Sunday, May 14, 2017

#modi #indian #Economy # growth @avargal_unmaigal
இந்தியாவின் எதிர்காலம் பயங்கரமாக இருக்கப் போகிறதா என்ன?


அமெரிக்கா  டெக்னாலஜி துறையில் அதிகம் கவனம் செலுத்தி manufacturing கம்பெனிகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கியதில் இருந்து அமெரிக்காவின்  பொருளாதாரம் ஆட்டம் கண்டது ஆனால் பல திட்டங்கள் தீட்டில் அதில் இருந்து  கொஞ்சம் கொஞ்சமாக  சீரடைந்து வந்தாலும் முழுமையாக சீரடைய நீண்ட காலங்கள் ஆகலாம்.


இந்தியாவை பொறுத்தவரையில் காங்கிரஸ கால ஆட்சியில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டை சுரண்டினாலும்  இந்தியாவின் வளர்ச்சி வல்லரசு நாடுகளைப் போல அல்லாமல் மிக சிறிய சதவிகித்ததில் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருந்தது.  சுருக்கமாக சொன்னால் இந்தியா மிக சிறந்த பொருளாதர வளர்ச்சி அடையாவிட்டாலும் இந்தியா மிக ஸ்ட்ராங்கத்தான் இருந்தது. ஆனால் உலக் பொருளாதார தாராளமயக்குததுலுக்கு பின் காங்கிரஸ் தலைவர்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றவாறு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிறிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட ஆர்ம்பித்தது. இதற்கு காரணம் மேலை நாட்டு  பொருளாதார திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டதால்தான்

இந்தியா அணுகுண்டு சோதனைகளை நடத்திய போது அமெரிக்காவுடன் சேர்ந்து பல நாடுகள் இந்தியாவின் மீது பொருளாதார தடைகள் விதித்த நேரத்திலும் இந்தியா அதை மிக எளிதாக கடந்து சென்றது அதற்கு காரணம் நம் நாட்டிற்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்ற நம்மிடமே எல்லாம்  இருந்தது. ஆனால் உலக பொருளாதார தாராளமயமாக்குதலுக்கு பின் நம் அர்சு போட்ட திட்டங்களினால் நம் நாட்டில் உள்ள சிறு தொழில்கள் அழியத தொடங்கின மேலும் மேலை நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு இந்தியா மிக பெரிய சந்தையாக மாறியது.அதற்கு அரசும் உதவி செய்தது

பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக மேலை நாட்டின் டெக்னாலாஜிக்கு உதவுவதற்காக மக்களை ரெடி செய்து அவர்களை மேலை நாடுகளுக்கு அனுப்பும் வேலையை செய்துவந்தது, இதனால் அன்னிய செலவாணி அதிகம் வந்தது என்றாலும் நாம் இப்போது நம் நாட்டின் வளர்ச்சிக்கு அன்னிய நாடுகளை எதிர் நோக்க வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டோம். அதனால் மேலை நாடுகளின்  பொருளாதார திட்டத்தினால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது

சரி காங்கிரஸின் திட்டங்களால்தான் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கபடுகிறது என்று சொல்லி  தேசபக்தராக காட்சி அளித்த மோடிக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து மிக அதிக மெஜாரிட்டியுடன் ஜெயிக்க வைத்தனர்.  ஆனால் தமிழ் நாட்டு மக்கள் மட்டும் இந்த தேசபக்தரை நம்பவில்லை. இவ்வளவு மெஜாரிட்டியுடன் வந்த அவர் நன்றியுணர்வுடன் சிறிதளவாவது தன்னை ஆதரித்த இந்திய மக்களுக்கு செய்வார் என்று எனக்குள் ஒரு சிறு நம்பிக்கை துளிர்த்து இருந்தது ஆனால் நடப்பதை பார்க்கும் போது காவரி நதியை போல அந்த நம்பிக்கையும் வ்றண்டு போனது..


காங்கிரஸ் கடந்த ஐம்பது ஆண்டுகால அளவில் சுரண்டியதை இவர் வந்த மூன்று ஆண்டுகளில் சுரண்ட ஆரம்பித்து இருக்கிறார். மோடியின்  பொருளாதார திட்டங்களால் இந்திய பொருளாதாரம் வளர்ந்ததை விட சில இந்திய  தொழில் அதிபர்களின் பொருளாதாரம் மட்டும் மிக அதிக வளர்ச்சியை அடைந்தது. இதனால் பலன் அடைவது அந்த தொழில் அதிபர்கள்தானே தவிர இந்திய மக்கள் இல்லை





#modi #india #ecomomy # IT jobcut
இந்தியாவின் பொருளாதார் வளர்ச்சிக்கு விவசாய துறையும்  தொழில் உற்பத்தி துறையும்தான் முக்கிய முதுகெலும்பு. ஆனால் இந்த இரண்டு துறைகளுக்கான எந்த  உருப்படியான திட்டங்கள் ஏதும் மோடி அரசால் இதுவரை செய்யப்படவில்லை என்பது மறுக்கப்படாத உண்மை வேண்டுமானல் மோடியின் ஆதரவாளர்கள் ம்ட்டும்  போட்டோ ஷாப்பினால் செய்யப்பட்ட  கிராபிக்ஸ்களை வைத்து  போலியான வளர்ச்சியை  காண்பித்து கொண்டு இருக்கலாம்.

விவசாய துறையில் சரியான திட்டங்கள் (நதி நீர் திட்டங்களோ அல்லது சட்டங்களோ ) செயல்படுத்தபடாததால் நாட்டின் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலமை மிக அதிமாகி கொண்டிருக்கிறது. இந்திய விவசாய துறைகளுக்கு உதவுவதற்கு பதிலாக மோடி ஆப்பிரிக்க நாட்டின் விவசாய துறைக்கு  நிதி உதவிகள் செய்கிறார் இதற்கு  ஆப்பிரிக்கா நாட்டின் மீது மோடிக்கு உள்ள அக்கறை அல்ல அங்கு  ஆயிரக்கனக்கான் ஏக்கர் நிலங்களை  வாங்கி போட்டு அங்கு விவசாயம் செய்யும் இந்திய தொழில் அதிபர்களின் மீதுள்ள அக்கறைதான் காரணம். இநத செய்லகளால்தான் இந்திய விவசாய உற்பத்தி செய்ற்கையாக பாதிக்கப்படும் போது மேலை நாடுகளில் இருந்து பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு அதிகவிலைக்கு விற்கப்படுகிறது. இப்படி செய்யும் போது இந்திய தொழில் அதிபர்களுக்கு அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்படுவதால் அவைகள் மேலை நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்த செயல்களால் ஒரு போதும் இந்திய பொருளாதாரம் உயரப் போவதில்லை.


அது போல இந்தியாவில் சிறு தொழில்களுக்கு ஆதரவாக எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை அதனால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இந்திய தொழில் அதிபர்கள் சைனா  போன்ற நாடுகளில் இருந்து குவாலிட்டி குறைவான பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதாலும் சிறுதொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டு நசுக்கப் படுகின்றன

அப்படியே அரசு உற்பத்தி துறையில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினாலும் அது மேலை நாட்டின் தொழில் அதிபர்களுக்கு பயன்படுவிதமாக இந்தியாவின் மூலப் பொருட்கள் மற்றும் இந்தியாவின் வளங்களை மிக அடிமட்ட விலைக்கு கொடுத்து மேலும் அதிக அளவு வரிவிலக்கு அளித்து அப்படி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மிக அதிக விலைக்கு விற்று  கொள்ளை அடிகக  உதவுகின்றனர்.


அடுத்தாக டெக்னாலாஜி துறையில் முன்னேறுவதாக சொல்லி கொண்டு அதிக அளவு மாணவர்களை உருவாக்கி அவர்களை மேலை நாட்டுக்கு வேலை பார்க்கும் அடிமைகளாக ஆக்கிவிட்டார்கள் .இதனால் இந்தியாவீற்கு மிக அதிக அளவு அந்நிய செலவாணிகள் வருகிறதுதான் அதை மறுப்பதற்கு இல்லை ஆனால் அப்படி கிடைக்கும் அந்நிய செல்வாணிகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு செலவிடப்படுவதில்லை.



இப்போது மேலை நாடுகளில் எடுக்கப்படும் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார திட்டங்களினால் இந்திய டெக்னாலாஜி துறையிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது அமெரிக்க மட்டுமல்ல சிங்கபூர் ஆஸ்திரேலியா யூரோப் போன்ற நாடுகள் இப்போது உள்ளுர் வேலை வாய்ப்புகளுக்காக மிக அதிக அளவில் கட்டுபாடுகளை விதித்து இருக்கிறது. இதனால் இந்திய டெக்னாலஜி துறை மிகவும்  பெருத்த அடிவாங்கப் போகிறது. இவர்கள் இந்த கட்டுபாடுகளை விதிக்கும் முன்னரே கடந்த அக்டோப்ர மாத காலங்களிலே இந்தியாவின் மிகப் பெரிய ஐடி டெக்னால்ஜி கம்பெனிகள் அதிக அளவில ஆட்களை நீக்க முடிவு செய்து செய்லபட்டு கொண்டு இருக்கின்றனர். இப்போது இந்த மேலை நாடுகள் கொண்டு வரப் போகும் அதிரடி திட்டங்களினால் மேலும் ஆய்ரம் இரண்டாயிரம் அல்ல ப்ல்லாயிரக் கணக்கான மக்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவிப்புக்கள் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. இதே நேரத்தில் ஆண்டு தோறும் கணக்கறற்ற எஞ்சினியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றன.


இன்னும் சில மாதங்களில் விவசாயிகள் தற்கொலை போல ஐடியில் வேலை செய்யும் ஆட்களும் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் நடந்து பரபரப்பாக செய்திகள் வெளியாகப் போகின்றன. இதற்கு மாற்று திட்டங்கள் ஏதும் இதுவரை இப்போது ஆட்சி செய்யும் தலைவர்களால் செய்யப்படவில்லை...

முதலில் தொழில் துறை அடுத்துவிவசாயம் இப்போது டெக்னாலஜி போன்ற துறைகளினால் இந்திய பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்லும் நிலமைதான் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இதை பற்றி மோடி மட்டுமல்ல வேறு எந்த தலைவர்களும் கவலைப்பட போவதில்லை காரணம் இதனால் அவர்களின் பொருளாதாரத்திற்கு ஆப்த்து இல்லை..


சரி தலைவர்களுக்குதான் அக்கறை இல்லை அதனால் நாமாவது குரல் கொடுப்போம் என்றால் பாகுபலி படம் வந்து விட்டது அதனால் அதை பற்றி பேசுவதற்கு நேரமில்லை மேலும் அடுத்து வரும் ரஜினியின் படம் பாகுபலி பட வசூலை மிஞ்சுமா என்ற கவலையும் தமிழக அரசியலில் ஏற்ப்பட்ட இடைவெளியை நிரப்ப ரஜினி வருவாரா அல்லது  ஜெயலலிதாவை ஒன்று சேர்ந்து கொன்ற ஒபிஸ்  மற்றும் எடப்பாடி அணி ஒன்று சேருமா சசிகலாவிற்கு தண்டனை குறைக்கப்படுமா? உதய நீதி அடுத்த தலைவராக வருவார. கேஜ்ரிவால் திகார் சிறைக்கு போவாரா? இப்படி பல பிரச்சனைகள் நம் கண்முன்னால் இருக்கும் போது இந்தியாவின் பொருளாதார வள்ர்ச்சி எல்லாம்  ஜுஜுப்பி


அன்புடன்
மதுரைத்தலைவன்

டிஸ்கி : காங்கிரஸ் ஆட்சியில் எப்படி  மக்களை சுரண்டினார்கள் என்று அறியவே மோடிக்கு ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும் அதனால் இன்னொரு தடவை அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் இந்தியாவை வல்லராக்கிவிடுவார்.

22 comments:

  1. பேசாம நாடு மாறிடலாமா?! என்னையும் பசங்களையும் அமெரிக்காவுக்கு கூட்டி போய்டுங்கண்ணே

    ReplyDelete
    Replies

    1. ஹலோ இங்கே ஆள்வது மோடியின் சகோதரர்தான் அதனால நானே பேசாமல் சுவிஸ்ர்லாந்து பக்கம் போயிடலாம என நினைக்கிறேன் அங்கதான் நிஷா அவர்கள் இருக்கிறார்கள் அங்க வரதுன்னா சொல்லுங்க நாம எல்லோரும் அங்கே போயிடலாம்

      Delete
    2. ஹஹஹஹ் நானும் தொத்திக் கொள்கிறேன். இப்ப மோடியைப் போல அங்கும் ட்ரம்ப் பத்தி தினமும் ஏதோ ஒரு எதிர்ப்பு செய்தி வருகிறது போல் தெரிகிறது...அதுவும் உளவியல் பிரச்சனை என்றெல்லாம் கூட வருகிறது போல..அவர் அப்படித்தான் உளறிக் கொண்டும் இருக்கிறார்.

      இங்கு சூடு தாங்கலைப்பா...42 டிகிரி...ஸ்விஸ் நல்லாருக்கும் தான். நிஷாவுக்குச் சொல்லிடலாம்..

      கீதா

      Delete
    3. @ராஜி இந்தியாவை விட்டு மிடில் ஈஸ்ட் மற்றும் ஆப்ப்ரிக்கா நாடுகளை தவிர வேற எங்கு போனாலும் குளிரத்தான் செய்யும் என்ன ரொம்ப குளிருச்சுன்னா கொஞ்சம் சரக்கை கண்னை முடிக் கொண்டு குடித்தால் குளிர் விட்டு போகிடும்

      Delete
    4. @கீதா பேசாமல் ஒரு விமானத்தை புக் பண்ணி நாம எல்லாம் நிஷா இடத்திற்கு போய்விட்டுவோம் வேலை அவங்க ரெஸ்டாரண்டிலே நமக்கு கிடைத்துவிடும்

      Delete
  2. சரியான மதிப்பீட்டிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சரியான என்பதைவிட சராசரி மனிதன் அறிவுக்கு எட்டிய மதிப்பிடு என்று சொல்லலாம்

      Delete
  3. அதனால்தான் மேக் இன் இந்தியா என்று சொல்லுகிறாரோ

    ReplyDelete
    Replies
    1. அவர் மேக் இன் இண்டியா என்ரு சொல்லதான் செய்கிறார் ஆனால் செயலில் அப்படி செய்வதில்லை என்பதுதான் இங்கு கவனிக்க தக்கது

      Delete
  4. OMG. Such a serious and lengthy write up from your side. Jokes apart. Very sensible, realistic and detailed one. I see there is no light in the tunnel. God please save us and this country.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு எப்பவுமே சின்னதாக எழுததான் பிடிக்கும் ஆனால் இதை எழுதும் போது சற்று பெரிதாகிவிட்டது இத்தனைக்கு நான் மிக சிறியதாகவே எழுத நினைத்து பல ஆதாரப் பூர்வ செய்திகளையும் இணைத்து எழுதலாம் என்றுதான் கருதினேன் ஆனால் அதி ரிசர்ஸ் கட்டுரை போல பெரிதாகிவிடும் என்பதால் அதை கைவிட்டுவிட்டேன் என்னை பொறுத்த வரையில் சின்னதாக தினத்தந்தி பாணியில் எழுதி கருத்தை சொன்னாலே போது காரணம் இந்த கால ஆட்களிடம் செய்திகளை சின்னதாக எடுத்து சொன்னால் போதும் அவர்களுக்கு தேவை என்றால் அதை விரிவாக நெட்டில் ரிசர்ச் செய்து படித்து கொள்வார்கள் அதனால் நாம் அதிகம் மெனக்கட வேண்டியது இல்லை...


      நண்பரே இங்கு வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி

      Delete
  5. உண்மை அனைத்தும்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்லி இருக்கிறேன் ஆனால் தெரியாத உண்மைகள் மிக அதிகமாக இருக்கிறது தோண்ட தோண்ட பல உண்மைகள் வரும்

      Delete
  6. நல்ல அலசல் சகோ! என் மனதில் தோன்றிய பல கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள். உறுதியாகச் சொல்ல முடியும்....இப்போதைய அரசு இப்போதேனும் விழித்துக் கொண்டு பொருளாதாரக் கொள்கைகளைத் திட்டங்களைச் சீர்படுத்தவில்லை என்றால் நிச்சயமாக பொருளாதாரச் சரிவு ஏற்படும் என்பதில் மிகையில்லை. குறிப்பாக விவசாயம், கால்நடை, சிறுதொழில்கள், குடிசைத் தொழில்களை ஊக்குவித்து காந்தியப்பொருளாதாரத்தின் ஒரு சிறு அம்சமேனும் கையாளப்படவில்லை என்றால் நிச்சயம் சரிவுதான். டெக்நாலஜி என்னதான் வளர்ந்தாலும் வெர்ச்சுவல் கேம் என்று என்ன வேண்டுமென்றாலும் விளையாடலாம், ஆர்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் என்று கொண்டுவரலாம்... ஆனால் வெர்ச்சுவல் விவசாயம், கால்நடை சாத்தியமா? ஆர்ட்டிஃபிசியல் இன்டெலெஜன்ஸ் இதில் வொர்கவுட் ஆகுமா? இது இயற்கை சார்ந்த விஷயம். இதனை எந்த ஓர் ஆட்சியும் மனதில் கொண்டால்தான் அந்த நாடு முன்னேறும் என்பது தெள்ளத் தெளிவு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நம் நாட்டின் களத்திற்கு ஏற்ற திட்டம் திட்ட வேண்டும் அதுதான் மிக பயனளிக்கும் உலகின் மிகப் பெரிய மார்க்கெட் இந்தியாதான் அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டுமே தவிர மேலை நாடுகள் இந்தியாவை பயன்படுத்தி முன்னேற நாம் இடம் அளித்துவிடக் கூடாது.

      Delete
  7. நல்ல பதிவு! அனைத்துக் கருத்துகளும் சரியே. மட்டுமல்ல இறுதி இரு பாராக்களையும் //முதலில் தொழில்துறை....அதிலிருந்து ஜுஜுபி வரைக்கும் மிகவும் ரசித்தேன்...சரியான நக்கல்..உண்மையும் அதுதானே!! அதுவும் தலைவர்களின் தனிப்பட்டப் பொருதாரம்...மற்றும் நாம் பொதுவாக மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதான கருத்து...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நக்கல் எனக்கு இயற்கையாகவே வந்து இருக்கிறது அந்த நக்கல் படிப்பவர்களையும் ரசிக்க வைக்கிறது , கருத்திற்கு நன்றி சகோ

      Delete
  8. பிஜேபி அரசின் யதார்த்த உண்மை நிலையை சொன்னிர்கள். சரியான அலசல் நன்றி மதுரை தமிழா. இதற்க்கு பரிசாக தேசத்துரோகி பட்டம் வரும் வாங்கிக் கொள்ள தயாராக இருங்கள் . இந்த ஆளை இந்திய மக்கள் இன்னும் நம்புது அதுதான் மிக பெரிய கொடுமை !!!

    M. செய்யது
    துபாய்

    ReplyDelete
    Replies
    1. நான் சமுக வலைதளங்களில் , ஊடகங்களில் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சுகளையும் அறிக்கைகளையும் படித்து அதன் பின் என் மனதில் என்ன படுகிறதோ அதை அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுகிறேன். என் பதிவை படிப்பவர்கள் நான் சொல்வது உண்மையா அல்லைது பொய்யா என்றுமுடிவு செய்யது அதற்கு தகுந்தாற் போல செயல்படட்டும்... யார் தேச துரோகி என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை அதற்காக நான் மூலையில் உட்கார்ந்து அழுகப் போவதில்லை அப்படி யார் சொன்னாலும் அதௌ எந்த விதத்திலும் என்னை காயப்படுத்தாது. நான் தேச ப்ற்று காரணமாகவோ அல்லது தேசதுரோகத்தைற்காகவோ எதையும் எழுதுவதில்லை. என் மனதில் பட்டதை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இங்கு சொல்லி செல்லுகிறேன் அவ்வளவுதான்


      தங்கள் வருகைக்க்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  9. இன்று கம்யூனிசம் அழிந்துபோய், முதலாளித்துவமே உலகெங்கும் -சீனா உள்பட- ஆட்சிசெய்துகொண்டிருக்கிறது. அதாவது உழைப்பவர்களைச் சுரண்டி, உற்பத்திவிலையைக் குறைத்து, அதனால் விற்பனை விலையில் சிறிதளவே லாபம் வருமாறு செய்து, போட்டியாளர்களை அழிக்கும் சீனா-மாடல் பொருளாதாரம் இன்று அமெரிக்காவை மட்டுமின்றி இந்தியாவையும் ஆட்கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தில் Articicial Intelligence வரப்போவதை உணராமல் இந்திய ஐ டி கம்பெனிகள் தங்களை புதுப்பித்துக் கொள்ளாமல் விட்டதால் அத்துறையிலும் இன்று பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு cyclic happening. தடுக்க வழியில்லை. சீனத்துப் பொருட்களை தடுத்தால்தான் இந்தியாவும் அமெரிக்காவும் வாழ முடியும். WTO அமைப்பில் இதை செய்ய வழியுண்டா? நரேந்திர மோடியால் இதைச் செய்யமுடியாமல் போகுமானால் வேறு யாரால் முடியும்? அப்படிப்பட்ட ஆளுமை இனிமேல்தான் பிறந்துவரவேண்டும். ஒன்றுமட்டும் உறுதி, Donald Trump அமெரிக்காவில் செய்யமுடிவதைவிட இந்திய முன்னேற்றத்திற்கு மோடியால் நிச்சயம் செய்யமுடியும். காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete
  10. விரிவான அருமையான அலசல்
    நேரு எப்போதோ சொன்ன
    ஒரு வாசகம் நினைவில் வருகிறது

    "எந்த நாட்டுத் தலைவர்களும் மக்களும்
    அரசியல் நடவடிக்கைகளை விட
    பொருளாதார நடவடிக்கைகளில் அதிகம்
    கவன்ம் செலுத்துகிறார்களோ
    அந்த் நாடே வளர்ச்சிபெறும் "

    நாம் இப்போதும் நீங்கள் கடைசிப் பாராவில்
    குறிப்பிட்ட விஷயங்களில்தானே
    அதிகம் கவன்ம் கொண்டிருக்கிறோம் இல்லையா

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.