Wednesday, March 22, 2017

ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்


திராவிடக் கட்சிகள்
தங்கள் சுய ஆதாயத்திற்காக
தமிழகத்தை சிரழித்துவிட்டது .
அதனால் தேசிய கட்சிகள் வந்தால்
தமிழகம் முன்னேறும் என்று சொல்லுபவர்கள்
தேசிய கட்சிகளின் சுயநலத்தால்
தேசமே சிரழிந்து போயிருப்பதை
மட்டும் சொல்லாமல் மறைப்பது ஏன்?



இளம் வயதில் இருந்து
வாழ்க்கையில்

சந்தோஷம் இல்லாமல்
வாழ்ந்துவிட்டேன் என்று நினைத்து
கல்யாணம் பண்ணினால் சந்தோஷமாக
வாழலாம் என நினைத்து
கல்யாணம் பண்ணிய பின் தான் புரிந்ததது
இளம் வயதில் இருந்து
கல்யாணம் ஆகும் வரை இருந்த
வாழ்க்கைதான் சந்தோஷமான வாழ்க்கை என்று
ஹும்ம்ம்ம் இக்கரைக்கு அக்கறை பச்சை



தவறுகளில் இருந்துதான்  நிறைய
பாடங்கள் கற்றுக் கொள்ளலாமாம்.
அதனால்தான் நான் நிறைய தவறுகள் செய்கின்றேன்
இன்னும் கொஞ்சகாலத்தில்
நான் பெரிய ஜீனியஸ்சாக ஆகிவிடுவேன்..


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : ஹலோ இந்த கிறுக்கல்களை படிச்சீங்கதானே அப்ப உங்க மனசிலும் இப்படி ஏதாவது கிறுக்குதனமான  சிந்தனை வந்திருக்குமே.. அதை இங்கே பின்னுட்டத்தில் சொல்லிட்டு போங்க  அப்படி சொல்லமல் போவோர்களின் செல்போன்  இன்று தொலைந்து போக வாய்ப்பு உண்டு

30 comments:

  1. சிந்தனை அருமை நண்பரே.

    அப்பாடா எனது போன் தப்பிருச்சு.

    ReplyDelete
    Replies
    1. போன் மட்டும்தானே தப்பித்து இருக்கு இனிவரும் பதிவுகளில் இருந்து உங்கள் வீட்டில் உள்ள முக்கிய பொருட்கள் காணாமல் போகுதா இல்லையா தெரியும்

      Delete
  2. திராவிடமோ தேசியமோ எல்லாருமே சந்தர்ப்பவாதிகள் ..இன்னும் இருக்கும் மற்ற கட்சிகளுக்கு ஆட்சி கட்டில் அமையவில்லை அமைந்தால் அவர்களும் இக்கூட்டத்தோடு சேர்த்தித்தான் .தேசியம் நம் தமிழக மக்களின் கையில் இன்னு கிடைக்காத தூரத்து பச்சை அவ்வளவே ..

    ReplyDelete
    Replies
    1. நம்ம மக்களும்மற்ற கட்சிகளுக்கு ஆதரவு தரலாம்தானே அப்படி செய்தால் நாமும் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்

      Delete
    2. ஓஓ ! ஆரம்பிக்கலாமே நீங்க தலைவர் ..நான் பொருளாளர் மற்றும் பிரித்தானிய கிளை பொறுப்பு ..இந்தியா கிளை கீதா ஐரோப்பா நிஷா ஸ்கொட்லான்ட் அதிரா :) சரி முதல்ல 1000 பவுண்ட் கரன்சி மணிகிராமில் அனுப்புங்க

      Delete
  3. மாமி இங்கே பாருங்க இவர் (நிறைய தப்பு )நிறைய கல்யாணம் செய்யப்போறேன்னு தைரியமா சொல்றார் ..
    நீங்களா படத்தில் இருப்பது ?:) ஆபீஸ்ல உங்க தோழிபொண்ணுங்களோட அளவளாவி கொண்டிருக்கும்போது வசமா மாமிக்கிட்ட அடிவாங்கினப்போ எடுத்த படம் மாதிரி இருக்கு :))

    ReplyDelete
    Replies
    1. இப்படி கருத்து போட்டு மாமிகிட்ட மாட்டிவிட்டால் அப்புறம் நான் எப்படி நிறைய தப்பு பண்ணுமுடியும் எப்படி ஜீனியஸ் ஆக முடியும் ஹும்ம்ம் நட்ப்புகளுக்கு பொறாமை எங்க மதுரைத்தமிழன் ஜீனியஸ் ஆகிவிடுவான் என்று

      Delete
    2. ஹஹஹஹ் ஏஞ்சல்!!! ஆமாம் மாமி இப்ப அடிச்சு முடிலைனு வேற ஒன்னு ஏற்பாடு செஞ்சுட்டாங்க அதுவும் மதுரை இப்ப தப்புலருந்து திருந்தறேன்னு வேற கிறுக்கியிருக்காரு அதான்...

      அவர் தலை பின்னாடி ஒளிவட்டம் வந்துருக்கு பார்த்தீங்களா...அது திருந்தருதுனாலனு நினைச்சுராதீங்க.....எல்லாம் பூரிக்கட்டை அடினால முடி கொட்டி மண்டை வீங்கி பள பளனு ஒளிருது...ஹிஹிஹி

      கீதா

      Delete
    3. கீதா என்ன சொல்ல வராங்க என்றால் மதுரைத்தமிழன் தலையில் அடித்தால் முடிக்குதான் பிரச்சனை தலைக்கு பிரச்சனை இல்லை. ஒருவேலை மதுரைத்தமிழன் தலை சங்கர் சிமிண்டால் தயாரிக்கப்பட்டதோ என்னவோ

      Delete
  4. இக்கரைக்கு அக்கரைப் பச்சை.

    ReplyDelete
    Replies
    1. இக்கரைக்கு அக்கரை பச்சையாக இருந்தாலும் அக்கரைக்கு மனசு போக ஆசைபடுதே

      Delete
  5. இப்ப(டி)யாவது உண்மையை ஒத்துக்கொண்ட நீர் இன்று முதல் 'உண்மை' கிறுக்கு தமிழன் என்று அன்போடு அழைக்கபடுவீர்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அன்போடு இப்படி அழைப்பாதால் இதுமாதிரி இனிமேல் நிறைய கிறுக்கலாம் ஹீஹீ

      Delete
  6. படம் பார்த்ததும் பதறி அடிச்சு ஓட வெளிக்கிட்டுப் பின்னர் மேசையை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு பின்னூட்டம் போடுறேன்ன்.. இண்டைக்குத்தான் தெரியும் கிறுக்கன் எனில் இப்படித்தான் இருப்பினம் என:)[படம் பார்த்து].

    வடிவாப் பாருங்கோ என் கையில் இப்போ மை இல்லவே இல்லை:).

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கன் இப்படிதான் இருப்பான் என்று படம் பார்த்து நீங்களும் மற்றவர்கலும் தெரிந்து கொண்டீர்கள்தானே...... ஆனால் கிறுக்கி எப்படி இருப்பார் என்று பலரும் கேட்கிறார்கள் சரி அதற்கும் படம் போடலாம் என்றால் யார் படம் போடுவது (மதுரைத்தமிழன் மனக்கண்ணில் சில பெண்பதிவர்களின் பெயர்கள் கண்ணில் வந்து போகுதே

      Delete
    2. ஹையோ நான் வேறு தலை விரி கோலத்தில் படத்தை போட்டிருக்கேன் :) Dear God ....._/\_ இவர் கண்ணில் அந்த படம் பட்டுடக்கூடாது

      Delete
  7. றீச்ச்ச்ச்ச்ச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடிவாங்கோஓ.. ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டார் ட்றுத்... இக்கரைக்கு அக்கறை:) பச்சையாம்:))..

    சரி அதை விடுங்கோ இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே...

    “தவறுகளில் இருந்துதான்
    நிறையப் பாடங்கள் கற்றுக் கொள்ளலாமாம்
    அதனால்தான் “ட்றுத்”[நான் ரொம்ப விபரமாக்கும்:)]
    நிறையத் தவறுகள் செய்கிறார்
    அதனால
    இன்னும் கொஞ்சக் காலத்தில் அவர் பெரீஈஈஈஈய
    கம்பிகளை எண்ணப் போய்விடுவார்ர்:))..

    ஹா ஹா ஹா நீங்கதானே சொன்னீங்க எழுதிட்டுப் போகாட்டில் மொபைல் தொலையுமென.. எனக்கு என் ஃபோன் முக்கியம்ம்ம்:))

    ReplyDelete
  8. தவறு செய்து ஞானம் வருவது வேறு
    இது சராசரித்தனம்
    ஞானம் வந்து தவறு செய்வது வேறு
    இது உயர்தரம்

    தாங்கள் எழுதி இருப்பது
    இரண்டாவது நிலை குறித்துத்தானே..

    ReplyDelete
    Replies
    1. தவறு செய்து ஞானம் வருவது நல்லதுதானே!!!! அருணகிரிநாதர், ஆழ்வார்கள் போன்றோரைச் சொல்லலாம் இல்லையா....

      ஆனால் ஞானம் வந்துருச்சுனு தலைக்குப் பின்னால ஒளிவட்டம்னு சொல்லிக்கிட்டு, தங்களைச் சாமியார்னு சொல்லிக்கிட்டு இப்ப நிறையபேர் தப்புதப்பா செஞ்சுக்கிட்டு இருக்காங்களே ....இவர்கள் எதில் சேர்த்தி!!!

      கீதா

      Delete
    2. ஹலோ ஞானம் ஞானம் என்று இரண்டு பேரும் சொல்லுறீங்க நல்ல வேளை என் மனைவி இந்த பக்கம் தலைவைப்பதில்லை ஒரு வேளை அவர்கள் இங்கு வந்து இதை படித்தால் எப்படி இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஞானத்தை பற்றி இவர்கள் பேசுகிறார்கள் என்று என் மேல் சந்தேகம் கொண்டு மேளும் இரண்டு தாக்குதல் பூரிக்கட்டையால் தாக்கி இருப்பார்கள் நல்லவேளை

      Delete
  9. கிறுக்கல்கள்! :)

    என் ஃபோன் தொலையட்டும்னு தான் நான் காத்திருக்கிறேன் - சில நாட்களா அதனால தொல்லை தான் அதிகமாயிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. உங்க போன் தொலைய சான்ஸே இல்லை காரணம் இங்கே நீங்கள் வந்து இந்த பதிவிற்கு கருத்து சொல்லீட்டீங்க

      Delete
  10. யம்மாடியோவ்....பார்த்திபனின் கிறுக்கல்கள் தோற்றன! அந்தப் படம் பார்த்திபனின் படம் தானே அப்படித்தான் தோனுது!! சரி இக்கரைக்கு அக்கரை பச்சை எல்லா ஆம்பிள்ளைங்களுக்கும் பொருந்துமோ.!!!ஹிஹிஹி...

    கீதா: கிறுக்கனின் கிறுக்கல்கள் அனைத்தும் ஞானம் பெற்றவரின் கிறுக்கல்கள் போல் உள்ளதே குறிப்பாக இக்கரைக்கு அக்கரை பச்சை!!! எந்த போதி மரமோ...சொன்னால் நல்லாருக்கும் நானும் போய் உக்காந்துக்கவன்ல...

    ReplyDelete
    Replies
    1. புத்தருக்குதான் போதிமரம் ஆனால் எனக்கு எல்லாம் போதிய "ரம்" தான் காரணம் ஹீஹீ வேண்டுமானால் சொல்லுங்க என் வீட்டிற்கு வரும் போது தருகிறேன்

      Delete
  11. எல்லா அரசியல் வியாதிகளும் பெருகிப் போய், பச்சோந்தித்தனமும், உள்ள வரை அது எந்தக் கட்சியா இருந்தாலும் எப்படி நாடு உருப்படும்??!!

    ReplyDelete
    Replies
    1. இந்த நிலை எப்போதும் நீடிக்காது அது கண்டிப்பாக மாறும்

      Delete
  12. அங்க யாருப்பா....உங்க வீட்டம்மாவுக்கு உங்க ரெண்டாவது கிறுக்கல் கேட்டிருச்சு போல பூரிக்கட்டையோட நிக்கிறாங்களாமே உங்களை வர வேற்று???!!! ஆமாம் ஆமாம் இந்தாளை வைச்சுக்கிட்டு..ஹும் எத்தனைவாட்டி பூரிக்கட்டையால சாத்தினாலும் தவறுகள்ல இருந்து பாடம் கத்து இன்னும் ஒன்னாங்களாஸே பாசாகலை...நீரெல்லாம் ஜீனியஸார வரைக்கும் அடிச்சு அடிச்சு மாளாது எனக்கு ஆவாதுனு மதுரைத் தமிழன் உள்ளே நுழையும் போதே தலைல கொட்டுறாமாதிரி ஏதோ செட் பண்ணிருக்காங்களாமே!!!!!அப்படியா...அது உங்க தப்ப எல்லாம் கவுன்ட் வேற பண்ணுமாமே அப்படியா...ஹஹஹ்ஹஹ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஒன்னாங்கிளாசே பாசாகலை ஆனால் ஒன்னாங்கிளாசில் இப்படி அதிக ஆண்டுகள் இருந்ததினால்தான் நான் இப்போ ஜீனியஸ் பட்டத்தை பெற்றுள்ளேன்

      Delete
  13. கிறுக்கனே இப்படிக் கிறுக்கினா ...ஜீனியஸாகிட்டா அது வேற கிறுக்குத்தனமாகி வேற விதமா கிறுக்கலா வரும்ல னு கிறுக்குத்தனமா என் மூளை வேலை செய்யுது...ஹிஹிஹிஹ்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நம்ம பதிவை தொடர்ந்து படிப்பதினால் உண்டான பாதிப்பை இந்த கருத்தினால் அறிய முடிகிறது ஹீஹீ

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.