உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, February 24, 2017

ஆண்கள் அழவே கூடாது என்று எதற்கு சொல்லுகிறார்கள் தெரியுமா ?
ஆண்கள் அழவே கூடாது என்று எதற்கு சொல்லுகிறார்கள் தெரியுமா ?

ஆண்கள் அழுதால், அதற்கு காரணம் பெண்கள் என்று தெரிந்துவிடுமாம். அப்புறம் பெண்கள் கொடுமைக்காரி என்று உலகிற்கு தெரிந்துவிடுமாதலால் பெண்களால் செய்யப்பட்ட சதி ஏற்பாடுதான் இந்த ஆண்கள் அழக் கூடாது என்பது. ஆனால் பெண்கள் அழலாமாம் காரணம் பெண்கள் அழுதால் அதற்கு காரணம் ஆண்கள்தான் என்று எளிதில் குற்றம் சொல்லி கொடுமைக்கார ஆக்கிவிடலாமேஅதுபோலத்தான் பெண்கள் சிரிக்க கூடாதாம் அப்படி சிரித்தால் அவர்கள் சிரிக்க காரணம் ஆண்கள் என்று சொல்லிவிடுவார்களாம். அப்புறம் ஆண்களுக்கு நல்ல பெயர் வந்துவிடுமாம் ஆனால் அதே நேரத்தில் ஆண்கள் நன்றாக சிரிக்கலாமாம் காரணம் அவங்க மகிழ்ச்சி பொங்க சிரிக்க பெண்கள்தான் காரணம் என்று சொல்லாமாம்.

என்ன அநியாயம் பார்த்தீங்களா மக்களே?


 பெண்ணாதிக்கம் இருந்த அந்த காலத்தில் இப்படி பொண்ணுங்களா ஏற்படுத்திய சதிதான் இது என்று மதுரைதமிழனாந்தா ஆராய்ச்சியில் கண்டுபிடித்து இருக்கிறாராம்.

இந்த ஆராய்ச்சியை அமெரிக்கா மற்றும் உலகின் பல நாடுகள் தடை பண்ணி இருக்கிறதாம். அதனால் நீங்கள் உண்மையான பச்சை தமிழனாக இருந்தால் மானமுள்ள தமிழனாக இருந்தால் இந்த மதுரைதமிழனாந்தாவின் ஆராய்ச்சி முடிவை உலகமெங்கும் பரப்புங்கள்


அன்புடன்
மதுரைதமிழனாந்தா(மதுரைத்தமிழன்)10 comments :

 1. ஆஹா...

  அழக்ககூடாது என்பதற்கும்...
  சிரிக்கக கூடாது என்பதற்கும்...
  இத்தனை கதை இருக்கா...?
  அது சரி...

  ReplyDelete
  Replies
  1. மனைவிகிட்ட புரிக்கட்டையால் அடிவாங்கும் போது அழவும் கூடாது சிரிக்கவும் கூடாது அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களால் மட்டுமே இப்படி எல்லாம் சிந்திச்சு கதை அளக்க முடியும்

   Delete
 2. ஹா ஹாங் :)என்னா ஒரு சமாளிஃபிகேஷன் :)

  நீங்களே முடிவு செஞ்சிட்டீங்க //பெண்ணாதிக்கம் இருந்த காலத்தில் //அப்படின்னா இப்போ பெண்ஆதிக்கமே இல்லைதானே அதுதானே உண்மை :) ..

  நானும் பச்சை நிறமான்னு கண்ணாடியில் பார்த்தேன் அது என்னை பிங்க் கலந்த மஞ்சளா காட்டுவதால் இந்த பதிவை ஷேர் செய்ய முடில ..

  ReplyDelete
  Replies
  1. பெண் ஆதிக்கத்தை ஒழித்து விட்டோம் என்பது உண்மையே ஆனாலும் இன்னும் மனைவி என்னும் வடிவத்தில் தொடர்கிறது

   Delete
  2. நீங்கள் ஜீன்ஸ் போட்ட பெண் என்பதால் உங்களை பச்சை தமிழர்கள் லிஸ்டில் சேர்க்க முடியாது

   Delete
 3. பொம்பளை சிரிச்சா போச்சு ,புகையிலை விரிஞ்சா போச்சு ....இதுக்கு என்ன அர்த்தம் என்பதையும் சொல்லுங்க ஜி :)

  ReplyDelete
  Replies
  1. இதை ஆராய்ச்சி செய்ய நிறைய நிதி தேவைப்படும் அதற்கு யாரவது ஸ்பான்சர் செய்தால் உடனடியாக ஆராய்ந்து பதில் அளிக்கிறேன் ஜி

   Delete
 4. ஹா ஹா ஹா மனைவியிடம் அடிவாங்கி அழுததை, சிரிச்சுக்கொண்டே சொன்ன ஒரே தமிழன்... எங்கட அவர்கள் ட்ருத்தான்:))

  ஆமாம் ஆமாம் எம்பாலாருக்கு என்ன கொடுமை நடந்தாலும் அதுக்குக் காரணம் எதிர்ப்பாலார்தான் என இவ் மேடையிலே முழங்கிக்கொண்டு.... எஸ்கேப்ப் ஆகிறேன்ன்:).

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog