உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, May 31, 2017

கண்டனம் பரியங்கா சோப்ராவிற்கு அல்ல மோடிக்குதான் தெரிவிக்கனும் என்பது கூட தெரியாத லூசுங்களா நீங்க?

கண்டனம் பரியங்கா சோப்ராவிற்கு அல்ல மோடிக்குதான் தெரிவிக்கனும் என்பது கூட தெரியாத லூசுங்களா நீங்க?ஜெர்மனுக்கு போன மோடி சும்மா இருக்காமல் அங்கு சூட்டிங்கிற்கு வந்த ப்ரியங்கா சோப்ராவை சந்தித்தாராம். அப்படி சந்தித்த போது எடுத்த போட்டோவை ப்ரியங்கா சோப்ரா பேஸ்புக்கில் வெளியிட்டாரம். அந்த படத்தில் ப்ரியங்கா சோப்ரா குட்டை பாவாடை(மினி ஸ்கர்ட்) போட்டதுமட்டுமல்லாமல் கால் மேல் கால் போட்டு இருந்தாராம். அதனால் இந்தியாவில் உள்ள பல லூசுங்க அது மரியாதைக் குறைவு என்று  அவருக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்களாம்


அடே மடப்பசங்களா குட்டைபாவடை போட்டு ஆண்களுக்கு எதிராக உடகாரும் போது கால்மேல் கால் போட்டுதான் உட்காருவார்கள் அதுதான் முறை அப்படி இல்லாவிட்டால் ஆண்களுக்கு எதிராக பப்பரபா என்று காலை விரித்து உட்காருவது மாதிரி ஆகிவிடும் அப்படி இருந்தால் ஆண்களின் கண் அது மகாமுனிவாராக இருந்தாலும் கண் போக கூடாத இடத்திற்கு போகும் அதை உணர்ந்துதான்  ப்ரியங்கா சோப்ரா கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறார். .அதுமட்டுமல்ல அவர் மோடியை சந்தித்தது ஜெர்மனியில் அவர்கிட்ட சேலை இருந்திருந்தால் நிச்சயம் அதை அணிந்து கால்மேல் கால் போடாமல் உட்கார்ந்து இருப்பார் அது கூட தெரியாமல் கண்டணம் தெரிவிக்கிறார்களாம் இந்த லூசு பயலுவ .


அடே லூசுங்களா கண்டனம் தெரிவிப்பது என்றால் நடிகை ப்ரியங்கா சோப்ராவிற்கு அல்ல மோடிக்குதான் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறீர்களே


40 நாட்களுக்கு மேலாக டெல்லியில் சுட்டு எரிக்கும் வெயிலில் நடுரோட்டில் மோடியை சந்திப்பதற்காக பல போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்க 30 நிமிடங்கள் கூட இந்த பிரதமர் மோடியால் ஒதுக்க முடியவில்லை. விவசாயிகள்தான் இந்திய நாட்டின் முதுகெலும்பானவர்கள் அவர்களின் வாழ்க்கை பாதித்து இருக்கும் போது ஒரு நாட்டின் தலைவரை சந்தித்தால் தங்கள் வாழ்வு மலரும் என்று நம்பிய அவர்களுக்கு வாசல் கதவு திறக்கவில்லை. இந்த விவசாயிகள்தான் தேர்தல் நேரத்தில் வீட்டில் இருக்காமல் வாக்குசாவடிக்கு வந்து வாக்கு அளித்தவர்கள். அவர்களை மோடி சந்திக்க நேரம் ஒதுக்காத போது கண்டனம் தெரிவிக்காத இந்த லூசுப்பயலுவ இப்போது இந்த நடிகைக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள்நான் தெரியமல்தான் கேட்கிறேன் இந்த நடிகை என்ன சமுதாயத்திற்கு சேவை செய்து இருக்கிறார அல்லது இந்தியாவில் வேலை வாய்ப்பை உருவாக்க பெரிய முதலீட்டை செய்து இருக்கிறாரா அல்லது சமுக நலப் பணிகளுக்கு மோடி அரசிற்கு பணத்தை அள்ளி இறைத்து இருக்கிறாரா அல்லது தேர்தல் நேரத்தில் வாக்கு சாவடிக்காவது வந்து வாக்கு அளித்திருக்கிறாரா. அப்படி ஏதும் செய்து இருக்காத நடிகைக்கு தன் நேரத்தை அதுவும் வெளிநாட்டில் இருந்தாலும் ஒதுக்க எப்படி முடிந்தது.


நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் பல தலைவர்கள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டாலும் கிடைக்கவில்லை. ஏன் தமிழ் நாட்டின் பிரதான எதிர்கட்சியின் தலைவரான ஸ்டாலின் அவர்களும் சந்திக்க நேரம் கேட்டு பிரதமர் அலுவலகத்தை தட்டிய போதும் இன்னும் அதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை..சரி உள்நாட்டில் இருக்கும் போதுதான் நேரம் கிடைக்கவில்லை ஆனால் வெளிநாட்டில் இருக்கும் நேரம் கிடைக்கிறது என்றாவது சொல்லி இருந்தால் ஸ்டாலின் கூட ஒரு விமான டிக்கெட் புக் பண்ணி அங்கு வந்து சந்தித்து இருப்பார் அல்லவா? ஆனால் நாட்டிற்கு எந்த வித பிரயோஜனும் இல்லாத நடிகையை பார்ப்பதற்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறதாம்


பிரதமர் ஜெர்மனி சென்றது அரசுமுறைப்பயணமாக பிறகு ஏன் அங்கு பரியங்கா சோப்ராவை சந்திக்க வேண்டும் அவர் ஹாலிவுட் வரை சென்ற நடிக்கும் இந்திய நடிகை இந்த ஆடையே அவருக்கு மிக அதிகம். மேலும் அரசுமுறைப்பயணமாக இருப்பதால் இங்கு சந்திக்க இயலாது இந்தியாவில் நேரம் கிடைக்கும் போது சந்திக்கலாம் என்று மோடி நாகரிகமாக மறுத்து இருந்திருந்தால் இப்படி யாரும் பேச வாய்ப்புகள் எழுந்திருக்காதுதானே

அதனால லூசுகளுக்கு அதுவும் வடநாட்டில் வசிக்கும் லூசுகளுக்கு சொல்லுகிறேன் கண்டனம் தெரிவிப்பது என்றால் மோடிக்கு தெரிவியுங்கள் நடிகைக்கு அல்ல என்று


கண்ணியம் என்பது உடுத்தும் ஆடையில் அல்ல மனதில்தான் இருக்கிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி 1:சராசரி மனிதர்களுக்கு நடிகைகளை  சந்திக்கும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும் ஆனால் இந்த நடிகைகள் மட்டுமல்ல மற்ற எந்த பெண்களின் மீதும் மோடிக்கு ஈர்ப்பு நிச்சயம் இருக்காது என நான்  நம்புகிறேன். ஆனால் அவர் எதற்காக இந்த நடிகையை சந்திக்க வேண்டும் என்று கேள்வி எழும் போது ஒருவேளை வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவிற்கு பெற்று தர முதலிட்டாளர்களின் 'கண்களுக்கு விருந்து' தந்து பெற முயற்சிக்கவே இப்படி செய்கிறாரா என்று மனத்தின் ஒரத்தில் ஒரு கேள்வி எழுந்தாலும் மோடி அப்படி எல்லாம் செய்யாமாட்டர் என நம்பத்தான் வேண்டி இருக்கிறது .


டிஸ்கி 2 :மாட்டிறைச்சியை விற்பதற்கோ சாப்பிடவோ தடையில்லை.... இறைச்சிக்காக மாட்டை விற்க மட்டுமே தடை என்று சமாதானம் சொல்லும் மேதாவிகளிடம் போய் இறைச்சிக்காக மாட்டை வாங்காமல், இறைச்சி கடைக்காரருக்கு மாட்டிறைச்சி எங்கிருந்து கிடைக்கும் என்று கேள்வியை முட்டாள்தனமாக கேட்டுவிடாதீர்கள் ஒரு வேளை அப்படி நீங்கள் கேட்டால் அதுக்குதானே நாம் மாட்டு இறைச்சியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம் அப்படி  ஏற்றுமதியாவதை மீண்டும் அதே மாட்டுகறியை அழகிய பாக்கெட்டுகளில் போட்டு இறக்குமதி செய்து விற்போம் அதை வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள் என்பார்கள்

 

9 comments :

 1. நண்பரே உண்மையை சொல்கிறேன் இதனைக்குறித்து நானும் பதிவு எழுதி வைத்தேன் நீங்களும் எனது கருத்தையே எழுதி இருக்கின்றீர்கள் நீங்கள் நாகரீகமாக எழுதி இருக்கின்றீர்கள் நான் கீழ்த்தரமாக மிகவும் கீழ்த்தரமாக எழுதினேன் நிச்சயமாக எனது கோபம் ப்ரியங்கா மீது கிடையாது அவள் வேசி அப்படித்தான் வாழ முடியும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக...

  ReplyDelete
 2. பதிவின் அனைத்து கருத்துக்களையும் அப்படியே வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 3. கண்டிக்க வேண்டியது மோடியைதான். இதை நானும் வழிமொழிகிறேன்

  ReplyDelete
 4. ஜெர்மனியில் ஜொள்ளுக்காலங்கள்!

  ReplyDelete
 5. லூசுங்களுக்கு உறுத்தும்படியாக
  கொஞ்சம் காரமாகவே பதிந்தவிதம் அருமை
  வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
 6. How he allocated time for Actress Gowthami, Kajol, sachin and another actor he was sitting with Priyanga Chopra. What is wrong in that. They are more important than Tamilnadu farmers. Modi is a JACKASS. Cunning and calculative Dragging the country to unimaginable low level.

  ReplyDelete
 7. ஆடைகளையே அணியாமல் போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திப்பதில் அரைகுறை ஆடையில் இருந்த சோப்ராவை சந்திப்பதில் இருக்கும் மகிழ்ச்சி இருக்குமா. பாவம்மோடிஜி மனைவியைப் பிரிந்துஇருப்பவரைக் குறை சொல்லலாமா

  ReplyDelete
 8. உங்கள் பதிவை டிட்டோ போட்டு விடுகிறோம்!. செம! உங்கள் கருத்துகளை அப்படியே நாங்களும் வழிமொழிகிறோம்.

  --துளசி, கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog