Tuesday, May 9, 2017

படித்த சட்ட மேதைகளுமா இப்படி ஜனநாயக நாட்டை கேலிக்கூத்தாக்குவது?


உலக மக்களிடம் கேலிக்குரியதாகும் இந்தியா


நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் கர்ணனுக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, தடை விதித்திருந்தது.இதனிடையில், நீதிபதி கர்ணனுக்கு, மே, 4ல் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. அதற்கான அறிக்கையை, 8ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 9ல் வழக்கு விசாரணை நடக்கும் என்றும், சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியிருந்தது.

ஆனால் மனநல மருத்துவப் பரிசோதனைக்குஅவர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், கோல்கட்டாவில் உள்ள தன் வீட்டில், அவசர கோர்ட்டை கூட்டி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் அமர்வில் உள்ள நீதிபதிகளும், என்னை பணி செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட அமர்வில் இருந்த நீதிபதி பானுமதியும், எஸ்.சி.. - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளனர்.

தலித்தான எனக்கு எதிராகச் செயல்பட்டதுடன், பொதுப்படையாக அவமானப்படுத்தியுள்ளனர். இந்த குற்றங்களுக்காக, இந்த எட்டு பேருக்கும், தலா, ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளின் கீழ்,ஒவ்வொருவருக்கும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.ஒரு வாரத்துக்குள், டில்லியில் உள்ள தேசிய எஸ்.சி., - எஸ்.டி., தேசிய கமிஷனில் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு தன் தீர்ப்பில், நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.



இதன் பின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை அளித்த தீர்ப்பு அளித்தனர் மேலும் கர்ணன் வெளியிடும் அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கும் தடை விதித்து தீர்ப்பு கூறி இருக்கின்றனர். இப்படி நீதிதுறையினரின் செயல்கள் சரவணன் மீனாட்சி சீரியல் போல தொடர ஆரம்பித்து  இருக்கிறது .

நம் நாட்டு அரசியல்வா(வியாதி)கள்தான் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகி நாட்டை வழி நடத்துகிறார்கள் என்றால் படித்த சட்ட மேதைகளுமா இப்படி ஜனநாயக நாட்டை கேலிக்கூத்தாக்குவது?

இப்படி  சட்ட ஒழுங்கு இல்லாமல் இருக்கும் இந்திய சட்டதுறையை பார்த்து உலகமே சிரிக்க ஆரம்பித்துவிட்டது . ஆனால் அதைக ட்டுபடுத்தாமல் இந்தியாவை வல்லரசாக மாற்ற இந்திய ஜனாதிபதியும் பிரதமரும் மிக்சர் சாப்பிட்டு கொண்டு ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள்


மிகசர் சாப்பிடுவதை உடனே நிறுத்திவிட்டு இதில் மத்திய அரசு/ஜனாதிபதி உடனே தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக முடித்துவைக்க முயலவேண்டும், இதையெல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால் நம்மை ஆள்வது வெறும் தலையில்லா முண்டங்களே என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது


டிஸ்கி : கர்ணன் எங்கே நம் பதவியை பறித்து தங்களுக்கும் சிறைத்தண்டனை தந்துவிடுவாரோ என்று ஜனாதிபதியும் பிரதமரும் நினைக்கிறார்களோ என்னவோ.


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. இதென்ன சின்ன புள்ளத்தனமா இருக்கு :)

    ReplyDelete
  2. ஆரம்பத்தில் இருந்தே கர்ணன் இப்படித்தான் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தான். பதவி கொடுத்ததன்மூலம் துரியோதனன் அவனைக் கட்டுப்படுத்திவைத்தான். சாரி, ..நான் மகாபாரத கர்ணனைப் பற்றியல்லவா பேசுகிறேன்? அவன் இங்கே எதற்கு வந்தான்?...

    இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
  3. தமாஷ் செய்கிறார்கள்.

    ReplyDelete
  4. நல்ல காமெடிதான்...நீதித்துறையே இப்படி இருந்தால்? என்னத்த சொல்றது..

    கீதா

    ReplyDelete
  5. /மத்திய அரசு (மோடி) ஜனாதிபதி உடனே தலையிட்டு சுமுகமாகமுடித்து வைக்க வேண்டும் பேசாமல் மோடிஎன்று மட்டும் கூறீருக்கலாம் இந்த அரசில் பாக்கியிருப்பவர்கள் எல்லாம் ஒப்புக்கு சப்பாணிகளே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.