உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, May 29, 2017

மும்பை ப்ளாட்பாரம் ஸ்டைல் தக்காளி சாதம்

Mumbai street sideTomato Rice
மும்பை ப்ளாட்பாரம் ஸ்டைல் தக்காளி சாதம் 


நார்த் இண்டியன் நண்பர் ஒருவர் இந்த தக்காளி சாதத்தை லஞ்சிர்கு செய்து கொண்டு வந்தார். இது நாம் செய்யும் செளத் இண்டியன் செய்முறைக்கு முற்றிலும் மாறுபட்ட சுவையில் இருந்தது. அதில் பன்னீர் சேர்த்து இருந்தது மிக சிறப்பாக இருந்தது.

தேவையானவை :

பாசுமதி ரைஸ் Basmati rice - 1 கப்
நெய் Ghee - 2 ஸ்பூன்
ஆயில் Oil - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் Onion - 1 சிறிதாக நறுக்கியது ((க்யூப் சைஸ்)
பெரிய தக்காளிTomato - 1 சிறிதாக நறுக்கியது (க்யூப் சைஸ்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் Ginger garlic paste - 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப்Tomato ketchup - 2 டீஸ்பூன்
பாவ் பாஜி மாசாலா Pav bhaji masala powder - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்Turmeric - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் Red chilli powder - 1/2 ஸ்பூன்
உப்பு Salt - தேவையான அளவு
பெல் பெப்பர்  Bell Pepper - 1 சிறிய சைஸாக நறுக்கியது (க்யூப் சைஸ்)
பச்சை மிளகாய் Green chilli - 1 சிறிய சைஸாக கட் செய்து கொள்ளவும்
பன்னீர் Paneer - 20 பீஸ்
கொத்தமல்லி இலை Coriander leaves -

செய்முறை :

சாதம் மிக குழைந்து விடாமல் வடித்து வைத்து கொள்ளுங்கள் அரிசியை வேகவிடும் போது ஒரு ஸ்பூன் ஆயில் ஊற்றி வேகவிட்டால் அவை ஒன்றுகொன்று ஒட்டிக் கொள்ளாது.

கடையில் வாங்கிய பன்னீர் என்றால் அதை 10 நிமிடம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து அதை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்


அதன்பின் பாத்திரத்தில் சிறிது ஆயில் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு வதக்கி அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.

அதன்பின் நறுக்கி வைத்த தக்காளி துண்டை போட்டு அதனுடன் சிறிது தக்காளி கெட்சப்பை போட்டு வதக்கவும் சற்று வதங்கிய பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் பாவ் பாஜி மசாலா உப்பு போட்டு கிளறவும்

அதன் பின் கொடைமிளகாயை போட்டு வதக்கவும் அது சற்று வதங்கியதும் தண்ணீரில் போட்டு வைத்த பன்னீரை அதில் இட்டு மிக்ஸ் செய்யவும்

இறுதியாக ரூம் சூட்டில் வைத்திருக்கும் சாதத்தை போட்டு அதில் நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி சிறிது நெய்விட்டு கிளறவும்.


இப்போது மும்பை ப்ளாட்பாரம் ஸ்டைல் தக்காளி சாதம் ரெடி


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : பதிவர் ஸ்ரீராம், கீதா , அதிரா போன்றவர்கள் என்ன சார் நீங்க அரசியல் பதிவா போடுறீங்க வேற பதிவு ஏதாச்சும் போடுங்கள் என்றதால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அரசியல் அல்லாத இந்த பதிவு.மேலும் இந்த நண்பர்கள் மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஒரு சிறிய தகவல்... நான் என் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதையே பதிவாக போடுகிறேன்.... நான் பதிவிடுவது என் பொழுது போக்கிறகாக மட்டுமே ஒரு வேளை என் பதிவுகள் உங்களுக்கு பிடிக்காமல் போனாலும் சரி பிடித்தாலும் சரி அதற்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை அதுமட்டுமல்ல என் தளத்தில் தமிழ்மண வாக்குகள் இட வேண்டிய அவசியமும் இல்லை.....


இங்கு கருத்து சொன்னால்தான் அல்லது தமிழ் மண வாக்கு இட்டால்தான் நான் உங்கள் தளத்திற்கு வருவேன் என்பது இல்லை எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களின் தளத்திற்கு வருவேன் நேரம் கிடைத்தால் கருத்துகள் இடுவேன். தமிழ் மண வாக்குகள் இடுவதில்லை ஆனால் தற்போது அதிராவின் வேண்டுகோளுக்கிணங்க நேரம் கிடைக்கும் போது அவரின் தளத்திற்கும் மற்றவர்களின் தளத்திற்கும் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வாக்குகள் அளிக்க முயற்சிக்கிறேன்.. இந்த தகவல் ஒரு புரிதலுக்காக மட்டுமே... இங்கு பகிரப்படுகிறது65 comments :

 1. நல்லா இருக்கும்னு தோணுது. ஒரு முறை முயற்சி செய்து பார்க்கணும்...

  ReplyDelete
  Replies

  1. தைரியமாக செஞ்சு பார்க்கலாம் சுவை வித்தியாசமாகவும் அதை நேரத்தில் நன்றாகவும் இருந்தது நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும்

   Delete
 2. இப்பதான் பழைய ஃபார்முக்கு வர்றீங்க... ஆஃபீஸ் ரூம்ல இருந்து கிச்சன் ரூமுக்கு வந்தாச்சுல்ல இனி பூரிக்கட்டை பறக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உங்க மதினிதான் என்னை கிச்சனுக்கு அனுப்புறாங்க என்றால் நீங்களும் இப்படி சொல்லியே என்னை கிச்சனுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் பண்ணுறீங்களே

   Delete
  2. எப்ப பாரு ஆஃபீஸ் ரூம்ல இருந்தான் பைத்தியம் பிடிக்கும். ஏற்கனவே அப்பிடிதான் இருக்கீங்குறது வேற விசய்ம்

   Delete
 3. அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  ReplyDelete
 4. வாவ் !! கலர்புல்லா இருக்கே வீட்டில் எல்லா பொருளும் இருக்கு விரைவில் என் ப்லாகில் வரும் இதுவும் ..
  இதற்கு raitha நல்லா இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. ///விரைவில் என் ப்லாகில் வரும்/////
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  2. நீங்க எதை வேண்டுமானாலும் போடுங்கோ.. அது உங்கள் விருப்பம் உங்கள் புளொக்.. அதைக் கேட்க நாங்க ஆரூ?:) ஆனா அப்பப்ப எங்களையும் மறந்திடாமல் இப்பூடி டிஸ்கி, டஸ்கி எல்லாம் போட்டு ஒரு போஸ்ட்டும் போட்டால்ல் ஏதோ நீங்க எப்பவும் மேடையிலே முழங்கிட்டிருக்காமல் வீட்டுக்கு வந்த ஃபீலிங் ஸ்ஸ்ஸ் வந்திடுது..:)

   Delete
  3. வரவர நீங்க பொய் சொல்றீங்க ட்றுத்:).. இப்படியே போனால் பெயரை மாத்தச்சொல்லி உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன் தேம்ஸ் கரையில்:).. இப்போ வோட்ட் போடுறேன் எனச் சொல்லிக்கொண்டே போடாமல் போயிட்டீங்களே..நேற்று:(.. சரி சரி இதுக்கெல்லாம் முறைக்கக்கூடாது.. முகம் எப்பவும் சிரிச்சபடி இருக்கோணும்:).

   Delete
  4. @ஏஞ்சல் கணவரிடம் கேட்காமல் விரைவில் வரும் என்று சொல்லிட்டீங்களே....ஒரு வேளை அவர் மனைவி சொன்ன பேச்சை தட்டாமல் கேட்பாரோ......அதிராவின் பாஷையில் எனக்கு எதற்கு ஊர் வம்பு ஹீஹீ

   இப்படி ரிசிப்பி பதிவு போட்டால் உங்கள் கண்வரை போல உள்ளவர்களுக்கு பாதிப்பு அதாவது பெண்கள் சில கணவரை செய்ய சொல்லியும் சில பேர் தாங்கள் செய்ததை சாப்பிட சொல்லியும் வற்புறுத்துவதால் ஆண்களின் சாபத்திற்கு ஆள் ஆவேணோ என்று பயமாக இருக்கிறது

   Delete
  5. @அதிரா

   ///உங்கள் ப்ளாக் உங்கள் விருப்பம் அதை கேட்க நாங்க ஆரூ///

   அதிரா சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும் என்று சொல்லுவாங்க அதுபோலத்தான் என் பதிவுகளும் அதனால் அந்தந்த நேரங்களில் என் மனதில் எது உதிக்கிறதோ அது பதிவாக வருகிறது. நான் உங்களை போல , பகவான் ஜீ, ஸ்ரீராம் ரமணி,நிஷா கீதா ஏஞ்சல்,ராஜி மற்றும் பலர் போல எனக்கு எழுத வராது. அதனால் எனக்கு எது வருகிறதோ அதை எழுதி செல்லுகிறேன் அது தவறா?

   நான் தவறாக ஏதும் எழுதினால் உரிமையோட தட்டி கேட்க உங்களுக்கு அனைவருக்கும் உரிமை உண்டு.அதை நான் மறுக்கவில்லை

   Delete
  6. @அதிரா

   /வோட்டு போடுறேன் என்று சொல்லி வோட்டு போடாமல் போயிட்டீங்களே////

   அதிரா என் டிஸ்கியை முழுவதுமாக நீங்கள் படிக்கவில்லை போல இருக்கிறது அதில் தெளிவாக சொல்லி இருக்கிறேன் முயற்சிக்கிறேன் அதுவும் நேரம் கிடைத்தால் மட்டுமே என்று சொல்லி இருப்பதை மறந்துவிட்டீர்களா?


   இதற்கெல்லாம் நான் முறைக்க மாட்டேன்.. ஒரு பெண் அழகாக சேலை கட்டி போனால் கொஞ்சம் முறைத்து பார்ப்பேன் நான் பார்பதை அந்த பென் பார்த்துவிட்டால் முகம் பூரா சிரிச்சமாதிரி வைச்சு கொள்வேன்....... சரி சரி உடனே சேலை எங்க இருக்கிரது என்று தேடி பிடித்து அதை கட்டி போட்டோ எடுத்து பதிவிட வேண்டாம்

   Delete
  7. @ஏஞ்சல் அதிரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொன்னதற்கு காரணம் நீங்கள் விரைவில் ப்ளாக்கில் வரும் என்று சொன்னதால்தான் விரைவில் அவர்கள் வீட்டிற்கு பார்சல் வரும் என்று சொல்லி இருந்தால் கர்ர்ர்ர்ர்ர்ர் என்று இருக்காமல் ஹீஹிஹ்ஹீ என்ரு இருந்திருப்பார்கள்

   Delete
  8. ஹஹஹ்ஹ் அதானே பார்த்தேன் எங்கடா நம்ம மதுரையின் யூஷுவல் அலம்பலைக் காணமேனு.....

   கீதா

   Delete
  9. ஹஹஹ் பயமா இருக்கா மதுரை ..ஆண்களின் சாபம் "இந்த மதுரைத் தமிழனுக்குக் கிடைச்ச பூரிக்கட்டை அடி போதாது....இன்னும் உலக்கை அடி கிடைக்கணும்னு" சொல்லிடுவாங்களோனு ஹ்iஹிஹிஹி..

   கீதா

   Delete
  10. வர வர இந்த அதிரா எதுக்கெல்லாம் தான் தேம்ஸ் கரைல சமோசா, ரீ, பிரியாணியோட உண்ணாவிரதம் இருக்கப் போறாங்கனு இல்லாம போச்சு....என்ன சொல்றீங்க மதுரை, ஏஞ்சல்....சரிதானே??!!ஆ ஊனா உடனே தேம்ஸ் ல குதிச்சுருவேன்றாங்க....கரைல உண்ணாவிரதம்ன்றாங்க...! ஹஹஹஹஹ

   கீதா

   Delete
  11. சே..சே.. உங்க எழுத்தில் தவறா?.. நீங்க என்ன சொன்னாலும் மீ நம்புவேன்ன் ஏனெனில் நேக்கு அரசியல் பிடிக்காது, சரி பிழை ஆராயவும் விருப்பமில்லை:).. நான் சொல்ல வந்தது இடையிடை இப்பூடி ஏதும் மாத்திப் போடுங்கோ என்பதைத்தான்.. மற்றும்படி தவறாக எதுவும் சொல்லவில்லை, இப்பூடி ஏதும் போட்டால்தானே நாமும் இங்கு வந்து கும்மி அடிக்கலாம்..

   இல்லை எனில் மனதுக்கு கஸ்டமாக இருக்கு.. எப்பவும் ட்றுத் நம்பக்கம் வருகிறாரே, நம்மால் அங்கு போய்ப் பேச முடியவில்லையே என.. அதற்காகத்தான் இடைக்கிடை இப்படி போடுவது வரவேற்கத்தக்கது.

   Delete
 5. தக்காழி சாதம் சும்மா தளள என ஜொலிக்குது.. எனக்கொரு டவுட்டூஉ.. இது நீங்க செய்து போட்ட போட்டோவோ? இல்ல நண்பர் கொண்டுவந்ததைப் படமெடுத்துப் போட்டீங்களோ?:)

  ReplyDelete
  Replies

  1. இரண்டுமே இல்லை நெட்டில் சுட்டு கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி போட்டது

   Delete
 6. இருப்பினும் எனக்கொரு டவுட்டூஊஊ. பூரிக்கட்டை ஓவரா வேலை செய்யுதோ உங்களுக்கு.. அதனாலேயே அரசியலிலேயே நிக்கிறீங்களோ என... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்..

  உங்கட இந்தப் பதிவில் எனக்கு அதிகம் பிடிச்சதே அந்தக் கடைசியில் இருக்கும் வரிதான்:)

  ReplyDelete
  Replies
  1. அப்ப என் நான் போட்ட தக்காளி சாதம் ரிசிப்பி புடிக்கலையா?? நீங்க சொன்னீங்க என்பதற்காக அரசியல் இல்லாத பதிவு போட்டேன்...சரி சரி நான் பழையபடியே அரசியல் பதிவு போடப் போறேன்

   Delete
  2. அய்யய்யோ போகாதீங்க போகாதீங்க சகோ.. பொல்லாத சொர்ப்பனம் மீயும் கண்டேன்ன்:).. ஹா ஹா ஹா அரசியலில் குதிக்காதீங்க அப்பூடின்னேன்:)

   Delete
 7. வெயில் காலத்தில் தூரப்பயணத்தின் போது சாப்பிடவும், காலையில் சமைத்து மதிய உணவாக கொண்டு செல்லவும் நார்த் இந்தியன்செயல்முறை தக்காளி சாதம் ஒத்து வராது. தக்காளி கெச்சப், பன்னீர் மற்றும் குடை மிளகாய் உணவை சீக்கிரம் கெட்டுப்போக செய்யும், உடனே சமைத்து உடனடியாக சாப்பிட இப்படி சமைக்கலாம். பன்னீரை சிறு துண்டங்களாக கட் செய்து எண்ணெயில் பொரித்து சேர்த்தால் இன்னும் சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. எங்கடா அம்மாவை காணும் என்று நினைத்தேன் எலிக்கு பொறி வைப்பது மாதிரி நிஷாவிர்கு ஒரு சமையல் குறிப்பு பதிவு போட்டா தன்னால வந்துடுவாங்க போல இருக்கே

   Delete
  2. ஹை நிஷா வாங்கப்பா!!! ஆம் நிஷா உங்கள் பாயின்ட்ஸ் கரெக்ட். பனீர் பொரித்துப் போட்டால் நன்றாக இருக்குமே என்று சொல்ல வந்தேன்...நீங்களே சொல்லிட்டீங்க...மெனு ராணி சொன்ன பிறகு வேறு வார்த்தை உண்டோ??!!!

   கீதா

   Delete
  3. ஓ அப்படியா மதுரை சகோ?!! அப்ப நானும் சமையல் குறிப்பு போடணூமோ....அப்பதான் நிஷா எட்டிப் பார்ப்பாகளோ?!!!!

   கீதா

   Delete

  4. ஆமாம் நான் சமையல் குறிப்பு போட்டுதான் அவர்களை பிடித்தேன்

   Delete
  5. அடடா! அப்படி இல்லப்பா. எனக்கு நேரமே இல்லை. இன்று கட்டாயம் கொஞ்சமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என உடல்களைப்பு நிர்ப்பந்தித்ததனால் மாலை ஆறுமணிக்கு பின் ஹோட்டல் வருவதாக வேலை செய்யும் பையன்களிடன் எல்லாம் செய்ய சொல்லி வந்தேன். குருப் ஏழுக்கு தான் வரும். அதனால் குருப் வரும் நேரம் நான் அங்கே கட்டாயம் நிற்க வேண்டும். நீங்களும் இன்று பார்த்து இந்த பதிவு போட என் கண்ணில் அது பட்டதா அதனால் பின்னூட்டமும் இட்டேன்.

   மதுரைத்தமிழரே உங்களுக்கு ஒரு குட் செய்தி. மார்ச்சில் ஆரம்பித்த எங்கள் கம்பெனியின் இந்தியன் குருப்புக்கான வருகை.... இன்றைய நிலையில் நாள் ஒன்றுக்கு குறைந்தது நூறு பேராகவும், அதிக பட்சம் 200 பேராகவும், நான்கு முதல் ஐந்து பஸ்களில் ஆட்களை கொண்டு வந்து தரும் படி எங்கள் சர்வீஸ் மற்றும் உணவின் சுவை,தரம் முதல் விலையும் இருப்பதாக வரும் அனைவரும் பாராட்டி செல்கின்றார்கள்.

   ஓரிருவரால் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும். 99 வீதம் உங்கள் அனைவரின் அன்பும் பிரார்த்தனையும் ஆதரவினாலும் அருமையாக சென்று கொண்டிருக்கின்றது.

   இந்தியன் குருப்.. எங்களுடைய வழமையான கஸ்டமர்கள், சுவிஸ் கஸ்டமர்கள் புதியவர்கள், இலங்கை யர்களுக்குரிய திருமண விருந்துக்குரிய உணவுகள் தயாரிப்பு மற்றும் நிர்வாகம், புதிய வேலையாட்களை எங்கள் நிர்வாகத்துக்கு ஏற்க பழக்கப்படுத்தி எடுத்தல் என... நள்ளிரவு பன்னிரண்டுக்கு மேல் தான் வீட்டுக்கு வருகின்றேன்.

   பிள்ளைகளும் வருடாங்க முடிவு என அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பிசியாக இருப்பதனால் அவர்களுக்கும் உதவி செய்து.... ஐயோ நான் இதை பதிவாக போட்டிருக்கலாமே.. மதுரைத்தமிழர் கிண்டல் செய்வாரே?

   Delete
  6. கீதா, அன்புக்கும் விசாரிப்புக்கும் தேடலுக்கும் நன்றிப்பா. சமையல் குறிப்பில் அதிக நேரம் செலவு செய்யாமல் விவாதமில்லாத பின்னூட்டங்கள் இடலாம். அரசியல் எனில் அதிக விவாதங்கள் வரும், அதுக்கு நம்மால் நேரம் ஒதுக்க முடியும் எனில் தானே பதில் பின்னூட்டம் இடுவேன். இல்லை எனில் அமைதியாக சென்று விடுவேன்.

   கம்பெனியில் இப்போது ஒரே நேரம் பத்துக்கும் மேல் புதிய வேலையாட்கள் நியமித்திருப்பதனால் அதில் ஐந்து பேர் இந்திய குக்கிங்கு பழகியவர்கள்.. அவர்களை சுவிஸ் குக்கிங்க மற்றும் நிர்வாகத்துக்குள் உணவுப்பாதுகாப்பு முதல் அனைத்திலும் பழக்கப்படுத்தவும், மீதி ஐவர் புதியவர்கள் என்பதனால் அவர்களுக்குரிய பணிகளை சரியாக சீராக்கவும் எனக்கு ஏப்ரல் மே மாதம் முழுதுமே போய் விட்டஃதுப்பா. ஏப்ரல் மே மாதம் முழுதும் நான்விடுமுறையே எடுக்கவில்லையப்பா. அத்தனை வேலைப்பழு. எங்கள் வழக்கமாக ஆர்டர்களையும் தவற விடாது புதிய ஆர்டர்களிலும் தவறுகள் நிகழாது... ஓட்டம் தான். அதனால் தான் இந்தப்பக்கம் எவர் பதிவையும் படிக்க முடியவில்லை. பின்னூட்டம் இடவில்லை.

   Delete
  7. தக்காளி சாதம், தயிர் சாதம மலைகளுக்கு செல்லும் இந்திய பயணிகளுக்கு பார்சல் செய்தும் அனுப்புகின்றோம். புளிசாதம் இலகு செல்முறை ஒன்று ராஜி பதிவிட்டிருந்தார். அதை நாளையோ நாளை மறு நாளோ நேரம் கிடைத்தால் செய்து பார்க்கலாம் என இருக்கின்றேன். இப்படியான உணவு வகைகளை அடிக்கடி பதிவிடுங்கள். எங்களுக்கு எப்போதும் பயன் தரும், ஹாஹா.

   Delete
  8. பாத்தீங்களா மதுரை, நெல்லை, ஸ்ரீராம், ராஜி, ஏஞ்சல் அதிரா எல்லாரும் கவனிங்க...சமையல் குறிப்பு நிஷாவுக்குப் பயன் தருமாம் ஸோ டீல் போடுங்கப்பா...அஹஹஹஹ்ஹ்

   நிஷா நன்றிப்பா....தெரியும் நீங்க ரொம்ப பிசினு....அதுவும் உணவகம் நடத்துவதுனா சும்மாவா? இதெல்லாம் சும்மா உங்களைக் கலாய்க்கத்தான்....எங்களுக்கும் பொழுது போகனுமில்ல...ஹிஹிஹி...உங்கள் பதில் கண்டு மிகவும் மகிழ்ச்சி...உடல் நலம் பேணுங்கள் நிஷா...
   கீதா

   Delete
  9. நிஷா நீங்கள் சொல்லிய குட் நீயூஸை கேட்டு உண்மையில் மிக சந்தோஷம்..... நீங்கள் அருகில் இருந்த்திருந்தால் உங்கள் வளர்ச்சியில் என் பங்கும் வரும்படி செய்து இருப்பேன்......ஹும்ம்ம்ம் இப்பவும் மிகவும் ஆர்வமாக இருக்கிறது பேசாமல் அங்கே முவ் செய்துவிடலாம் என்று எனிவே தொடரந்து மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

   Delete
  10. நிஷா... பிசினஸில் முன்னேற்றம். வாழ்த்துகள். அயராத உழைப்புக்கு தோல்வியேது?

   Delete
 8. வித்தியாசமான ரெஸிபியாக உள்ளது
  செய்துப் பார்க்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. செய்வது எளிமை அதனால் கண்டிப்பா செஞ்சு பாருங்க தலைவரே இதை நீங்களே கூட செய்யலாம் அதனால நீங்கள் இதை செஞ்சு மனைவி மகள் மருமகனை அசத்துங்க

   Delete
 9. //தக்காழி சாதம் சும்மா தளள என ஜொலிக்குது///கர்ர்ர்ர் அது தக்காளி

  ReplyDelete
 10. நான் செய்தாச்சு.நல்லா இருக்காம் :)

  ReplyDelete
  Replies
  1. வெரி குட்...... நல்லா இருக்கலாம் ஆனால் 24 மணிநேரம் கழித்துதான் உண்மையில் உடல் நிலை நல்லா இருக்கா இல்லையா என்று சொல்லமுடியும் அதையும் பொறுத்து இருந்து பார்த்து பதில் போடவும்

   Delete
  2. ஹை ஏஞ்சல் அதுக்குள்ள செஞ்சுட்டீங்களா? எப்புடிப்பா எப்ப மதுரை போட்டாரு பதிவு....ஹும் ...40 டிகிரிக்கு வந்தாத்தான் செய்ய முடியுமாக்கும்..அதாங்க சென்னைக்கு வந்த பிறகுதான்....இப்ப நான் சில் வெதர்ல...மழையில நனைஞ்சு எஞ்சாயிங்க்!!!!!

   கீதா

   Delete
  3. கீதா ஒரு சின்ன திருத்தம் ஏஞ்சல் உங்க வூட்டுகாரர் அதுக்குள்ளே சமைத்து அசத்திட்டாரா என்று நீங்க கேட்கணும்

   Delete
  4. ஹஹஹஹஹ் மதுரை இப்ப பாருங்க அங்கருந்து சிங்கம் உறுமும்....கர்ர்ர்ர்ர் நு...

   கீதா

   Delete
  5. ஹஹ்ஹஹ்ஹ்....

   கீதா

   Delete
 11. முதலில் மிக்க மிக்க நன்றி மதுரை சகோ!!! நேயர் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு பதிவிட்டதற்கு. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!! சகோ உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் உங்கள் பதிவுகள் எல்லாமே சுவாரஸ்யம்தான். என்ன கொஞ்சம் சிரிச்சு நாளாச்சேனு உங்களிடம் நகைச்சுவைப் பதிவு வருமே என்றுதான்...உங்கள் டிஸ்கி நன்றாகவே தெரியும்....சகோ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நீங்க சிரிக்கனும் என்று நான் பதிவு போடனும் என்றால் அதற்கு நான் அழுதுகிட்டு இருக்கனும் மனைவிகிட்ட அடிவாங்கிதான்

   Delete
  2. ஹஹஹ்ஹஹ்....ஐயோ இதப் படிச்சே நான் சிரிச்சுக்கிட்டு இருக்கேன்....

   கீதா

   Delete
 12. சூப்பர் டிஷ்!! இதுவரை செய்ததில்லை மதுரை!! செய்துவிட வேண்டியய்துதான்....செய்துட்டு என்ன கமென்ட் வருதுனு சொல்லறேன்....ரொம்ப தாங்க்ஸ் ஒரு வித்தியாசமான குறிப்பு கொடுத்தமைக்கு....

  கீதா

  ReplyDelete
 13. அடடா!! நீங்க கிச்சனுக்குள்ள போனீங்கனா பூரிக்கட்டை எப்படிப் பறக்கும்??!!! உங்க கஸ்டடில இல்லையா இருக்கும்..இல்லை சகோதரி ஒளிச்சு வைச்சுருப்பாங்களோ?? சரி நீங்க இத செய்ஞ்சு பாத்தீங்களா? மாமியின் கமென்ட் என்ன?!!! பூரிக்கட்டை பறந்திருக்காது நிச்சயமா...நீங்க நல்ல செய்வீங்கனு தெரியுமே!! எப்படினு எல்லாம் கேட்கப்படாது! சொல்லிப்புட்டேன் ஹிஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இங்கே கிச்சனில் மட்டும் பூரிக்கட்டை இருந்தால் தப்பிக்கலாம் ஆனால் வூடு பூராவுல பூரிக்கட்டை இருக்கு.... இப்படி வூடு பூரா இருக்க காரணம் உங்களை மாதிரியுள்ள சகோக்கள் கிப்டாக வாங்கி அண்ணிக்கு அனுப்பி இருக்கிங்களே

   Delete
  2. ஹஹஹ்ஹ் வந்துக்கிட்டேதான் இருக்கும்....இந்த வாட்டி வித்தியாசமான டிசைன்ல அனுப்பலாமானு யோசனை ஓடுது...ஹிஹிஹி...

   கீதா

   Delete
 14. அதென்ன எங்களுக்கு மட்டும்தான் எழுதத் தெரியும் உங்களுக்குத் தெரியாதுனு....ஹலோ இங்க எத்தனை பேரு உங்க பதிவுகளை ரசிக்கிறாங்கோ.....வாசிக்கிறாங்கோ...உங்க புள்ளியியல் சொல்லுதே...எங்களுக்கெல்லாம் கூட அப்புடிக் கிடையாதாக்கும்..எழுதத் தெரியாதுனு சொல்லிக்கிட வேண்டியது...சும்மா இதானே வேண்டான்றது...!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்த விடயத்தில் மதுரைத்தமிழரின் அரசியல் நையாண்டிப்பதிவுகள் எனக்கு நிரம்ப லேட்டாகத்தான் புரியும் கீதா. ஆனால் அவர் என்ன எழுதினாலும் அதற்கு இடும் கவர்ச்சிகரமாக தலைப்புக்கள் தான் அவர் பக்கப்பார்வைகள் அதிகமாக காரணம் என்பது என் யூகம். அதாவது தலைப்பே.. அப்பதிவில் அப்படி என்ன இருக்கும் என சுண்டி இருக்கும் படி உள்ளொன்றை மறைத்து வைத்து மறைமுக ஆர்வத்தினை தரும்படி தலைப்பிடும் திறமை மதுரைத்தமிழரைபோல் எங்களுக்குள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

   வெறும் வெண்டைக்காய் பதிவையும் வெடிக்கவைக்கும் பட்டாசு என தலைப்பிட இவரால் தான் முடியும். ஹேஹே.

   Delete
  2. பின்னூட்டங்களில் எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்தி படியுங்கள். திருத்த முன் செண்ட் ஆகி விட்டது. இனி நேரம் இல்லை.

   Delete
  3. ஆமாம் நிஷா ரொம்பச் சரியா சொன்னீங்க.....அவரது தலைப்புகள் எப்பவுமே செம!!! தலைப்பைப் பார்த்து சீரியஸ்னு ஆஹானு வந்தா சில சமயம் உள்ளே செமையா ரசிக்கும்படியான மொக்கைகளும் இருக்கும்...ஹஹ

   கீதா

   Delete
  4. தலைப்பு கவரும்படி இருந்தாலும் உள்ளே சரக்கு இல்லையென்றால் நம் பதிவர் நண்பர்களை தவிர யாரும் தொடர்ந்து வரமாட்டார்கள்

   Delete
  5. பிழைகள் இருந்தால் திருத்தி கொண்டு படியுங்கள் ஹலோ நாங்களெல்லாம் அதிராவின் பதிவுகளையே படித்து புரிந்து கொள்கிறோம் அதனால நீங்கள் பிழைகளை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்

   Delete
  6. உண்மை தான், ஆனாலும் பார்வையாளர் எண்ணிக்கை என்பது நம் தளத்தினை கிளிக் செய்து தளம் திறந்தவுடன் பதிவாகி விடும் தானே? உண்மை சொன்னால் நான் உங்கள் பல என்ன அனைத்து பதிவுகளையும் தலைப்பை வைத்து அப்படி என்ன எழுதி இருப்பீர்கள் எனும் ஆர்வத்தோடு உள் வருவேன். அரசியல் வாடை அதிகம் இருந்தால் .. முழுதாக படிக்க மாட்டேன். சமீப கால அரசியல் பதிவுகள் எதுவுமே எவர் பதிவிலும் படிக்கவே இல்லை தெரியுமோ? உங்கள் பதிவுகள் அப்படி அல்ல.. தலைப்பே படிக்க வைத்து விடும் சாரே.

   Delete
 15. 'அங்க' இருந்துதான் இங்க வந்தேன். செய்முறை எளிதா இருக்கு. எல்லாம் எங்கிட்ட (கெச்சப் தவிர) இருக்கு. ஊருக்குப்போயிட்டு வந்தபின் செய்துபார்க்கிறேன்.

  'வேண்டாம், வேண்டாம்' என்றால் 'வேணும் வேணும்'னு அர்த்தமாம்ல. த.ம.

  ReplyDelete
  Replies


  1. எனக்கு யாரும் தங்க வைர நெக்லைஸை பரிசாக கொடுக்க வேண்டாம் வேண்டாம் வேண்டாம்( மைண்ட் வாய்ஸ் :இப்ப பார்ப்போம் இந்த நெல்லைதமிழ்ர் நமக்கு தங்க வைர நெக்லஸை அனுப்பி வைப்பாரா இல்லையா என்று?

   Delete
  2. நானும் ஏஞ்சல் பதிவு பார்த்துதான் இங்கு வந்தேன்.

   Delete
 16. தக்காளி சேர்த்த பிறகு கெச்சப் வேற சேர்க்கணுமா? எதற்கு?

  தற்செயலாக நேற்று எங்கள் வீட்டிலும் பாஸ் தக்காளி சாதம்தான் செய்திருந்தார். பனீர், கெச்சப் எல்லாம் இல்லாமல்! எங்கள் வீட்டு 'தசா' கொஞ்சம் காரமாக வேறு இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. இது மும்பை பளாட்பார ஸ்டைல் தக்காளி சாதம் அதனால் இதற்கு தக்காளி போட்டாலும் தக்காளி கெட்சப் மற்றும் பாவ் பாஜி மசாலா அவசியம் அப்படி இல்லைன்னா அது செளத் இண்டியன் ஸ்டைல் ஆகிவிடும்

   Delete
 17. இதெல்லாம் பட்டறிவா கேட்டறிவா. நான் எழுதும்சமையல் குறிப்புகள் பெரும்பாலும் கேட்டெழுதுவதே

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog