உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, November 29, 2016

நீயும் ஒரு முட்டாள்தான் (பேஸ்புக் ஸ்டேடஸ்)நீயும் ஒரு முட்டாள்தான் (பேஸ்புக் ஸ்டேடஸ்)


ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளை கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு. அப்படி செய்யாவிட்டால்  நீயும் ஒரு மோடி மன்னிக்கவும் நீயும் ஒரு முட்டாள்தான்

Monday, November 28, 2016

மோடியை கழுவி ஊற்றும் வடமாநிலத்தவர்கள் ? ( 18 + )மோடியை கழுவி ஊற்றும் வடமாநிலத்தவர்கள் ? ( 18 + )

தமிழ் நாடு மற்றும் தென் மாநில மக்கள் பரவாயில்லை போலிருக்கிறது நாம் மிக நாகரிமாகத்தான் கருத்துகளை சொல்லுகிறோம். ஆனால்  வட மாநிலத்துல உள்ள மக்கள்  மோடியை இந்தியாவின் பிரதமர் என்று கூட கருதி மரியாதைக்காட்டாமல் பச்சை பச்சையா கழுவி கழுவி ஊத்தறாங்க.. கூகிள் அல்லது யூ டியூபில் "modi abusing' ன்னு தேடினால் ஏகப்பட்ட விடியோக்கள் கொட்டுது. இவ்வளவு கேவலமாக பேசியதை எப்படிதான் தடை செய்யாமல் இருக்கிறார்களோ?

மோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்avargal unmaigal
மோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்when Jesus said, 'If someone slaps you on the face, you show him the other cheek.  இதை கிறிஸ்துவர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ மோடியின் ஆதரவாளர்கள் இதை பின்பற்றுகிறார்கள் அதனால்தான் மோடி ஒரு கன்னத்தில் அறைந்தாலும் அந்த வலியை பொருத்து கொண்டு மற்றொரு கன்னத்தை காண்பித்து கொண்டிருக்கிறார்கள்


பணப் பிரச்சனையில் மோடி எதிர்ப்பாளர்கள் அவரை திட்டுவதைவிட, மோடி ஆதரவாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டாலும் அவரை பாராட்டுவதுதான் மோடியை மிகவும் கேவலப்படுத்துவதாகும் காரணம் வயிற்றெரிச்சலோடு  கிடைக்கப்பெறும் பாராட்டு வார்த்தைககள் அசிங்கமான வார்த்தையில் திட்டுவதை விட மிக மிக அருவெறுப்பானது.. மோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்

Wednesday, November 23, 2016

விருது வாங்கலையோ விருது......!!??!!விருது வாங்கலையோ விருது......!!??!!

கமா, புல் ஸ்டாப், கிராமர் மிஸ்டேக், ஸ்பெல் மிஸ்டேக் இப்படில்லாம் வந்துடக்கூடாதுன்னு ஸின்ஸியரா ஒரு லெட்டரை டைப்பிக்கிட்டு ஆபிஸ் வேலையில் மூழ்கிட்டு இருக்கும் போது இப்ப ஒரு கால், எதோ நெம்பரே இருக்கே அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது எந்த கால் வந்தாலும் அட்டெண்ட் பண்ணிட வேண்டியிருக்குன்னு எடுத்து ஹலோவினால்,  எதிர் முனையில் " ஹலோ நான் சென்னையிலர்ந்து ............... பேசறேன். 7 ம் தேதி விருது வழங்கும் விழா உங்களுக்கு 'கவி விர்த்தகி ' ன்னு விருதும் சான்றிதழும் தரலாம்னு இருக்கோம்.....

Tuesday, November 22, 2016

கலைஞரின் வாரிசு ஸ்டாலினா இல்லையா?கலைஞரின் வாரிசு ஸ்டாலினா இல்லையா?

தொடர் தோல்விகளை ஸ்டாலின் திமுக கட்சிக்கு பெற்று தரும் போது எனக்கு  அவர் கலைஞரின் வாரிசா அல்லது கஜினி முகம்மதுவின் வாரிசா என்று சந்தேகம் வருகிறது. இப்படி எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சந்தேகம் வரக் கூடும் அது இயல்பே

தமிழக தேர்தல் முடிவு சொல்லுவது இதுவே : தமிழக இடைதேர்தல் முடிவை பார்க்கும் போது அதிமுகவும் பிஜேபியும் வெற்றி பெற்று இருக்கிறது. திமுக அதிமுகவிடமும் தேமுதிக பிஜேபியிடமும் தோற்று இருக்கின்றன


Monday, November 21, 2016

குற்றங்கள் இங்கே! குற்றவாளிகள் எங்கே?avargal unmaigal
குற்றங்கள் இங்கே! குற்றவாளிகள் எங்கே?.

