Monday, February 6, 2017

avargal unmaigal
நாட்டு நடப்பு பற்றி கலைஞர் பாணியில் நையாண்டி  கேள்வி பதில்கள்

கேள்வி :சசிகலா முதல்வர் ஆனால் ஸ்டாலின் என்ன செய்வார்?
மதுரைத்தமிழனின் பதில்: வழக்கம் போல சட்டசபைக்கு சென்று வெளிநடப்பு செய்வார் அவருக்கு தெரிந்தைதானே அவர் செய்ய முடியும்


கேள்வி :சசிகலா முதல்வர் ஆவதை பார்க்கும் ஸ்டாலின் மனசு என்ன நினைக்கும்?

மதுரைத்தமிழனின் பதில்: கலைஞருக்கு மகனாக இருந்து கட்சி தொண்டு ஆட்டுவதற்கு பதில் ஜெயலலிதா வீட்டில் வேலக்காரனாவதாக இருந்திருந்தால் இப்ப தமிழக முதல்வர் ஆகி இருக்கலாமே  என்று அவர் மனசு இப்ப சொல்லும்


கேள்வி : ஜெயலலிதாவிடம் வேலை செய்த சசிகலா முதல்வர் ஆகலாமா?

மதுரைத்தமிழனின் பதில்: வேலைக்காரன் படத்தில் நடிச்ச எம்ஜியார் முதல்வர் ஆனார் ஆனால் வேலைக்காரியாக வாழ்ந்த சசிகலா முதல்வர் ஆகக் கூடாதா?

கேள்வி :ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவிற்கு பங்கு இருப்பதன் காரணமாகத்தான் மக்கள் அவர் முதலவர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாமே?

மதுரைத்தமிழனின் பதில்: சரி அவர்கள் எதிர்ப்பு நியாயமாக இருந்திருந்திருந்தால் அந்த சாவிற்கு உடந்தையாக இருந்த மோடியை மட்டும் அவர்கள் எதிர்க்காதது ஏன் ( ஒருமுதலவரின் சாவிற்கு காரணம் என்று தமிழக முழுவதும் மக்களால் நம்பப்படுகிறது என்றால் அதற்கான விசாரனையை மத்திய அரசு மேற்கொள்ளாதது ஏன்? அது உண்மையா இல்லையா என்று உளவுதுறையால் கூட அவருக்கு தெரியவில்லை என்றால் அவர் பிரதமாரக இருக்க கூட அருகதை இல்லாதவர்தானே. இல்லை தெரிந்தும் அவர் மெளனம் காக்கிறார் என்றால் அவரும் அதற்கு உடந்தைதானே?


முன்பு அதிமுகவில் அமைச்சர் பதவிகளுக்குதான் ஆபத்து ஆனால் இப்ப முதல்வர் பதவிகளுக்கு மட்டுமே ஆபத்து ~மதுரைத்தமிழன்~

கேள்வி : சசிகலா முதல்வாரக ஆகப் போகிறாராமே?

மதுரைத்தமிழனின் பதில்: வானிலை  அறிக்கை மாதிரி தமிழக முதல்வர்களும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்

கேள்வி : சசிகலா முதல்வராக வந்தால் தமிழகமே அழிந்து போய்விடும் என்று மேல்தட்டு மக்கள் நினைக்கிறார்களே?

மதுரைத்தமிழனின் பதில்: வெள்ளம் வந்த பின்னும் அழியாத தமிழ்நாடுடா இது சசிகலா வந்தா அழியப் போகிறது


காதலிக்கும் போது வாழ்க்கையின் எல்லை வரைக்கும் உன் கூட வருவேன் என்று சத்தியம் செய்யும் ஆண்கள் கல்யாணதிற்கு அப்புறம் துணிக்கடைக்கு கூட வாராமல் இருக்கும்  அநியாயம் நடந்துகிட்டதுதான் இருக்குது

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை செய்த அறையில் சிவிடி கேமிரா ஏதும் இல்லை அதற்கு அவசியமும் இல்லை என்று லண்டன் டாக்டர் சொல்லி இருக்கிறாமே?

சிசிடிவி கேமிரா இருந்திருந்தால் சவப்பெட்டியில் பல நாட்களாக இருந்திருந்த பிணம் அல்லவா ரிக்கார்ட் ஆகி இருக்கும் அதனால்தான் அவர் அப்படி பதில் அளித்திருப்பார்

கேள்வி :ஜெயலலிதாவிற்கு சிகிச்சை கொடுத்த போது பேசினார் கிண்டல் பண்ணினார் என்று சொல்வது உண்மையா?
மதுரைத்தமிழனின் பதில்: அவங்க ஜெயலலிதா ஆவி கூட பேசியதைத்தான் அப்படி சொல்லுறாங்க போல


கேள்வி : டெல்லியில் நிலநடுக்கம் ?
மதுரைத்தமிழனின் பதில்: சசிகலா  முதலமைச்சாரக ஆவப் போவதால் டெல்லியே அதிர்ந்தது

கேள்வி : சசிகலாவை ஒன்றும் இல்லாமல் ஆக்க என்ன செய்ய வேண்டும்?
மதுரைத்தமிழனின் பதில்:  அவரை மக்கள் நலக் கூட்டணில் சேர்த்துவிட நடவடிக்கை எடுத்தாலே போதும்


கேள்வி : தமிழக அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் ஜெயலலிதா சிகிச்சைகள் குறித்து ஹாஸ்பிடல் அளித்த மருத்துவ விளக்கம் பற்றி?

மதுரைத்தமிழனின் பதில்:  அந்த விளக்கம் கூட தமிழக அரசு எழுதி கொடுத்தாமாம்மே அதை பற்றி ஒரு விளக்கம் கொடுக்க இயலுமா


தமிழக கவர்னருக்கு வேலைகள் அதிகரித்துவிட்டனவா?
முன்னாள் தமிழக கவர்னர் என்றால்  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி ஏற்பு விழா பண்ணிய கையோட அவங்க தூங்க சென்றுவிடுவார்கள் அதன் பின் ஜெயலலிதா வாங்கிய சம்பளத்திற்கு கவர்னர் கொஞ்சமாவது வேலை செய்யட்டும் என்று அமைச்சர்களை மாற்றி பதவி ஏற்பு விழா செய்வார். ஆனால் இப்ப எல்லாம் முதல்வருக்கு உடம்பு சரியில்லைன்னா ஹாஸ்பிடலுக்கு சென்று விசாரிக்கனும் செத்தா மலர் வளையம் வைக்கனும் மாதம் ஒரு தடவை புதிய முதல்வர் பதவி ஏற்பு செய்ய போகனும் பாவம் வேலை அதிகரிச்ச அளவிற்கு அவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கவில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. எல்லா பதில்களுக்கும்
    முழு மதிப்பெண்கள்..

    ReplyDelete
  2. லண்டன் மருத்துவர் கூடவா பொய் சொல்லுவார்?

    ReplyDelete
  3. இரண்டாவது பதில் 'நச்' என்று சொல்லமாட்டேன் தமிழரே.... அதுதானே உண்மை

    ReplyDelete
  4. ஹஹஹ் எல்லாமே சூப்பர் ஆனா ஒரு டவுட்..மேலை நாட்டு மருத்துவர்கள் பற்றி நாம் அறிவோம் ஓரளவேனும்....லண்டன் மருத்துவர் சொல்லுவது பொய் என்றால் எதற்காக அதுவும் வேறு நாட்டைச் சேர்ந்தவர் இங்கு பொய் சொல்ல வேண்டியதன் கட்டாயம் அல்லது பயம்? ஏன்? அது கொஞ்சம் இடிக்குதுதான்...

    கீதா

    ReplyDelete
  5. ஹாஹா... கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் அட்டகாசம்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.