Tuesday, April 25, 2017

தி.மு.க. நடத்திய பந்தினால் பலன் யாருக்கு ?

பார்த்திபன் :அடே எதுக்குடா கடை எல்லாம் அடைச்சிருக்கு

வடிவேல்: அண்ணே இன்று பந்த்ண்ணே அதுனாலதான் அடைச்சிருக்கு...

பார்த்திபன் :குமுட்டை தலையா எதுக்குடா பந்த் நடத்துறீங்க

வடிவேல்:அண்ணே விவசாயிகளின் பிரச்சனைக்காக  அவர்கள் பிரச்சனை தீர  ஆதரவாக பந்த் நடத்தோறோம் அண்ணனே

பார்த்திபன் :அப்ப பந்த் நடத்தினால் பிரச்சனை தீர்ந்திடுமாடா

வடிவேல்:அண்ணே உங்களுக்கு விவரமே பத்தலைன்னே பந்த் நடத்தினால் எங்கண்ணே பிரச்சனை தீரும். இது கூட உங்களுக்கு தெரியலைண்னே


பார்த்திபன் :அப்ப நீங்க நடத்திய பந்தினால் ஒரு மயிரும் புடுங்க முடியாது அப்படின்னா உங்க பந்த தோல்விதானேடா கூமுட்டை தலையா

வடிவேல்: அண்ணே பந்த் தோல்வி இல்லைன்னே அது மாபெரும் வெற்றிண்ணே அதுனாலதான் கடைகள் எல்லாம் அடைச்சிருக்கு அதை நீங்களே பார்த்தீங்களண்ணே

பார்த்திபன் :அடே கடைகள் அடைச்சால் கடைகாரர்களுக்கு தானே பிரச்சனை அதனால் அவர்களின் வருமானம் பாதிக்கப்படுமல்லா

 வடிவேல்: அதுதான் இல்லைண்ணே கடையில் வாங்க வேண்டியதை மக்கள் முதல்நாளே வாங்கிடுவாங்க இல்லைன்னா அடுத்த நாள் வாங்கிடுவாங்க அதுனால அவர்களுக்கு பாதிப்பு இல்லைண்ணே


பார்த்திபன் :கூமுட்டை நான் சொன்னது பெரிய கடைகளுக்கு இல்லைடா சின்ன சின்ன தெரு வியாபாரிகளுக்குடா இப்படி பந்த் நடத்தியதால் அவர்களின் தின் வருமானம் பாதிக்கப்படுமல்ல அது மட்டுமல்ல கூலித்  தினக் கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்களடா?  இப்படி பந்த நடத்துவதினால் பாதிப்பு அடைவது ஏழை மக்கள்தானே அதுக்கு என்ன பண்ண போறீங்க அதுக்கும் ஒரு பந்த் நடத்த போறீங்களா அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு ஏதும் தரப் போறீங்களா? அடே  இப்படி பந்த நடத்துபவர்கள் அவர்கள் நடத்தும் டிவியையும்  ஒரு 12 மணி நேரம்  நிறுத்தி ஆதரவு தர வேண்டியதுதானே...தங்கள்  வீட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கும் ஒரு நாள் விடுமுறை அளித்து இருக்க வேண்டியதுதானே

வடிவேல்:அண்ணே நீங்க  ரொமப் விபரமாகத்தான் பேசுறீங்கண்ணே  அப்ப இந்த பந்தினால் பலன் ஏதுமில்லையாணண்ணே

பார்த்திபன் :அடே பலன் இருக்கிறதடா?

வடிவேல்: என்ன அண்ணே என்னை இப்ப நீங்க ரொம்ப குழப்புறீங்கண்ணே?

பார்த்திபன் :அடே நான் சொல்ல வருவது  இதனால் விவசாயிகளுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை ஆனால் திமுகவுக்கு ஒரு விளம்பரம் அதுதாண்ட இதனால் கிடைக்கும் பலன் மற்றபடி பொதுமக்களுக்கு அவதி ஊடகங்களுக்கு ஒருநாள் செய்தி வேறு எதுவும் நடக்க வில்லை

வடிவேல்:அப்ப என்ன செய்யாலாம் அண்ணே இந்த போராட்டத்தை ஒரு பயனுள்ள போராட்டமாக மாற்ற ஏதாவது வழி இருக்காண்ணே

பார்த்திபன் :இருக்குடா இனிமேல் போராட்டம் என்றால் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் சில மணி நேரம் மட்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் . அதன் பிறகு அடுத்த நான்கு  அல்லது எட்டு மணி நேரம் நீர் நிலைகளைத் தூர் வருதல்,சாலைகளைத் தூய்மைப்படுத்துதல் , பொது மருத்துவ மனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு உடல் உழைப்பால் உதவுதல் , நடமாட முடியாத முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் உழைப்பால் உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் . அதன் பிறகே போராட்டம் நிறைவு பெற்றதாக அறிக்கை விட வேண்டும்  அதனால்  சில பலன்களாவது கிடைக்கும்டா




அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. உண்மையிலேயே யாரும் ஒரு மயிரும் புடுங்கப்போவதில்லை.

    தி.மு.க. இதை சாதனைப்பட்டியலில் சேர்த்துக்கொண்டு நாளை ஓட்டுக்கேட்கும் இதுதானே காலம் முழுவதும் நடக்குது

    மக்கள் தெளிவுநிலை பெறும்வரை நாடு இன்னும் மோசமான நிலைக்கு போகும் இன்னும் இரண்டு தலைமுறை அழியணும் பிறகு பார்க்கலாம் நமது பேரப்பிள்ளைகள்.

    ReplyDelete
  2. பந்த் - இதனால் ஒரு பயனும் இல்லை - பொதுமக்களுக்கு!

    ReplyDelete
  3. பைஸா பிரயோஜனமில்லை
    என்கிற வார்த்தைக்கு இந்த பந்த் தான்
    சரியான உதாரணம்
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    மிகக் குறிப்பாக கடைசிப் பத்தி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. This bandh is total waste. it will not help either tamilnadu farmers nor the common man.
    DMK has tried all sorts of tricks but nothing is seemed to work for them. this bandh is one of them.

    ReplyDelete
  5. இது ஒரு அரசியல் விளம்பரத்துக்குத்தான் தீர்வு கிடைக்கும் என்பதெல்லாம் பொய்யான வேஷம்.

    ReplyDelete
  6. இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு பயனும் இல்லை. ஏதோ அரசியவாதிகளுக்குப் பழகி விட்டது, பொழுது போகவில்லை.

    ReplyDelete
  7. எந்த நாட்டுலயும் இப்படி பந்த் நடக்குறதா நான் கேள்விப்படல

    ReplyDelete
  8. If they wanted to help the farmers, they should work more and donate a percentage of their income/salary of the day for the purpose. By creating loss to the Govt and their properties, nothing is going to come out of it, as the money will be recovered from public only in the form of various taxes.

    ReplyDelete
  9. நல்ல வேளை இந்த பந்தினால் சேதம் ஏற்படவில்லை, பஸ்கள் எரிக்கப் படவில்லை. பொதுமக்கள் தாக்கப்படவில்லை அரசும் கண்டுகொள்ளவில்லை எப்படித்தான் கவனம் ஈர்ப்பது

    ReplyDelete
  10. தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    Tamil News

    ReplyDelete
  11. நோ யூஸ்...பந்த் எல்லாம் சும்மா வெட்டி....உங்கள் இறுதி கருத்துக்குப் பாராட்டுகள்...யெஸ் பார்த்திபன் வழி உங்கள் கருத்துகள்...சூப்பர்..வழி மொழிகிறேன்

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.