பேஸ்புக்கில் அபரஞ்சிதா மயூரி என்பவர் எழுதியதை இங்கே அவர் அனுமதியுடன் மறுபதிவு செய்கிறேன் நன்றி அபரஞ்சிதா மயூரி.


மிகவும் கோபம் அடைந்தவராக தன்னை உணர்கிறார்.

ஏன்டா தேசபக்த குஞ்சுகளா, ஊழலுக்குன்னே பொறந்த அரசியல்வாதிகளாடா கறுப்புபணத்த ஒழிக்கப்போறாங்க?.

அவன்தான் சொல்லிட்டு அழறான்னா, நீங்களும் ஏன்டா வாயபொளந்துகிட்டு மல்லுக்கு நிக்கிறீங்க.

சொல்லி சொல்லி அலுத்துப்போனதுதான். இருந்தாலும் திரும்பவும் உங்களுக்காக.

குற்றங்கள் இங்கே. குற்றவாளிகள் எங்கே?.

மானங்ககெட்ட தமிழக தலைவர்களே உங்களுக்குகெல்லாம் எதுக்கைய்யா வெள்ளை வேட்டி சட்டை?
avargal unmaigal
 மானங்ககெட்ட தமிழக தலைவர்களே உங்களுக்குகெல்லாம் எதுக்கைய்யா வெள்ளை வேட்டி சட்டை?


போலி மருத்துவர்களே தன்னிடம் வரும் நோயாளிகளிடமிருந்து நூற்றுக் கணக்காக பணத்தை பறிக்கும் நேரத்தில் உண்மையாகவே மருத்துவம் படித்து பட்டம் பெற்ற டாக்டர் இந்த காலத்திலும் 20 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் காசு இல்லை என்று சொல்லுபவர்களுக்கும் இல்லையென்று சொல்லாமல் மருத்துவம் அளித்தது மட்டுமில்லாமல் மருந்துக்களையும் இலவசமாகவே கொடுத்து வந்திருக்கிறார்  இந்த டாக்டர் கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர். பால சுப்பிரமணியம். ஆவாரம்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்தார்.

Friday, November 18, 2016

மோடி கருப்பு பணத்தை ஒழித்து கட்டுவது இப்படிதானமோடி கருப்பு பணத்தை ஒழித்து கட்டுவது இப்படிதானா?

கருப்பு பணத்தை ஒழிக்க பிங்க் கலரில் பணத்தை அடித்து வெளியிட்ட பிரதமர் மோடிதான்
மோடி அரசு இனிமேல் பணம் மாற்ற வேண்டும் என்பவர்கள் பதிவு அலுவலகத்தில் தாங்கள் இன்று எவ்வளவு தொகையை மாற்ற போரோம் என்பதை பத்திரத்தில் பதிந்து அந்த பத்திரத்தை  எடுத்து மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து அவரிடம் ஒரு சைன் வாங்கி அதை பேங்கில் கொடுத்தால்தான் இனிமேல் பணம் எடுக்கலாம் என்று அறிவித்தாலும் அறிவிக்கலாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்நீங்கள் வைத்திருக்கும் பணத்தை மாற்ற அல்லது எடுக்க மிக சிறந்த வழிநீங்கள் வைத்திருக்கும் பணத்தை மாற்ற அல்லது எடுக்க மிக சிறந்த வழி

மோடியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் வங்கிகளில் மற்றும் ATMல் போன உடனே பணம் கிடைத்து விடுகிறது. அவர்கள் அதிகபட்சம்  பத்து நிமிஷங்களுக்கு மேல் க்யூவில் நிற்க வேண்டியது இல்லை என்று பதிவிடுகிறார்கள் ஆனால் அதே நேரத்தில்
மோடியை எதிர்ப்பவர்களுக்கும் சாமன்ய பொதுமக்களுக்கு மட்டும் நாளின் பாதிப் பொழுது வங்கிகளின் வாசலில் நிற்க வேண்டி இருக்கிறதும் என்றும்  ATM பணம் இல்லாமல் காலியாக அல்லது வேலை செய்யாமல் இருக்கின்றனவாம்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog