Monday, May 22, 2017

@avargal unmaigal
பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முன்பே இப்படி என்றால் ?

கடந்த வாரத்தில் பாஜகவில் உள்ள  தமிழகத்தை பிரபலமானவர் தனது பேஸ்புக் தளத்தில் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் பொன்.இராதா கிருஷ்ணன் இருக்கும் கிழே  இருக்கும் போட்டோவை போட்டு  அதை பார்ப்பவர்கள் தவறாக நினைக்கும் வண்ணம்  தகவலை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த எனக்கு மிக அதிகமாகவே ஷாக்காக இருந்தது. காரணம் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் எனக்கு பாஜக தமிழக தலைவர்களான பொன்.இராதா மற்றும்  வானதி பற்றி மிக அதிகளவு மதிப்பு உண்டு அவர்களை பற்றி பாஜகவினேரே இப்படி தகவலை பதிந்து இருக்கும் போது அதிர்ந்துதான் போனேன். இதில இவங்க திராவிட கட்சியை பற்றி தரக் குறைவாக பேசுகிறார்கள்


 
#avargal_unmaigal @avargalunmaigal
Vanathi Srinivasan and  Pon Radha Krishnan



vanathi srinivasan pon radhakrishnan @avargal_unmaigal

@avargal_unmaigal


அதுமட்டுமல்ல பேரையும் கேட்க வேண்டாம், ஊரையும் கேட்க வேண்டாம். கட்சியை மட்டும் சொல்கிறேன். அந்தப் பெண் பிரமுகர், பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர். சென்னையில் மட்டுமல்ல, டெல்லி வரை செல்வாக்கு உள்ளவர். அவரை மையப்படுத்தி எழும் குற்றச்சாட்டுகளைப் பார்த்து பி.ஜே.பி தலைமையே மலைத்துப் போயுள்ளது என்று சொல்லி 60 கோடிரூபாய் அளவிற்கு ஊழல் செய்து இருக்கிறார் என்று  ஊடகங்கள் செய்திகள் இட நக்கீரனோ   ‘வானதி சீனிவாசன்’ தான் அந்த செயலைச் செய்தது என்று போட்டு உடைத்து. அது 60 கோடிரூபாய் ஊழல் அல்ல..8 ஆயிரம் கோடி ஊழல் என்று ஒரு அணுகுண்டை வீசியிருப்பதாக செய்தி அறிந்தேன்....


தமிழக அரசியலில் உள்ள பெண்மணிகளில் இரண்டு பேர் மேல் நான் மிகவும் அதிக அளவு மதிப்பு வைத்து இருந்தேன் அவர்கள் கனிமொழி மற்றோருவர் வானதி. இவர்கள் இருவருமே இப்படி செய்து இருப்ப்பதை எண்ணி மனது மிகவும் வேதனைதான் அடைகிறது, கனிமொழி தவறு செய்ய அவர்கள் குடும்பத்தினர் தூண்டுதல்கள்தான் காரணமாக இருக்கும் என்று இன்று வரை நான் நம்புகிறேன். ஆனால் வானதி ஆட்சியில் இல்லாதபோதே இப்படி ஒரு செயலை செய்கிறார் என்றால் என்னவென்று சொல்வது...


இதில வேற தமிழகத்தில் மோடிதலைமையிலான பாஜக ஆட்சியை பிடித்து நல்ல ஆட்சியை கொடுக்கும் என்பது கேலிக் கூத்தாகவே இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்


ஜெயலலிதா மீது என்றும் எனக்கு ஒரு நல்ல மதிப்புக்கள் கிடையாது..... ஆனால் கனிமொழி மற்றும் வானதி அவர்கள் மீது மிக மிக அதிகமதிப்பு வைத்திருந்தேன்.....ஆனால் அவைகள் சிறிது சிறிதாக மாறுகிறது பெண்கள் அரசியலில் வந்தால் நாடு சிறிதவது முன்னேறும் என்று நினைப்புக்கள் தகர்ந்துதான் போகின்றன.

டிஸ்கி : வானதியை தமிழக முதல்வராக பாஜக நிறுத்தினால் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் நானே அமெரிக்காவில் இருந்து தமிழகம் வந்து அவர்களை முதல்வராக என்னால் முடிந்த முயற்சிகள் எல்லாம் செய்யலாம் என்று கூட நினைத்து இருந்தேன் அந்த அளவிற்கு வானதி அவர்கள் மேல் மதிப்பு வைத்திருந்தேன்.ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்





கொசுறு : பேஸ்புக்கில் சரவண குரு என்பவர் எனது இன்பாக்ஸில் இன்று அனுப்பிய தகவல் இது...இந்த திட்டம் மக்களுக்கு பயன் அளிக்க கூடிய ஒன்று என்றால் மோடியக்கு ஒரு வாழ்த்து சொல்லி இந்ததிட்டத்தில் சேர்ந்து கொள்வதில் தப்பு இல்லையே

12 comments:

  1. எல்லாத்துலயும் சம உரிமை கொண்டாடும்போது ஊழல்ல மட்டும் விட்டுடுவோமா என்ன?!

    ReplyDelete
    Replies
    1. அப்ப மக்களும் இனிமே சம உரிமை அதிகம் கொள்ளும் நேரம் வந்துவிட்டது ராஜி

      Delete
  2. எனக்கும்... வேறென்ன சொல்ல ..

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வானதியின் மேல் மிக அதிக மதிப்பு உண்டு ஆனால் அது இப்போது சுக்கு நூறாக உடைந்துவிட்டது ஒரு நல்ல மனிதர்கள் கூட தலைவாரக இல்லையா என்று ஹும்ம்ம்

      Delete
  3. இப்படிப் பட்ட கட்சியில் ரஜினி சேர்ந்தால் நாடு உருப்படுமா :)

    ReplyDelete
    Replies

    1. பகவான் ஜி ரஜினியால் கட்சிக்கும் கட்சியால் ரஜினிக்கும் பலன் தான் கிடைக்குமே தவிர இவர்களால் நாட்டிற்கு பலன் ஏதும் இல்லை

      Delete
    2. பகவான்ஜி. ரஜினி அரசியலுக்கு வந்தால் (அதுவே நிச்சயமில்லை) தணிக்க கட்சிதான் தொடங்குவார். அவர் விவரமானவர்!

      Delete
    3. //தணிக்க கட்சிதான்//

      கூகிள் ஒழிக.... நிமிர்ந்து பார்க்காமல் டைப் அடித்துக் கொண்டு போனால் இப்படித்தான்!!!! தனிக் கட்சி என்று படிக்கவும்!!!!

      Delete
  4. ஒரே ஒரு செய்தியில் உங்கள் அபிப்ராயம் மாறி விட்டதா? கனிமொழி மேல் நம்பிக்கையா? இரண்டுக்குமே புன்னகைக்கிறேன்!

    ReplyDelete
  5. how on earth you expect something good from a b**h from bjp? so sad...
    we all have our soft corners

    ReplyDelete
  6. இந்த எண்பத்து நான்கு வயதில் எத்தனையோ அரசியல் வாதிகளைக் கண்டு விட்டேன்! எவரும் அரசியலில் நுழையும் வரை நல்லவர்களாக உள்ளனர் அதன்பின் பதவி அதிகாரம் வந்து விட, நிலமை மாறித் தான் போகிறது!

    ReplyDelete
  7. மதுரை சகோ! அரசியலை இவ்வளவு அலசும் உங்களுக்குக் கனிமொழி மேல் அத்தனை மதிப்பு இருந்ததா? வியப்பாக இருக்கிறது சகோ...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.