Thursday, August 17, 2017

   பாஜக தலைமையிடத்தும்  காவிகளிடத்தும் ஆண்மை இல்லையா?



தமிழகத்தை சேர்ந்த முருகன் என்பவர்  கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பால் வியாபாரம் செய்துவந்துள்ளார். அந்தப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்து ஒன்றில் சிக்கிய முருகனுக்கு, மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் பல மணிநேரம் அலைக்கழிக்கப்பட்ட முருகனின் உயிர் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரிந்தது. இந்த விவகாரம்குறித்து விளக்கமளிக்க, கொல்லம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழு மருத்துவமனைகளுக்கு கேரள மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இந்த நிலையில், 'தமிழர் ஒருவருக்கு மருத்துவம் பார்க்க மறுத்ததால், அவர் உயிர் பிரிந்தது கேரள மாநிலத்துக்கே அவமானம்' என்று முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  அதுமட்டுமல்லாமல் இறந்தவரின் குடுமப்த்தை சார்ந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி அவர்களின் குடும்பதிற்கு உதவுவதாக உறுதி அளித்திருக்கிறார்.

ஆனால் இதே நேரத்தில் தன் சொந்த மாநிலமான உத்திர பிரதேசத்தில் ஆக்ஸிசன் பற்றாக்குறையால் உயிரிழந்த 63 குழந்தைகளுக்கு  காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு நல்ல மருத்துவர் அதிகாரியின் மேல்  அவர் மாற்று மதத்தவர் என்பதால் அவர் மேல் பழி சுமத்தி தன் அரசின் தவறை மூடி மறைக்ககும் ஆண்மையற்றவராக யோகி இருக்கிறார்.

தவறுகள் ஏற்படாமல் ஆட்சி செய்வது என்பது இயலாத செயல்தான் ஆனால் தவறினால் உயிரிழப்ப்பு அது 63 க்க்கு மேல் ஏற்படுமானால்  தவறை ஓற்றுக் கொள்ளும் ஆண்மை ஒரு தலவருக்கு இருக்க வேண்டும் இனிமேல் அது போல் நடக்காமல் இருக்க நடவடிக்கைகளை மேற் கொண்டு  தவ்றுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு  பிராயசித்தம் தேட வேண்டும் அதுதான் ஆண்மையுள்ளவர்களுக்குஅழகு ஆனால் அது காவிகளிடம் அந்த ஆண்மை இல்லை

கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு இருக்கும் ஆண்மைத்தனம் உபி முதல்வர் யோகிக்கு இல்லாதது ஏன்?

கொசுறு : கேள்வி பதில்கள்


மோடியின் ஆட்சி பற்றி சொல்லுங்களேன்?

வாட்ஸ் அப்பிலும் பேஸ்புக்கிலும் இணையதளங்களிலும் மட்டும்  மோடியின் நல்லாட்சியை நீங்கள் காணமுடியும் நோ¢ல் ஆட்சி எப்படி நடக்கிறது என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தொ¢ய வேண்டுமா என்ன?


மோடி ஊழல்வாதிகளை அழிப்பது நாட்டுக்கு நல்லதுதானே?
மோடி ஊழல்வாதிகளை அழித்தால் நாட்டுக்கு நல்லதுதான் ஆனால் அவர் தனது எதி¡¢களை  அல்லது தன்னை எதிர்ப்பவர்களை ம்ட்டுமே ஊழல்வாதி என்ற போர்வையில் அழிக்க நினைக்கிறார்.தனக்கு ஆதராவளார்களின் ஊழல்களை தேசபக்தி என்ற போர்வையில் மூடி மறைக்கிறார்.

கமலின் அரசியல் பேச்சு பற்றி?
உயிருள்ள விஷப்பாம்பான பாஜகவை சீண்டி பார்க்க பயந்து செத்த பாம்பான அதிமுகவை சீண்டி கொண்டிருக்கிறார்.  


சுதந்திர தினம்பற்றி?
இந்த சுதந்திர தினவிழா 63 குழந்தைகளுக்கான சுதந்திர விழா மோடியின் ஆட்சியை கண்டு வாழ்வதை விட சுதந்திரமாக வாழ  இவ்வுலகை
வீட்டு வேறு உலகத்திற்கு சென்றுவிட்டனர்.


அன்புடன்
ம்துரைத்தமிழன்

4 comments:

  1. குழந்தைங்க ஆக்சிஜன் இல்லாம சாகல சகோ... மூளை வீக்கத்தால் செத்து போச்சுங்க. அதுங்களுக்கு மூளை வீக்கம் வரக்காரணம் அதுங்களோட கர்மா. இறந்த உயிர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்க பிண்டம் வைப்பாங்க. அதுவரை, நீங்க ஷட் அப் பண்ணுங்க சகோ

    ReplyDelete
  2. முருகனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்தது மிகவும் கொடுமை. எப்படி இப்படி உயிர் காக்கும் மருத்துவமனைகள் நடந்து கொள்கின்றன என்பது மிகவும் வியப்பாக உள்ளது....முதல்வர் மன்னிப்பு கேட்டார்தான். அதோடு மருத்துவமனைகளுக்கான சட்ட விதிகளும் கடுமையாக்கப்பட வேண்டும்...

    ReplyDelete
  3. கேரளச்செய்தி நானும் படித்தேன். முதல்வரின் செயல் பாராட்டுக்குரியது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்ற வேண்டுமா? நீர் ஊற்ற வேண்டுமா? என்று அறிந்து வைத்திருக்கிறார்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.