உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, April 28, 2017

என்னடா அநியாயம் இது?

என்னடா அநியாயம் இது?


நேற்று நானும் என் மனைவியும் நானும் உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தோம் அப்போது என் மனைவி சொன்னாள்.. நாம் இது வரை என்னனென்ன பொய்கள் சொன்னோம் என்று ஒப்பனாக சொல்ல வேண்டும் அதில் தவறு ஏதும் இருந்தால் அதை நாம்  சரி செய்து கொள்வோம் என்றாள். நான் அப்பவே சுதாரித்து இருக்கணும் ஆனால் என்ன செய்ய அப்ப என்னிடம் இருந்த கிட்னி வேலை செய்யாததால் நானும் ஏதோ ஞாபகத்தில் சரி என்று சொல்லிவிட்டேன்..


சரி முதலில் நான் சொன்ன  பொய்களை எல்லாம் சொல்லுகிறேன் என்று மனைவி சொல்லி அவள் சொன்ன பொய்களை எல்லாம் வரிசையாக சொன்னாள். அவள் சொல்ல சொல்ல இதெல்லாம்  யாரையும் பாதிக்காத பொய்கள் அதனால்  இதை சரி செய்ய வேண்டியது இல்லை என்று சொன்னேன். இருந்தாலும் அவள் என்னைவிடவில்லை நீங்கள் என்னை மன்னித்தாக சொல்லுங்கள் அப்போதுதான் என் மனசு சரியாகும் என்று சொன்னாள். நானும் சரியென்று அவள் சந்தோஷப்படட்டும் என்று அவளை மன்னித்துவிட்டேன் என்றேன்


அதன்பின் இப்ப நீங்க சொல்லுங்க நீங்க என்னிடம் என்னென்ன பொய்கள் எல்லாம் சொன்னீங்க என்றாள். அதற்கு நான்  நீ ரொம்ப அழகாக இருக்கே என்று நான் சொன்னது மிகப் பெரிய பொய் என்றேன். அப்படி நான் சொல்லி முடித்தவுடன் டாமல் என்று சத்தம் கேட்டது.


அந்த சத்தம் கேட்ட சிறிது நேரத்திற்கு பின் நினைவு வ்ந்து பார்த்தால் நான் ஹாஸ்பிடலில் படுத்து கிடக்க டாக்டர்ஸ் எல்லாம் என்னை சரி செய்து கொண்டிருந்தார்கள்.. என்ன அநியாயம் பார்த்தீங்களா? இப்படியா நான் சொன்ன பொய்யை சரி செய்வது....ஹும்ம்ம்ம்ம்ம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments :

 1. அச்சோ !! மாமி எதுக்கு அவசரப்பட்டிங்க ..இன்னும் நிறைய அவர் வாயில் இருந்து வரவழைச்சிட்டு இண்டெர்வெல் விடாம அடிச்சிருக்கணும் ..ட்ரெயின் பத்தலை மாமிக்கு :)

  ReplyDelete
 2. ஜுஜுபி மேட்டருக்கே ஹாஸ்பிட்டலா?! இன்னும் கேர்ள் பிரண்ட், சரக்கு மேட்டர்லாம் வெளில வந்தா?!

  ReplyDelete
 3. ஒரு பொய்யென்றாலும் அது ஓராயிரம்
  பொய்க்கு சமம் எனத்தான் படுகிறது
  அதனால் அடிபட்டது கூட சரியெனத்தான் படுகிறது

  (பூரிக்கட்டை மரத்தால் செய்ததுதுதானே )

  ReplyDelete
 4. ஹஹஹஹஹ.. ..நினைச்சேன்.ரொம்ப நாளாச்சே. என்னடா மதுரை ஆதி வாங்கினு...ஹூம் இதுக்கே...இப்படியா..அப்ப இன்னும் வெளிய வந்துச்சுனா...உங்க அருமை சகோக்கள் அனுப்பிந கட்டை, ப்ரெஸ்ஸர் எல்லாம் சும்மா கிடக்க விடலாமா..ஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
 5. அப்போ அது உண்மை இல்லையா

  ReplyDelete
 6. மொத்தப் பொய்யையும் வரவழைத்திருக்க வேண்டாமோ.

  சாமர்த்தியமே இல்லையே உங்க மனைவிக்கு.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog