Saturday, January 21, 2017

#rjbalajiofficial
விஜய் டிவியை நோக்கி இளைஞர்கள் போராட்டம் திரும்புமா?


தமிழ் கலாச்சரத்தை காக்க ஜல்லிகட்டுக்காக போராடும் இளைஞர்களை மற்றும்  பொது மக்களை பார்க்கும் போது மிகப் பெருமிதமாக இருக்கிறது , இப்படி போராடும் இளைஞார்களுக்கும் பொது மக்களுக்கும் அரசியல்தலைவர்கள்  மீதும் நடிகர்கள் நடிகைகள் மீதும் கடும் கோபம் இருக்கிறது என்பது வெளிபடையாக தெருகிறது காரணம் தங்களின் அர்சியல் அல்லது பட வெற்றிகளுக்காககவே இவர்கள் மக்களை கறுவேப்பிலை மாதிரிதான் பயன்படுத்தி தூக்கி ஏறிகிறார்கள் என்பதால்தான்  அதன் காரணமாகவே இந்த போராட்டத்தில் எங்களோட  தேவை எதுவோ அதை நிறைவேற்ற தான் உங்களுக்கு  அதிகாரம் கொடுத்தோம் அதையே உங்களால் தர முடிவில்லையென்றால் பேசமா மூடிட்டு கிளம்பு என்று சொல்லி அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களை விரட்டி அடித்துள்ளனர்



ஆர் ஜே பாலாஜி  மற்றும் பலர் இந்த போராட்டம் ஜல்லிகட்டு பிரச்சனையோடு முடிந்துவிடாது பல பிரச்சனைகளையும் இப்படி போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றி காணூவோம் என்று சொல்லி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.


இப்படிபட்ட எண்ணங்கள் கொண்ட இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் இந்த போராட்டும் முடியும் நேரத்தில் ஒரு நல்ல விஷயத்திற்காக போராடினால் வருங்காலத்தில் தமிழ் கலாச்சாரம் அழியாமல் இருக்கும் அது  ஒன்றும் கடினமான போராட்டம் இல்லை விஜய்டிவி போன்ற எண்டெர்டெயின் டிவிகளில் கலாச்சராத்தை கெடுக்கும் நிகழ்ச்சிகளை இனிமேல் வெளியிட செய்யாமல் இருக்க செய்தோமானால் அது மிகப் பெரிய   புண்ணியமாகும் அது  நமது தமிழ் கலாச்சாரத்தை காக்க மிகவும் உதவும் என நான்  நம்புகிறேன்


கோக் பெப்சி என்ற வெளிநாட்டு பானங்களை இனி பயன்படுத்தமாட்டோம் என்பது போல இனிமேல் வெளிநாட்டு கலாச்சார விஷத்தை தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து மக்களின் மனதில் நஞ்சை விதைக்கும் விஜய் டிவி போன்ற டிவிக்களை தூக்கி ஏறியுங்கள் வெளிநாட்டு பானங்கள் நம் உடலை கெடுத்து மேலும் நம் நீர் ஆதாரங்களை அழித்தால் விஜய் டிவி நம் மனதில் நஞ்சை அள்ளி விதைக்கிறதுதானே



அதற்காக போராடுவீர்களா அல்லது   போரட்டம் முடிந்த பின் நீயா நானாவில் ஒரு விவாதம் வைத்து அதில் உங்கள் தலையை சிறிது காட்டுவார்கள் என்பதால் வாயை மூடி மெளனமாக இருப்ப்பிர்களா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. முதலில் இளைஞர்கள் கோக், பெப்ஸியை நிறுத்தட்டும்!

    ReplyDelete
  2. ஸ்ரீராம் - :) நிறுத்துவது சந்தேகம் தான்.

    ReplyDelete
  3. கோக் பெப்சியை அவர்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் சரி ஆனால் அதற்கு நமுன் இப்போது அவர்களை வழி நடத்த சரியான தலைமை, வழிகாட்டல் இல்லையோ என்று தோன்றுகிறது....

    கீதா

    ReplyDelete
  4. சரியான தலைமையும் சரியான வழிக்காட்டுதலும் இல்லாததன் விளைவு தான் இன்று நாம் புலம்புவதற்கு காரணம் என்பது எனது கருத்து.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.