உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, December 19, 2016

சிம்பிள் டின்னர் (நாச்சோ)avargal unmaigal
சிம்பிள் டின்னர் (நாச்சோ)


இன்று எங்க வீட்டம்மா எனக்கு பசிக்கவில்லை அதனால உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை சமைத்து சாப்பிடுங்கள் என்று சொன்னாள். எனக்கோ கொஞ்சம் சோம்பேறிதனம். அதனால்  சில நிமிடங்களில் தயார் செய்யும் நாச்சோவை செய்து நானும் என் பெண்ணும் சாப்பிட்டோம்.


இது செய்வது மிக எளிது.ஒரு தட்டில்  நமக்கு வேண்டிய அளவு tortilla chips யை பரப்பி வைத்து அதில் கொடமிளகாய்,தக்காளி இரண்டையும் சிறு துண்டுகளா நறுக்கி அதனை சிப்ஸ் மேல் போட்டு கிரஸ்ட் சில்லி பவுடரை நம்க்கு வேண்டிய அளவு தூவி அதம் மேல் சீவி வைத்துள்ள சீஸ்ஸை வேண்டிய அளவு தாரளமாக தூவி அதனை மைக்ரோவேவில் இரண்டு நிமிடங்கள் சுட வைத்து அப்படியே சாப்பிட வேண்டியதுதான். இதனை தயாரிக்க 5 நிமிடங்கள் கூட ஆகாது

avargal unmaigalஅரசியல் பதிவு போராடித்தால் இப்படிதான் பதிவுகள் வரும் ஹீஹீஹீ

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : ஒரு மனிதனை குறை சொல்லுவதற்கு முன் அவனது நிலைமையில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்து இருப்ப்பீர்கள் என நினைத்து அதன் பின் அவனைப்பற்றி விமர்சியுங்கள்

16 comments :

 1. படிப்பவர்களுக்கு எப்படியோ
  உங்கள் கைப்பக்குவத்தின் அருமையை
  உண்டு இரசித்தவன் நான்
  அதற்காகவும் வருகிற மார்ச்சில்
  இன்னொருமுறை அமெரிக்கா வரும்
  உத்தேசமிருக்கிறது
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் கண்டிப்பாக வாருங்கள் உங்கள் குடும்பத்துடன். நிச்சயம் உங்களுக்கு பிடித்ததை சமைத்து தருகிறேன். ஆனால் சாப்பிடுவதில் சிக்கனம் இருக்க கூடாது .உங்கள் மனைவியை என் மனைவிக்கு ரொம்ப பிடித்திருக்கிறது மிகவும் எளிமையாக பழகுவதற்கு இனியவராக இருக்கிறார் என்று சொன்னார்.

   Delete
 2. ச்ச்சசோ சிம்பிள்! ஆனால் அந்த பாக்கெட்டுக்கு நான் எங்கே போக?!!!!

  ReplyDelete
  Replies

  1. இந்த சிப்ஸ் இந்தியாவிலும் கிடைக்கின்றது இது கார்ன் கொண்டு தாயாரிக்கப்படுகிறது கார்ன் சிப்ப்ஸ் என்றும் அழைப்பார்கள் இண்டியா மார்ட்.காம் லிலும் அமேசான்.இன் லுமும் கிடைக்கிறது

   Delete
  2. ஸ்ரீ இந்தப் பாக்கெட் நட்ஸ் அண்ட் ஸ்பைசஸ் கடையில் கிடைக்கிறது. அங்கு பெரும்பாலும் எல்லா நாட்டுப் பொருட்களும் கிடைக்கின்றது.

   கீதா

   Delete
 3. One colleague told me one Rumor that waves produced in the microwave oven is not good for health. Is it true? what about the opinion there?

  ReplyDelete
  Replies
  1. மைக்ரோவேவில் சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லைதான் இருந்தாலும் மைக்ரோவேவ் இல்லாத அல்லது பயன்படுத்தாத விடுகள் அமெரிக்காவில் இல்லை என்று கூறலாம் நம்ம ஊரில் டில்லியில் பொல்யூசன் சரி இல்லைதான் அதனால டில்லியில யாரும் வாழாமல் இருக்கிறார்களா என்ன? அது போலத்தான் இதுவும்

   Delete
 4. சீஸ் சாப்பிட பிடித்தவர்களுக்காக மட்டும்!

  நல்ல ஐடியாவாகத்தான் இருக்கின்றது. சீஸை எதன் மேல் தூவி மிக்ரோவலில் வைத்து சூடாக்கி சுடச்சுட சாப்பிட்டாலும் அது எதனால் என்றுணர்த்தப்ப்டாமல் சுவை தருமோ?

  ReplyDelete
  Replies
  1. எந்த உணவும் அந்த உணவை பிடித்தவர்களுக்கு மட்டும் நன்றாக இருக்கும் பிரியாணியை கொண்டு போய் அதை சாப்பிடதா சைவ ஆட்களுக்கு கொடுத்தால் தூ என்று துப்பதான் செய்வார்கள்

   Delete
 5. நச்சுன்னு பதிவாய் நாச்சோ! சூப்பர்!! பெரிய பப்பட்/அப்பளம் இருக்கிறதே (மைக்ரொவேவில் வைக்கும்படியான) அதிலும் இப்படிச் செய்து சாப்பிடலாம் தனிச்சுவையுடன் நன்றாக இருக்கும். ரெடிமேட் சப்பாத்தி, ப்ரெட் எல்லாமே நீங்கள் செய்து பார்க்காமல் இருந்திருப்பீர்களா என்ன! சமையல் மன்னனான நீங்கள்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நீங்கள் செல்வது போல பப்பட்டிலும் செய்து சாப்பிடலாம் ஆனால் ஒரு சேஞ்சுக்காக மட்டும் ஒரு வேளை மட்டுமே சாப்பிட இயலும் ஆனால் என்ன இருந்தாலும் நம்ம தென் இந்திய சமையலுக்கு ஏதும் இடு இணை கிடையாது அதில் எல்லா சுவைகளும் இருக்கும்

   Delete
 6. nice one ..
  next time send me a plate

  ReplyDelete
  Replies

  1. ஒரு நல்ல ரிசிப்பி போட்டால் அதை செஞ்சு அனுப்புங்கள் என்று சொல்லாமல் படத்தில் உள்ள ப்ளேட்டை மட்டும் அனுப்புங்கள் என்று சொல்லுகிறீர்களே?

   Delete
 7. It is Mexican style if I'm not wrong. When I go to cinema I used to buy it. If u use jalepenos even better

  ReplyDelete
  Replies
  1. இது மெக்ஸிகன் உணவுதான் நான் எப்போதும் இது போன்ற உணவு தயாரிக்கும் போது ஆலப்பினோ க்ரின் பெப்பர் ரெட் சில்லி உபயோகிப்பேன்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog