உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, December 27, 2016

தமிழக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் அசாதாரண நிலையை ஸ்டாலின் பயன்படுத்தி கொள்வாரா?தமிழக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் அசாதாரண நிலையை ஸ்டாலின் பயன்படுத்தி கொள்வாரா?


ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழ அரசியலில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது, இந்த சூழ்னிலையில் பன்னீர் முதலமைச்சராக ஆட்சி செய்து வந்த போதிலும் அதிமுக தலைமையை யார் கைப்பற்றுவது என்று ஒரு மறைமுக சூழ்ச்சியே நடந்து வருகிறது. இதில் சசிகலாவை அதிமுகவில் சுயநலமட்டுமே கருத்தில் கொண்ட அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் ஆதரித்தாலும் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் சசிகலாவை ஜெயலலிதாவின் இடத்தில் வைத்து பார்க்க மறுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.. இப்படி இருக்கும் சுழலில் பாஜக சந்தர்பத்தை பயன்படுத்தி ம்றைமுகமாக உள்ளே நுழைய பார்க்கிறது. ஒரு வேளை பாஜாக அதிமுக தலைவர்களை குறுகிய காலங்களுக்கு மட்டுமே மிரட்டி மறைமுகமாக ஆட்சி செய்ய முடியுமே தவிர அவர்களால் எந்த காலத்திலும் எப்படி தலைகிழாக நின்றாலும் நேரடியாக ஆட்சிக்கு வர முடியாது. காரணம் இந்தியாவெங்கும் மோடிக்கு பாசிட்டிவாக அலை வீசிய போதிலும் தமிழகத்தில் மட்டும் அந்த அலையால் ஒரு மயிரையும் அசைக்க முடியவில்லை. ஆனால் இப்போது மோடிக்கு எதிராக இந்தியாவெங்கும் நெகடிவ் அலை வீசும் போதா அவர்களால் இங்கு வெற்றிடம்  உள்ளது அதை எங்களால் நிரப்ப முடியும் என்று சொல்லி ஆட்சியில் அவ்வளவு எளிதாக வந்த அமர்ந்து விட முடியுமா என்ன?நிலமை இப்படி இருக்கையில் பன்னீர் செல்வம் துணிந்து செயல்பட்டால் அவர் நிச்சய்ம் அவரால் அதிமுக தலைமையை கைப்பற்றி ஆட்சியை தொடரலாம் அதுமட்டுமல்ல எதிர்காலத்திலும் அதிமுக தலைவராக தொடர முடியும் இதனை பெற அவருக்கு பெரும் துணிச்சல் மட்டுமல்ல பல தியாகங்களையும் செய்ய வேண்டும் . ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பது கீழ்தட்டு மக்களும் அறிந்த உண்மை.. அதுமட்டுமல்ல ஜெயலலிதாவின் சாவிற்கு சசிகலாவும் உடந்தை என்பது மாதிரியான எண்ணங்கள் அனைவரிடமும் இருக்கிறது. இதை  தனக்கு சாதகமாக பன்ன்னீர் செலவம் பயன்படுத்தி கொண்டால் அவர் தனது பதவியை தக்க வைத்து கொள்ள முடியும் ஆனால் அவருக்கு அந்த அளவிற்கு துணிச்சல் இருக்கிறாதா என்பதுதான் முக்கிய கேள்வி


அதிமுகவினரின் நிலமை இப்படி இருக்க திமுகவில் முதல்வராக வர ஆசைப்படும் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்பது அடுத்த கேள்வி. இன்னும் அவர் கலைஞர் பின்னால் அம்மாவின் முந்தானையை பிடித்துகொண்டு அலையும் சிறுவன் போல இருக்கப் போகிறாரா அல்லது தளபதி என்ற தன் பெயருக்குகேற்ப எதிரி வீக்க்காக இருக்கும் நேரத்தை சாதுர்யமாக பயன்படுத்தி அரியாசனையை பிடிக்கப் போகிறாரா. ஒன்று மட்டும் நிச்சயம் இந்த சந்தர்பத்தை அவர் பயன்படுத்தி கொள்ள முடியவில்லை என்றால் எதிர்கால்த்தில் அவர் வேண்டும்மென்றால் திமுகாவின் தலைவராக இருக்கலாம் ஆனால் முதலமைச்சராக வர முடியாது.


அதனால் ஸ்டாலின் செய்ய வேண்டியது என்னவென்றால் அதிமுகவில் ஏற்பட்டு இருக்கும் அசாதராண சூழ்நிலையை பயன்படுத்தி அங்குள்ள எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை அமைக்கவேண்டும். இப்படி செய்வது அரசியலில் சாதாரணம் அதுமட்டுமல்ல அது சாணக்கியம் கூட.அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பணம் பதவிமட்டுமே இப்போதைக்கு முக்கியம் அதனால் அவர்களுக்கு பன்னிர் செல்வம் .சசிகலா மற்றும் ஸ்டாலினுக்கு வித்தியாசம் தெரியாது. ஸடாலின் ஒன்ன்றை மட்டும் நினைவிற்குள் வைத்து கொள்ள வேண்டும் இப்படி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் போது ஜெயலலிதாவின் மர்மமான மறைவுக்கு காரணம் திமுகவோ அல்லது திமுக தலைமையோ அல்ல இப்பொழுது இருக்கும் அதிமுக தலமையும் மத்திய அரசும்தான் காரணமென்று .இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து அதிமுக தொன்ட்ரகளிடமும் இவர்கள்தான் ஜெயலலிதா மறைவிற்கு காரணம் என்பதை  நிருபித்தால் வருங்காலத்தில் அசைக்க முடியாத தலைவராக இருக்கு வாய்ப்புக்கள் உண்டு.


மேலும் பேரம் பேசி அதிமுக எம்.;.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியில் அமர்ந்து சில ஆண்டுகளுக்கு மிக எளிமையான ஆட்சியை கொடுத்தால் மக்கள் இந்த பேரத்தை எளிதில் மற்ந்துவிடுவார்கள்

ஆனால் இந்த வாய்ப்பைவிட்டு விட்டால கவர்னர் ஆட்சி வந்து , கவர்னர் ஆட்சி என்ற பெயரில்  மறைமுகமாக மோடியின் ஆட்சிதான் நடக்கும். அதன் பின் மோடி நேர்மை என்று சொல்லி பல மாயாஜாலங்கள் செய்வார். அந்த மாயாஜாலங்கள் வருகின்ற  பாராளு மன்ற மட்டும் சட்டமன்ற தேர்தல்களை மட்டுமே மனதில் கொண்டு இருக்கும்   . இது திமுகவிற்கு எந்தவிதத்திலும் சாதகமாக இருக்காது. அதனால் வருகின்ற திமுக பொதுக்கூட்டத்தில் வருங்கலா திமுக தலைவராக தன்னை கலைஞர் வாயால் அறிவிக்க வைத்து மற்றும் கனிமொழி அழகிரியை அரவணைத்து கொண்டு புத்தாண்டில் தமிழகத்தில் புதிய ஆட்சியை நிறுவி முதல்வராக வர வேண்டும் அப்படியில்லையென்றால் தளபதியின் கனவும் வெறும் கானல் நீராகவே இருக்கும்.


அதனால் தேர்தல் மூலம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பொறுமை காக்காது அதிரடியாக ஆட்சியை பிடிப்பதுதான் ஹீரோயிசம் தமிழர்களுக்கு பிடிப்பது வில்லத்தனமான ஹிரோயிசம்தான் காந்தியிசம் அல்ல


டிஸ்கி : ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு உதவுவதற்காகவே மோடி அவர்கள் தமிழக தலைமை செயலாளர் மற்றும் அதிமுக ஆதரவு பெற்ற ராவ் போன்றவர்க்ளின் வண்டவாளங்களை எடுத்து விடுகிறார் இதை சாமர்த்தியமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments :

 1. ஸ்டாலின் ஓவராக துள்ளினால் அவருடைய தங்கை திகார் தில்லானா கனிமொழி திகாரில் களி தின்ன வேண்டிய சூழ்நிலை வரும் என்பதை ஸ்டாலின் அறியாதவர் அல்ல
  அதனால் தான் அடக்கி வாசிக்கின்றார்

  ReplyDelete
 2. மதுரைத் தமிழா சோ போயிட்டார்னு அந்த இடத்தில் இருந்து சாணக்கியத் தந்திர ரகசியங்களைப் பரிந்துரைக்கிறீர்களோ....ஹஹஹஹ்..

  ReplyDelete
 3. சிறப்பான கட்டுரை. தமிழகத்தில் இருக்கும் நிலையை யார் நன்கு பயன்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog