உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 26, 2017

மோடியும் ட்விட்டர் லேடியும்
avargal unmaigal
மோடியும் ட்விட்டர் லேடியும்


ஏதோ ட்விட்டர்ல ஒரு அம்மா( shilpi tewari ) மோடிகிட்ட ஈஷால உங்களுக்கு போத்துன அந்த சால்வையை எனக்கு கொடுங்கன்னு கேட்டதுக்கு கையெழுத்தெல்லாம் போட்டு அந்தம்மாவுக்கே அனுப்பி வச்சிட்டாராம்ல.சாதாரணமான ஒரு ஆள் ட்விட்டர்ல கேட்டதுக்கு பிரதமர் இப்படி செவிசாய்ப்பார்னு நினைக்கவே இல்லன்னு அந்தம்மா சந்தோசத்துல ட்விட் பண்ணிருக்காங்களாம்
Saturday, February 25, 2017

ஆதி யோகி சிவன் சிலை திறப்பும் அதன்விளைவாக ஏற்பட்ட 'கலக்கல்' சிந்தனைகளும்ஆதி யோகி சிவன் சிலை திறப்பும் அதன்விளைவாக  ஏற்பட்ட 'கலக்கல்' சிந்தனைகளும்

இறைவன் பிரமாண்டமான உலகத்தை படைத்தான் என்ற நிலையில் இருந்து இறைவனை ஜக்கி வாசு பிரமாண்டமாக படைத்திருக்கிறார் என்று வரலாறு சொல்லும்

தமிழகத்தில் மத சம்பந்தமான பிஸினஸ் ஒன்றை ஆரமபிக்கலாம் என்று இருக்கிறேன் இன்னும் அழிக்கபடாத காடுகள் வளங்கள் இன்னும் மிச்சம் மீதி இருந்தால் எனக்கு தகவல் தரவும்.

நஷ்டம் அடையாமல் மிக அதிக அளவு லாபம் சம்பாதிக்க கூடிய ஒரு பிஸினஸ் மத சமபந்தப்பட்ட பிஸினஸ்தான் இந்த பிஸினஸிற்கு மட்டும் சட்ட திட்டங்களை பின்பட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை.

Friday, February 24, 2017

மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைக்க.....?மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைக்க.....?

மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் அவர் ஒன்றும் புனிதர் அல்ல ஆதி யோகி சிவன் என்ற கடவுள் சிலையை திறந்து வைக்க.....

#112 feet tall#Adiyogi#Coimbatore#Hindu god#India#Isha foundation#Lord shiva#Maha shivratri#Maha yoga yagna#Narendra modi#Newstracker#Sadhguru jaggi vasudev#Shiva#Tamil nadu #avargal #unmaigal

ஆண்கள் அழவே கூடாது என்று எதற்கு சொல்லுகிறார்கள் தெரியுமா ?
ஆண்கள் அழவே கூடாது என்று எதற்கு சொல்லுகிறார்கள் தெரியுமா ?

ஆண்கள் அழுதால், அதற்கு காரணம் பெண்கள் என்று தெரிந்துவிடுமாம். அப்புறம் பெண்கள் கொடுமைக்காரி என்று உலகிற்கு தெரிந்துவிடுமாதலால் பெண்களால் செய்யப்பட்ட சதி ஏற்பாடுதான் இந்த ஆண்கள் அழக் கூடாது என்பது. ஆனால் பெண்கள் அழலாமாம் காரணம் பெண்கள் அழுதால் அதற்கு காரணம் ஆண்கள்தான் என்று எளிதில் குற்றம் சொல்லி கொடுமைக்கார ஆக்கிவிடலாமே

Wednesday, February 22, 2017

பெண்புத்தி பின் புத்தி vs ஆண் புத்தி முன் புத்தி


பெண்புத்தி பின் புத்தி vs  ஆண் புத்தி முன் புத்தி

Tuesday, February 21, 2017

என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்

'என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்

என்னைப்பற்றி நான் என்று வாரம் தோறும் வலைத்தளங்களில் எழுதும் பதிவர்களைப் பற்றி அந்ததெந்த பதிவர்களிடம் எழுத சொல்லி அதை கேட்டு வாங்கி நமது பதிவுலக நண்பர் மனசு.குமார் என்பவர் தனது தளத்தில் பதிவுகள் பதிந்து வருகிறார்.இவர் மிக சிறந்த பதிவ்ர்களில் ஒருவர். கதை கவிதை சமுகப் பிரச்சனை இப்படி பல பதிவுகளை மிக தரத்துடன் பகிரந்து வருகிறார். காசு கொடுத்து வாங்கும் வார இதழ்களில் நீங்கள் பார்ப்பது குப்பைகளை ஆனால் இவர் தளத்தில்  சுத்த தங்கத்திற்கு இணையாக பதிவுகள் வருகின்றன. பெண்கள் தைரியமாக இவர் தளம் சென்று படிக்கலாம்


இந்த வாரம் என்னை பற்றி எழுத சொல்லி அதை வாங்கி 'என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்  என்று பதிந்து இருக்கிறார்.

Monday, February 20, 2017

சட்டமன்றத்தில் எடப்பாடி VS ஸ்டாலின் ப்ளஸ் இது என்னாங்கடா நியாயம்...??


சட்டமன்றத்தில் எடப்பாடி VS ஸ்டாலின்  ப்ளஸ் இது என்னாங்கடா நியாயம்...??ஜெயலலிதா தன் வாழ்வில் செய்த ஒரு நல்ல காரியம் அவர் சாவின் மூலம் தமிழக மக்களை அதிலும் குறிப்பாக பெண்களையும் அரசியல் பற்றி அறிந்து பேச செய்ததுதான்

மேலை நாடுகளை போலவே இந்தியாவும் வளர்கிறது வக்கிரங்களில்.#ஹாசினி


122 எம்.எல்,ஏக்களை குற்றம் சொல்லுவதற்கு முன் சற்று யோசிங்களேன்

122 எம்.எல்,ஏக்களை குற்றம் சொல்லுவதற்கு முன் சற்று யோசிங்களேன்

எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை துரோகம் செய்யவரவில்லை. அவர்கள் எம்.எல்.ஏக்களாக ஆனதற்கு சசிகலாதான் காரணம்  சசிகலா வாய்ப்புக்கள் கொடுத்தால் மட்டுமே அவர்கள் வேட்பாளர்காக ஆக முடிந்தது மக்கள் அந்த எம்.எல்.ஏக்கள் நல்லவரா கெட்டவரா என்று நினைத்து ஒட்டுப் போடவில்லை அவர்கள் ஜெயலலிதாவிற்காக மட்டுமே ஒட்டு போட்டார்கள் அதனால் மக்களுக்கு இந்த எம்.எல்.ஏக்களை தட்டிக் கேட்க அதிகாரம் இல்லை. எம்.எல்.ஏக்கள் நன்றி உணர்வோடு தங்களுக்கு வாய்ப்பு அளித்த  சசிகலாவிற்கு நன்றிக் கடன் செலுத்தி இருக்கிறார்கள். இதுதான் உண்மை நிலை.

Sunday, February 19, 2017

தமிழக மக்கள் வெண்டைக்காயை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?

தமிழக மக்கள் வெண்டைக்காயை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?
தமிழக மக்கள் வெண்டைக்காயை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?

தமிழக மக்கள் வெண்டைக்காய் அதிக அளவில் சாப்பிடும் நேரம் வந்துடுச்சு காரணம் வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் சக்தி அதிகரிக்கும் என்று நம் முன்னோர்கள் சொன்னதாக பல செய்திகள் கேள்விபட்டு இருக்கிறேன் அதுமட்டுல்ல புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு இதை இப்ப சொல்லக் காரணம் என்னவென்றால் சசிகலா குடும்பம் ஆட்சிக்கு வந்துடுச்சு அவங்களை அகற்றிவிட்டு ஸ்டாலினை ஆட்சியில் அமர்த்த வேண்டுமென்று சில உடன் பிறப்புக்கள் இணையத்தில் கூவ ஆரம்பிச்சு இருக்கிறார்கள் இதை பார்த்த சிலர் ஆமாம் ஸ்டாலிந்தான் நல்லவர் என ஆமாம் சாமி போட ஆரம்பிக்கிறார்கள்.

Saturday, February 18, 2017

ஸ்டாலின் மானம் காக்க தவறிய திமுகவின் உடன்பிறப்புகள்

ஸ்டாலின் மானம் காக்க தவறிய திமுகவின் உடன்பிறப்புகள்

தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிந்த போது  தனது சட்டையை கழற்றி தளபதியின் மானம் காக்க ஒரு திமுகவினர் கூட முயற்ச்சிக்காமல் சிங்கத்தை தெருதெருவாக அலையவிட்டது மிக மோசம ஏன் கவர்னரை சந்திக்க சென்ற போது கூட அவரின் மானம் காக்க ஒரு சட்டையை தராமல இருந்தது செயல் மிகவும் வருந்ததக்கது, ஏன் திமுக உடன்பிறப்புக்கள் இப்படி சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்

நான் மட்டும் அங்கே இருந்து இருந்திருந்தால் என் சட்டையை கழற்றி தந்து ஸ்டாலினின் மானம் காத்து இருப்பேன்..

தலைவர் பக்கத்தில் எப்போதும் அருகில் நிற்பது துரைமுருகந்தான் அவர் ஓரு வேளை ஸ்டாலின் சட்டையை ஏதோ கடுப்பில் கிழித்து விட்டாரோ என்னவோ


சட்டையை கிழித்துவர்களுக்கு அவரின் வேட்டியை உருவிவிட முயற்சிக்காத போதே அது தன் ஆட்களால் நடத்திய நாடகம் போலத்தான் இருக்கிறது ஸ்டாலினுக்கு கலைஞரை போல நன்றாக நாடகமாட தெரியவில்லை

அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி :ஹேய் மேலே உள்ள படத்தை பார்த்து சிங்கம் 4 க்கான சூட்டிங்க் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்

Friday, February 17, 2017

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கும் திமுகவினரின் பில்டப்பும்

ஜெயலலிதாவின்  சொத்து குவிப்பு வழக்கும் திமுகவினரின் பில்டப்பும்

ஜெயலலிதாவின்  சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை கேட்டு அது தங்களின் வெற்றியாக கொண்டாடி பெருமிதம் கொள்கின்றனர் திமுகவினர்.

என்னவோ திமுக இதை பொது நலனுக்காகவும் மோசடியை வெளிப்படுத்துவதற்காகவும் செய்தது போல மிகவும் பில்டப் பண்ணுவதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.

இப்படி ஜெயலலிதாவின்  சொத்து குவிப்பு வழக்கிற்காக போராடிய  அன்பழகன் தன் கட்சியை சார்ந்தவர்கள் ஈடுபட்டு இருந்த 2 ஜி வழக்கிலும் இப்படி போராடாமல் அமைதி காப்பது எதனால் 2ஜி வழக்கு பொது நல வழக்கு இல்லையா அல்லது அதில் மோசடிதான் ஏதும் இல்லையா . அப்படிதான் என்றால் அதை நிறுபித்து தங்கள் கட்சியினர் மீது இருக்கும் களங்கத்தை துடைப்பதுதானே கட்சியின் பொது செயலாளருக்கு கடமை...

Thursday, February 16, 2017

கலாச்சாரம் காக்க போராடிய இளைஞர்களும் பொதுமக்களும் இப்போது எங்கே ?


கலாச்சாரம் காக்க போராடிய இளைஞர்களும் பொதுமக்களும் இப்போது எங்கே ?


ஜல்லிக்கட்டுக்கு தடை என்றதும் நமது கலாச்சாரத்திற்கு ஏற்ப்பட்ட தடை என்று அரசாங்கத்தோடு மல்லுக்கட்டி போராடி அந்த தடையை நீக்கி ஜல்லிகட்டை நடத்த வழி செய்தது தமிழக இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும்தான். நமது கலாச்சாரம் காக்க இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடந்தது. உலகம் அதை பார்த்து பெருமை அடைந்ததுமட்டுமல்ல ஆதரவு கொடுத்து போற்றியும் புகழ்ந்தது.

ஜெயலலிதாவிற்கு சசிகலா செய்த துரோகம் மிக சரியே

ஜெயலலிதாவிற்கு சசிகலா செய்த துரோகம் மிக சரியேதன்னை அம்மா என்று நம்பிய மக்களுக்கு ஏதும் செய்யாமல் துரோகம் செய்தார் ஜெயலலிதா.  அதனை அறிந்த மக்கள் என்ன செய்வது என்று அறியாது  தயங்கி நின்ற போது  தெய்வம் ஜெயலலிதாவிற்கு சசிகலா என்ற தோழியை அனுப்பி வைத்தது. கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் சாவான் என்பது போல நம்பியவர்களுக்கு துரோகம் செய்த ஜெயலலிதாவிற்கு அவர் நம்பியவரே கூட இருந்தே குழி பறித்தார்.


Wednesday, February 15, 2017

நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும்

நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட  வேண்டும்


அளவீற்கும் அதிக மாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா & குடும்பதினர் மீது வழக்கு பதிந்து வழககு விசாரணை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு குற்றவாளி என்று குன்கா அவர்கள் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பு தவறனாது என்று அதை மேல் முறையீடு செய்த போது அதை விசாரித்த குமாரசாமி இவர்கள் குற்றமற்றவர்கள் என்று மறு தீர்ப்பு வந்தது

இந்த குமாராசாமியின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்ட போது அதை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்   குன்காவின் தீர்ப்பு மிகவும் சரிதான் என்று உறுதிபடுத்தி தீர்ப்பு வழங்கியது


இந்த நிலையில் குமாரசாமியின் தீர்ப்பை பார்க்கும் போது அவர் ஒரு தலைபட்சமாக , ஒழுங்காக பொறுப்பு இல்லாமல் ஏனோதானோ என்று  ஒரு முக்கிய வழக்கை கையாண்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது மேலும் அவர் அப்படி தீர்ப்பு வழங்க கையூட்டம் பெற்று இருக்கலாமோ என்ற சந்தேகம் வருகிறது. இப்படி ஒரு முக்கிய வழக்கையே அவர் கவனம் செலுத்தாமல் விசாரித்து நீதி வழங்கிய அவர் மற்ற வழக்குகளில் எப்படி பொறுப்பாக செயல்பட்டு தீர்ப்பு வழங்கி இருக்க முடியும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பே

Monday, February 13, 2017

இதுதான் காதல் என்பதா.........

avargal unmaigal
இதுதான் காதல் என்பதா.....


காதலர் தினம் என்பது காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக பலஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், திருமணம் செய்து அதன் பின் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்தான். இது கள்ளக்காதலர்களும் கல்லூரி காதலர்களும் கொண்டாடுவதற்கு அல்ல...இவர்களின் காதலில் கிஃப்ட்தான் மாற்றிக் கொள்வார்கள். ஆனால் உண்மையான காதலர்கள் இதயங்களை மாற்றிக் கொள்வார்கள்..


காதல் கெட்டவனையும் ஒரு நொடியில் நல்லவனாக மாற்றிவிடும். பாலைவனத்தையும் சோலைவனம் ஆக்கிவிடும். காதல் இல்லாத வாழ்க்கை இது எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றிவிடும் .எதற்கு இந்த காதல் புராணம் என்று கேட்கிறீர்களா? இன்று காதலர் தினம் என்பதற்காக மட்டுமல்ல வெவ்வேறு மதங்களை சார்ந்த நானும் எனது மனைவியும் திருமணம் செய்து மதங்களை மாற்றாமல் மனங்களை மட்டும் மாற்றி பல்லாண்டுகளாக  சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என் குழந்தையும் நாங்களும் எம்மதமும் சம்மதம் என்று நட்புடன் அனைவருடன் அன்புடன் பழகி வாழ்ந்து வருகிறோம். சரி மேலும் மேலும் என் புராணம் படாமல் இங்கே வருகை தந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக காதல் கதைகளை தந்துள்ளேன், இதை படித்தால் உண்மையான காதல் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளலாம்.படிக்கும் முன்பு பெண்களுக்கு ஒரு அட்வைஸ் இதை பொது இடத்த்ல் இருந்து படிக்க வேண்டாம்.. காரணம் இதை படித்த பின் உங்கள் கண்ணில் இருந்து கண்ணிர் வரும் அதை பார்க்கும் ஆண்கள் என்னங்க உங்க புருஷன் உங்களை கொடுமை படுத்துகிறாரா அல்லது காதலன் கைவிட்டுவிட்டாரா அதற்கு எல்லாம் கவலைப்படாதீர்கள் என்று கல்யாணம் ஆகி பேரபுள்ளையை பார்த்துகிட்டு இருப்பரவர்கள் வருவார்கள் அதனால்தான் சொன்னேன் ஹீஹீ சரி சரி என்னை திட்டாமல் மேலே படியுங்கள்

தமிழக அரசியல் பரமபத விளையாட்டில் ஸ்டாலினுக்கு இறங்குமுகமா அல்லது ஏறுமுகமா?

avargal unmaigal
தமிழக அரசியல் பரமபத விளையாட்டில் ஸ்டாலினுக்கு இறங்குமுகமா அல்லது ஏறுமுகமா?ஸ்டாலின் தன் கட்சியில் நீண்டகாலமாக இருந்து கட்சியோடு சேர்த்து பொதுநலப் பணியை செய்துவந்தாலும் இப்போது இருக்கும் பல புதிய கட்சிதலைவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது பல நேரங்களில் தடுக்கி விழுந்துதான் இருக்கிறார் என்பதோடு இன்னும் தடுக்கி விழுந்து கொண்டே இருக்கிறார் அதுமட்டும்ல்ல நீண்ட கால முயற்சியின் விளைவாக இப்போதுதான் அவரால் கட்சிக்குள்ளே தலைவர் பதவிக்கு ஈடாக செயல்தலைவர் பதவியை  பெற முடிந்து இருக்கிறது. இப்படி கட்சிக்குள்ளே ஒரு பதவியை இவ்வளவு கடினப்பட்டு பிடித்த இவருக்கு பொதுமக்களிடம் இருந்து ஆதரவை பெற்று முதலமைச்சர் பதவியில் உட்காருவது அவ்வளவு எளிதல்ல.

Sunday, February 12, 2017

வெளுத்தது எல்லாம் பாலும் அல்ல பன்னீர் ஒன்றும் பரிசுத்தமானவர் அல்ல

avargal unmaigal
வெளுத்தது எல்லாம் பாலும் அல்ல பன்னீர் ஒன்றும் பரிசுத்தமானவர் அல்ல

சசிகலா மோசமானவர்தான் அவர் முதல்வராக வரக் கூடாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் அதே நேரத்தில் பன்னீர் செல்வம் பரிசுத்தமானவர் என்று தமிழ் மக்கள் நினைப்பது என்பது மிகப் பெரிய மூட்டாள்தனமாகத்தான் எனக்கு தோன்றுகிறது


பாய்ந்து வரும் புலிக்கு பயந்து உட்கார்ந்து இருக்கும் சிங்கம் பாதுகாப்பு என அதன் அருகில் செல்வது போலத்தான் பசிக்கும் மிருங்களுக்கு எதிரில் இருப்பதும் அதற்கு நல்ல மனிதன் கெட்ட மனிதன் என்று வித்தியாசம தெரியாது. அதுபோலத்தான் இந்த சசிகலாவும்  பன்னீரும்.

இப்படி இருந்தால் நீயும் மதுரைத்தமிழனே

இப்படி இருந்தால் நீயும் மதுரைத்தமிழனே

தமிழக அரசியலையே எவ்வளவு நாள்தான் பேசிக்கொண்டிருப்பது அதனால்தான் இந்த பதிவு

இன்று ஒரு பெண்ணை பார்த்தேன் அவள் உடம்பு ட 90 சதவிகிதம் வெளியே தெரியுமாறு உடை அணிந்து வந்தாள் ஆனால் என் கண் என்னவோ அவர் மறைத்த உடலின் 10 சதவிகித உடம்பை மட்டும் கவனிக்க தோன்றியது, தப்பா நினைச்சுகாதீங்க அவள் என்னா மாதிரியான உடை அணிந்து இருக்கிறாள் என்ன பிராண்ட் உடை அனிந்திருக்கிறாள் என்பதை மட்டுமே பார்த்தேன்


Saturday, February 11, 2017

பன்னீரின் தற்போதய உண்மை நிலை இப்படிதான் இருக்கிறதா?

  

பன்னீர் செல்வத்தின் தற்போதைய நிலையை இதைவிட தெளிவாக சொல்ல இயலுமா ?


Friday, February 10, 2017

தமிழக நிலவரமும் நையாண்டி கருத்துகளும்

தமிழக நிலவரமும் நையாண்டி கருத்துகளும்

ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தால் கிடைக்கும் பலன்

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மிக்சர் தின்னு கொண்டிருக்கிறார் என்று தமிழக மக்களால் கேலி செய்யப்பட்ட பன்னீர் செல்வம் இறுதியில் மனமுடைந்து ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்களுக்கு மேல் தியானம் செய்து ஜெயலலிதாவை வழிபட்டார். அதன் பின் ஜெயலலிதாவின் பரிசுத்த ஆவி அவரை ஆசிர்வதித்ததால் அன்று இரவில் இருந்து அவர் தமிழக மக்களால் ஹீரோவாக ஆக்கப்பட்டு புன்னகையுடன் வலம் வருகிறார்.

Thursday, February 9, 2017

சசிகலா சமாதிக்கு சென்றது சபதத்தை நிறைவேற்றவா அல்லது ஆசிர்வாதம் வாங்கவா?

சசிகலா சமாதிக்கு சென்றது சபதத்தை நிறைவேற்றவா அல்லது ஆசிர்வாதம் வாங்கவா?


அக்கா   நீ வேலைக்காரியாக இருக்கதான் லாயக்கு என்று சொல்லி  ஏளனமாய் சிரித்தாயே.. இப்ப பார்த்தியா நான் உங்கிட்ட போட்ட சபதத்தின்படி பொது செயலாளர் ஆகி இப்ப முதலமைச்சாராகவும் ஆக போகிறேன். இந்த ஏமாளிமக்கள் நான் என்னமோ உங்கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்த மாதிரி நினைச்சுகிட்டு இருக்காங்க ஆனால் என் சபதத்தில் நான் ஜெயிச்சுட்டேன் என்று உன்னிடம் சொல்லவே உன் சமாதிக்கு வந்து இருக்கிறேன்,

பேசாமல் நூறு பேர் வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுகிட்டு ஆளுநர்கிட்டபோய் நாங்க பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு என்று சொன்னாலே போதும் ஆளுநருக்கு என்ன எம்/எல்.ஏக்களை அடையாளம்வா தெரியப் போகுது

Wednesday, February 8, 2017

தமிழக நிலவரமும் சமுகவலைதளத்தில் வந்த கருத்தும்

தமிழக நிலவரமும் சமுகவலைதளத்தில் வந்த கருத்தும்சசிகலா மோசமானவர்தான் ஆனால் அதே நேரத்தில் பன்னிர் செல்வம் உத்தமர் இல்லைதான். தமிழக மக்களே பன்னிரை மகாத்மா ஆக்கிவிடாதீர்கள்பன்னீரை மகாத்தமா ஆக்கும் ஜனங்கள் ஜெயலலிதாவை தெரசாவா ஆக்கிவிடுவார்கள்


பதவி போகும் போது மகாத்மாவாக மாற முயற்சிக்கிறார் பன்னீர் செல்வம், பதவி ஆசை யாரைவிட்டது. முதல்வர் பதவிக்கு ஆபத்து இல்லை என்றிருந்தால் சின்னம்மாதான் எங்கம்மா என்று சொல்லி காலில் விழுந்து இருப்பார்

Monday, February 6, 2017

நாட்டு நடப்பு பற்றி கலைஞர் பாணியில் நையாண்டி கேள்வி பதில்கள்

avargal unmaigal
நாட்டு நடப்பு பற்றி கலைஞர் பாணியில் நையாண்டி  கேள்வி பதில்கள்

கேள்வி :சசிகலா முதல்வர் ஆனால் ஸ்டாலின் என்ன செய்வார்?
மதுரைத்தமிழனின் பதில்: வழக்கம் போல சட்டசபைக்கு சென்று வெளிநடப்பு செய்வார் அவருக்கு தெரிந்தைதானே அவர் செய்ய முடியும்


கேள்வி :சசிகலா முதல்வர் ஆவதை பார்க்கும் ஸ்டாலின் மனசு என்ன நினைக்கும்?

மதுரைத்தமிழனின் பதில்: கலைஞருக்கு மகனாக இருந்து கட்சி தொண்டு ஆட்டுவதற்கு பதில் ஜெயலலிதா வீட்டில் வேலக்காரனாவதாக இருந்திருந்தால் இப்ப தமிழக முதல்வர் ஆகி இருக்கலாமே  என்று அவர் மனசு இப்ப சொல்லும்

உப்புமா கொடுமைகள் (ந)கைச்சுவை

உப்புமா கொடுமைகள்  (ந)கைச்சுவை

கொடுமைகள் பலவிதம் அதில் உப்புமா கொடுமைகள் ஒருவிதம். ஆண்களை டார்ச்சர் பண்ணுவதற்ககாக பெண்களுக்கு இறைவன் கொடுத்த வரப் பிரசாதம் இந்த உப்புமா....


ஆண்கள் கஷ்டப்பட்டு மாடாக வேலைப்பார்த்துவிட்டு இரவில் வீட்டுக்கு பசியோட திரும்பும் போது இன்ன்ரு மனைவி நன்றாக சமைத்து வைத்திருப்பாள் அதை மூக்கு முட்டாக சாப்பிட்டுவிட்டு நல்லா ஒரு தூக்கம் போடனும் என்று வரும் போதுதான் அன்று வீட்டில் மனைவி உப்புமா சமைத்து வைத்திருப்பாள் அப்ப நம்ம உடலில் ஒருவிதமான் பிரஷர் ஏறும் பாருங்க அதை சக்தியாக மாற்றினால் செவ்வாய்கிரகத்திற்கு நான் ராக்கெட்டையையே விட்டுவிடலாம்

Friday, February 3, 2017

தமிழக கல்வியாளர்களும் கல்வித்துறையும் மட்டுமல்ல பொதுமக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு

தமிழக கல்வியாளர்களும் கல்வித்துறையும் மட்டுமல்ல பொதுமக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு

இன்றைய வாழ்வில் உணவு  உடை இருப்பிடம்  கல்வி எவ்வளவு முக்கியமோ மனித வாழ்க்கைக்கு அப்படி ஒரு முக்கியம் இணையத்திற்கும் வந்துவிட்டது. இனி வருங்காலத்தில் இணைய அறிவு இல்லாமல் வாழ்வது என்பது இயலாத காரியமாகவே இருக்கும். அதனால் கல்வி கூடங்களில் நாம் எப்படி மொழி ,கணிதம் அறிவியல் பாடங்களை குழந்தைகளுக்கு கற்று தருகிறோமோ அது போல இணையம் என்பதை ஒரு பாடமாக வைத்து கற்று தர வேண்டிய அவசியம் வந்து விட்டது என்று நான் கருதுகிறேன்

Thursday, February 2, 2017

இந்த காலத்து பெண்கள்?

இந்த காலத்து பெண்கள்?


இந்த காலத்தில் பெண்களுக்கு நல்லா சமைக்க தெரிகிறதோ இல்லையோ ஆனால் எப்படி நன்றாக சமையல் குறிப்பு எழுதி பதிவாக போடத் தெரிகிறது.


இப்படி சமையல் குறிப்பு போடுபவர்கள் சமைத்து முடித்துவிட்டு அதை சாப்பிட சொல்லி கணவருக்கோ குழந்தைகளுக்கோ கொடுத்து அதை அவர்கள் உண்மையிலேயே ரசித்து சாப்பிடுகிறார்களா என்பதை வீடியோவாக எடுத்து போட்டால் நன்றாக இருக்குமே/


டிஸ்கி : அப்படி வீடியோ எடுக்கும் போது கணவரையும் குழந்தைகளையும் மிரட்டி நன்றாக இருப்பது போல நடிக்க சொல்லக் கூடாதுஅன்புடன்
மதுரைத்தமிழன்

Wednesday, February 1, 2017

அட்வைஸ் ப்ளீஸ் ! இப்ப நான் என்ன செய்ய வேண்டும்


அட்வைஸ் ப்ளீஸ் ! இப்ப நான் என்ன செய்ய வேண்டும்


அடிக்கடி பேஸ்புக்கில் எங்களுக்கு திருமணமாகி இன்றோடு 5 அல்லது 10, 20 ,25 ஆண்டு ஆகிவிட்டது. எனது கணவர்/மனைவிதான் எனது பெஸ்ட் பார்ட்னர் என சொல்லி பதிவிட்டு எங்களை வாழ்த்துங்கள்  நண்பர்களே என்று சொல்லும் போது உண்மையிலே அவர்களை வாழ்த்துவதா வேண்டாமா என சந்தேகம் எனக்கு நேருகிறது காரணம் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது அல்லது பேசும் போது இன்னும் எத்தனை நாளுக்குதான் இவரோட/இவளோட குப்பை கொட்டுகிறததோ என்று கரித்து கொட்டுகிறார்கள் பல பேர். அவர்களிடம் நீங்கள் நீண்ட நாட்கள் இன்று  போல  என்று வாழுங்கள் என்று வாழ்த்தினால்  அவர்கள் நம்மை அல்லவா  மனதிற்குள் சாபம்மிடுவார்கள்?# இப்ப நான் என்ன செய்வது


அன்புடன்
மதுரைத்தமிழன்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog