Sunday, April 23, 2017

avargal unmaigal TN Minister Tries To Save Water By Covering A Dam With Thermocol
தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு அளவு இல்லையா?

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் அட்டைகள் வைத்து புதிய முயற்சியை மேற்கொண்டார். அதாவது, கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க  நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மூட செல்லூர் ராஜா முடிவு செய்தார். அவ்வாறு மூடினால் நீர் ஆவியாமல் தடுக்கப்படும் என்று கருதினார். இதுபோல் ஏற்கெனவே வெளிநாடுகளில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதாம்.

செல்லூர் ராஜூவின் திட்டத்தின் துவக்கமாக, 200 சதுர அடிக்கு வைகை அணையில் உள்ள நீர் மேல் தெர்மாகோல் போடப்பட்டது.  ஆனால் நீர் நிலைகள் மேல் மூடப்பட்ட தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் கரை ஒதுங்கிவிட்டது. திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய முயற்சியில் இறங்கி உள்ளார். நீர் ஆவியாவதை தடுக்க ரப்பர் பால்கள் கொண்டு வைகை அணை மூட திட்டமிட்டுள்ளார்.அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள நீர்தேங்கங்களில் இவ்வாறு கறுப்பு ரப்பர் பந்துகள் போடப்பட்டன. நீர்தேக்கங்களில் நீர் ஆவியாகாமல் தடுக்க இவ்வாறு ரப்பர் பந்துகள் போடப்பட்டன. இந்த திட்டம் வெற்றி அடைந்ததாக அமெரிக்கா அறிவித்தது. இந்த முறையைதான் செல்லூர் ராஜு தற்போது கையில் எடுத்துள்ளார்.


இந்த தெர்மாகோல் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதால் அவரை கிண்டல் செய்து சமுக வலைத்தளங்கள் மூலம் அனைவரும் கிண்டல் செய்து  மீம்ஸ் வெளியிட்டு அவரி கேலி செய்து வருகின்றனர். அப்படி கேலி செய்பவர்கள்  ஒன்றை மறந்துவிட்டு கேலி செய்து கொண்டு இருக்கின்றனர்.



தமிழக அரசே முடங்கி கிடக்கும் நிலையில் தண்ணிர் பிரச்சனையை கருத்தில் கொண்டு தன் பகுதி மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தமிழக பொதுப்பணித்துறை மூலம் இநத முயற்சியை செய்து பார்த்து இருக்கிறார் இதற்காக அவரை பாராட்டுவதை விட்டுவிட்டு அவரை கேலி செய்வது எந்த வகையில் சரியாகும்.என்னவோ இது செல்லூர் ராஜு மட்டுமே போட்ட திட்டம் என்ரு பலரும் கருதுகின்றார்கள் உண்மையில் செல்லூர் ராஜுவின் தலைமையில் படித்த தமிழக பொதுபணி துறை அதிகாரிகள் மற்றும் எஞ்சீனியர்கள் ஆலோசனையின் பேரிலே இந்த திட்டம் தாயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது . ஒரு வேளை உங்களுக்கு கேளி செய்ய வேண்டுமானால் படித்த பொது துறை எஞ்சினியர்களின் அறிவை கேலி செய்யுங்கள்


அறிவு கெட்ட தமிழக மக்களே வெள்ள நேரத்தின் போது வெளிவாராமல் வீட்டின் உள்ளே முடங்கி கிடந்த ஜெயலலிதான் உங்களுக்கு லாய்க்கு இவரை போல  சிறிய முயற்சியாவது செய்வர்களைத்தான் நீங்கள் கேலி செய்து  எதையும் செய்யாமல் ஆக்கிவிடுகிறீர்களே.. செல்லூர் ராஜுவை கிண்டல் செய்பவர்களே மோடியின் கறுப்பு பணத்திட்டமும் இதைப் போலத்தானே...


செல்லூர் ராஜுவின் திட்டத்திற்கு 8000 ரூபாய்தான் செலவாகியது ஆனால் சமுக வலைதளத்தில் 10 லட்சம் ஆகியது என பொய்யான செய்திகள் பரப்பபடுகின்றன... ஆனால் மோடியின் கறுப்பு பண ஒழிப்பால்  என்ன பலன் கிடைத்தது  பொருளாதாரம் மேலும்தான் சீரழியத் தொடங்கின.


அன்புடன்
மதுரைத்தமிழன்
TN Minister Tries To Save Water By Covering A Dam With Thermocol

11 comments:

  1. மோடியின் முட்டாள்தனத்திற்க்கு முன் செல்லூர் ராஜீவின் முட்டாள்தனம் அவ்வளவு மோசம் இல்லை, மோடி இந்திய முட்டாள், ராஜு தமிழக முட்டாள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த அமைச்சர் செய்தது அறியாமை ஆனால் மோடி செய்வது திருட்டு தனம்

      Delete
  2. முயற்சி தவறில்லை. இது போன்ற முயற்சிகளை ஏரி குளம் போன்றவற்றில் முயற்சி செய்து விட்டு பின்னர் அணைக்கு வந்திருக்கலாம்.தெர்மோகோல் கழிவுகள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. பள்ளிகளில் கூட தெர்மோகோலில் ப்ராஜெக்ட் செய்ய அனுமதிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அதிமுகவில் இருக்கும் பெரிய தலைவர்கள் எல்லாம் பதவிக்காக அடித்து கொண்டிருக்கும் வேளையில் இவர் நீர் பிரச்சனைக்காக தனக்கு தெரிந்த முறையில் முயற்சி செய்து இருக்கிறார் அது தவறானதாக இருந்தால் அவரது முயற்சிக்கு பாராட்டைதெரிவித்து அதையே எப்படி சரி செய்வது என்ற அறிவுரையை கொடுக்காமல் சமூக வலைத்தளம் மூலம் அவரை கிண்டல் கேலி செய்வது மிகவும் தவறான செயல் என நன் நினைப்பதன் விளைவே இந்த பதிவு ஆயிர கணக்கில் கினதால் செய்யும் மக்களில் ஒருவராவது என்ன செய்யலாம் என்று ஒரு வரி கூட ஐடியா தர வில்லையே இவர்களுக்கு எல்லாம் ஜெயலலிதா சசிகலா தான் லாயக்கு

      Delete
  3. திட்டத்தை துவக்கி வைக்கும் மந்திரி செல்லூர் ராஜு அவர்களே ,திட்டச் செலவு பத்து லட்சம் என்று பேட்டி அளிக்கும் வீடியோ வைரலாய் பரவி காணக் கிடைக்குதே :)

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜி நேற்று நான் பார்த்த செய்தியில் அவர் பேட்டித்தரும் போது 8000 ம் தான் செலவு ஆகியது என்று சொல்லி கொண்டிருந்தார் ஒருவேளை திட்டம் தோல்வி அடைந்ததால் செலவு கணக்கை குறைத்து சொல்லி இருக்கிற போல பாவம் இவரும் ஒரு அரசியல் வாசிதானே

      Delete
  4. நீங்கள் சொல்வது சரிதான். மோடியின் மூடத்தனத்திற்கு வேறு எந்த முட்டாள்தனமும் இணையாகாது. அந்த மூடத்தனத்தால் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உயிர் வேறு பறிக்கப்பட்டது

    ReplyDelete
  5. கொள்ளு என்றால வாயைத் திறப்பது
    கடிவாளம் என்றால வாயை மூடிக் கொள்ளுமாம்
    கெட்டிக்காரக் குதிரை
    அப்படித்தான் ஒரு திட்டம் வெற்றியடைந்தால்
    அது தன் யோசனை என்றும் அது
    அதிகாரிகளுடையது என்றும் அரசியல்
    வியாதிகள் சொல்லிக் கொளவ்து உண்டு
    இதுவும் இந்த வகையில்தான் சாரும்

    குளம் குட்டையில் பரிசீலித்துப் பின்
    அணைக்கு இது சரிப்பட்டு வருமா என
    கொஞ்சம் யோசித்திருக்கலாம்

    முட்டாள்தனமாய் செய்வதற்கு எதுவும்
    செய்யாமல் இருப்பது சாலச் சிறந்ததுதான்
    இல்லையா...

    ReplyDelete
  6. உங்கள் மாற்றுக் கருத்து சரிதான் சகோ! முயற்சி நல்லதே... ஆனால், வேறு வழியில்லையா என்ன? தெர்மகோல் சுற்றுப் புறச்சூழலுக்கு எதிரானது ஆயிற்றே...

    கீதா

    ReplyDelete
  7. உங்கள் கருத்தை நானும் ஒப்புக் கொள்கிறேன் நண்பரே.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத செயல்கள் செய்தால் நல்லாருக்கும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.