உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 10, 2017

நம்புங்கய்யா நம்புங்க இந்த ஆர்கே நகர் தேர்தல்?


நம்புங்கய்யா நம்புங்க இந்த ஆர்கே நகர் தேர்தல்?


நம்புங்கய்யா நம்புங்க இந்த ஆர்கே நகர் தேர்தல் ரத்துக்கும் பாஜக சமந்தம் இல்லை குறிப்பாக  தேர்தல் ரத்து ஆகும் என்று தமிழிசை சொன்னது அவரின் சொந்த கருத்து அதை பற்றி  யாரும் கேட்க கூடாது சரியா...அப்படியும் மீறி கேட்பவர்கள் தேச துரோகிகள்


ஒற்றை தொகுதியைக்கூட தீவிரமாய் கண்காணித்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடியாத கையாலாகத தேர்தல் ஆணையம்தான் உபியில் நேர்மையாக தேர்தல்  நடத்தியது  என்றால் சிரிக்கத்தான் தோன்றுகிறது


பாஜக செய்யும் தவறுகளை தட்டி கேட்க தைரியம் இல்லாதவர்களாக இன்றைய தமிழக தலைவர்கள் இருக்கிறார்கள் இதில் தமிழகத்தின் பெரிய கட்சி என்று சொல்லிக் கொள்ளும் திமுகவும் அடங்கும்  குறுக்கு வழியில் பணம் பண்ணும் அரசியல்வாதிகளின் குரல் பதுங்கவே செய்யும்.
உபியில் பயன்படுத்தப்பட்ட எலக்ட் ரானிக் வாக்கு பதிவு எந்திரம் தமிழகம் வர தாமதமானதால்தான் ஆர்கே நகர் தேர்தல் ரத்தாம் அது தெரியாமல் ஊடகங்கள் தவறான தகவலை தருகின்றனதினகரன் வெற்றி பெறுவார் என்று மத்திய அரசின் உளவுதுறையால் கிடைத்த தகவலால்தான் ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து. பாவம் மோடியின் செல்வாக்கு தமிழகத்தில் இவ்வளவுதான்


ஆர்கேநகரில் முன்றாவது இடத்திற்குதான் வருவார் என்று மக்கள் கணித்த  
தினகரனை கண்டு பயந்து  தேர்தலை தள்ளி வைத்தது பாஜக அரசு ஆமாம் உபியில் ஜெயித்த மோடிக்கு தமிழர்களை கண்டு பயமாக இருக்கிறதோ

ஆட்சியை கலைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க அதை சீக்கிரமாக பண்ணி தொலைத்துவிட்டு தேர்தல் களதிற்கு வாங்கடா..வைச்சு செய்ய நாங்க ரெடியாக இருக்கோம்
நீங்கள் உண்மையான தேசபக்தி கொண்ட இந்தியனாக இருக்க உங்களிடம் அவசியம் இருக்க வேண்டியது ஆதார் கார்டு அல்ல இந்திய பாஸ்போர்ட் அல்ல பாஜக உறுப்பினர் அட்டை மட்டும் இருந்தால் போது உண்மையான இந்தியராக இருக்க முடியும்
அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments :

 1. அரசில் இருக்கும்கட்சியால் எதையும் செய்ய முடியும் நாள் தோரும் ஏதாவது ஆர் எஸ் எஸ் காரர் அல்லது பாஜகவினர் மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் எங்கே போகிறது நம்ஜனநாயகம் மாட்டுக்குக் கொடுக்கும் மதிப்பை மனித உயிருக்குக் கொடுக்காதவர்கள் அடுத்து இன்னுமொரு களேபரம் இருக்கலாம் அயோத்தியில் ராமர் கோவில் கூடாது என்பவர்கள் தேசத் துரோகிகள் அவர்களது தலை துண்டிக்கப் படுமாம்

  ReplyDelete
 2. அண்ணே.. ஆர். கே. நகரில் நடக்கும் அநியாயங்களுக்கு தேர்தல் நடத்தி இருந்தால்தான் தவறு.

  ReplyDelete
 3. நடக்ககூடாதெல்லாம் நடக்குது நம்ம நாட்டில் :(

  ReplyDelete
 4. மதுரை சகோ....ஒவ்வொரு நாளும் நியூஸ் பார்த்து கடுப்ஸ்...ஒரே கூத்துதான்...

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog