸ்,பாஜக,அதிமுக,திமுக அல்லது வேறு எந்த கட்சிகாரர்களாக இருங்கள்.உங்களுக்கு அந்த கட்சியை அல்லது அந்த கட்சியின் தலைவர்கள் உங்களின் அபிமான தலைவர்களாக இருக்கலாம். அவர்கள் எந்த கட்சிதலைவர்களாக இருந்தாலும் பொதுமக்களுக்கு நல்லது செய்ய வில்லை என்றால் நிச்சயம் அவர் உங்களுக்கும் நல்லது செய்யப்போவதில்லை காரணம் அந்த பொதுமக்களில் நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினறோ ஒருவர். ஒருவேளை அந்த தலைவர்கள் நீங்கள் உடனே பாதிக்கபடுவதில்லை ஆனால் அவர்களின் திட்டங்களினால் வருங்காலத்தில் நீங்கள் எந்த ஒருவிதமாக அதிகமாக பாதிக்கப்படலாம். அதனால் அவர்கள் தவறு செய்யதால் அவர்கள் உங்கள் அபிமானத் தலைவர்களாக இருந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்களுங்கள் அல்லது பொது ஊடகம்முலமாவது உங்கள் கருத்துகளை வெளியிட்டு அதற்கான எதிர்ப்பை தெரிவியுங்கள்.தலைவர்கள் போடும் திட்டங்கள் பொதுவாக எல்லோருக்கும் பலன் அளிப்பதாக அதுவும் நியாமாக இருக்கவேண்டும்


இந்த மூன்று விஷ்யங்களில் மக்கள் மிகவும் கவனமாக செயல்பட்டால் இன்றைய மக்களுக்கு மட்டுமல்ல வருங்கால சந்ததியினரும் நல்லவிதமாக வாழ்வார்கள் அப்பை இல்லையென்றால் ஒரு சில தனிப்பட்ட மனிதர்கள் மட்டும் முன்னேறுவார்கள்


உங்கள் மததலைவர் அல்லது ஜாதிய தலைவர் அல்லது உங்கள் அரசியல் கட்சிதலைவர் முன்னேறவேண்டுமா அல்லது நீங்கள் மட்டும் உங்கள் சந்ததியினர் முன்னேற வேண்டுமா என்பது உங்கள் கையில்தான் உள்ளது இதையெல்லாம் விட்டுவிட்டு மோடி ஒழிக சோனியா ஒழிக கலைஞர் ஒழிக  என்று கூவிக் கொண்டிருப்பதிலோ அந்த மதம் மோசம் இந்த மதம் மோசம் அந்த ஜாதியினர் மோசம் இந்த ஜாதியினர் மோசம் என்று கூவி கொண்டிருப்பதில் மயிருக்கும் பிரயோஜனம் இல்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. யோவ் தமிழா என்னையா? நினைச்சீரு...? 😊

    ReplyDelete
  2. மதம் ,ஜாதி ,கட்சியை மறந்து வாழ்ந்தால் வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையும் :)

    ReplyDelete
  3. ஜாதி, மதம், பணத்தால்தான் நாடு நாசமா போய்க்கிட்டிருக்கு

    ReplyDelete
  4. நல்ல பதிவு தமிழா அதுவும் கடைசி பாரா நச்!!

    துளசி, கீதா

    ReplyDelete
  5. அட்வைஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் தலைவர்களை விடுங்கள்... நிறைய பொதுமக்களே பொதுவெளியில் மதத்தையும், ஜாதியையும் பற்றித்தான் எழுதி வருகிறார்கள்!!!

    ReplyDelete
  6. இந்தஒழிகக் கூச்சல் உடன்பாடு இல்லை

    ReplyDelete
  7. தலையங்கம் ரேஞ்சுக்கு இருக்கு .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.