Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டு, அரசானை,பன்னீர் செல்வம்,மோடி
தமிழர்களைப் பற்றி மோடி மனதில் தோன்றுவது என்ன?


தமிழகத்தை  இந்தியாவில் இருந்து பிரித்து கொடுத்திட வேண்டியதுதான் இல்லையென்றால் இந்த தமிழர்கள் ஒட்டு மொத்த இந்தியாவையும் மாற்றிடுவார்கள் இவ்வளவுநாள் தமிழக தலைவர்கள் மாதிரி தமிழக மக்களும் அடிமையாக இருப்பார்கள் என்று நினைத்தோம் ஆனால்  தமிழக தலைவர்கள் மாதிரி தாங்கள் கேவலமான பிறவி இல்லை என்று தமிழக மக்கள் நிருபித்துவிட்டார்கள்


ஸ்டாலின் தலைமையில் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சரித்திரம் உண்டு ஆனால் மக்களுக்காக ரயில் மறியல் போராட்டம் நடத்தி அதிலும் தோல்வி அடைந்து ஒரு கேலிக்குரிய தலைவாரக ஸ்டாலின் இருக்கிறார். பாவம் மனுஷனுக்கு நேரம் சரியில்லை,ஸ்டாலின் கலைஞரிடம் அரசியல் பாடம் கற்று இருக்கலாம் ஆனால் அந்த பாடங்கள் எல்லாம் அந்தகால பழைய பாடங்கள்  அது இந்த கால அரசியல் வாழ்க்கைக்கு உதவாது அதனால் ஜல்லிகட்டு பிரச்சனை முடியும் வரை புதுபுது பாடங்களை கற்று வர வேண்டும் இல்லையென்றால் வயதான உறுப்பினர்களை வைத்துமட்டும் காலம் கடத்த வேண்டும்



பாலியல் சீண்டல்கள் ஏதும் செய்யாமல் இருந்ததால் பெண்களும் கலந்து கொண்டார்கள் அது  பெருமையக உள்ளது என்று பலரும்  சொல்லி கொண்டு இருக்கிறார்கள் இப்படி பாலியல் சீண்டல்கள் இளைஞர்களிடம் வெளிப்படாதற்கு காரணம் அவர்கள் விவேகனந்தர்களாக மாறிவிட்ட்டார்கள் என்பதால் அல்ல ஒரு நல்ல நோக்கில் கூடி இருக்கும் கூட்டத்தி இப்படி பாலியல் சிண்டல்கள் நடந்தால் தம்மை தூக்கி போட்டு மிதி மிதியென்று மிதித்துவிடுவார்கள் என்ற பயத்தினால்தான் இளைஞர்கள் அமைதிகாத்தார்கள் எனலாம் அதுதான் உண்மை உதாரணமாக் பஸ் கூட்டத்தில் செல்லும் பெண் மீது யாரவது சீண்டும் போது அந்த பெண் தைரியமாக  தீடும் போது பஸ்ஸில் உள்ள மற்ற "யோக்கியர்கள்: அந்த சீண்டும் இளைஞரை எப்படி போட்டு உதைப்பார்களோ அது போல இங்கும் நடக்கும் என்ற பயம் காரணமாகத்தான் இங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை . போராட்டம் முடிந்து சில நாட்களுக்கு பின்னால் பாருங்கள் வழக்கம் போல பாலியில் சிண்டல்கள் தொடரத்தான் செய்யும்


மெரினாவில் பாலியல் சீண்டகள் இல்லை பெண்களை மதித்து நடக்கிறார்கள் இளைஞர்கள் ஆனால் அரியலூரில் சிறு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அரியலூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு இருந்தால் இப்படி கொடுமை நடந்து இருக்காதோ


///இலவச உடலுறவு என்றால் 50 ஆயிரம் பேர் கூட கூடுவார்கள்///
சொல்லுறதுக்கு முன்னால் உன் மூஞ்ச்சியை  கண்ணாடியில் பார்த்துவிட்டு சொல்லி இருக்கலாம் பன்னி கூட உன்னை பார்த்தால் தூரப் ஒடிப் போயிடும்


தமிழக பாஜக தலைவர்கள் பாஜகவிற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கோவில் பலி ஆடுகள்தான்


தமிழ் கலாச்சரத்தை காக்க ஜல்லிகட்டுக்காக போராடும் இளைஞர்களை மற்றும்  பொது மக்களை பார்க்கும் போது மிகப் பெருமிதமாக இருக்கிறது இந்த போராட்டும் முடியும் நேரத்தில் ஒரு நல்ல விஷயத்திற்காக போராடினால் வருங்காலத்தில் தமிழ் கலாச்சாரம் அழியாமல் இருக்கும் அது  ஒன்றும் கடினமான போராட்டம் இல்லை விஜய்டிவி போன்ற எண்டெர்டெயின் டிவிகளில் கலாச்சராத்தை கெடுக்கும் நிகழ்ச்சிகளை இனிமேல் வெளியிட செய்யாமல் இருக்க செய்தோமானால் அது மிகப் பெரிய   புண்ணியமாகும்


மோதியின் வீழ்ச்சி அலை தமிழகத்தில் இருந்து துவங்கிவிட்டது



நடிகர்கள் உண்மையாகத்தான் உண்ணாவிரதம் இருந்தார்களா அல்லது உண்ணாவிரதம் இருப்பது போல நடித்தார்களா?


தமிழர்கள் போராடி வெற்றி பெற்றார்கள்  அமெரிக்கர்கள்போராடி தோல்வியை தழுவினார்கள் #டோனல்ட் ட்ரெம்ப் பதவி ஏற்ப்பு


தமிழகத்தில்  நடக்கும் போராட்டத்தால் மிகவும் சந்தோஷப்படும் ஒரே ஒரு அரசியல் தலைவர் மு.க அழகிரி மட்டுமே


கடந்த சில வாரங்களுக்கு முன் என் தந்தை மரணத்தை தழுவினார் அப்போது மனதில் அதிகம் பாதிப்பு ஏற்படவில்லை ஏன் இந்தியா வரவேண்டும் என்று கூட தோன்றவில்லை ஆனால் இப்போது தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை இங்கிருந்து பார்க்கும் போது மனதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு அங்கு வந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஏக்கம்தான் என் மனதில் ஏற்படுகிறது காரணம் இது கலாச்சராத்தை பண்பாட்டை காக்க நடக்கும் போராட்டம் என்பதால். இப்படி ஒரு எண்ணம் என் மனதில்மட்டுமல்ல இங்கு வந்து பல்லாண்டுகாலமாக வசிக்கும் ஒவ்வொரு தமிழனின் எண்ணமாகவே இருக்கிறது


நானெல்லாம் காளையை அடக்காமல் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இனி வருங்கால இளைஞர்களை மனதில் நினைச்சா மனசு பக்கென்று இருக்கிறது காரணம் இனிமே காளையை அடக்கினால்தால் இனிமே காதலிப்போம் என்று தமிழ் பெண்கள் சொல்லிவிட்டால் ஹும்ம்ம்ம்ம்


இதற்கு நம்ம பேஸ்புக்  நட்புக்கள் இட்ட பதில் கருத்துக்கள் நகைச்சுவையாக இருப்பதால் இங்கு அதை வெளியிடுகிறேன்


தேன்மதுரத்தமிழ் கிரேஸ் :தமிழ் பெண்கள் அப்படிச் சொல்லிவிட்டால் தமிழ் ஆண்கள் காளையை அடக்குவார்கள். இன்னுமா சகோ நம்பிக்கை வரல? :-)
Deej Durai (மதுரைத்தமிழன் ) ஹலோ இப்பதான் தமிழ் இளைஞர்கள் பலருக்கு காளை மாடுன்னா என்னவென்றே தெரியவருகிறது நீங்க வேற


நாஞ்சில் தமிழ் மனோ : அது ரத்தத்தில் கலந்த வீரமப்பூ....அம்மிணிங்க சிங்கத்த அடக்க சொன்னாலும் நேரில் நின்னு அடக்குவோம்...அடக்கிட்டு...துர்காதேவியை மேல உக்காரவும் வைப்போம் ஹக்காங்...யாருகிட்ட.
Deej Durai (மதுரைத்தமிழன் ) அம்மணிகளை அடக்க முடிகிற்தோ இல்லையோ இந்த மாடு என்ன சிங்கத்தையாவது அடக்கி வீரத்தை காண்பிப்போம் என்று துணிகிறார்களோ என்னவோ


ராஜி அண்ணி கண்டிசன் போட்டிருந்தா உமக்கு கல்யாணமே ஆகியிருக்காதே
Deej Durai (மதுரைத்தமிழன் ) அம்மணி அப்படி கண்டிஷன் போட்டு இருந்தால் இப்ப உங்களுக்கு ஒரு வெள்ளைக்கார அண்ணி கிடைச்சிருப்பாங்க ஹும்ம் உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை


சேக்காளி பதிவர் //காளையை அடக்கினால்தால் இனிமே காதலிப்போம் என்று தமிழ் பெண்கள் சொல்லிவிட்டால்//
காதலிக்க லேன்னா பரவாயில்ல. கல்யாணம் முடிப்போம் ன்னு சொன்னா தான் பிரச்னை.
Deej Durai (மதுரைத்தமிழன் ) யோவ் சேக்காளி நீர் ரொம்ப சின்ன புள்ளையா இருப்பீர் போல அதனால உமக்கு ஒன்றும் தெரியலை காதல் இல்லாத கல்யாணம் வாசமில்லாத பூவைப் போலத்தான்
...


Venkatasubramanian Sankaranarayanan நமக்குன்னும் ஒரு தொத்த காளை
இல்லாமலா போகும் ?
Deej Durai (மதுரைத்தமிழன் ) காதலி தொத்த மாட்டை அனுப்பினால் பரவாயில்லை அப்படி இல்லைன்னா நம்ம வயத்தில் பெரிய பொத்தல் அல்லவா உண்டாகும்



விஜய் டிவியை நோக்கி இளைஞர்கள் போராட்டம் திரும்புமா? http://avargal-unmaigal.blogspot.com/2017/01/vijay-tv.html


அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. புதுகோட்டை சல்லிக்கட்டில் மோஹன் ராஜானு ரெண்டு பேரு இறந்து இருக்கிறார்கள். 50 க்கும் மேஎலே பலர் காயப்பட்டு இருக்காங்க.

    நீங்க, கமலஹாசன் எல்லாம் சும்மா வீரம் வெட்டிக்கு பேசி ரெண்டு பேரை பலி கொடுத்து இருக்கீங்க.
    சும்மா கெடந்தவனையெல்லாம் தூண்டிவிட்டு பலி கொடுத்தது நீங்கதான். மோடி அல்ல!

    மோடியும், பீட்டாவும் தம்மிழர்கள் உயிர் பறிபோவதை ஏதோ ஒரு வாகையில் தடுத்தார்கள், தடுக்க முயன்றார்கள். எத்தனையோ யிர்ரை பலியாகமல் தடுத்து இருக்காங்க!

    ஆனால் நீரும் கமஹாசனும் சொசுகு அறையில் உக்காந்து கொண்டு அப்பாவத் தமிழர்களை தூண்டிவிட்டு அப்பாவி தமிழர்களை பலிகொடுத்த தமிழின துரோகிகள்!

    உடனே புறப்பட்டு அடுத்த சல்லிக்கட்டில் நீரும் கமலஹாசானும் மாட்டிடம் உதை வாங்கி சாவுங்க! அப்போத்தான் தமிழ் கலாச்சாரம் வாழும்! சும்மா கம்யூட்டர் முன்னால உக்காந்துக்கிட்டு வீரம் பேசிக்கொண்டு திரிவதை நிறுத்தும்!

    ReplyDelete
  2. ராஜி மற்றும் லாஸ்ட் கமென்டை அதான் தொத்தல் காளை கிடைக்காமையா போயிடும்!ஹிஹி ரொம்பவே இருவரும் சொல்லிச் சொல்லி சிரித்துவிட்டோம். (துளசி)
    கீதா.: அப்படியே மதுரைத் தமிழன் காளையை அடக்குவது போல் லைவ் ஷோ ஒன்னு மனசுல ஓட்டி செம சிரிப்புப்பா...இப்ப இதைத் தட்டும் போதுகூட செம சிரிப்பு...

    ReplyDelete
  3. இங்கு நடக்கும் நிகழ்வுகள் மனதை வேதனைப்படுத்திய நேரத்தில் உங்களின் கமென்டுகள் சிரிக்க வைத்தது உண்மை..மக்கள் மற்றும் மாணவர்கள் செய்த அறப்போராட்டம் வெற்றி பெற்றிருந்தாலும் அதைக் கொண்டாட முடியாமல் இப்படி துயரத்தில் முடிந்துவிட்டதே என்று வரும் செய்திகள் மீண்டும் வேதனையாக உள்ளது.. இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கான காரணங்கள் நன்றாகவே தெரிகிறது...ஆனால் இங்கு பதிய முடியவில்லை...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.