உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, March 31, 2017

ஆதார்கார்டும் கேலி கருத்துகளும்

ஆதார்கார்டும் கேலி கருத்துகளும்


avargal unmaigal
ஆதார்கார்ட் கட்டாயமில்லை ஆனால் எல்லோரும் கண்டிப்பாக வைத்திருக்கணும்

Thursday, March 30, 2017

மனுஷ்ய புத்திரனுக்கு வீடு தர மறுத்தற்கு காரணம் இதுதானோ?

avargal unmaigal
மனுஷ்ய புத்திரனுக்கு  வீடு தர மறுத்தற்கு  காரணம் இதுதானோ?

மனுஷ்ய புத்திரனக்கு இஸ்லாமியர் என்பதால் வீடு தர மறுத்து இருக்க மாட்டார்கள் .இவர ஒழுங்காக வாடகை தருவாரா அல்லது தான் சார்ந்திருக்கும்கட்சியினர் போல அடவாடித்தனம் பண்ணுவார என்று நினைத்து தராமல் இருந்து இருப்பார்கள்.


இதுதான் உண்மையாக இருக்கும். மனுஷ்ய புத்திரனுக்கு இவ்வளவு நாள் வீட்டை வாடகைக்குவிட்டவர்கள் இஸ்லாமியர்களா என்று பார்த்தால் அதற்கு பதில்  இல்லை என்றுதான் இருக்கும். அப்படி இருக்கையில் இப்போது அவருக்கு மறுக்க காரணம் இவரின் அடாவாடி பேச்சும் அவர் சார்ந்திருக்கும் கட்சியினரின் முந்தைய செயல்பாடுகளை பார்த்தும்தான் வீட்டை வாடகைக்கு தரமால் இருக்கிறார்கள் எனலாம். அவருக்கு வீடு கிடைக்காததற்கு அவரது நடவடிக்கைதான் காரணமே தவிர அவர் சார்ந்த இஸ்லாமோ அல்லது வீடு வழங்க மறுத்த இந்துக்களோ இல்லை.ஆனால் இவர் அதை எல்லாம் மறந்து தீடீரென்று மத துவேஷத்தை மக்களிடம் விதைக்கிறார் என்றுதான் நான் கருத்துகிறேன்.

Wednesday, March 29, 2017

மனுஷ்ய புத்திரனக்காக மனம் இரங்குவாரா ஸ்டாலின்?

avargal unmaigal
மனுஷ்ய புத்திரனக்காக  மனம் இரங்குவாரா ஸ்டாலின்?

நாஞ்சில் சம்பத்திற்கு அம்மா இன்னோவா  கொடுத்தது போல தன் தலைவர் ஸ்டாலின் தனக்கு ஒரு வீடு பரிசாக தரமாட்டேங்கிறார் என்ற ஆதங்கம்தான் வெளிப்பாடுதான் மனுஷபுத்திரனின் இன்றைய பதிவா?சாதி மத வேறுபாடுகள் இன்றி ஒருத்தர் கூட திமுகவில் இல்லையா என்ன? அவர்களில் ஒருவர் கூட வசதியானவர் இல்லையா அவர்களில் ஒருத்தருக்கு கூட ஒரு வீட்டுக்கு மேல் இல்லையா அவர்களில் ஒருவருக்கு கூட இவர் மேல் நம்பிக்கை இல்லையா என்ன?

மனைவிகிட்ட இப்படியெல்லாம்வா பேசுவாங்க

avargal unmaigal
மனைவிகிட்ட இப்படியெல்லாம்வா பேசுவாங்க


கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நான் என் குழந்தையின்  பெட் ருமிற்கு சென்று  அவள் பெட்டில் படுத்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம் அந்த சமயத்தில் ஆபீஸில் இருந்து லேட்டாக வந்த என் மனைவியும் அங்கே வந்தாள்  எங்கள் வீட்டு நாய்குட்டியும் அந்த பெட்டிற்கு ஜம்பு பண்ணி வந்தது. வெள்ளிகிழமை இரவு என்பதால் நீண்ட நேரம் பேசி அரட்டை அடித்து கொண்டிருந்தோம்.


அப்போது என் மனைவி திடீரென்று ஒரு வெடியை தூக்கி போட்டாள்.. இப்படி மூன்று பேரும் தினமு இப்படி பேசி படுத்து தூங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றாள். அதை கேட்ட எனக்கு கரண்ட் ஷாக் அடித்து தூக்கி போட்டது போல இருந்தது. என் பெண் டாடி இது என்ன கொடுமை என்று அலறினாள்

Sunday, March 26, 2017

பெண்களே உங்களவரின் ஆண்மையை மிக எளிதாக சோதிக்க புதிய தொழில் நுட்பம்

avargal unmaigal
பெண்களே உங்களவரின் ஆண்மையை மிக எளிதாக சோதிக்க புதிய  தொழில் நுட்பம்


பெண்கள் எப்படி மிக எளிதாக  தங்களது கருத்தரிப்பு பரிசோதனைகளை (pregnancy test) மேற்கொள்ளகிறார்களோ அந்த அளவிற்கு மிக எளிதாக ஆண்மையை (sperm count) சோதித்து கொள்ள  சிறு உபகரணம் (device) ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த செலவு அமெரிக்க டாலர்க்கு 5 டாலர் மதிப்புதான். இதை நமது ஸ்மார்ட் போன் மூலம் பரிசோதனை செய்யலாம்'

இந்த சோதனை 98 சதவீதம் துல்லியமானது மற்றும்  இதற்கு எந்தவிதமான பயிற்சியும் தேவை இல்லை இந்த டெஸ்டை செய்ய  ஐந்து வினாடிகள் போதும். ArsTechnica  ரிப்போர்டில்  இந்த  சிப்  சாதன உற்பத்திக்கு வெறும் ஐந்து டாலர்தான் ஆகிறது  என்றும், மிகவும் மலிவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய கண்டுபிடிப்பு குழந்தைகள் வேண்டும் என்று முயற்சிக்கும் தம்பதிகளுக்கு மிகவும் உதவும் என்று நம்புகிறார்கள்

நடிகர் ரஜினி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?

avargal unmaigal
நடிகர் ரஜினி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?

ரஜினி விஷயம். இலங்கை பயணத்தை சொந்தக்காரணங்களால் ரத்து செய்கிறேன் என்று சொல்லிவிட்டுபோயிருந்தால் தொல்லையில்லை.. ஏன் ரத்து என்பதற்கு, மூன்று பக்க அறிக்கை?

‘’நீங்கள் சொல்வது நியாயம் இல்லை என்றாலும் இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு ரத்து செய்கிறேன்.. ஆனால் மீண்டும் போகும்போது என்னை இப்படி தடுக்காதீர்கள்’’ என்ன தெளிவு… அடேங்கப்பா..

சரி விஷயத்திற்கு வருவோம். எட்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கை இனப்படுகொலை உலகை உலுக்கியது. தமிழகமே கொந்தளித்தது. அப்போது ஒரேயொருமுறை நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சேவை தூக்கிப்போட்டு மிதிக்கவேண்டாமா என்று ரஜினி ஆவேசமாக பேசினார்..

Friday, March 24, 2017

மதுரைத்தமிழன் பாணியில் புடலங்காய் கூட்டுபுடலங்காய் கூட்டு /புடலங்காய் கட் செய்வது எப்படி snake-gourd-curry-

தேவையானவை:

புடலங்காய் - ஒன்று
வேக வைத்த பயத்தம் பருப்பு - அரை கப் (கடலை பருப்பையும் பயன்படுத்தலாம் )
மஞ்சள் தூள் சிறிதளவு
கருமிளகு சிறிதளவு

தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் 6
சீரகம் 2 ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஸ்பூன்
சீரகம் ஸ்பூன்

உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை:

Thursday, March 23, 2017

ஜெயலலிதா சமாதியா அலரும் அதிமுக தலைவர்கள் (படித்தில் திகில் ஊட்டியது )

avargal unmaigal
ஜெயலலிதா சமாதியா அலரும் அதிமுக தலைவர்கள் (படித்தில் திகில் ஊட்டியது )


ஜெயலலிதா சமாதிக்கு சென்ற பன்னீர்செல்வம்
பதவி இழந்தார்.

ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா
சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதா சமாதிக்கு சென்ற தீபா
கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்தார்.

ஜெயலலிதா சமாதிக்கு சென்ற தீபா கணவன்
காணாமல் போனார்.

Wednesday, March 22, 2017

ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்

ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்


திராவிடக் கட்சிகள்
தங்கள் சுய ஆதாயத்திற்காக
தமிழகத்தை சிரழித்துவிட்டது .
அதனால் தேசிய கட்சிகள் வந்தால்
தமிழகம் முன்னேறும் என்று சொல்லுபவர்கள்
தேசிய கட்சிகளின் சுயநலத்தால்
தேசமே சிரழிந்து போயிருப்பதை
மட்டும் சொல்லாமல் மறைப்பது ஏன்?இளம் வயதில் இருந்து
வாழ்க்கையில்

Tuesday, March 21, 2017

இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள் தினமலர் சொல்வதும் மதுரைத்தமிழன் சொல்வதும் )

இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள் தினமலர் சொல்வதும் மதுரைத்தமிழன் சொல்வதும் )

"இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள்"   இந்த தலைப்பில் தினமலர் இன்று செய்தி வெளியிட்டு இருக்கிற்து இந்த 10 அம்சங்களை படித்ததும் என்னுள் எழுந்த கருத்துக்களை இங்கே சிவப்பு கலரில் கொடுத்துள்ளேன். இது என் அறிவிற்கு எட்டியதை இங்கே சொல்லி இருக்கிறேன், இப்படி எனக்கு தோன்றியது போல உங்களுக்கும் கருத்துக்கள் தோன்றினால் பின்னுட்டத்தில் நீங்கள் சொல்லி செல்லாம், அதைப்படித்தபின் நான் சொல்லியது தவறு என்றால் நான் திருத்தி கொள்ள முடியும்

Monday, March 20, 2017

கங்கை அமரன் இப்படி பேசுவது சரியா?


கங்கை அமரன்  இப்படி பேசுவது சரியா?

இதற்காகத்தானே இவரை பிரதமராக தேர்ந்தெடுத்தோம்! சந்தோஷப்படுங்கள் இந்தியர்களே

avargal unmaigal
இதற்காகத்தானே இவரை பிரதமராக  தேர்ந்தெடுத்தோம்! சந்தோஷப்படுங்கள் இந்தியர்களே


காவிரி மோலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, தங்களின் உரிமையை வலியுறுத்தும் வகையில், ஐந்து நாட்களாக, டில்லியில், தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

ஆனால் நம்ம பிரதமரோ ........

நவரத்தினங்கள், ஆபரணங்கள் துறையை மேம்படுத்துவதில் ஆப்ரிக்க நாடுகளுக்கு இந்தியா உதவிசெய்வதில் சந்தோஷம் கொள்கிறது என பிரதமர் மோடி கூறினார். சர்வதேச வைர கருத்தரங்கை முன்னிட்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் அவர் பேசியதாவது: ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையில் இந்தியாவின் பங்கு முக்கிய உதாரணம் ஆகும். மேலும் இத்துறையை மேம்படுத்துவதில் ஆப்ரிக்க நண்பர்களுக்கு இந்தியா உதவுவதில் சந்தோஷம் கொள்கிறது. என கூறினார்.

Sunday, March 19, 2017

தினமலரில் வந்த செய்தி தலைப்பு புரிந்தவர்கள் மட்டும் சிரிக்கலாம் ( 18 + )

தினமலரில் வந்த செய்தி தலைப்பு புரிந்தவர்கள் மட்டும் சிரிக்கலாம் ( 18 + )

இது தினமலரில் வந்த செய்தி தலைப்பு இதை படித்ததும் எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. உங்களுக்கும் புரிந்தால் சிரியுங்கள்

அந்த தலைப்பு இதுதான்  தமிழகத்துக்கு அமித் ஷா குறி

டேய்  டேய்  இதெல்லாம் தமிழர்களுக்கு வேண்டாம்டா.......


(புரியாதவர்களுக்கு : 'குறி'க்கு இரண்டு பொருள் உண்டுஅன்புடன்
மதுரைத்தமிழன்

இளையராஜா அளவிற்கு சிறுபுள்ளைத்தனம் வடிவேலுவிடம் இல்லைதானே?

avargal unmaigal
இளையராஜா அளவிற்கு சிறுபுள்ளைத்தனம் வடிவேலுவிடம் இல்லைதானே?

இளைய ராஜா மாதிரி வடிவேலும் அவர் புகைப்படத்திற்கும் நகைச்சுவை காட்சிகளுக்கு ராயல்டி கேட்க ஆரம்பித்தால் தமிழர்கள் யாரும் சிரிக்க முடியாமல் போய்விடுவார்கள் ஆனால் இளையராஜா அளவிற்கு சிறுபுள்ளைத்தனம் வடிவேலுவிடம் இல்லை

Saturday, March 18, 2017

அமெரிக்க பெண்களுக்கு இப்படி அறிவுரை சொல்லாம் ஆனால் இந்திய பெண்களுக்கு ?

avargal unmaigal
அமெரிக்க பெண்களுக்கு இப்படி அறிவுரை சொல்லாம் ஆனால் இந்திய பெண்களுக்கு ?

நேற்று  நான் வேலை பார்க்கும் இடத்தில் மிகவும் பிஸியாக இல்லாததால் எங்கள் டிபார்மெண்டை சார்ந்த அனைவரும் அரட்டை அடித்து கொண்டிருந்தோம். பல விஷயங்களை பேசி கிண்டல் கேலி என சென்று கொண்டிருந்த போது பேச்சு அவரவரகள் வீட்டை பற்றி திரும்பியது, அப்போது ஒவ்வொருவரின் வீடு எப்போது கட்டப்பட்டது அதில் இப்ப என்ன என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று பேச்சு திரும்பியது.

அப்போது என் கூட வேலை பார்க்கும் அமெரிக்க பெண்கள் தங்கள் வீட்டில் உள்ள அனைத்து அப்பளையன்ஸையும் ஒவ்வொன்றாக மாற்ற வேண்டும் மேலும் வீட்டின் தளங்களையும் மாற்ற வேண்டும் இது சம்பந்தமாக தத்தம் கணவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள் அதுமட்டுமில்லாமல் அவர் கணவரிடம் எடுத்து கூறி அவர்களுக்கு அதை புரிய வைத்து ஒவ்வொன்றாக மாற்ற அனுமதி வாங்குவதற்குள் உயிரே போய்விடுவதாக சொன்னார்கள்

Friday, March 17, 2017

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஆரம்பத்திலே திமுக சறுக்கிறதா?

avargal unmaigal
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஆரம்பத்திலே  திமுக சறுக்கிறதா?

ஆர்.கே நகர் இடைத்தேர்தல், தமிழகத்தில் முக்கிய தலைவர்களான கலைஞர் மற்றும் ஜெயலலிதா களத்தில் இல்லாத நிலையில் வரும் தேர்தல் ஆகும். இந்த தேர்தல் அடுத்த கட்ட தலைவர்களை அடையாளம் காணப்போகும் தேர்தலாகத்தான் இருக்கும், இந்த தேர்தலில் பல  கட்சிகள் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்து களத்தில் இறங்கி இருந்தாலும் அங்கு முக்கிய அணியாக காணப்படுவது முன்று அணிகள் தாம் ஒன்று சசி அணி ( அதிமுக) பன்னீர் அணி ( அதிமுக ) அடுத்தாக ஸ்டாலின் அணி (திமுகவிமான டாய்லெட் பயன்பாடு அறியாத இந்தியர்களும் திணரும் ஏர்லைன்ஸ் நிர்வாகமும்

விமான டாய்லெட் பயன்பாடு அறியாத இந்தியர்களும் திணரும் ஏர்லைன்ஸ் நிர்வாகமும்


இந்தியர்களுக்கு விமானத்தில் உள்ள டாய்லெட்டை உபயோகிக்கும் பயன்பாடு தெரியாததால் ஏர் இந்தியா விமான நிர்வாகம் பலவித பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது என்ற செய்தி பலருக்கும் வியப்பாக இருந்தாலும் அது மிகவும் வருந்த தக்க உண்மையே


தொலை தூர விமான பயணத்தை மேற்கொள்ளுபவர்களுக்குதான் தெரியும் டாய்லெட்டின் அருமை அது நம்து கடன்களை கழிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. ஆனால் அதிலும் பிரச்சனைகள் வர ஆர்ம்பித்து இருக்கிறது நாம் பாரம்பரியமும் பண்பாடு உள்ள இந்தியர்களால்.

Thursday, March 16, 2017

கோட்டை வீட்டுடாதீங்கப்பா! போட்டோடூன்

கோட்டை வீட்டுடாதீங்கப்பா! போட்டோடூன்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எப்படி எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்ஸில் வைத்து, மன்னார்குடி மாபியாக்கள் பாதுகாத்து கவனித்து எப்படி  சட்டசபைக்குள் கொண்டுவந்து  சசி குருப் ஜெயித்ததோ, அதே மாதிரி ஆர்கே நகர் மக்களை பாதுகாத்து தேர்தல் அன்று நேரடியாக பூத்திற்கு கொண்டு வந்து வாக்குளை பெற்று தினகரனை வெற்றி பெற செய்யலாம். அதனால் பன்னீரும் ஸ்டாலினும் ஜாக்கிரதையாக செயல்படனும் அப்படி செயல்படாமல் அதன் பின் சட்டையை கிழித்து வருவதால் பிரயோஜனம் இல்லை

நான் சொல்லுறதை சொல்லிட்டேன்

கொசுறு : திமுகவின் வெற்றிவேட்பாளர் அண்ணன் மருது கணேஷ்....?

ஸ்டாலினும் மன்னார்குடி மாபியாவிடம் பணப் பெட்டி வாங்கிட்டாரா என்ன


அன்புடன்
மதுரைத்தமிழன்

Wednesday, March 15, 2017

கமல் நடிக்கும் திராவிட நாடகம்

கமல் நடிக்கும் திராவிட நாடகம்

அமித்ஷா தாயாரிப்பில், மோடி டைரக்ட் செய்து, கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் மிகப் பெரிய ப்ராஜெக்ட் நாடகம்தான் திராவிடம்

கமலஹாசனுக்கு நடிப்பதற்கு சொல்லிதரவா வேண்டும். அவர்தான் உலகநாயகன் ஆச்சே.. அதனாலதான், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மாநில கட்சிகளை உடைத்து தேசிய கட்சிகள் உள்ளே நுழைய முற்படுகின்றன. இதன் விளைவே மோடியின் டைரக்ஷனில் திராவிடம் என்ற நாடகம் கமல்ஹாசனை கொண்டு  நடத்தி வைக்கபடுகிறது.
Tuesday, March 14, 2017

கமான் மோடி சாப் கமான் / பயப்படுகிறாயா குமாரு ?

கமான் மோடி சாப் கமான் / பயப்படுகிறாயா குமாரு ? (அரசியல் கொத்துபுரோட்டா) அனைத்து கட்சிகளும் இங்கே கொத்தப்படு


உத்திர பிரதேசத்தில் 324 சீட்டுகளை கைப்பற்றிய்ய பாஜகவிற்கு தமிழகத்தில் ஆர்கே நகர் தொகுதியில் களம் இறங்க பயமாக இருக்கிறதா என்ன? நாட்டுக்கு நன்மைகள் பல செய்ததினால்தான் நீங்கள் இப்படி அமோக வெற்றி பெற்று இருக்கிறீர்கள் என்று உங்கள் கட்சிகாரார்கள் கூறுகிறார்கள் அப்படி சொல்லும் உங்கள் கட்சிகாரர்கள் தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என்று உங்களுக்கு சொல்லவில்லையா?..


உத்திர பிரதேசத்தில் 324 சீட்டுகளை பெற்ற நீங்கள் நிச்சயம் இந்த தொகுதியில் மற்ற வேட்பாளர்களைவிட உங்கள் கட்சி வேட்பாளர் 324 வோட்டுகளை பெற்று நிச்சயம் வெற்றி பெறுவார் என்று உங்களுக்கு நம்பிக்கை இல்லையா

Monday, March 13, 2017

ஹாஹாஹா! இப்படியா பொது வாழ்விற்கு வரும் தீபாவை மிரட்டுவது?

avargal unmaigal
இப்படியா பொது வாழ்விற்கு வரும் தீபாவை மிரட்டுவது?

செய்தி : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் தீபாவை கூலிப்படைகள் மிரட்டுகின்றனராம்.#தீபா

தீபா :ஆர்.கே நகரில் போட்டியிடப்படும் என்னை கூலிப்படையை வைத்து மிரட்டுகிறார்கள்

மதுரைத்தமிழன் : அப்படியா! அப்படி என்னதான் சொல்லி உங்களை மிரட்டுகிறார்கள்.

தீபா :உங்களுக்கு  ஒரு வோட்டு கூட போடாமல் தோற்க அடித்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள்இரோம் சர்மிளா 90 வோட்டுகள் மட்டும் பெற்று தோற்று இருக்கிறார்கள் என்பது கூட கவலையில்லை. ஆனால்

Sunday, March 12, 2017

மலத்திற்கும் சந்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாத இந்திய மக்கள்

avargal unmaigal
மலத்திற்கும் சந்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாத இந்திய மக்கள்


இரோம் சர்மிளா தனது வாழ்க்கையை தவறான மக்களுக்காக வீண் அடித்த பெண்மணியாகத்தான் என் கண்களுக்கு தோன்றுகிறார் .கூவத்திற்கு அருகே சந்தனம் இருந்தால் அதை மலம் என்று மக்கள் கருதி தாண்டி செல்வதை போலத்தான் மணிப்பூர் என்ற கூவத்திற்கு அருகே சந்தனமாக  இருந்த இரோம் சர்மிளாவை கவனிக்காமல் சென்று இருக்கிறார்கள்

அதுமட்டுமல்ல மலத்திற்கும் சந்தனத்திற்கும் நிறம் ஒன்றுதான் என்றாலும்  மூக்கில்லா இந்திய மக்களுக்கு மணம் வேறு வேறாவாக இருக்கும் .

தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடி தந்த மூவர்கள்

avargal unmaigal
தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடி தந்த மூவர்கள்

ரஜினி நடிச்சு சம்பாதித்த பெருமையை அவர் பொண்ணு ஐஸ்வர்யா ஆடி கெடுத்துட்டாங்க போல இருக்குதே

Wednesday, March 8, 2017

இந்தியர்கள் உண்மையிலே அறிவாளிகள்தானா எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்

இந்தியர்கள் உண்மையிலே அறிவாளிகள்தானா எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்


உலகத்திலே நாம்தான் மிக சிறந்த அறிவாளிகள் என்று இந்தியர்களுக்குள் ஒரு எண்ணம் உண்டு .அப்படிபட்ட எண்ணத்தை கொண்டு உள்ள இந்தியர்கள், அமெரிக்கா மற்றும் மேலை நாட்டை சார்ந்தவர்கள் முழு  சோம்பேறி மட்டுமல்ல  ஒன்றும் தெரியாதவன் என்றும், அரபு நாட்டவர்கள் வடிகட்டின முட்டாள்கள், என்றும் சைனாக் காரன் ஒன்றுக்கும் உதவாத பொருட்களை தாயாரிப்பவர்கள் என்றும், தாங்கள்தான் உலகின் சிறந்த அறிவாளிகள் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்

ஏய் செல்லக்குட்டி எங்கடி இருக்கே?

ஏய் செல்லக்குட்டி எங்கடி இருக்கே?


வீட்டை அழகங்கரிப்பதும் தங்களை அலங்கரித்து பேஸ்புக்கில் புரொபைல் பிகசர் போடுவதும் சமையல் குறிப்பு எழுதுவதும் பிள்ளைகளை கவனித்து கொள்வது மட்டுமல்ல பெண்களின் வேலை  இந்த சமுகத்திற்காக சமுக பிரச்சனைகளை கையில் எடுத்து பதிவிடுவது போராடுவதும்தான் பெண்களின் உரிமை & செயல்


அனைத்து மகளிருக்கும் மகளிர் தினவாழ்த்துக்கள்.   மேலும் மகளிர் தின நகைச்சுவை பதிவை படிக்க படிக்க ---------->  ஏய் செல்லக்குட்டி எங்கடி இருக்கே?    இங்கே க்ளிக் செய்யவும்
அன்புடன்
மதுரைத்தமிழன்

Monday, March 6, 2017

படித்த செய்திகளும் அதற்கு மனதில் தோன்றிய நையாண்டி கருத்துகளும்

avargal unmaigal
படித்த செய்திகளும் அதற்கு மனதில் தோன்றிய  நையாண்டி கருத்துகளும்

ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை பற்றி எய்ம்ஸ் டாக்டர்களிடம் இருந்து அறிக்கை வாங்கி வெளியிடுவதற்கு பதிலாக சாருநிவேதிதா/ஜெயமோகனிடம் கேட்டு இருந்தால் அவர்கள் மிக தத்ருபமாக எழுதி  கொடுத்திருப்பார்களே

செய்தி :மதிய உணவை பெற மாணவர்கள் ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டும்.

மதுரைத்தமிழன் :ஆமாங்க அப்படி இல்லையென்றால் அமெரிக்க மாணவர்கள் விமானத்தில் பறந்து வந்து மதிய உணவை வாங்கி சென்றுவிடுவார்கள்

Sunday, March 5, 2017

தமிழக நீதிபதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களா?

avargal unmaigal
தமிழக நீதிபதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களா?

தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்த  நீதிபதிகள் ஏ. செல்வம் & பி.கலையரசன். அவர்கள் ஆனால் தீர்ப்பு அளிக்கும் முன் அவர்களுக்கு இந்த தகவல் தெரியவில்லை போலும் .அல்லது தெரிந்திருந்தாலும் அவர்களுக்கு இப்படித்தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அட்வைஸ் பண்ணி இருக்கிறது என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும் அல்லது ஆராய்ந்து தீர்ப்பு அளிக்கும் திறமை இந்த நீதிபதிகளுக்கு இல்லை என்றுதான் நினைக்க தோன்றுகிறது

Friday, March 3, 2017

மோடிஜி அமெரிக்க பெண்மணி முன் கைகட்டி இருக்கும் நிலைமை?

மோடிஜி அமெரிக்க பெண்மணி முன் கைகட்டி இருக்கும் நிலைமை?

avargal unmaigal


சட்டம் இயற்றுவது அமெரிக்க கார்பொரேட் நிறுவனம்தான் அதை செயல்படுத்துவதுமட்டும்தான் இந்திய அரசின் செயல். ஒரு நல்ல உண்மையான தேசபற்று உள்ள தலைவர் கிடைக்கும் வரை இதுதான் நிலை.அன்புடன்
மதுரைத்தமிழன்


Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog