உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, February 6, 2017

உப்புமா கொடுமைகள் (ந)கைச்சுவை

உப்புமா கொடுமைகள்  (ந)கைச்சுவை

கொடுமைகள் பலவிதம் அதில் உப்புமா கொடுமைகள் ஒருவிதம். ஆண்களை டார்ச்சர் பண்ணுவதற்ககாக பெண்களுக்கு இறைவன் கொடுத்த வரப் பிரசாதம் இந்த உப்புமா....


ஆண்கள் கஷ்டப்பட்டு மாடாக வேலைப்பார்த்துவிட்டு இரவில் வீட்டுக்கு பசியோட திரும்பும் போது இன்ன்ரு மனைவி நன்றாக சமைத்து வைத்திருப்பாள் அதை மூக்கு முட்டாக சாப்பிட்டுவிட்டு நல்லா ஒரு தூக்கம் போடனும் என்று வரும் போதுதான் அன்று வீட்டில் மனைவி உப்புமா சமைத்து வைத்திருப்பாள் அப்ப நம்ம உடலில் ஒருவிதமான் பிரஷர் ஏறும் பாருங்க அதை சக்தியாக மாற்றினால் செவ்வாய்கிரகத்திற்கு நான் ராக்கெட்டையையே விட்டுவிடலாம்



சரி அதைவிடுங்க நம்ம வீட்டில் நல்ல சாப்பாடு சமைத்து இருக்கும் போது அதை எப்படித்தான் நம்ம நண்பர்கள் மோப்பம்  பிடிப்பார்களோ தெரியாது ஆனால் அன்று மட்டும அட்டையை போல ஒட்டிவருவார்கள் ஆனால் உப்புமா பண்ணி இருக்கும் நாட்களில் மட்டும் அவர்கள் அதை எப்படிதான் மோப்பம் பிடிப்பார்களோ தெரியாது அன்று நம்ம வீட்டு பக்கம் தலைவைத்து கூட பார்க்க மாட்டார்கள் பாவிகள்

உப்புமா பண்ணி இருக்கும் நாட்களில் அவர்கள் வந்தால் அவர்களுக்கு அந்த உப்புமாவை கொடுத்து இது என் மனைவி பண்ணியது மிக நன்றாக் இருக்கும் என்று சொல்லி நம்ம பங்கை அவர்களிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லாம் அல்லது மனைவிடம் சொல்லி பாரும்மா எங்க ரெண்டு பேருக்கும் இந்த உப்புமா பத்தாது என்பதால் நாங்கள் உணவை வெளி இடங்களில் முடிய்\து கொள்கிறோம் என்று சொல்லி தப்பித்துவிடலாம் ஆனால் உப்புமா கிண்டும் அன்றுதான் நம்ம வீட்டிற்கு யாரும் வர மாட்டார்கள்

சரி பக்கத்து வீட்டுகாரணுக்கு ஒரு ஹாய் சொல்லி நலன் விசாரித்து அவன் வீட்டில் ஒரு வாய் நல்லா சாப்பிட்டு வரலாம் என்று போனால் அன்றுதான் அவன் வீட்டில் சமையல் ஏதும் செய்யாமல் ஹோட்டலுக்கு போய் சாப்பிட  தயாராகிக் கொண்டிருப்பார்கள் இப்படி எல்லாம் பலவிதமாக தாங்கள் உப்புமாவால் கஷ்டப்படுவதாக இந்தியாவில் உள்ள ஆண்கள் சொல்லிவருகிறார்கள்

அவர்களுக்கு இப்படி பிரச்சனைகள் வருகிறது என்றால் நமக்கு அதற்கு மாற்றாக வருகிறது. நான் என்ன வீட்டம்மாவிற்கு போன் போட்டு இன்று இரவு டின்னருக்கு என்ன உணவு என்று கேட்டேன் அதற்கு அவர் உப்புமா என்றார்.  அதற்கு நான் உப்புமாவா அதற்கு பதில் பூரி பண்ணலாமே என்று கேட்டேன் அதற்கு அவள் பூரிக்கட்டை ஞாபகம் இருக்கிறதா என்றாள் அதன் பின் மறு பேச்சு பேச முடியுமா என்ன


எல்லோரும் இரவு நேரத்தில் ஒன்றாக உடகார்ந்து சாப்பிடுவதுதான் எங்க வீட்டு வழக்கம் என்பதால் இரவு டின்னர் நேரத்தில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம். என் மனைவி எல்லோருடைய தட்டில் உப்புவாவை போட்டுவிட்டு நான் சொன்ன படி உருளைக்கிழங்கு  சேர்காமல் எண்ணெய் மிக குறைவாக விட்டுதானே செய்தீர்கள் என்று  கேட்டாள் .அதற்கு நான் நீ சொன்னபடி தான் செய்தேனம்மா உன் பேச்சை மீற முடியுமா என்றேன். சரி சரி  எனக்கு பசிக்கு அதிகம் பேசாமல் சாப்பிடுங்கள் என்றாள்


உப்புமா செய்தது நாந்தான் என்றாலும் அதை  எளிதில் சாப்பிடத்தான் முடியுமா என்ன அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழுது கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன் எனக்கு நேர்ந்த இந்த கொடுமை உலகத்தில் யாருக்கும் நேர கூடாது


மற்ற வீட்டில் எல்லாம் பொண்டாடிதான்  உப்புமாவை( விஷத்தை )  கொடுத்து கணவரை கொல்லுவார்கள் ஆனால் என் வீட்டில் விஷத்தை நானே தயாரித்து நானே  சாப்பிட வேண்டும்

விஷம் தயாரிப்பது எப்படி? (உப்புமா தாயாரிப்பது எப்படி )

ரவை : 1 கப்
பெரிய வெங்காயம் 1
உருளைக் கிழங்கு 1
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 4
கருவேப்பிலை தேவையான அளவு


ரவையை முதலில் வறுத்து தனியாக எடுத்து கொள்ளுங்கள். அதன்  பாத்திரத்தில் தாளிப்பதற்கு தேவையான அள்விற்கு எண்ணெய்விட்டு ( நான் சிறிது அதிகமாக விடுவேன் ) அந்த எண்ணெய் காயந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு கடுக நன்றாக வெடித்தவுடன் அதில்  சிறிது பெருங்காயப் பவுடர் போட்டு தாரளமாக கருவேப்பிலையும் போடவும் அதன் பின் அதில் சிறதளவு பொடியாக நறுக்கிய இஞ்சியை அல்லது இஞ்சி பேஸ்ட் இருந்தால் அதில் போட்டு ஒரு வதக்கு வதக்கி அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் நீளமாக கீறி வைத்த பச்சைமிளகாயை போடவும் அதன் பின் பொடியாக நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். வதக்கும் போது சிறிதளவு மஞ்சப் பொடியை சேர்க்கவும்(கேரட்டும் இது போல சேர்க்கலாம் ) அதன் பின்  ஒரு கப் ரவைக்கு   2 அரை கப் தண்ணிர் விட்டு அதை கொதிக்கவிடவும். தண்ணி நன்றாக கொதித்தவுடன் அதில் வறுத்து வைத்த ரவையை சிறிது சிறிதாக போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவும் ரவை போடும் போது மொத்தமாக போட்டு விட்டால் அதன் பின் ரவைக்கு பதில் ரவை கொழுக்கட்டைதான் வரும் அதனால் சிறிது சிறிதாக போடவும்.

ரவையை இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய்விடவும் மனமாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.


ரவைக்கு தொட்டு சாப்பிட பொரிகடைலைதேங்காய் சட்னி, அல்லது ஊறுகாய் அல்லது முந்திய நாள் வைத்த மிளகுரசம் நல்ல காம்பினேஷன்.

நான் ரவை மீது துருவி வைத்த தேங்காய் பூவை போட்டு அதன் மேல் சீனியை தூவு பிசைந்து சாப்பிடுவேன் அதாவது விஷத்தை கூட இனிப்பு போட்டு கொடுத்தால் சாப்பிடுவேன்  ஹீஹீ அப்ப வரட்டா>

இந்த பதிவை படித்த பெண்கள் உடனே உப்புமா செய்து போட்டு எனக்கு சாபத்தை வாங்கி தராதீர்கள்

டிஸ்கி : நான் வேலை பார்க்கும் நிறுவனம் என் வீட்டிற்கு அருகே இருப்பதாலும் நான் வேலையில் இருந்துசிக்கிரம் வந்துவிடுவதாலும் மேலும் ருசியாக சமைப்பதில் எனக்கு இருப்பாதாலும் அனேக நாட்களில் நாந்தான் உணவு தயாரிப்பேன் விக்கெண்டுகளில் மட்டும் என் மனைவி உணவு தயாரிப்பார். இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் அட்சஸ்ட் பண்ணி போவதால் எங்கள் காதல் வாழ்வு இன்று வரை மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்





upma  Kodumaigal humour post plus recipe

24 comments :

  1. (Manasukkul) nggoyyala Engela Partha epdi theriyithu innooru thadavava uNNA thamizhnaatla paaththen?!, paaththen edaththulalaye... "UPPUMA" kuduththu' senjiruven'

    ReplyDelete
    Replies
    1. அப்பனே சிவ பெருமானே இனிமே கருத்து போட்டா தமிழ்லே போடுப்பா நீ என்ன சொல்லவரேன்னு எனக்கு சத்தியமா புரியலைப்பா? இதுக்கு நான் பேசாமல் உப்புமாவையே தினமும் மூன்று வேளை சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பேனப்பா

      Delete
  2. சத்தியமா சொல்லுங்கோ இது உங்கள் சொந்த ரெசிப்பியோ?:)

    ReplyDelete
    Replies
    1. இது என் சொந்த ரிசிப்பிதான் இப்படிதான் நான் உப்புமா செய்வேன்

      Delete
    2. அதிரா இப்படியான ஒரு கேள்வியெல்லாம் மதுரைத் தமிழனிடம் கேட்கலாமா!!!!!!?

      கீதா

      Delete
  3. ஏன் உப்புமாவை இவ்ளோ வெறுக்கிறீங்க நல்லாத்தானே இருக்கு... எங்கள் வீட்டில் உப்புமாவே கிடையாது, எப்பவாது வருடத்தில் 2,3 தடவை ஆசை வந்தால் மட்டும் செய்வதுண்டு, அதனால உப்புமா ரொம்ப புய்க்கும்:).

    ReplyDelete
    Replies
    1. நான் உப்புமாவை வெறுக்கவில்லை உப்புமா சாப்பிடுவதைத்தான் கஷ்டம் என்கிறேன். மேலும் இங்கே அதை பதிந்தற்கு காரணம் என்றாவது ஒரு நாள் உங்களை போல உள்ளவர்களின் வீட்டிற்கு வழி தவறி வந்துவிட்டால் உப்புமா செய்து எனகு போடுவிடக் கூடாது அல்லவா

      Delete
  4. இது உங்கட டிஸ்கிக்கான பதில்:))..

    ஓவரா கூச்சப்படுறீங்க:), நீங்க சமைப்பதால் நாங்களெல்லாம் ஏதும் நினைச்சிடுவமோ என அப்படி நினைக்காதீங்க... வெளிநாட்டில் ஆண்கள்தான் அதிகமா விரும்பி:) சமைக்கிறார்கள்.. சுவையாகவும்..:))...

    அதனால கீப் இட் மேலே:)... மிக அருமையான குறிப்பு.

    ஊசிக்குறிப்பு:
    அடுத்தமுறை, உங்கள் சமையல் வீடியோக் குறிப்பை எதிர்பார்த்திருக்கிறோம்... இப்படிக்கு நியூஜெர்ஷி சமையல் மன்ற ரசிகைகள்:).

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புதிதாக பார்ப்பவர்களிடம் அதுவும் பெண்களிடம் பேச மட்டுமே கூச்சப்படுவேன் சமைக்க அல்லது அதைப்பற்றி சொல்ல கூச்சப்படவே மாட்டேன். நேற்று இங்கு சூப்பர் பவுல் என்ற அமெரிக்க புட் பால் பைனல் கேம் நடந்தது அதை சேர்ந்து பார்ப்பதற்கு என் வீட்டருகில் இருந்த 6 குடும்பங்களை கூப்பிட்டு இருந்தேன் டின்னருக்காக எல்லாப் பெண்களும் அவர்களின் க்டும்பத்தினரும் அமர்ந்து டிவி பார்க்க நாந்தான் சரக்கு அடித்தவாறே எல்லோருக்கும் உணவு தயாரித்து வழங்கினேன் என் மனைவி சாம்பார் மட்டும் வைத்தார் நான் பஜ்ஜி,மீன் கறி, பாவு பாஜி, இட்லி, பைங்கன் பர்த்தா, சில்லி சட்னி, தேங்காய் சட்னி, என்று செய்து கொடுத்தேன் சாப்பிட்டதுமட்டுமல்லாமல் மீதியை அனைவரும் தங்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர்

      Delete
    2. என் மனைவியும் வெஜிடேரியன் உணவை நன்றாக சமைப்பார்கள் ஆனால் என்ன காய்கறியை நான் தான் கட் பண்ணி கொடுக்கணும்.

      Delete
    3. ஆஆவ்வ்வ்வ்வ் நாங்களும் நைட் முழிச்சிருந்து பார்த்தமே, ரீயும் குடிச்சு பிஸ்கட்டும், இலங்கைப் பக்கோடாவும் சாப்பிட்டுக்கொண்டு... ஆனா நான் முக்கால்வாசியோடு நித்திரையாகிட்டேன்ன், எங்களுக்கு சாமம் 1மணிக்கு மேல் ஆகிவிட்டது முடிய.
      ஹா ஹா ஹா சமைப்பது பெரிய வேலை இல்லை, இந்த வெட்டிக்கொடுப்பதும் கிளீன் பண்ணுவதும்தான் பெரிய வேலை:).

      Delete
    4. கேம் முக்கால் வாசிக்கு அப்புறம்தான் இண்டிரஸ்ட்டிங்காக இருந்தது...... தாலிகட்டுர நேரத்தில தூங்கி போன மாப்பிள்ளை போல உங்கள் நிலைமை ஆகி போச்சே

      Delete
  5. கலக்குங்க உப்புமா பிரமாதம். எல்லோரும் உப்புமா உப்புமா என்று அலறுகிறீர்கள். எனக்கு உப்புமா பிடிக்கும். அதிரா, ஹை-பைவ் :)
    பட்டாணி, கேரட் சேர்ப்பேன் சகோ. உருளைக்கிழங்கு சேர்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. அய்யோ நீங்களும் என் மனைவிகட்சியிலே சேர்ந்திட்டிங்களா சகோ... நல்லவேளை என் மனைவிக்கு ஆதரவாக இவ்வளவு பேர் இருக்கிறீர்கள் என்று அவருக்கு தெரியாது தெரியாதவரைக்கும் நான் தப்பிச்சேன்

      Delete
    2. கிரேஸ், அதிரா எல்லாருக்கும் ஹைஃபை!! என்னையும் சேர்த்துக்கங்க. மீ டூ வெஜ்ஜிஸ் சேர்த்துச் செய்வதுண்டு...

      கீதா

      Delete
  6. உப்புமாக்கு பெருங்காயம் போடுறதை இப்பதான் கேள்விப்படுறேன்....

    உளுத்தம்பருப்போடு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்துக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்

    ReplyDelete
    Replies


    1. கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கும் எல்லாவற்றிலும் பெருங்காய தூளை தூவுவது என் வழக்கம்

      Delete
  7. உப்புமாவில் உருளைக்கிழங்கு காம்பினேஷன் இப்போதான் கேள்விப்படறேன் .எங்க வீட்லஉப்புமா சாப்பிட எனக்கு கொடுத்து வைக்கலை.. அதனால் கணவரும் மகளும் தப்பிச்சிட்டாங்க :) எனக்கு உப்புமா ரொம்ப பிடிக்கும் முந்தாநேத்து செஞ்ச வத்தக்குழம்பும் அதுக்கு தொட்டுக்க நல்லா இருக்கும் எனிவே தேங்க்ஸ் new ரெசிபிக்கு :) விருந்தினர் வந்தா செஞ்சுடலாம் :)

    ReplyDelete
    Replies
    1. உருளைக்கிழங்கை மிக சிறிய துண்டுகளாக நறுக்கி வதக்கி சேர்க்கவும்...விருந்தினர் வந்தால் கண்டிப்பாக செய்யுங்கள் அப்பதான் அவர்கள் உங்கள் வீட்டில் தங்க மாட்டார்கள். ஒன்று சொல்ல மறந்துட்டேன் நான் உங்களுக்கு விருந்தினர் அல்ல உறவினர்தான் மறக்க வேண்டாம் இதை

      Delete
    2. ஏஞ்சல் சூப்பரா இருக்கும் ஏஞ்சல். உருளையும், குடை மிளகாயும் கூட கடைசில போட்டு ரொம்ப அது வெந்து கலர் மாறாம செய்து பாருங்க அதுவும் வித்தியாசமான ஃப்ளேவரோடு நல்லா இருக்கும்..

      மதுரை ப்ரொ அடிக்க வராதீங்க!!ஹிஹிஹி

      Delete
  8. துளசி: மதுரைத் தமிழன்! நான் வீக் என்ட் தான் பாலக்காட்டிலிருந்து வீட்டுக்குப் போவதால் வாரநாட்கள் பல நாட்கள் இந்த ஈசி உப்புமாதான் இரவு எனக்குச் சோறு! ஹிஹி...ஆனால், பழகிவிட்டது!! வீட்டிலும் வீக் என்ட் அல்லது லீவு நாட்களில் செய்வார்கள்!! உ. கி போடவே மாட்டார்கள்!!! வெங்காயம் மட்டும் போட்டு வெறும் உப்புமாதான். எண்ணையும் அதிகம் விடாமல்தான் செய்வது. எனவே எனது வாழ்வில் உப்புமா இணை பிரியா ஒன்றாகிவிட்டது!!!

    கீதா: அது ஏன்னு தெரியல பலரும் உப்புமாவை இப்படி எழுதுகிறார்கள்!! நீங்களும் அதுவும் நன்றாகச் சமைக்கத் தெரிந்த நீங்களுமா மதுரை!!!!!!!! இதே மெத்தட்தான் நானும் செய்வது. பெருங்காயம் சேர்த்தும்.. சில சமயம் உருளைக் கிழங்கு வேற காய்களும் காரட், பட்டாணி, பீன்ஸ் போட்டும் செய்வதுண்டு. நன்றாகவே வரும். பிடிக்கவும் செய்யும் வீட்டிலும் எல்லோரும் சாப்பிடுவார்கள்!.....இதையே பங்களூரில் செய்வது போன்று காராபாத் என்றும் செய்வதுண்டு. உடுப்பி ஸ்டைல் உப்பிட்டு என்ற வகையிலும் செய்வதுண்டு..மஞ்சள் பொடி சேர்த்து...எல்லா காயும் சேர்ப்பது என்றால் மஞ்சள் தூள் கொஞ்சம் சேர்ப்பேன்..சேர்க்காமலும்..என்று..வெரைட்டி ப்ரொ வெரைட்டி!!! அப்ப உப்புமா சப்புமா ஆகாது!!! ஸோ உப்புமாவுக்கு என் ஓட்டும் சேர்த்துக் கொள்ளூங்கள்!!! சரி என்ன நீங்கள் இன்னும் வீடியோ போடாம இருக்கீங்க!! சீக்கிரம் போடுங்க எதிர்பார்க்கிறோம்...உங்க முகம் காட்டாமலேயே கூடப் போடலாமே!!!

    ReplyDelete
  9. என்ன சகோ ஆண்கள் யாருக்குமே உப்புமா பிடிக்காதா??!!! அப்படித்தான் இப்ப நீங்களும் இப்படிப் போட்டதும் புள்ளிவிவரம் சொல்லுது இங்க நாங்க பெண்கள் சப்போர்ட் கூட்டமா இருக்கே ஹிஹிஹி...அது சரி ஏன் எங்கள் ப்ளாக் ஆஜர் வைக்கலை!!!!!!

    ReplyDelete
  10. பொருத்தமான படம்! :) உப்புமா சாப்பிடுங்க! எஞ்சாய் பண்ணுங்க!

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 399 ) அரசியல் ( 259 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 45 ) நையாண்டி ( 42 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) போட்டோடூன் ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 26 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) தமிழகம் ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) நக்கல்கள் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) satire ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog