உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, February 8, 2017

தமிழக நிலவரமும் சமுகவலைதளத்தில் வந்த கருத்தும்

தமிழக நிலவரமும் சமுகவலைதளத்தில் வந்த கருத்தும்சசிகலா மோசமானவர்தான் ஆனால் அதே நேரத்தில் பன்னிர் செல்வம் உத்தமர் இல்லைதான். தமிழக மக்களே பன்னிரை மகாத்மா ஆக்கிவிடாதீர்கள்பன்னீரை மகாத்தமா ஆக்கும் ஜனங்கள் ஜெயலலிதாவை தெரசாவா ஆக்கிவிடுவார்கள்


பதவி போகும் போது மகாத்மாவாக மாற முயற்சிக்கிறார் பன்னீர் செல்வம், பதவி ஆசை யாரைவிட்டது. முதல்வர் பதவிக்கு ஆபத்து இல்லை என்றிருந்தால் சின்னம்மாதான் எங்கம்மா என்று சொல்லி காலில் விழுந்து இருப்பார்


அல்குவைதா திவிரவாதி தலைவர்கள் ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மூளைச் சலவை செய்து மனித வெடிகுண்டுகளை தயார் செய்து அனுப்புவார்கள் அவர்களை போலவே பாஜக தலைவர்கள் பன்னிர் செல்வத்தை தேர்ந்தெடுத்து அவருக்கு மூளை சலவை செய்து நேற்று இரவு வெடிக்க செய்து இருக்கிறார்கள்

சசி மோசம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் பன்னிர் நான் நல்லவன் என்று வேஷம் போடுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை சசிகலா தங்கள் உறவினர்களுடன் தமிழகத்தை சூறையாட முயற்சித்தால் பன்னீர் தம் நண்பர்களுடனும் காவி வேஷ்டிகார்களுடம் சூறையாட முயற்சிக்கிறார். காவிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று மக்கள் அடித்து விரட்டி இருக்கிறார்கள் அதை மறைமுகமாக கொண்டுவர இவட் உறுதுணையாக இருக்கிறார்


ஜெயலலிதா ஹாஸ்பிடலில் இருந்த போது அவர் மனசாட்சி எங்கே போனது இறந்த பின் மனசாட்சி எங்கே போனது பதவி ஏற்ற போது மனசாட்சி எங்கே போனது அப்போது எல்லாம் வராத மனசாட்சி பதவி பறி போகிற போதுமட்டும்தான் வருகிறதா? நல்ல யோசிங்க


நாம் எல்லாம் யோக்கியமானவர்கள் என்பது முக்கியமல்ல காரணம் நாம் தமிழகத்தை ஆள்வது இல்லை ஆனால் தலைவர் யோக்கியமானவர்களாக இருப்பது அவசியம் அப்ப்டி தலைவர் இருக்கையில் அவர் நம்மையும் யோக்கியமானவர்களாக ஆக்கலாம்ஹோட்டலில் ஆட்டு மந்தைகள் போல அடைத்து அரஸ்ட் செய்து வைத்திருக்கும் எம்.எல்.ஏக்களை சுதந்திரமாக  செயல்பட அனுமதிக்க வேண்டும் இப்படி அடைத்து வைத்து தங்கள் பலத்தை காண்பிப்பதை ஆளுநர் ஏற்றுக் கொள்ள கூடாது


யாரவது நல்ல திவிர வாதிகள் இருக்கிறார்களா அப்படி இருந்தால் தமிழக எம்.எல்.ஏக்கள் கூட்டமாக அடைத்து வைத்து செல்லும் பஸ்ஸை வெடிக்க செய்தால் தமிழகம் நல்ல பாதையில் செல்ல வழி பிறக்கும்.


தமிழக எம்.எல்.ஏக்கள் இவர்தான் முதல்வராக வர வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து ஆதரவு தரும் போது அப்படி ஆதரவு தரும் அனைவரிடம் இருந்து ரத்த பரிசோதனை செய்து அவர்கள் உடம்பில் ஆல்கஹால் அளவு அதிகம் இருக்கும் என்றால் அப்படி இருப்பவரின் வாக்கை கருத்தில் எடுக்க கூடாது குடிபோதையில்  இருப்பவர்கள் நியாயமாக சிந்திக்க முடியாதுதானே?

பன்னீர் ஒன்றும் புத்தரோ புனிதரோ அல்ல...இது நாள் வரை நடந்த அத்தனைக்கும் துணை போனவர் தான்..பன்னீர்
அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி" ஏலே இங்க இப்ப காலை நேரம் நான் வேலைக்கு போறேன். நான் வேலைக்கு செல்லும்  அல்லது தூங்க செல்லும் நேரம்  பார்த்து தமிழகத்தில் திடுக்கிடும் செய்திகள் பல வருகின்றன. அப்படி வந்தால்  நான் போராளியாக உடனடியாக களத்தில் இறங்க முடிவதில்லை அதனால் நான் சும்மா இருக்கும் நேரம் பார்த்து திடுக்கிடும் அறிவிப்புகளை வெளியிட தமிழக தலைவர்களை வேண்டிக் கொள்கிறேன் ஹீஹீ

9 comments :

 1. அனைத்தும் சரியான விடயம்

  ReplyDelete
 2. பேசாம நான் முதலமைச்சர் ஆகிடவா?!

  ReplyDelete
 3. சில காலத்தை Fast forward செய்து விட்டால் போதும் என்று தோன்றுகிறது!

  :))

  ReplyDelete
 4. கருத்து சரிதான்
  ஆயினும் இரண்டு மோசமானவர்களில்
  சுமார் மோசமானவரை ஆதரிப்பதுதானே
  புத்திசாலித்தனம்

  ReplyDelete
 5. மிகச்சரியான கருத்து தோழர். இதே காரணத்துக்காகத்மான் சசிகலாவுக்கு அதரவுகொடுக்கலாம்ன்னு பாத்தா . இரண்டுநாளா சுசா, சசிகலாவுக்கு வக்காலத்து வாங்குவத பாத்து வெறுத்துப்போச்சு
  சு

  ReplyDelete
 6. தவிர்க்கப்பட முடியாதவைகள் அனுபவித்துதானே தீரவேண்டும்

  ReplyDelete
 7. ஹும் என்னத்த சொல்ல..நான் வாழ்ந்த, நேசிக்கும் தமிழ்நாட்டிற்கு இப்படி ஒரு நிலைமை....கேரளால ஒரு பைஜுவோ பிஜுவோ ஒருத்தன் இங்க இப்ப பார் எல்லாம் மூடினதுனால அவன் தமிழ்நாட்டு டாஸ்மாக் ஏதோ தொடர்பு வைச்சுருக்கான் போல. அவன் சின்னம்மா (இங்க யாரும் சின்னம்மானு சொல்றதே கிடையாது. பேருதான் அம்மானும் சொன்னது கிடையாது ஜெயலலிதானுதான்..) சின்னம்மானு இங்க சவுண்ட் விட நல்லா தட்டி வைச்சுட்டான...இங்க சின்னமானு சொல்லி ஏதாவது அந்த கனெக்ஷன இங்க உள்ளாற கொண்டுவந்தனா இருக்கு, வாயப பொத்திக்கிட்டு கெட நு தட்டி வைச்சுட்டாங்க...இங்க அவங்க ஆட்கள கொண்டு வர பார்த்தான் கட்சினு...நல்லா மிரட்டி வைச்சுருக்காங்க..

  கீதா: இப்ப இருக்கறதுல சசி வரக்கூடாதுனா இருக்கறது பன்னீருதான்...இல்லைனா தேர்தல் கொண்டு வர வேண்டியதுதான்...கஷ்டம்தான் இருந்தாலும் வேற வழி? எப்படியேனும் நல்லது நடந்தா சரி...சரி நல்லதுனு தமிழ்நாட்டுல இருக்கானு தேடிட்டு வரேன்...

  ReplyDelete
 8. அரசியல் கேவலமானது என்பது பலருடைய எண்ணம். இப்போது தமிழகத்தில் நடப்பது அந்த எண்ணங்களை உறுதி செய்கிறது.....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog