Friday, March 17, 2017

விமான டாய்லெட் பயன்பாடு அறியாத இந்தியர்களும் திணரும் ஏர்லைன்ஸ் நிர்வாகமும்


இந்தியர்களுக்கு விமானத்தில் உள்ள டாய்லெட்டை உபயோகிக்கும் பயன்பாடு தெரியாததால் ஏர் இந்தியா விமான நிர்வாகம் பலவித பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது என்ற செய்தி பலருக்கும் வியப்பாக இருந்தாலும் அது மிகவும் வருந்த தக்க உண்மையே


தொலை தூர விமான பயணத்தை மேற்கொள்ளுபவர்களுக்குதான் தெரியும் டாய்லெட்டின் அருமை அது நம்து கடன்களை கழிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. ஆனால் அதிலும் பிரச்சனைகள் வர ஆர்ம்பித்து இருக்கிறது நாம் பாரம்பரியமும் பண்பாடு உள்ள இந்தியர்களால்.


இந்தியர்கள் மற்ற நாட்டவர்களை விட மிக அறிவாளிகள் அதனால்தான் அவர்களால் இஞ்சினியர்களை டாக்டர்களை அதிகமாக உற்பத்தி பண்ண முடிகிறது அவர்களால் செவ்வாய் கிரகத்திற்கும் ராக்கெட் விடமுடிகிறது ஆனால் இவ்வளவு தெரிந்த இவர்களுக்கு டாய்லெட்டை மட்டும் எப்படி உபயோகப்படுத்துவது என்பது தெரியாததால் டாய்லெட்டில் கண்ட கழியதையும் போட்டு அது பயன்படாமல் அடைத்து கொள்ள வழி வகைகள் செய்யப்படுகிறது. ( passenger throws any object into the toilet, like a plastic bottle, soiled diapers, a bunch of tissue papers, it could damage its vacuum flush system. Then the object has to be located, it has to be removed and the flush system repaired. The next flight is delayed, the losses are multifold," said an airline source. ) அநேக இந்திய பயணிகள் விமானங்களில் பயணம் செய்யும் போது அதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் பேப்பர் டவல், டையப்பர் பாட்டில் பாட்டில் மூடிகள் போன்றவற்றை டாய்லெட்டுகுள்ளேயே போட்டுவிடுவதால் அது அடைத்து கொள்கிறது அதனால் பல விமானங்களில் டாய்லெட்டை யாரும் உபயோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் விமான விமானதளங்களில் வந்து இறங்கும் போது அவசரமாக அதை ரிப்பேர் செய்ய வேண்டி இருப்பதால் நேரமும் பணமும் வழக்கத்திற்கு விட அதிகமாக செலவிட வேண்டியிருக்கிறது இப்படி அதிக நேரம் எடுத்து கொள்வதால் விமானங்கள் தாமதமாக  மற்ற இடங்களுக்கு சென்று அடைவதால்  பல பயணிகள் கனெக்ஷன் விமானங்களை தவற விடுவதும் நேருகிறது அதுமட்டுமல்ல விமானங்கள் விமானனிலையங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக அளவு அதற்குரிய கேட்டுகளில் நிற்கும் போது அது வழக்கதைவிட மிக அதிக அளவில் அதற்கான வாடகையை தர வேண்டிய நிலை ஏற்படுகிறது

(A senior AI cabin crew member said, "The older aircraft used the blue liquid chemical toilet flush system. When there was a blockage, we would pour hot water and then flush after some time and it would often clear the blockage. Now, newer aircraft such as the Boeing 777 and Boeing 787 have a vacuum flush which is advanced technology. But once these toilets are blocked, there is nothing we can do." When a toilet cannot be used, a log entry is made by the cabin crew. On average, there would be 30-60 log entries a month by cabin crew about toilets that have been rendered useless by passengers who dumped bottles, rags or other such items into the commode )

மேலும் அந்த விமான அதிகாரி சொன்னது கடந்த வாரம்  Delhi-Chicago Air India விமானத்தில் மொத்தம் இருந்த 12 டாயெல்ட்டுகளில் 8 டாய்லெட்டுகளை உபயோக்கிக முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது இந்த விமானம் பயணம் 17 மணிநேரம் பயணம் அதில் 340 பயணிகள் தொடர்ந்து  பயணம் செய்து இருக்கிறார்கள் அதில் சிறு குழந்தைகளும் வயதானவர்களும் அடங்கும். ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது என்றாலும் மக்களுக்கு வேற வழியில்லாமல் அதை அடக்கி கொண்டுதான் இருக்கிறார்கள்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்  AI's Newark-Mumbai நேரடிவிமானம். அதன் வழித்தடத்தில் இஸ்தான்புல் ஸ்டாப் இல்லை என்றாலும் இந்த டாய்லெட் பிரச்சனையின் காரணமாக இஸ்தான்புல்லில் தரையிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது

(particularly bad in 2016 between June 5 and August 23, when the toilets left blocked by passengers delayed 14 flights to destinations such as London, Newark, Chicago and New York," said an Air India official.)

இதற்கு காரணம் விமானத்தில் இருக்கும் டாய்லெட்டுக்ள் வெஸ்டர்ன் ஸ்டைலில் உள்ளதுதான் கல்சுரல் வேறுபாடும்தான் .இந்த மாதிரி டாய்லெட்டுகள் அதிலும் தண்ணிர் அதிகம் பயன்படுத்த கூடாத நிலை இருப்பதால் அது பல இந்தியர்களுக்கு புரிவதில்லை சிலபேருக்கு அரை குறையாக புரிவதாலும் அவர்கல் மிக அதிக அளவில் டாய்லெட் பேப்பரை பயன்படுத்தி அதை மொத்தமாக டாய்லெட்டுகள் போட்டுவிடுவதால் அது அடைத்து கொள்கிறது மேலும் இந்தியர்கள் அந்த டாய்லெட்டை பயன்படுத்து போது கை கழுவ என்று அங்கு இருக்கும் தண்ணிரை எடுத்து சுத்தம் செய்ய பயன்படுத்துவதால் மொத்த இடமும் தண்ணிர் குளமாக காட்சி அளிக்கிரது மேலும் தான்  செய்யத இந்த அசுத்ததை க்ளீன் செய்யும் மனப்பான்மை இல்லாத காரணத்தால் அடுத்து வரும் பயணிகளும் அதை பயன்படுத்த முடியாத சூழ்னிலை ஏற்படுகிறது..


விமானத்தில் பயணம் செய்யும் போது பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன & கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் விமானத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாத இடம் டாய்லெட்மட்டும்தான் அதில்தான் இன்னும் விமான நிர்வாக மூக்கை நுழைக்கவில்லை. ஆனால் வருங்காலத்தில் அதிலும் முக்கியமாக இந்தியர்கள் பயணம் செல்லும் விமானங்களில் அதிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வந்துவிடுவார்களோ என்ற சூழ்நிலைதான் இப்போது நிலவுகிறது.

இப்போது விமான பயணத்தின் போது விமானம் கிளம்பும் முன்பு அதில் இருக்கும் ஏர்ஹோஸ்டல் விமானத்தில் எப்படி ஆக்ஸிசன் மாஸ்க் உபயோகப்படுத்துவது அவசர நிலையில் எப்படி செயல்படுத்துவது என்பதை விளக்கி சொல்லுவது போல வருங்காலத்தில் இந்திய பயணிகள் பயணம் செய்யும் விமானத்தில் எப்படி டாய்லெட்டை உபயோகிப்பது என்பது பற்றியும் விளக்கும் சூழ்நிலை வரும் என எதிர்பார்க்கலாம். மேலும் டாய்லெட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் செலவுகளை கட்டுப்படுத்த இந்தியர்கள் அதை உபயோகிக்க தனிகட்டணம் வசூலித்தாலும் ஆச்சிரியப்படுத்துவதற்கில்லை.


அல்லது விமான டிக்கெட் வாங்கும் போது இந்தியர்களுக்கு இதற்கான டாய்லெட் உபயோக்க தெரியுமா என்ற டெஸ்ட் வைத்து அதில் பாஸானால் மட்டும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி உண்டு என்ற சட்டம் கொண்டு வரப்படலாம் அதற்காக ஒரு சிறு கட்டணம் வசூல் செய்யப்படலாம்.


அல்லது இந்திய பயணியே உங்கள் சொந்த போர்ட்டபிள் டாய்லெட்டை கொண்டு வாருங்கள் என்று அறிவிக்கலாம்

இப்படி எதுவும் நடக்கலாம்

விமான டாய்லெட் விளக்கம் இங்கே உங்களுக்காக
How to use Toilet in Flight  

How to Use the Bathroom/ Restroom in the Plane/ Flight  


அன்புடன்
மதுரைத்தமிழன்
#Indians’ lack of #toilet #hygiene delays  #flights

37 comments:

  1. உண்மை இன்னும் பலருக்கு பொது நாகரீகம் தெரிவதில்லை

    ReplyDelete
    Replies
    1. நாகரீகம் தெரியவில்லை என்பதைவிட இந்த மாதிரியான வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு அவர்கள் பழக்கப்படவில்லை என்று கூறலாம்

      Delete
  2. இந்தப் பிரச்சனையை தீர்ப்பது மிகக் கடினம். உபயோகிக்கத் தெரியவில்லை என்பது உண்மையே. ஆனால் பிரச்சனை நீங்கள் எழுதியபடி "தான் செய்த அசுத்தத்தை க்ளீன் செய்யும் மனப்பான்மை இல்லாததால்". அதைவிட "தன்னால் மற்றவருக்கு இடைஞ்சல் வருமே" என்ற எண்ணம் இல்லாததால்தான்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான்

      Delete
  3. Replies
    1. இணையம் வந்த பின் மக்கள் இப்படிபட்ட சின்ன சின்ன விஷயங்களை எப்படி கையாள்வது என்று கற்றுக் கொண்டால் இப்படி கொடுமை எல்லாம் நடக்கவாய்ப்பில்லை ஆனால் இணையத்தில் உருப்படியான விஷய்ங்களை கற்று கொள்வதற்கு பதிலாக பல தேவை இல்லா விஷயகளில் தங்கள் நேரத்தை சொல்லவிடுகிறார்கள்

      Delete
  4. உண்மையில் முதல் முறை வருகையில்
    டாய்லெட் பிரச்சனைதான் பெரும்பிரச்சனைஆகப் பட்டது
    அதற்காக யூடூப் எல்லாம் பார்த்து
    டாய்லெட் எப்படி இருக்கும்
    எப்படிப் பயன்படுத்தவேண்டுமென
    தனியாக இரண்டு நாள் கற்றுக் கொண்டேன்
    விரிவான பகிர்வும் இணைப்புக் காணொளியும்
    நிச்சயம் முதன் முதலாக வருபவர்களுக்கு
    அதிகம் பயன்படும்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. யூடியுப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கிறது.... இன்றைய காலத்தில் உங்களைப் போல பெரியவர்கள் முதன் முதலில் நீண்ட நேரம் விமானப்பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் குழந்தைகள் என்னனென்ன செய்யவேண்டும் என்பதை விளக்கி சொன்னாலே போதும் அப்படி செய்வதால் இந்த பிரச்சனை மட்டுமல்ல பல பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியும்

      Delete
  5. அருமையான பதிவு ...
    சமூகப் பொறுப்பு தொடர்க

    ReplyDelete
    Replies
    1. ஹாலோ மாப்பிள்ளை நான் என்ன சமுக பொறுப்பிற்காகவா இந்த பதிவை எழுதினேன் நல்லாவே கிண்டல் பண்ணுறீங்ளே ஹீஹீ

      Delete
  6. உண்மையில் வேதனையான ஒரு விஷயம் ..இந்தியர்கள் மட்டுமில்லைங்க இங்கே வெளிநாடுகளில் பாகிஸ்த்தானியர் பங்காளதேசியர் மற்றும் சீனர்கள் எல்லாருமே இந்த அசுத்த வேலை செய்றாங்க :(
    சில விஷயங்களை வெளிப்படையா எழுதினா மானம் போகும் . முறையாக குப்பையை அதெற்கென இருக்கும் தொட்டியில் போட்டிருந்தா தானே இவர்களுக்கு தெரியும் :( எப்பவும் ரோட்டில் அடுத்த வீட்டு காம்பவுண்டில் வீசியே பழகினவங்க இப்படித்தான் செய்வாங்க .. டயப்பர் வீச தனி பின் இருக்குமே.. .wc யில் போட்ட அடைக்குமென்ற காமென் சென்ஸ் கூடவா இவங்களுக்கு வரலை
    டாய்லெட்ல பீடி புடிச்ச நினைப்பில் இங்கே விமானத்தில் புகை பிடிச்சி ஒரு ஆள் ஹோஸ்டஸ் எவ்ளோ சொல்லியும் கேக்கலை கடைசீல மிரட்டி உக்கார வச்சாங்க லுப்தான்சால ..
    இவங்களோட அஜாக்கிரதையால் எவ்வளவு நேரம் ,பணம் விரயம் :( .போர்ட்டபிள் டாய்லட் good ஐடியாதான் அதையும் பக்கத்து சீட்ல வைப்பாங்க நம்ம மக்கள்

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து சீட்ல வைச்சா கூட பராவாயில்லை ஆனால் நம்ம மடியில வைக்காதவரை ஒகே

      Delete
  7. பலர் அப்படித்தான்.... வேதனை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம வேதனைதான் ஆனால் அதில் இருந்து நாம் மாற இந்த மாதிரி பயணம் செய்யதால் என்ன செய்யவேண்டும் என்பதை வாட்சப் மூலம் நாம் பலருக்கும் பகிர்ந்தால் அறியாதவரும் எளிதில் அறிய வாய்ப்புக்கள் ஏற்படும் அல்லவா

      Delete
  8. ஹா ஹா ஹா மிகச் சரியாக பல விசயங்களை அப்படியே சொல்லிட்டீங்க... முன்ன முன்னம் பயணம் செய்வோருக்கு கொஞ்சம் எப்படி யூஸ் பண்ணுவது எனத் தெரியாமல் இருக்கலாம்.. பலர் அங்கு என்ன எழுதப்பட்டிருக்கு என்பதைக்கூட கவனிப்பதில்லை, தம் பாட்டுக்கு பாவித்து விட்டு வெளியே வருவார்கள்...

    இன்னுமொன்று எங்கட ஆட்களுக்கு லெவல் அதிகம், எப்படி பாவிப்பதென கூட வரும் உறவினர் ஆரையாவது கேட்கலாம் ஆனா கேட்டால் கெளரவக் குறைவு எனக் கேட்க மாட்டினம்..... எல்லோரும் அனைத்தையும் அறிஞ்சுகொண்டா பிறக்கிறோம்ம்.. அதனால தெரியாததைக் கேட்டு தெரிஞ்சு கொள்வது ஒன்றும் வெட்கப்படக்கூடிய செயல் அல்ல என்பதே என் கருத்து.

    ReplyDelete
    Replies

    1. இப்படி கெளர பிரச்சனை பார்ப்பவர்களுக்காவே நான் ஒரு ஐடியா சொல்லி இருக்கிறேன் அதுதான் விமான நிலையத்தில் அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைத்து அதில் பாஸானால் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று

      Delete
  9. நிறையப் பதில் எழுத வருது, ஆனா நீங்க கொப்பி பண்ண முடியாதபடி லொக் போட்டிருப்பதால் கஸ்டமாக இருக்கு. கொப்பி பேஸ்ட் பண்ணிப்போட்டு பதில் போட முடியுமெனில் நிறைய எழுதலாம்...

    ரொயிலட் யூஸ் பண்ண ரெஸ்ட் ஆ... ஹா ஹா சிரிப்பாக இருந்தாலும் நீங்க சொல்வது உண்மையே... சில விசயங்களுக்கு வகுப்பெடுத்துப் போட்டு அனுமதிப்பது நல்ல விசயம்தான்..

    ReplyDelete
    Replies

    1. காப்பி பண்ண வேண்டியததையும் நீங்கள் புதிதாக டைப் செய்யலாம் அதௌ உங்களின் விரல்களுக்கும் கிட்னிக்கும் நல்ல பயிற்சிதான் ஹீஹீ

      Delete
  10. வேதனையான விடயம் உண்மையில் போதிய அளவு தெளிவினை ஏற்படுத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  11. தெரிந்துகொள்ளவேண்டியதைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி சார்

      Delete
  12. முதலில் பயணம் செய்பவர்களுக்கு அறியாமையே முதல் காரணம் முதலில் ரமணி சார் சொன்னமாதிரி காணொளிகள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. பிறக்கும் போதே எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்பதில்லை ஆனால் சிறிது முயற்சி செய்தால் பலவற்றை கற்றுக் கொள்ள இயலும் அதனால் பிரச்சனைகளை பலவற்றை எளிதில் சமாளிக்கலாம்

      Delete
  13. இந்தியர்கள் மட்டுமல்ல அரபி நாட்டுக்காரர்களுக்கு வெஸ்டன் டாய்லட் பாவிக்கும் போதும் தரையெல்லாம் தண்ணீரை சிந்தித்தானே பழக்கம்? இலங்கையரிடமும் உண்டு.விமானத்தை விடுங்கள் சிறிய் இடம் என சமாளித்தாலும் பென்னாம் பெரிய இடவசதியுடனிருக்கும் எங்கள் மண்டப டாயலட்ட்குகளையே எம்மவர் சரியாக பயன் படுத்துவதில்லை எப்படி பயன் படுத்தவேண்டும் என சிறியவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில்லை டாய்லட் தேவைக்கு வைத்திருக்கும் பேப்பர்களை நீண்ட காரிடார் வரை இழுத்து விளையாடுவதும் ஆண்குழந்தைகள் யூரின் பாஸ்பண்ண சரியாக கற்பிக்காமலும், நாம் பயன் படுத்தும் இடத்தை நாமே உடனே சுத்தப்படுத்தி விடாமலுமாக மணிகொரு தடவை கிளின் செய்தாலும் முடிவதில்லை.

    சுவிஸிலும் இந்திய ரூரிஸ்ட் எனில் வருமானம் எனும் ஒரு காரணத்துக்க்காக அத்தனையும் சகித்தாலும் அவர்கள் பயன் படுத்தும் முறைகளை வைத்து இரண்டந்தனை வசூலித்தும் விடுவார்கள். டாய்லட் பயன் படுத்துவதை விடவும் பெரிய பிரச்சனை குப்பை போட வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளில் புகைந்து கொண்டிருக்கும் சிகரட் சாம்பிராணி குச்சிகளை தூக்கி போட்டு விட்டு போய்க்கொண்டிருப்பது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொந்த உணவகம் வைத்து நடத்துவதால் உங்களுக்கு அனுபவம் நிறைய இருக்கும்

      Delete
  14. இந்த துன்பத்திற்கு அடிப்படை காரணம், இந்தியாவிலேயே டாய்லெட்டை பயன்படுத்தும் மக்கள், தமிழர்கள், திராவிடர்கள் உட்பட மிக குறைவு என்ற மிகவும் வருந்த தக்க உண்மை. அடுத்ததாக தான் ஏற்படுத்திய அசுத்தத்தை தான் சுத்தம் செய்ய வேண்டுமென்ற மனபான்மை இல்லாமை.

    ReplyDelete
    Replies
    1. நான் குறிப்பிட்ட ஏர் இந்தியாவில் பயணம் செய்பவர்களி நம் தமிழர்களை விட நார்த் இண்டியன்ஸ் மிக அதிகம் அதிலும் படேல்கள் & டெல்லி வாலாக்கள் மிக அதிகம் இவர்களால்தான் மிக அதிக பிரச்சனை ஏற்படுகிறது மேலும் இவர்கள் பான்பாராக் போன்றவ்ற்றை போட்டு மேலும் அதிக அசுத்த்ங்கள் ஏற்படுத்துக்ன்றனர் தமிழர்களுக்கு இதுபற்றி தெரியாவிட்டாலும் யாரவது சொன்னால் கேட்டு கொள்வார்கள் ஆனால் இந்த படேல்கள் மற்றும் நார்த் இண்டியங்களுக்கு என்ன சொன்னாலும் மண்டையில் எளிதில் ஏறாது

      Delete
    2. ஆமாம் இது நிரம்ப உண்மை. நார்த் இந்தியன் குருப்கள் தான் இங்கும். சாப்பிடும் போதும் கிரேவி எல்லாம் மேசை மேல் கொட்டவும் செய்கின்றார்கள். டாய்லட் போனால் கேட்கவே வேண் டாம்

      Delete
  15. இதை நிறையத் தடவை உணர்ந்திருக்கிறேன் . என்ன செய்ய முடியும் ?தானாக உணர வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. சில மக்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது ஆனால் அபராதம் போடுங்கள் ஆட்டோமெட்டிக்காக மாறிவிடுவார்கள்

      Delete
    2. இது தான் இங்கே இப்ப நடக்குது அதிகமாக அசுத்தமெனில் கிளிஙிங்க் என எக்ஸ்ரா பே செய்யணும்.

      Delete
  16. வேதனைதான் ஆனால் இந்த பிரச்சனை நம் நாட்டு மக்களிடம் மட்டும் இல்லை வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும் வசிக்கும் மக்களிடம் இந்த பிரச்சனை உண்டு ஆனால் இந்த செய்தி கடந்த வாரத்தில் இந்திய நாளிதழ்களில் வந்தது அதனை படித்தன் காரணமாக இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதற்கு காரணம் இதனை படிக்கும் போதாவது சிலர் அதனை அறிந்து மாற்ற முயற்சிக்கலாம் என்பதால்தான்

    ReplyDelete
  17. விமானத்து டாய்லெட் மட்டுமில்லை இங்கு பொது வெளியில் மிக மிக மோசமாகத்தான் மக்கள்.. டாய்லெட்டுகள் சில உயர்தர ஹோட்டல்கள் மட்டும் ஓகே அல்லாமல் பல இடங்களில் மிக மிக மோசமாகத்தான் இருக்கிறது. மக்கள் ஆற்றங்கரைகளையும் மோசமாக்குவதால் ஆற்றங்கரைகளில் நடப்பதே கடினமாக இருக்கிறதே..பொது வெளிகளில் கூட...இதை எல்லாம் எங்கு சொல்லுவது தமிழா..

    கீதா: மேற் சொன்ன கருத்துடன் இந்த டாய்லெட் பயன்படுத்துவது என்பது வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது தமிழன். வீட்டிலும் கூட பலரும் சரியாகப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் தாங்கள் பயன்படுத்தும் டாய்லெட்டை தாங்களே சுத்தப்படுத்தும் பழக்கம் பலரிடமும் இல்லையே! இங்கு நடுத்தரவர்க்கத்தினர் குடும்பத்துள் பலரும்வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்கள். வீட்டு வேலை செய்பவர்தான் டாய்லெட்டையும் தினமும் சுத்தப்படுத்தவேண்டும். இப்படியிருக்க எப்படி டாய்லெட்டைப் பயன்படுத்தத் தெரியும் சொல்லுங்கள்? நாம் பயன்படுத்தும் டாய்லெட்டை வீட்டில் வேலை செய்பவர் சுத்தப்படுத்த வேண்டும் என்று சொல்லுவது படு கேவலமில்லையா? இதைவிட கேவலம் என்ன சொல்லுங்கள் சகோ? வயதானவர், உடல்நலம் சுகமில்லாதவர் என்றால் ஓகே. ஆனால் நம்மைப் போன்றவர்களும் இப்படித்தானே இங்கு வேலை வாங்குகிறார்கள். வீட்டில் உள்ள நபர்கள் அனைவருமே தாங்கள் பயன்படுத்தியவுடன் டாய்லெட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று பழக வேண்டும். எங்கள் வீட்டில் அப்படித்தான். என் மகன் உட்பட யாராக இருந்தாலும். முதியோர் அதுவும் மிகவும் முடியாத நிலையில் உள்ளோர் மட்டும் எக்செப்ஷன். டாய்லெட்டில் நாப்கின்கள், உணவுப் பொருட்கல் போன்ற எதுவுமே, ஃப்ளஷ் பண்ணக் கூடாது என்று கண்டிஷன்...

    பலரும் அதுவும் குறிப்பாக வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்தத் தெரியாமல்..விமானம் மட்டுமில்லை பொதுவெளியிலும், தியேட்டர்களிலும் படு மோசம். இங்கு பேருந்தில் பயணிக்கும் போது இடையில் பயன்படுத்த வேண்டிய சூழல் வந்தால் திணற வேண்டியுள்ளது. ஈஸ்டர்ன்/இந்தியன் டாய்லெட்டையே கூட மிக மிகக் கேவலமாகப் பயன்படுத்துகிறார்கள். டயஃபர் மட்டுமில்லை பெண்கள் பயன்படுத்தும் மாதாந்திர நாப்கின்கள் கூட அப்படியே போட்டுச் செல்வதுண்டு. நாப்கின்கள் இல்லாமல் துணிகள் பயன்படுத்துபவர்களும் அதை அப்படியெ பொட்டுவிட்டுச் செல்வது மகா கொடுமை. சிறு வயதிலிருந்தே டாய்லெட் ட்ரெய்னிங்க் என்பது மிக மிக முக்கியம்.

    ReplyDelete
  18. என்னைப் பொருத்தவரை டாய்லெட்டை பொது இடங்களில் கூட அவரவர் பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்துவிட்டுத்தான் பொக வேண்டும் இல்லை என்றால் அபராதம் பெரிய தொகையாக வேண்டும் என்று கொண்டு வர வேண்டும்.

    திருவனந்தபுரத்தில் குடியிருந்த போது எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்தவர்களின் க்ரவுன்ட் ஃபோளோர் வீடுகள் பலவற்றில் டாய்லெட் அடைந்து போனது. ஃப்ளஸ் ஆகவேயில்லை. பொதுவான ட்ரெய்ன் ஹோல் நிரம்பி வழிந்து துர்நாற்றம் ஏனென்றால் கழிவுக்குழாய்கள் அனைத்தும் அடைப்பு. சுத்தம் செய்வோரை அழைத்தார்கள். பாவம் அவர்கள் அந்த கழிவுச் சாக்கடை குழியில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டிய நிலைமை 29 வருடங்களுக்கு முன். அவர்கள் எடுத்து வெளியில் போட்டவை அனைத்தும் என்ன தெரியுமா? நாப்கின்கள் மட்டுமில்லை, துணிகள்,ஆனால் முக்கியமாக காண்டம்கள். நிறைய பக்கெட் பக்கெடாக எடுத்து போட்டார்கள். அதற்கு அடுத்து நாப்கின்கள். படு கேவலமாக இருந்தது. அவர் தண்ணி அடித்துவிட்டுத்தான் இறங்கி சுத்தம் செய்தார் பின் எப்படிச் செய்ய முடியும் சொல்லுங்கள். சக மனிதரின் நிலையைப் பாருங்கள். நாம் செய்யும் கழிவுகளுக்குள் மூன்றாவது மனிதர் இறங்குவது எவ்வளவு கேவலம்! அவருக்கு இதனால் என்ன நோய்கள் வரும் பாருங்கள். இப்போது மெஷின்கள் வந்துவிட்டது என்றாலும் எல்லா இடங்களிலும் இல்லை. இன்னும் இறங்குவது நடக்கத்தான் செய்கிறது. அப்புறம் அவர்களைக் கீழ் சாதி என்று வீட்டிற்குள் விடுவதோ இல்லை தண்ணீர் கொடுப்பதோ இல்லை....இன்னும் இந்தக் கேவலங்கள் பல இடங்களில் நடக்கின்றது சகோ....

    கண்டிப்பாக ஒரு தெருவின் ட்ரெய்ன் ஹோல்கள் அடைபட்டால் அந்த ட்ரெய்ன் ஹோல்கள் எத்தனை வீடுகளை இணைக்கிறதோ அவர்கள் அனைவரும் அபராதம் கட்ட வேண்டும் என்று வர வேண்டும். மேலை நாடுகளில் கார் வரி கட்ட வேண்டிய சாலையில் சென்றால் உடனடியாக வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கபப்டுவது போல செய்யப்பட வேண்டும். அதே போன்றுதான் ஒவ்வொரு தெருவிலும் குப்பைகள் யார் கொட்டினாலும் சரி எல்லோரும் அபராதம் கட்ட வேண்டும் என்று வர வேண்டும். அப்போதுதான் திருந்துவார்கள்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இரு கருத்துகளில் இருந்து உங்களின் ஆதங்கம் புரிகிறது.குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆரம்பத்திலே கற்று கொடுக்க வேண்டும் அப்படி கற்று கொடுத்து மட்டும் விடாமல் நாமளும் முன் மாதரியாக இருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் கற்றுக் கொடுப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. மேலும் பொது இடங்களில் போதிய அளவு கழிப்பறைகளை கட்டி கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதை சுத்தம் செய்வதற்கேற்றவாரு தண்ணீர் வசதிகளையும் குப்பைகள் போடுவதற்கு ஏற்ற குப்பை தொட்டிகளை நிறைய செய்ய வேண்டும் அதுமட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் போதிய அளவு மிகப் பெரிய குப்பை தொட்டிகளை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் ஹோட்டல்கள் தெருவில் தங்கள் குப்பை குளங்களை கொட்டினால் அந்த பகுதி மக்களே அந்த குப்பைகளை எடுத்து ஹோட்டலின் நடுவில் போட வேண்டும் அப்படி செய்தால் அவர்களும் இப்படி செய்வதை நிறுத்துவார்கள் அரசாங்கள் தினமும் தெருக்களை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்

      Delete
  19. thanks its a need of hour to Indians
    from www.marubadiyumpookkum.blogspot.com

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.