உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, April 30, 2017

மோடி போட்ட திட்டத்தால்தான் தாவூத் இப்ராஹிமுக்கு மாரடைப்பு ஏறபட்டதாமே?

#modi #dawoo ibrahim
இப்படியெல்லாம் பயமுறுத்தலாமா?
மோடி போட்ட திட்டத்தால்தான் தாவூத் இப்ராஹிமுக்கு மாரடைப்பு ஏறபட்டதாமே?

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஆபத்தான நிலையில் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தார்.. மும்பை குண்டு வெடிப்பு உட்பட, பல்வேறு வழக்குகளிலும், இவர் தேடப்பட்டு வருகிறார்.இந்நிலையில், இதயநோய் காரணமாக, கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் அவரது உடல்நிலை உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்கள் உண்மைதானா என்று பாஜக தரப்பில் விசாரித்து போது அவர்கள் இந்த தகவல்கள் உண்மைதான் என்று கூறிய தோடு மேலும் ஒரு ரகசிய செய்தியையும் தெரிவித்தார்கள் அந்த செய்திகளின் படி இவருக்கு இப்படி மாரடைப்ப்பு ஏற்பட்டதற்கான காரணமே மோடிதான் என்று கூறினார்கள்

Friday, April 28, 2017

பாகுபலி படம் இணையம் மூலம் அதிகம் பதிவிறக்கம் செய்வதற்கு நடிகர் விஷால் காரணமா?

#bahubali 2 download
பாகுபலி படம் இணையம் மூலம் அதிகம் பதிவிறக்கம் செய்வதற்கு நடிகர் விஷால் காரணமா?

பாகுபலி படத்தை இணையத்தில் பதிவிறக்கும் செய்யும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் சட்டம் தன் கடமையை செய்யும். இப்படிக்கு விஷாலு

இவர் இப்படி பேசாமல் இருந்தாலே அவனவன் பேசாமல் இருப்பான் ஆனால் இவன் இப்படி பேசிய காரணத்திற்காகவே பதிவிறக்கம் செய்யாதவன் கூட பதிவிறக்கம் செய்வான்.

என்னடா அநியாயம் இது?

என்னடா அநியாயம் இது?


நேற்று நானும் என் மனைவியும் நானும் உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தோம் அப்போது என் மனைவி சொன்னாள்.. நாம் இது வரை என்னனென்ன பொய்கள் சொன்னோம் என்று ஒப்பனாக சொல்ல வேண்டும் அதில் தவறு ஏதும் இருந்தால் அதை நாம்  சரி செய்து கொள்வோம் என்றாள். நான் அப்பவே சுதாரித்து இருக்கணும் ஆனால் என்ன செய்ய அப்ப என்னிடம் இருந்த கிட்னி வேலை செய்யாததால் நானும் ஏதோ ஞாபகத்தில் சரி என்று சொல்லிவிட்டேன்..

Thursday, April 27, 2017

தமிழக அரசியலில் ஒரு புதிய சரவணன் மீனாட்சி சீரியல்?

#panner selvam #edappadi palanisamy
தமிழக அரசியலில் ஒரு புதிய சரவணன் மீனாட்சி  சீரியல்?


அடே சரவணன் மீனாட்சி டிவி சீ¡¢யல் போல அல்லவா இந்த பன்னீர் எடப்பாடி கூட்டணி முயற்சி மெகா சீ¡¢யல் போல  சென்று கொண்டிருக்கிறது. சீக்கிரம் முடியுங்க இல்லைன்னா  சீரியலில் ஆட்கள் மாறி கொண்டிருப்பது போல உங்களுக்கு பதிலாக வேறு யாராவது அங்கு வந்திடப் போகிறார்கள் ஜாக்கிரதை

தமிழக மக்களின் சிரமத்திற்கு மன்னிப்பு

#admkfails tamil nadu assembly
தமிழக மக்களின் சிரமத்திற்கு மன்னிப்பு tamil nadu assembly

 கூட்டணிக்கான  வேலைகள் நடப்பதால் இங்கு தற்காலிகமாக பணிகள் நடை பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்  மக்கள் பணி தொடங்க வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகிற்து அது வரை தமிழக மக்கள் சிரமத்தை பொறுத்து கொள்ள வேண்டுகிறோம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

மோடியுடன் சேர்ந்து புதிய இந்தியா காணவாருங்கள்

#Narendra #Modi presents #New #India vision @avargal unmaigal
மோடியுடன்  சேர்ந்து  புதிய இந்தியா காணவாருங்கள்.


தலைவர் மோடிஜி நம்மை  புதிய இந்தியா காண அழைத்து செல்லுகிறார். அதனால் இந்திய மக்கள் அனைவரும் அவர் பின்னால்  பாரத் மாத்தா ஹீ ஜெ என்று சொல்லி தொடர்ந்து செல்லுவோம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

வடிவேல் & பார்த்திபன்  அலசும் தி.மு.க. நடத்திய பந்தினால் பலன் யாருக்கு ?#Modi #NewIndia

Tuesday, April 25, 2017

வடிவேல் & பார்த்திபன் அலசும் தி.மு.க. நடத்திய பந்தினால் பலன் யாருக்கு ?

தி.மு.க. நடத்திய பந்தினால் பலன் யாருக்கு ?

பார்த்திபன் :அடே எதுக்குடா கடை எல்லாம் அடைச்சிருக்கு

வடிவேல்: அண்ணே இன்று பந்த்ண்ணே அதுனாலதான் அடைச்சிருக்கு...

பார்த்திபன் :குமுட்டை தலையா எதுக்குடா பந்த் நடத்துறீங்க

வடிவேல்:அண்ணே விவசாயிகளின் பிரச்சனைக்காக  அவர்கள் பிரச்சனை தீர  ஆதரவாக பந்த் நடத்தோறோம் அண்ணனே

பார்த்திபன் :அப்ப பந்த் நடத்தினால் பிரச்சனை தீர்ந்திடுமாடா

Monday, April 24, 2017

அப்படி என்ன நான் பெரிசா சொல்லிட்டேன்

tamil bloger top  hit post
 அப்படி என்ன நான் பெரிசா சொல்லிட்டேன்.


சனிக்கிழமை இரவு 1:30 அளவில் நான் ஒரு ப்திவு இட்டேன். ( தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு  அளவு இல்லையா? )அது ஒன்றும் பெரிய விஷ்யம் இல்லை.... தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு  தமிழக அரசே முடங்கி கிடக்கும் போது   மக்கள் நலன் கருதி ஒரு சிறு முயற்சி ஒன்றை மேற் கொண்டார். அதை பொது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துதான் செய்தார். ஆனால் என்ன அது தோல்வியில் முடிந்தது. இந்த தமிழக அமைச்சருக்கு இதன் பலன் முழுமையாக தெரிந்திருக்க நியாயமில்லை. யாரோ ஒரு அதிகாரிதான் இந்த ஆலோசனையைக் கொடுத்திருக்க வேண்டும் அதை நம்பி அசிங்கப்பட்டது மட்டுமே அமைச்சரின் தவறே தவிர  அந்தச் செயலின் நோக்கம் தவறானதல்ல. .ஆனால் அது புரியாமல்  உடனே நம்ம பொது ஜனங்கள் அவரை கிண்டல் கேலி செய்து சமுகவலைதளங்களில் இருந்து மீடியாக்கள் வரை எடுத்து சென்றனர். அப்படி கிண்டல் கேலி செய்தவர்களில் ஒருவர் கூட நீர் சேமிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்புக்கு அல்லது இந்த் திட்டத்தில்  இருந்த குறைகளை சுட்டிக்காட்டி மாற்று வழிகள் குறித்த விவாதங்கள் ஆலோசனைகள் என்று அடுத்த ஸ்டெப்பிற்கு எடுத்து செல்லாமல் க்லாய்த்து மட்டும் சென்று கொண்டிருப்பவர்கள் தான் மிக வடிகட்டின முட்டாள்கள்..

மோடி செய்த ஒரே ஒரு நல்ல காரியம் இதுதானோ?

மோடி செய்த ஒரே ஒரு நல்ல காரியம் இதுதானோ?

அதிமுகவில் இருந்து சசிகலாவை விலக்கி வைத்த ஒரே ஒரு செயல்தான் மோடி தமிழர்களுக்கு செய்த  ஒரு நல்ல செயல்.. அது போல திமுகவில் இருந்து கலைஞரின் குடும்பத்தையும் விலக்கி வைத்தால் இன்னொர்ரு நல்ல செயலாக இருக்கும்....

Sunday, April 23, 2017

தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு அளவு இல்லையா?

avargal unmaigal TN Minister Tries To Save Water By Covering A Dam With Thermocol
தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு அளவு இல்லையா?

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் அட்டைகள் வைத்து புதிய முயற்சியை மேற்கொண்டார். அதாவது, கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க  நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மூட செல்லூர் ராஜா முடிவு செய்தார். அவ்வாறு மூடினால் நீர் ஆவியாமல் தடுக்கப்படும் என்று கருதினார். இதுபோல் ஏற்கெனவே வெளிநாடுகளில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதாம்.

Thursday, April 20, 2017

தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியுமா என்ன?

avargal unmaigal
தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியுமா என்ன?

காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பு கொண்டு இருந்த நேரத்தில் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடிக்க ஐடி கம்பெனி உதவிகள் கொண்டு சமுக இணைய வளைதளங்களில் மோடிக்கு ஒரு செயற்கையான அலையை உருவாக்கி இந்தியா முழுவதும் பரவவிட்டார்கள் அந்த அலையை பல மாநிலங்கள் உண்மை என்று நம்பி மோடி இந்தியாவை காக்க வந்த ஒரு மகான் என்று கருதி அவருக்கு பெருமளவில் ஆதரவு தந்து வெற்றி மாலையை அவர் கழுத்தில் இட்டது. ஆனால் தமிழகத்திலோ நடந்தது அதற்கு நேர்மார் அதனால் இங்கே மோடியின் மூஞ்சியில் கரியை பூசிவிட்டார்கள் ஆனால் என்ன, வெற்றி களிப்பில் இருந்த மோடிக்கு அந்த கறை தெரியவில்லை.. சரி வெற்றி களிப்பில் இருப்பதால் தெரியவில்லை என்று வைத்து கொண்டாலும் அதன் பின் வந்த காலங்களில் மோடியும் சரி பாஜக தலைமையும் சரி தமிழகத்தில் நாம் தோற்க்க என்ன காரணம் என்பதை ஆராய்ந்ததாக தெரியவில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு தமிழகத்தில் நடக்கும்  நிகழ்வுகளை எடுத்துரைக்கும் திறமை இல்லாத பாஜக தமிழக தலைவர்கள்தான்.  தேசியகட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தமிழகத்தில் எடுபடாமல் போவதற்கு காரணம் இங்குள்ள அந்த கட்சியின் லோக்கல் தலைவர்கள்தான் காரணம். இங்குள்ள லோக்கல் தலைவர்களிடையே கொஞ்சம் கூட ஒற்றுமை இல்லை . அது மட்டுமல்ல தேசியகட்சிகளில் இருந்தாலும் மாநில  மக்களின் உரிமைக்காக போராடாமல்  இருப்பதும் இவர்களின் பலவீனம்

பன்னீர் செல்வத்திற்கு மோடிஜி கொடுத்த அசைன்மென்ட்


பன்னீர் செல்வத்திற்கு மோடிஜி கொடுத்த அசைன்மென்ட்


தம்பி பன்னீர் இதை பூ என்றும் சொல்லுவாங்க புஷ்பம் என்றும் சொல்லுவாங்க் ஆனால் எப்படி சொல்லுவது என்பது நமக்கு முக்கியமல்ல ஆனால் தமிழக மக்கள் காதில் எப்படி வைப்பது என்பதுதான் முக்கியம். இது தான் மோடிஜி கொடுத்த அசைன்மென்ட்Wednesday, April 19, 2017

மோடியின் கனவை நிறைவேற்றும் தமிழக பாஜக தலைவர்

avargal unmaigal
மோடியின் கனவை நிறைவேற்றும் தமிழக பாஜக தலைவர்

மோடிக்கு பிடித்த தமிழக பாஜக தலைவர் பன்னீர் செல்வம் மட்டுமே அவர் ஒருவர்தான் மோடியின் கனவை தமிழகத்தில் நிகழ்த்தி காட்டி வருகிறார். .


அன்புடன்
மதுரைத்தமிழன்

#Modi @avargal unmaigal #Narendra Modi #tamilnadu #politics

Monday, April 17, 2017

விவசாய அரசியலில் அறுவடை செய்யப் போவது யாரு?


avargal unmaigal
விவசாய அரசியலில் அறுவடை செய்யப் போவது யாரு?
டெல்லியில் போராடும் விவசாயிகள்  இந்துக்கள்தான் என்று மோடியிடம் யாரவது சொல்லுங்களேன். அப்போதாவது அவர் செவி சாய்க்கலாம்

செயல் தலைவர் இருந்தும் திமுககழகம் கலைஞர் மாதிரி இப்போது செயல்படாமல் இருக்கிற மாதிரி உள்ளதே இப்படி எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா அல்லது உங்களுக்கும் தோன்றுகிறதா?


ஸ்டாலின் செயல் தலைவராக பதிவு ஏற்றதில் இருந்து திமுக கழகம் செயல்படாத கழகம் ஆகிவிட்டதே

பெண்ணின் அங்க அளவுகளை வர்ணிக்கும் இந்தியாவின் மத்திய கல்வி வாரிய பாடப்புத்தகம்

பெண்ணின் அங்க அளவுகளை வர்ணிக்கும் இந்தியாவின் மத்திய கல்வி வாரிய பாடப்புத்தகம்

இந்தியாவில் பாடப்புத்தகம் ஒன்றில் சிறந்த பெண்ணுக்கான அங்க அளவுகள், 36 - 24 - 36 என்று வர்ணித்திருந்தது குறித்து கல்வித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாடநூலில் இடம்பெற்றிருந்த தகவலுக்கு தான் கடுமையான கண்டனங்களை பதிவு செய்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டதாகவும் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

Friday, April 14, 2017

தீவரவாதிகள் மீது உலகத்தின் மிக பெரிய குண்டை Bomb அமெரிக்கா இன்று வீசியது.

தீவரவாதிகள்  மீது உலகத்தின் மிக பெரிய குண்டை Bomb அமெரிக்கா இன்று வீசியது. Mother Of All Bombs

உலகத்தின் மிகப் பெரிய 'பாம்' (Mother Of All Bombs) யை ஆப்கானிஸ்தான் குகையில் பதுங்கி இருக்கும் ISIS தீவிரவாதிகள் மீது அமெரிக்கா இன்று (வியாழ்க்கிழமை ) வீசியது  (US drops biggest non-nuclear bomb on ISIS tunnel in Afghanistan's Nangarhar )... இதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய பாம் ஆகும் இதை தான் Mother Of All Bombs என்றும் ஷார்ட்டாக  MOAB  என்று அழைக்கிறார்கள்.

Thursday, April 13, 2017

இந்தியாவில் சட்டம் இருக்கிறது ஆனால் அது ஒழுங்காக இருக்கிறாதா?

avargal unmaigal
இந்தியாவில் சட்டம் இருக்கிறது ஆனால் அது ஒழுங்காக இருக்கிறாதா?


இந்தியாவில் சட்டம் இருக்கிறது ஆனால் அது ஒழுங்காக இருக்கிறாதா அல்லது சரியாக செயல்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லமுடியும்..

வழக்குகளை விசாரிக்க தேவைக்கும் அதிகமான நாட்களை எடுத்து கொள்வதால் தீர்ப்பு வரும் முன்னே குற்றவாளி காலமாகிவிடுகிறார் அல்லது கொடுக்கும் தீர்ப்பும் தவறாக கொடுக்கப்படுகிறது ஒருவேளை தப்பி தவறி சரியாக தீர்ப்பு அளித்தாலும் அந்த தீர்ப்பை பின்பற்றாமல் காற்றில் பறக்கவிடுகிறார்கள்.

Wednesday, April 12, 2017

உடலுக்கு பலத்தை தரும் உளுந்து சாதம் செய்வது எப்படி

பருவப் பெண்கள் சாப்பிட சுவையான  சத்தான உணவு ( ஆண்களும் சாப்பிடலாம் )


சிறுவயதில் அம்மா தனியாக கஷ்டப்பட்டு சமைப்பார்கள் அந்த சமயங்களில் அம்மாவிற்கு உதவியாக எடுபிடியாக உதவிகள் செய்வதுண்டு. அப்படி செய்யும் போது கண்ணால் பார்த்து கற்றுக் கொண்டதுதான் என் சமையல். ஒரு சமயம் அம்மா உடல் நிலை சரியில்லாததால் ஹாஸ்பிடலில் இரண்டு வாரம் அட்மிட் பண்ணியதால் அந்த டைமில் ஹோட்டலில் வாங்கி சாப்பிட தோங்கினோம் எததனை வேளைதான் ஒட்டலில் சாப்பிடுவது பணமும் கரையத் தொடங்கியது. அதனால் நானே சமைக்கிறேன் என்று சமைக்க ஆரம்பித்தேன் அப்போது எனக்கு வயது 13 அல்லது 14 இருக்கும். அப்படி ஆரம்பித்ததுதான் என் சமையல் அனுபவம்.. அம்மாவிற்கு உதவி செய்ததால் பல விசயங்கள் ஞாபகதிற்கு வந்து அதன்படியே செய்ய ஆரம்பித்தேன் வீட்டில் உள்ள எல்லோருக்கும் என் சமையல் பிடித்து விட்டது

Monday, April 10, 2017

Mr. Prime Minister Shame on you வெட்ககேடு

Mr. Prime Minister Shame on you வெட்ககேடு


avargal unmaigal

Tamil Nadu farmers stage naked protests outside Prime Minister's Office

நம்புங்கய்யா நம்புங்க இந்த ஆர்கே நகர் தேர்தல்?


நம்புங்கய்யா நம்புங்க இந்த ஆர்கே நகர் தேர்தல்?


நம்புங்கய்யா நம்புங்க இந்த ஆர்கே நகர் தேர்தல் ரத்துக்கும் பாஜக சமந்தம் இல்லை குறிப்பாக  தேர்தல் ரத்து ஆகும் என்று தமிழிசை சொன்னது அவரின் சொந்த கருத்து அதை பற்றி  யாரும் கேட்க கூடாது சரியா...அப்படியும் மீறி கேட்பவர்கள் தேச துரோகிகள்

Friday, April 7, 2017

எத்தனை முறை பார்த்தாலும் மனதை நெகிழ வைக்கும் காணொளி

எத்தனை முறை பார்த்தாலும் மனதை நெகிழ வைக்கும் காணொளி

முந்தைய பதிவு எத்தனை முறை வாசித்தாலும் மனதை கலங்கடிக்கும் வரிகள் என்ற பதிவு, இன்று வருவதோ எத்தனை முறை பார்த்தாலும் மனதை நெகிழ வைக்கும் காணொளி..எத்தனை முறை வாசித்தாலும் மனதை கலங்கடிக்கும் வரிகள்எத்தனை முறை வாசித்தாலும் மனதை கலங்கடிக்கும் வரிகள்


நண்பர் ஜோதிஜி  தன் வலைத்தளத்தில் மிக அருமையான கவிதை ஒன்றை பகிர்ந்து  தன்  கருத்தை இப்படி பகிர்ந்து இருந்தார்

சமூகவலைத்தளங்கள் பலருக்கும் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை நொடிப் பொழுதில் உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் எழுதியவர் யார் என்றே தெரியாமல். பகிர்பவர்கள் கவனமாக எழுதியவர்களின் பெயரை தவிர்த்து விடுகின்றனர். எழுதியவருக்கே வந்து சேரும் போது வாசித்த பின்பு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமல் தவிக்கக்கூடும். இந்தக் கவிதையைச் சில வாரங்களுக்கு முன்பு நான் முகநூல் வழியாக வாசித்த போது பிரமித்துப் போனேன்.

Wednesday, April 5, 2017

ச்சீ இப்படியும் ஒரு ஆண்மகனா?

ச்சீ இப்படியும் ஒரு ஆண்மகனா? The Affair

Tuesday, April 4, 2017

டெவில்ட் எக்

டெவில்ட் எக் How To Make Deviled Eggs

முட்டையை விரும்பாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் சிலருக்கு ஆம்லேட் பிடிக்கும் சிலருக்கு அவித்த மூட்டை பிடிக்கும் சிலருக்கு முட்டை மசாலா பிடிக்கும் சிலருக்கு முட்டை குருமா முட்டை பஜ்ஜி இப்படி பலவற்றை சொல்லிப் போகலாம். ஆனால் இங்கே நான் சொல்லப்போவது புதியவகையான ரெசிப்பி. இது ஸ்நாக் வகையை சார்ந்தது. சம்மர் டைம் நம்வீட்டில் நடக்கும் பார்ட்டிகளின் போது இதை செஞ்சு அசத்தலாம்  இது பொதுவாக அமெரிக்க குடும்பங்களில் பேக்யார்ட் பார்ட்டிகளின் போது செய்து வைப்பார்கள். இதனை Deviled Egg என்று அழைப்பார்கள் இதை செய்வது மிக எளிது
(Alternative names :    stuffed eggs, angel eggs, eggs mimosa, Russian eggs, dressed eggs, picnic eggs.)

ஹிந்தியை இப்படி எளிதாக தமிழர்கள் மீது திணிக்கலாம்

ஹிந்தியை இப்படி  எளிதாக தமிழர்கள் மீது  திணிக்கலாம்...


1. தமிழில் வரும் திரைப்படங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைத்தால் மத்திய அரசு வரி விலக்கு கொடுக்கலாம்.

2. டாஸ்மாக் கடைகளில் ஹிந்தியில் சரக்கு கேட்பவர்களுக்கு 10 சதவிகதம் தள்ளுபடி

3. கடைகளின் பெயர்களை ஹிந்தியில் வைத்தால் வரி விலக்கு

4. ஹிந்தி பேசும் மாநிலங்களில் கஷ்டப்படும் வெள்ளை நிறத்தில் இருக்கும் பெண்களை தமிழகத்திற்கு அனுப்பி தமிழ் ஆண்களை காதல் வலையில் விழ வைக்க செய்யலாம்.

Monday, April 3, 2017

இளம் பெண்களின் ஆசை இப்படியா இருக்க வேண்டும்

இளம் பெண்களின் ஆசை இப்படியா இருக்க வேண்டும்


நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னுடன் பணி புரியும் மூன்று இளம் பெண்கள் ரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.(அவர்கள் ரகசியம் பேசுகிறோம் என்று சத்தமாக பேசியதால்தான் அந்தவிசயம் என் காதில் விழுந்தது)..அந்த மூன்று பெண்க்ளும் அன்று மாலை நடக்கவிருக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரின் வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு பங்கேற்க தத்தம் கணவருடன் செல்ல முடிவு எடுத்து இருந்தனர்.அதற்கு என்ன டிரெஸ் அணிவது என்று விவாதித்து கொண்டிருந்தனர்.

தமிழர்களுக்காக குரல் கொடுப்பது தேசவிரோதமே

avargal unmaigal
தமிழர்களுக்காக குரல் கொடுப்பது தேசவிரோதமேஊழல் குற்றசாட்டு இல்லாத தலைவரைதான் ராசியில்லாத தலைவர் என்று தமிழக மக்கள் கேலி செய்கின்றனர்

தன் பதவியை தக்கவைக்கவும் தான் செய்த ஊழல்களில் இருந்து தப்பித்து கொள்ளவும் கலைஞர் மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டால் அது சாணக்கியம். ஆனால் எந்த வித ஊழல் குற்றசாட்டுமின்றி மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து அதற்காக மட்டும் கூட்டணி வைத்து கொண்டால் அவர் ராசியில்லாத தலைவர் என்று கேலி செய்யும் மனநிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள்.

Sunday, April 2, 2017

மோடியும் நீரிழிவு நோயும்

avargal unmaigal
மோடியும் நீரிழிவு நோயும்

மோடியும் நீரிழிவு நோயும் ஒன்றுதான் மோடிக்கு செல்வாக்கு அதிகரிக்கிறது என்பதும் சுகரின் அளவு அதிகரிக்கிறது என்பதும் நல்லதற்கு இல்லை

மோடி மனைவியை தள்ளி வைத்து மிகவும் நல்லதுதான் இல்லைன்னா ஒவ்வொரு வருஷமும் குழந்தையை பெற்றுக் கொண்டு புதிய குழந்தை பிறந்தது என சொல்லிக் கொண்டிருப்பார்

Saturday, April 1, 2017

மோடியை ஒரங்கட்ட வந்திருக்கும் யோகி

avargal unmaigal
மோடியை ஒரங்கட்ட வந்திருக்கும்  யோகி

உ.பி.,யில், முதல்வர் #Yogi யோகி ஆதித்ய நாத்தின்  உத்தரவுகளால், அரசு அலுவலகங்களில்  எப்போதும் இல்லாத வகையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிகாரிகள்,ஊழியர்கள்,அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதோடு, எந்த கோப்பு களும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தேக்கம் அடையாத வகையில் பணியாற்ற துவங்கியுள்ளனர்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog