Sunday, February 19, 2017

தமிழக மக்கள் வெண்டைக்காயை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?
தமிழக மக்கள் வெண்டைக்காயை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?

தமிழக மக்கள் வெண்டைக்காய் அதிக அளவில் சாப்பிடும் நேரம் வந்துடுச்சு காரணம் வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் சக்தி அதிகரிக்கும் என்று நம் முன்னோர்கள் சொன்னதாக பல செய்திகள் கேள்விபட்டு இருக்கிறேன் அதுமட்டுல்ல புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு இதை இப்ப சொல்லக் காரணம் என்னவென்றால் சசிகலா குடும்பம் ஆட்சிக்கு வந்துடுச்சு அவங்களை அகற்றிவிட்டு ஸ்டாலினை ஆட்சியில் அமர்த்த வேண்டுமென்று சில உடன் பிறப்புக்கள் இணையத்தில் கூவ ஆரம்பிச்சு இருக்கிறார்கள் இதை பார்த்த சிலர் ஆமாம் ஸ்டாலிந்தான் நல்லவர் என ஆமாம் சாமி போட ஆரம்பிக்கிறார்கள்.


அவர்களுக்கு ஒன்றை ஞாபகபடுத்தவிரும்புகிறேன் இந்த சசிகலா குடும்பத்திற்கு சற்றும் சளைத்தது அல்ல கலைஞர் குடும்பம்.

ஊழல்... அராஜகம்... பழிவாங்கல்... என்பதற்கான முழு உதாரணங்களும் ஜெயலலிதா ஆட்சியில்தான் மக்களுக்கு முழுமையாக உணர்த்தப்பட்டது... மக்களுக்கான எந்த திட்டங்களும் செயல்படுத்தபடாத நிலையில் அம்மையார் அவர்களின் தோழியின் குடும்பத்தார்களின் பிடியில் தமிழகம் முழுமையாக கொண்டு செல்லப்பட்டது... தோழியின் குடும்பதில் இருந்தே திடீரென ஒரு வளர்ப்புமகன் உதித்தார் மக்களின் ஒருமித்த வெறுப்புணர்வும் அம்மையாரின் பக்கம் திரும்பியது அது மட்டுமில்லாது அதிமுகவை சார்ந்த அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கடைபிடித்த அராஜகம் மக்களை ஆட்சி மாற்றத்திற்கான நிலைக்கு தள்ளியதுமக்களின் ஒருமித்த வெறுப்புணர்வும் அம்மையாரின் பக்கம் திரும்பியது அது மட்டுமில்லாது அதிமுகவை சார்ந்த அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கடைபிடித்த அராஜகம் மக்களை ஆட்சி மாற்றத்திற்கான நிலைக்கு தள்ளியது...

கலைஞர்  மீண்டும் முதல்வராக்கப்பட்டார்... வரலாறுகாணாத இலவசங்கள் வாரி இறைக்கப்பட்டது மக்களின் கவனத்தை இலவசங்களின்பால் திருப்பிவிட்டு ஊழல் வரலாற்றை திமுக விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்ந்தது... காவல்நிலையங்கள் திமுகவினரின் கட்டபஞ்சாயத்து கூடங்கலானது... மக்களின் சராசரியான இயல்பு வாழ்க்கை திமுக ரௌடிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது... சல்லிகாசு இல்லாமல் இருந்த கிளை நிர்வாகிகளமுதல் கவுன்சிலர்கள் வரை ஸ்கார்பியோக்களில் வலம்வந்தார்கள்... ஊழல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல உலக நாடுகளே ஆச்சரியப்படும் வகையில் திமுகவின் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆ.ராசா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீடு ஊழலில் கைது செய்யப்பட்டனர் .. இலைமறை காயாக இருந்து வந்த திமுகவின் குடும்ப அரசியல் இந்த ஆட்சிகாலத்தில் வெளிபடையானது... அனைத்துதுறைகளிலும் திமுகவின் கலைஞரின் குடும்பம் கால்பதித்தது... பல தொழில் நிறுவனங்கள் இதனால் மிகப்பெரிய சரிவை சந்தித்தது... அத்துடன் மட்டுமில்லாது ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது மத்திய அரசில் அங்கம் வகித்தும் தமிழர்களின் உயிரை பற்றி கவலைகொள்ளாத திமுக ஆட்சியை மக்கள் ரசிக்கவில்லை... கிராமப்புற காப்பிகடைகளில் இருந்து நகர்புற கணிணித் துறைவரை கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் பெரியளவில் தாக்கத்தை விதைத்தது... அதன் விளைவு. மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம்  ஆனால் என்ன ஆட்சிகள் மாறினாலும் மக்களின் நிலையில் எவ்விதமான மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை..


திமுக அதிமுக என்று மாறி மாறி ஆட்சியில் அமரும் இவ்விரண்டு பிரதான திராவிட கட்சிகளுமே மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற தவறிவிட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாக இருந்தாலும் மக்களும் நிகழ்காலத்தில் நிகழும் அநியாயங்களை மட்டும் நினைவில் கொண்டு கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிடுகிறார்கள்


அதனால்தான் வெண்டைக்காயை அதிகம் தமிழக மக்கள் சாப்பிட்டு வந்தால் பழைய நிகழ்வுகள் மறக்காது. விரைவில் தேர்தல் வந்தால் சசிகலா குடும்பத்தை மட்டுமல்ல கலைஞரின் குடும்ப செயல்களையும் ஞாபகம் வைத்து வேறு மாற்று தலைவர்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்கலாம்

மக்கள் மாற்றத்தை மட்டுமல்ல நல்லாட்சியையும் விரும்புகிறார்கள் என்பதை இவ்விரண்டு திராவிட கட்சிகளுமே உணரவில்லை அல்லது உணர மறுக்கிறார்கள்... அல்லது உணராததுபோல நடிக்கிறார்கள்... அதனால் தமிழக மக்கள் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டு வந்தால் வரும் தேர்தல்களில் மாற்றத்தை கொண்டுவரலாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :

அப்புறம் என்னய்யா... த ஷோ இஸ் ஓவர். அதுனால இனிமேலும் ப்ரேக்கிங்க் நீயூஸிற்க்காக எதிர்பார்த்து கொண்டிருக்காமல் அவங்க அவங்க பொழைப்பை பாரக்க போங்கப்பூ இல்லைன்னா நீங்கசோத்துக்கு லாட்டரி அடிச்சு உங்க குடும்ப வாழ்வில் ப்ரேக்கிங்க் ஏற்பட்டு அது நீயூஸாக மாறிவிடும்


இங்கு வரும் பதிவுகளோ கருத்துபடங்களோ, மீம்ஸ்களோ எந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு வருவதல்ல. தமிழகத்தில் இருந்து அமெரிக்க சென்று செட்டில் ஆகிவிட்ட ஒரு சராசரி தமிழனின் ஒரு பார்வையே இங்கு பதிவுகளாகவும் கருத்துக்களாகவும் வருகிறது என் தளத்தில் வரும் பதிவுகள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாரந்து ஒரு தலைபட்சமாக வருவதில்லை. எனது பார்வைகளும் கருத்துகளும் மாறுதல்கலுக்கு உட்பட்டவை இப்படி சொல்லக் காரணம் இங்கு நான் இடும் பதிவுகள் நான் பார்க்கும் தமிழ் டிவிகள் படிக்கும் தமிழ் நாளிதழ்கள் மற்றும் சமுக வலைத்தளங்களில் வரும் செய்திகளை அடிப்படையாக கொண்டு பொது பார்வையில் எழுதப்படுகின்றன. அதனால் நான் இடும் கருத்துகளும் அன்றைய நிகழ்கால சூழ்னிலைக்கு ஏற்று மாறுபடலாம். மேலும் நான் பதிவிட்ட பின் வரும் கருத்துக்களால் நான் இட்டதில் ஏதும் தவறு இருப்பதாக தெரிய அல்லது புரிய வந்தால் மாற்றிக் கொள்வேன்

14 comments:

  1. வெண்டக்காயெல்லாம் மூளை இருக்குறவங்களுக்கு.. நாங்க எங்க போக அதச்சொல்லுமையா..

    ReplyDelete
    Replies
    1. ஹீஹி நீங்க எங்க போகனும் என்பதை நான் எப்படி சொல்ல முடியும் அதை நீங்க மூளையுள்ளவங்கிட்டதானே கேட்கனும்

      Delete
  2. இதைப் படித்து வெண்டைக்காய் கொடுக்கும் ஊழல் நடந்தாலும் நடக்கலாம். :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா நடந்தாலும் நடக்கலாம்

      Delete
  3. அதிமுகவின் இரண்டு அணிகளும் அடித்துக் கொண்டிருக்கும்போது நடுவில் தேவையே இல்லாமல் இவர்கள் ஏன் இப்படி ஒரு கலவரத்தை உண்டுபண்ணினார்கள் என்பது வியப்பு. சிரிப்பு. பயங்கர டிராமா.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் மக்களிடம் பெற்ற நல்ல பெயரை மண் குடம் போல போட்டு உடைத்து இருக்கிறார்

      Delete
  4. இனிமேல் ஒவ்வொரு குடும்பஅட்டைக்கும் ஒரு கிலோவெண்டைக்காய் இலவசம்! முதல்வ

    /

    ReplyDelete
    Replies
    1. வெண்டைக்காயை எந்த முதல்வரும் இலவசமாய் தரமாட்டார்கள் அப்படி தந்தால் அது அவர்களுக்கு ஆபத்துதானே. அதுமட்டுமல்ல இந்த பதிவை எந்த முதல்வரும்படித்தால் வெண்டைக்காய் பயிரிட தடை விதித்தாலும் விதிக்கலாம்

      Delete
  5. கூடிய சீக்கிரத்தில் ப்ரேக்கிங் நியூஸ்க்கு மீண்டும் குறை வைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. எடப்பாடியும் ஒரு நாள் பன்னீர் செல்வமாக மாறி சமாதியில் தியானம் செய்யும் நாள் வரும்

      Delete
  6. நேர்மையான ஒரு தலைவர் கிடைக்கும் வரை ,மக்களுக்கு வெண்டைக்காயை தவிர வேற வழியில்லை :)

    ReplyDelete
    Replies
    1. நான் நேர்மையான ஆள் வேண்டுமானால் தமிழகத்திற்கு தலைவன் ஆக நான் ரெடி ஆனால் நேர்மைக்கு விலை அதிகம் அதனால் எவ்வளவு பணம் என் அக்கவுண்டில் போட முடியும் என்று சொன்னால் நான் முடிவு எடுக்க எளிதாக இருக்கும் எப்படி வசதி?

      Delete
  7. நியாயமா? மக்களை வெண்டைக்காயை அதிகம் சாப்பிடச் சொல்வது. ரொம்ப சாப்பிட்டாச்சுன்னா, எதையும் மறக்க முடியாது. அப்புறம் எல்லா ஓட்டும் 'நோட்டாக்குத்தான்'.

    ஆனாலும், தமிழக வாக்காளர்கள், நல்ல candidatesஐ படு கேவலமாகத் தோற்கடிப்பதில் மகிழ்ச்சி கொள்ளுபவர்கள். நியாயமா, ஜாஸ்தி பணம் தந்தவர்களுக்கு வாக்களிப்பவர்கள். அப்புறம் எப்படி மாற்றம் வரும்?

    'நேர்மையான தலைவர்' - அவர் வந்து என்ன செய்யப்போகிறார்? எலெக்ஷன்ல நின்னு கேவலமாத் தோக்கறதுக்கா?

    ReplyDelete
    Replies
    1. மிக மிக சரியாக சொல்லி இருக்கீங்க

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.