உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 17, 2017

பெண்ணின் அங்க அளவுகளை வர்ணிக்கும் இந்தியாவின் மத்திய கல்வி வாரிய பாடப்புத்தகம்

பெண்ணின் அங்க அளவுகளை வர்ணிக்கும் இந்தியாவின் மத்திய கல்வி வாரிய பாடப்புத்தகம்

இந்தியாவில் பாடப்புத்தகம் ஒன்றில் சிறந்த பெண்ணுக்கான அங்க அளவுகள், 36 - 24 - 36 என்று வர்ணித்திருந்தது குறித்து கல்வித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாடநூலில் இடம்பெற்றிருந்த தகவலுக்கு தான் கடுமையான கண்டனங்களை பதிவு செய்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டதாகவும் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. தனியார் வெளியீட்டாளர் ஒருவர் இந்தப் புத்தகத்தை அச்சிட்டுள்ள நிலையில், இந்தியாவின் மத்திய கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டங்களை இந்நூல் பின்பற்றி வருகிறது.

புத்தகத்தில் ஒரு பெண்ணின் சிறந்த உடல் அளவு விகிதாச்சாரம் என்ற தகவல் இடம்பெற்றது மட்டுமின்றி, '' பெண்கள் இடுப்பில் உள்ள எலும்புகள் அகலமாக இருக்கிறது மற்றும் அவர்களது முட்டிகள் ஒருபுறமாக இருக்கும். இந்த அமைப்பு காரணமாக, பெண்களால் ஒழுங்காக ஓட முடியாது''.

தனிப்பட்ட முறையில் வெளியிடப்படும் பாடப்புத்தகங்களை தங்களால் கண்காணிக்க முடியாது என்று சி பி எஸ் இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என் சி இ ஆர் டி ) வெளியிட்டுள்ள புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வாரியம் பரிந்துரைக்கிறது.

சர்ச்சைக்குரிய பாடநூலை கற்பிப்பதை உடனடியாக நிறுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.தில்லியை சார்ந்த சம்பந்தப்பட்ட வெளியீட்டாளரும் அறிக்கை ஒன்றில், திருத்தப்பட்ட புத்தகத்தின் அச்சடிப்பு, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றை உடனடியாக நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பாடல்நூல்களில் மீதான சர்ச்சைகள் அசாதாரணமானவை அல்ல.

கடந்த பிப்ரவரி மாதம் பூனையை மூச்சுத்திணறச் செய்வது எப்படி என்று கூறிய ஒரு புத்தகத்துக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் கோபமடைந்தனர். அதேபோல், இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்கா மீது ஜப்பான் அணு ஆயுத குண்டுகளை வீசியிருக்கும் என்று இடம்பெற்றிருந்த தகவலால் மேற்கு மாநிலமான குஜராத்தில் புத்தகம் ஒன்று தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தது.''அழகற்ற'' மற்றும் ''மாற்றுத்திறனாளி'' மணப்பெண்களால் மணமகன் குடும்பத்தார் அதிகளவில் வரதட்சணை பெறுவதற்கு வழிவகுக்கிறது என்று தகவல் இடம்பெற்றிருந்த ஒரு புத்தகத்துக்கு எதிராக மகாராஷ்டிர மாநிலத்தில் பிரச்சினை வெடித்தது.
அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : ////தனிப்பட்ட முறையில் வெளியிடப்படும் பாடப்புத்தகங்களை தங்களால் கண்காணிக்க முடியாது என்று சி பி எஸ் இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.///////

அப்ப என்ன மயிருக்கு இவர்கள் அதிகாரிகளாக வேலைபார்க்கிறார்கள். ஒரு வேளை தேச தூரோக வரிகள் இருந்தாலும் இப்படிதான் இவர்கள் அனுமதிப்பார்களா என்ன?

8 comments :

 1. மக்கள் எதையும் எதிர்க்க முடியாது காரணம் ஓட்டுக்கு பணம் வாங்கும் சதவீதம் அதிகமாகி விட்டனர்.

  ReplyDelete
 2. அதிகாரிகள் வள்ளல் தெரிந்ததுதானே...!

  ReplyDelete
 3. குறிப்பிட்ட பதிப்பகங்களின் புத்தகத்திற்கு அங்கீகார்ம் வழங்கியுள்ளதா என பார்க்க வேண்டும். அப்படி வழங்கியுள்ளது எனில் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். சி.பி.எஸ் சி யைப் பொருத்தவரை அரசு பாடப் புத்தகங்களை வெளியிடுவதில்லை. பாடத் திட்டம் மட்டுமே உண்டு. பாடப்த்கங்கள் தனியார் தான் வெள்யிடுகின்றன.அவரவர்க்குஏற்ற பதிப்பாளர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்குகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் பாடநூலை அரசே வெள்யிடுகிறது.முன்பு மெட்ரிக்கில் 10ம் வகுப்புக்கு மட்டும் தனி பாடப் புத்தகம் அரசு வெளியிட்டது. தற்போது சம்ச்சீர் கல்வி முறை என்பதால் அனைத்து வகை பள்ளிகளும் சம்ச்சீர் புத்தகங்களையே பின்பற்ற் வேண்டும்.

  ReplyDelete
 4. இந்நிலையில் கல்வியில் செக்ஸ் பாடமாக இருக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் நினைக்கிறார்கள்

  ReplyDelete
 5. என்ன சொல்ல..... இங்கே அனைத்துமே ஊழல் மயம். அரசியல் மயம்! என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை தான்.

  ReplyDelete
 6. There was a topic about a particular community caste and dress change in cbse social science book ..it triggered a controversy few years ago and it was removed after ammaas intervention in that issue ..

  ReplyDelete
 7. வளரும் பருவத்தில் பிள்ளைகள் மனதில் இதுதான் சரியான அளவு என பதிந்துவிடும் பாடபுத்தகத்திலையே இப்படி சேர்ப்பது தவறு ஏற்கனவே சைஸ் zero அப்புறம் மெலிந்த உடல்வாகுனு நிறைய பிள்ளைங்க உணவே சாப்பிடறதில்லை ..பாடப்புத்தகத்தில் என்ன வருதுன்னு கூட கண்காணிக்க முடியாதா இவர்களால்

  ReplyDelete
 8. ஏற்கனவே நம்ம ஊர் பெண் புள்ளைங்க தங்கல் எடை குறைய வேண்டும், ஐஸ்வர்யா ராய் போல சுஷ்மிதா சென் போல என்று அதென்ன ஜீரோ உடலமைப்பு டயட் என்று என்னத்தையோ எங்கேயோ கத்துக்கிட்டு சாப்பிடாம இருக்காங்க...இதுல பாடப்புத்தகத்துல வேற....நம்ம அதிகாரிகளின் லட்சணம் தெரிந்ததுதானே! எல்லாமே காசுதான்..முன்னாடி எல்லாம் டேபிளுக்கு அடில நாலே லஞ்சம் நு சொல்லுவாங்க இப்பல்லாம் நேரடியாவே அக்ராஸ் த டேபிளே நடக்குதே...பாமரனுக்கும் தெரியும் காசு கொடுத்தால் வேலை நடக்கும்னு....இதுதான் நம்மூர் கல்வியின் நிலை...

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog