Thursday, April 13, 2017

avargal unmaigal
இந்தியாவில் சட்டம் இருக்கிறது ஆனால் அது ஒழுங்காக இருக்கிறாதா?


இந்தியாவில் சட்டம் இருக்கிறது ஆனால் அது ஒழுங்காக இருக்கிறாதா அல்லது சரியாக செயல்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லமுடியும்..

வழக்குகளை விசாரிக்க தேவைக்கும் அதிகமான நாட்களை எடுத்து கொள்வதால் தீர்ப்பு வரும் முன்னே குற்றவாளி காலமாகிவிடுகிறார் அல்லது கொடுக்கும் தீர்ப்பும் தவறாக கொடுக்கப்படுகிறது ஒருவேளை தப்பி தவறி சரியாக தீர்ப்பு அளித்தாலும் அந்த தீர்ப்பை பின்பற்றாமல் காற்றில் பறக்கவிடுகிறார்கள்.

இந்திய நீதிபதிகள் ஏழைகள் பணக்காரர் என்று பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் குற்றவாளி கூண்டில் வைத்து விசாரிப்பார்கள் ஆனால் என்ன பணக்காரர்கள்  குற்றாவாளிகள் இல்லை என்றும் ஏழைகள் மட்டும் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பு அளிக்கும்.

இதற்கு காரணம் என்ன வென்று நீதிபதிகளின் இருக்கையில் இருந்து நாம் யோசித்தால் புரிவது இதுதான் .இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் ஏழைகள் தங்குவதற்கு மட்டும் ஏற்றவைகளாக இருக்கின்றன. அங்கு வசதிபடைத்தவர்கள் சில மணிநேரங்கள் கூட தங்க முடியாததால் என்னவோ அவர்களை குற்ற மற்றவர்களாக கருதி விடுதலை செய்துவிடுகிறார்கள்....


சரி நீதிபதிகள்தான் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தால் ,மோடி ஆட்சிக்கு வரும் முன் காங்கிரஸ் ஆட்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்து ஊழல் செய்து நாட்டை சிரழித்துவிட்டார்கள் எனக்கு வாய்ப்புக்கள் கொடுத்தால் தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தந்து நாட்டை நல்ல வகையில் முன்னேற்றுவேன் என்று சொல்லி ஆட்சியை பிடித்தார்.


இவர் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிய போகின்றன ஆனால் இதுவரை இவர் யாரையும் குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டனை பெற்று தரவில்லை


சரி அதைவிடுங்கள் நேற்று அவர் கட்சியை சார்ந்தவர் மேற்கு வங்காள முதல்வர் தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு 11 லட்சம் பரிசு தருகிறேன் என்று அறிவிக்கிறார். அதற்கு கொஞ்சம் கூட கண்டணம் அவர் தெரிவிக்கவில்லை  சரி அரசுதான் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றால் குடியரசு தலைவர்மட்டும்மல்ல இந்தியாவின் தலைமை நீதிபதியிடமிருந்தும் ஒரு கண்டண அறிக்கை கூட வரவில்லை... இதையெல்லாம் பார்க்கும் போது டாஸ்மாக்கில் சரக்கை வாங்கி  அடித்து விட்டு பாரதியார் பாடிய பாடலான பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு. என்று ஆடிப்பாடி மகிழதான வேண்டும்


சரி அதையும்விட்டுவிடுவோம் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்ணை கண் மண் தெரியாமல் தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நாடு முழுவதும் கண்டனம் எழுந்தும் அவர் மீது விசாரனை அமைக்கப்படும் என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார் என்ன விசாரணை வேண்டி இருக்கிறது அந்த போலீஸ் அதிகாரி கண்மூடி தனமாக அடித்தை வீடியோமுலமாக உலகமக்கள் அனைவரும் பார்த்ததை இந்த நீதீபதிகள் பார்க்க முடியவில்லை போலும்.. இதற்கு விசாரணை வருடக் கணக்கில் தேவையில்லை இரண்டு நாட்களே போதும் உடனே அந்த போலீஸ் அதிகாரியை நிரந்தர பணி நீக்கம் செய்து ஜெயிலில் உடனே அடைக்க வேண்டும் இதை சட்டம் படிக்காதவன் கூட விசாரித்து இப்படிதான் தீர்ப்பு வழங்குவான் ஆனால் சட்டம் படித்த நீதீபடிகளுக்கு மட்டும் ஏன் காலம் அதிகம் வேண்டும்


ஒரு வேளை தீர்ப்பு குற்றவாளிக்கு சாதகமாக வருவதற்கு  பணம் திரட்ட குற்ற்வாளிக்கு நேரம் கொடுப்பதற்காகத்தான் இந்த  விசாரணை என்ற கண்துடைப்பா என்ன?

போங்கடா நீங்களும் உங்கள் ஆட்சிகளும் தலைவர்களும் நீதிகளும்...

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. என்னவோ அரசியல்.. அவர்களுக்கு பொழைப்பு! நமக்கும் பொழுது போகிறது!

    ReplyDelete
  2. கடைசியில் சொன்னதே சரி

    ReplyDelete
  3. தங்கள் பதவு முற்றிலும் உண்மை!

    ReplyDelete
  4. எல்லாவற்றிலும் அரசியல்..... என்னத்த சொல்ல!

    ReplyDelete
  5. ஒரு மாநில தலைமை நீதிபதி உச்சமன்ற ஏழு நீதிபதிகளுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார் யாரைப் பற்றியும் கருத்து சொல்ல முடிவதில்லை. சொன்னவர் மீது அரசின் நீதியின் கண் பாயும் அபாயம் இருக்கிறது

    ReplyDelete
  6. சூப்பர்! எல்லார் மனதிலும் இருப்பதை உங்கள் பாணியில் வழக்கம் போல நச்சென்று சொல்லிவிட்டீர்கள் காட்டத்துடன்...எல்லாமே இங்கு அரசியல்தானே தமிழா...

    கீதா: சகோ!! செம பதிவுப்பா...!!! நீங்க எழுதிய விதத்தை மிகவும் ரசித்துப் படித்தேன்.....யாரையும் இங்கு கேள்வி கேட்கும் உரிமமும் இல்லையே. கேள்வி கேட்டால் நம்மைத்தான் உள்ளே தள்ளுவார்கள். குற்றம் செய்தவரைத் தள்ள மாட்டார்கள்...கடைசில சொன்னீங்க பாருங்க அதான் வருது வாயில.

    ReplyDelete
  7. அது சரி...பாரதியார் பாடலைப் பாடி ஆட...டாஸ்மாக்குக்குப் போனாதான் ஆட முடியுமோ!! ஹ்iஹிஹிஹி...ஹும் அதிரா, ஏஞ்சல், நிஷா எல்லாம் வரலை இல்லைனா இதைச் சொல்லி கும்மி அடிச்சுருப்பாங்க ஹஹஹ்

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.