Sunday, February 12, 2017

இப்படி இருந்தால் நீயும் மதுரைத்தமிழனே

தமிழக அரசியலையே எவ்வளவு நாள்தான் பேசிக்கொண்டிருப்பது அதனால்தான் இந்த பதிவு

இன்று ஒரு பெண்ணை பார்த்தேன் அவள் உடம்பு ட 90 சதவிகிதம் வெளியே தெரியுமாறு உடை அணிந்து வந்தாள் ஆனால் என் கண் என்னவோ அவர் மறைத்த உடலின் 10 சதவிகித உடம்பை மட்டும் கவனிக்க தோன்றியது, தப்பா நினைச்சுகாதீங்க அவள் என்னா மாதிரியான உடை அணிந்து இருக்கிறாள் என்ன பிராண்ட் உடை அனிந்திருக்கிறாள் என்பதை மட்டுமே பார்த்தேன்



மனைவி  திடிரென்று நம் முன்னால் வந்து நின்று உங்ககிட்ட ஒன்று கேட்கனும் என்று சொன்னால் ......நம் மனதில் நாம் செஞ்ச தப்பு எல்லாம் புல்லட் ரயில் மாதிரி வேகமாக நம் மனக்கண்ணில் வந்து செல்லும்


சிரிப்பது உடம்பிற்கு நல்லது என்று என் மனைவி சொன்னதால் சிரிச்சேணுங்க ஆனால் பெண்ணை பார்த்து சிரிக்க கூடாதுன்னு என் மனைவி சொல்லலைங்க  இப்ப பாருங்க உடல் சரியில்லாமல் போய்விட்டது


என் மனைவு சும்மாபேசிகிட்டு இருக்கும் போது என்னங்க நான் செத்துட்டா என் கல்லறைக்கு வருஷத்திற்கு ஒரு முறையாவது வந்து பார்ப்பீங்களா என்று கேட்டாள்

அதற்கு நான் உன் கல்லறைய ஒரு பாரில் கட்டினால் வார வாரம் வந்து கண்டிப்பாக பார்ப்பேன் என்று சொன்னேன் அவ்வளவுதாங்க என்னை கல்லைறையில் போடுவற்கு விரட்டிக் கொண்டிருக்கிறாள்


என் மனைவி என்னங்க அப்படியே  எனக்கு இளமை மீண்டும் திரும்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும் குழந்தைகளாகி நன்றாக எந்த கவலை இல்லாமல் விளையாண்டு படித்து சந்தோஷமாக இருக்காலாமே அது போல உங்களுக்கும் இருக்க ஆசையா என்றாள்


நான் அதற்கு கொஞ்சம் யோசித்து இல்லை என்றேன்  அதற்கு அவள் ஏன் என்று கேட்க நாம் குழந்தையானால் மீண்டும் படிக்கனும் அப்படி படிக்கும் போது இங்கிலிஷ்  மற்றும் மேத் டீச்சர்ஸ் கிட்டே தினமும் அடிவாங்கியதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது அதனால் வேண்டாவே வேண்டாம் என்றேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. யோவ் தில்லு தமிழா.. எப் பையா வந்து எங்கள காப்பாத்த போற

    ReplyDelete
    Replies
    1. முதல்ல எங்க வீட்டம்மாவிடம் இருந்து என்னை காப்பாதுங்கய்யா அதுக்கு அப்புறம் மற்றவங்களை நான் காப்பாற்ருவதை பற்றி யோசிக்கலாம்

      Delete
  2. ஹஹஹஹஹ்ஹ!! அதெல்லாம் சரி துளசிக்கு என்ன இந்த வயசிலும் கூலிங்க்ளாஸ்..(கருணாநிதி சாயல் மாதிரி இருக்குதே!!)...உமக்கு மட்டும் குல்லா.....ஹிஹிஹிஹி...!!

    செம ஃபோட்டோஷாப்!!!

    ReplyDelete
    Replies

    1. துளசி சார் அப்பவே ஹீரோ மாதிரி இருப்பதனால் அவருக்கு கூலிங்கிளாஸ்

      Delete
  3. 70 வருடங்களுக்கு அப்புறமாவா? இல்ல 70 வயசுக்கு அப்புறமாவா? கரெக்ட்டா சொல்லனும்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மிகவும் வயதாகிவிட்டதால் இந்த இரு சிறு குழந்தைகள் பேசிக் கொண்டது புரியவில்லை போல ....இந்த இரண்டு அப்பாவி குழந்தைகளும் ஒரு வயதில் பேசிக் கொண்டது இது. அதனால் 70 வருடம் என்றாலும் 70 வயது என்றாலும் சரிதான்

      Delete
    2. குறிஞ்சிப் பூவை 12 வருடங்களுக்கு ஒரு முறையாவது பார்த்துவிடலாம் போல இருக்குது ஆனால் உங்களை பார்பது அவ்வளவு எளிதாக இல்லை போல இருக்கு

      Delete
    3. நான் அப்பதான் பொறந்து 2 நாளாச்சா அதான் நீங்க பேசிக்கிட்டது புரியலை..

      Delete
    4. நீங்க ரொம்ப ஸ்மார்ட்டான குழந்தையாக இருக்கிறீங்க அதனாலதான் என் தளம் வந்து பதிவுகளை படிக்கும் திறமை பெற்று இருக்கிறீர்கள்...ஆங்க் ஒன்று சொல்ல மறந்துட்டேன் நாங்கள் இருவரும் பேசியது உங்களுக்கு புரியவில்லை என்று சொல்லியிருக்கீங்க உங்களுக்கு ஏன் புரியவில்லை என்பது எனக்கு தெரிந்துவிட்டது. அதற்கு காரணம் உங்களுக்கு காது சரியாக கேட்கவில்லை போலிருக்கிறது ஹீஹீ

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.