Monday, April 24, 2017

மோடி செய்த ஒரே ஒரு நல்ல காரியம் இதுதானோ?

அதிமுகவில் இருந்து சசிகலாவை விலக்கி வைத்த ஒரே ஒரு செயல்தான் மோடி தமிழர்களுக்கு செய்த  ஒரு நல்ல செயல்.. அது போல திமுகவில் இருந்து கலைஞரின் குடும்பத்தையும் விலக்கி வைத்தால் இன்னொர்ரு நல்ல செயலாக இருக்கும்....


மக்களே  இவர்களை விலக்கி வைத்தால் பாஜக உடனே ஆட்சிக்கு வந்துவிடுமே என்று பயப்படாதீங்க் அவ்ங்களை தமிழக மக்கள் எப்பவும் உள்ளேவிடமாட்டாங்க அதனால கவலைப்படாதீங்க்


அருணாச்சல பிரதேசத்தில் பெயரை மாற்ற எங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என சீனா மீண்டும் அடாவடியாக கூறிஉள்ளது.

சீனா செய்வது அடவாடித்தனம் என்றால் தமிழகர் மீது ஹிந்தியை திணிக்கும் மத்திய அரசு செய்வதும் அடாவாடித்தனம்தானே


‘எச்–1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து அமெரிக்க நிதி மந்திரியிடம் அருண் ஜெட்லி பிரச்சினை எழுப்பினார்.

ஏலே புதிய இந்தியாவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது குறித்து மோடியிடம் பேசுய்யா அதைவிட்டு விட்டு அமெரிக்காவிடம் கெஞ்சுகிறாய்


திரைப்பட துறையினர் கலந்தாய்வு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.

இது போல தமிழக விவசாயிகள்  நட்சத்திர ஒட்டலில் கலந்தாய்விற்கு அழைத்து இருந்தால் வெங்கய்யா என்ன மோடியே வந்து கலந்து இருப்பார் அதைவிட்டு விட்டு டெல்லி தெருவில் போராட்டம் நடத்தினால்  யாருப்பா வருவார்

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மாநில அரசிடம் தெரிவித்து தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பிரச்சினைகளை அந்தந்த மாநில அரசேதான் தீர்த்து வைத்தன. வெங்கையா நாயுடு

அய்யா வெங்கய்யா தமிழக மக்களை இப்போது ஆள்வது மத்திய அரசுதான் என்று விவசாயிகளுக்கு தெரிந்து இருப்பதால்தான் அவர்கள் மத்திய அரசிடம் கேட்கிறார்கள்

ராகுல்: சமூக வலைதளங்களில் சுய புராணம் பாடி, நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வ செயல்களுக்காக அவற்றை பயன்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு, பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். பிறருக்கு அறிவுரை வழங்கும் முன், தான் அந்த செயலை பின்பற்றுகிறோமா என, அவர் சிந்திக்க வேண்டும்.

சின்ன புள்ளையாய் இருந்தாலும் மிக சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் ராகுல்



சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்: மதுவுக்கு தடை விதிக்கும் நீதிபதிகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தலில் போட்டியிட வேண்டும். இவர்களுக்கு, எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என்பது, அப்போது தெரியும்.

எங்களுக்கு தேவை மக்களின் வோட்டுக்கள்தான் மக்கள் நலம் இல்லை என்பதை சரியாக சொல்லி இருக்கிறார் சஞ்சய் ராவத்


தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் விரைவில் இணைந்து, மக்கள் நலப்பணிகளில் ஈடுபட வேண்டும்.

அம்மா தமிழிசை இதை உங்கள்  தேசிய தலைவர்களின் காதில் கொஞ்சம் சத்தமாக சொல்லுங்களேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நிச்சயமாக மோடி செய்தது நன்மையே.....

    ReplyDelete
  2. மோடி செய்தது நல்லதோ கெட்டதோ தெரில. ஆனா, அதிமுக்க்காரங்க செய்யுறது சரியில்ல

    ReplyDelete
  3. ஏனுங் ராகுலை சின்ன பிள்ளையாகிட்டா நைசா நீங்களும் சின்னப்பிள்ளை லிஸ்ட்ல சேர்ந்துக்கற ஐடியா தானே ? அதை மட்டும் நடக்க விடமாட்டொம்

    ஆனாலும் பரவால்ல சரியா கருத்து சொல்லிருக்கார் ராகுல்

    திரைப்படத்துறை கலந்தாய்வு ..ரொம்ப முக்கியம் நம்ம நாட்டுக்கு அதுவும் நட்சத்திர ஓட்டலில்


    மோடி நல்லது தான் செஞ்சிருக்கார்

    ReplyDelete
  4. முதலில் சின்னம்மா கதைக்கு மங்களம் பாடட்டும். அறிவாலயத்தை அடுத்து மூடலாம் என்பது தானே ராஜநீதி?

    ReplyDelete
  5. .......சசிகலா குடும்பத்து கதைக்கு முடிவு வந்தாச்சு..ராகுலுக்கு பேசாத் தெரியுது....பரவால்ல....திரைப்படத்துறை கலந்தாய்வு..ரொம்ப முக்கியம்..வேர முக்கியமான விஷயமே இல்லையோ கலந்தாய்வுக்கு...நாட்டு நடப்பு....ஹம்

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.