உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 1, 2016

மோடியின் அடுத்தடுத்த தொடர் திட்டங்கள்... வாழ்க மோடிமோடியின் அடுத்தடுத்த தொடர் திட்டங்கள்... வாழ்க மோடி

மோடி கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி ஒரு திட்டம் ஆரம்பித்து அதன் பின் அந்த திட்ட கள்ளப் பணம் ஒழிக்கும் திட்டமாக மாறி அந்த கள்ளப்பணம் திட்டம் சற்று உருமாறி கிரேடிட் கார்ட் திட்டமாக திசை மாறி அந்த திட்டமும் தேசிய கீதத்தில் வந்து நின்று இப்போது இறுதியில் தங்ககட்டுப்பாடு திட்டத்தில் வந்து நிற்கிறது.. அப்ப முதலில் ஆரம்பித்த கறுப்பு பணம் திட்டம் என்ன வாச்சு என்று கேட்பவர்களுக்கு அந்த கறுப்பு பணத்தை எல்லாம் மோடி வெள்ளையாக்கி அந்த முதலாளிகள் கிட்டே கொடுத்திட்டாரு... பாவம் சாமானிய மக்கள் கறுபு பணம் ஒழிந்தால் தங்கள் வாழ்வு அமோக மாக இருக்கும் என்று  நினைத்தார்கள் ஆனால் மோடியோ அவர்களை தாங்கள் சம்பாதித்து சேமித்து வைத்து இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.மோடியின் திட்டம் இதோடு முடிந்து விடப் போவதில்லை மக்களை சோற்றுக்கு அலையவிடுவதுதான் அடுத்த திட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மோடி வாழ்க பாரத மாதாஹி ஜே ஜெய்ஹிந்த்

அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. அப்படி தான் இருக்கும் போல...!

  ReplyDelete
 2. இந்த திட்டத்தின் அடிப்படை இரண்டு...

  1. ) உபி தேர்தல்.. மாயாவதியும் , முலாயமும் வைத்திருக்கும் பணத்தை முடக்குதல்...
  2. ) 15 லட்சம் ரூபாய் எப்போது வங்கி கணக்கில் போடுவீர்கள் என்று மக்கள் கேட்ட கேள்வியை மறக்க செய்தல்....
  3. ) கருப்பு பணம் ஒன்றும் இது வரை கிடைக்கவில்லையாமே என்ற கேள்விக்கு இப்போது தங்கத்தின் மீது நாட்டம்...
  4. ) இன்னும் கொஞ்ச நாட்களில் உழவர்கள் வைத்து இருக்கும் நிலங்களுக்கு ஒரு அளவு வைத்து , மீதம் உள்ளதை பிடுங்கினாலும் ஆச்சரியப்படுவதில்லை....ஆனால் பதஞ்சலிக்கு எப்படி ஆயிரக்கணக்கான ஏக்கர் கணக்கில் நிலம் அரசு சார்பில் கொடுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்ப நாதி இல்லை....

  ஊமையான சமூகம்....நம்மை பார்த்து ஊளையிடுகிறது என்று சொல்லுவார்கள் நண்பரே...!

  ReplyDelete
 3. மச்சான்
  இப்படி அதிரடியாக ஐடியா கொடுத்து எங்களை ரோடு ரோடாக அலைய வைக்க வேண்டாம்

  ReplyDelete
 4. அடுத்து யாரும் வீட்டில பத்து கிலோ அரிசிக்கு மேல வச்சுக்கக் கூடாது. எப்பூடி நம்ம ஐடியா?

  ReplyDelete
 5. Like to share a WhatsApp message:- Some ideas to Modi 1. Gents should have only 5 pants, 5 shirts, 5 sets of undergarments, 2 towels, one chapel, one shoe - if this exceeds it will be ceased; 2. Ladies should have only 5 saree, 5 chudidar, 5 leggings, 5 sets of inner wares, 2 pair of chapel - excess will be ceased; 3. Only 2 ltr. petrol for bikes and 20 ltrs. petrol for cars per month; 4. only 50 units electricity allowed per family per month; 5. If monthly grocery exceeds 500 Rs., 10% Masala Tax will be imposed; 6. In hotel breakfast Rs.10, lunch Rs.50 and dinner Rs.30 allowed per person and if it exceeds Food Tax (Sothu vari)@ 10% will be charged from the 1st Rupee. This is in addition to the existing taxes; 7. Parents having more than one children the other will be deported and even after that the wife gets pregnant either he (husband) or she (wife) will be deported from the country; 8. No house should exceed 500 sq. ft. size and any excess size will be demolished. The demolition charges with 200% penalty plus cess will be charges from the owner.

  ReplyDelete
 6. கிராமங்களில் வசிக்கும் மக்கள் தான் நமது நாட்டில் அதிகம்.அவர்களுக்கு கறுப்புப் பணம்,கள்ளப் பணம் பற்றியெல்லாம் தெரியாது.அவர்கள் அறிந்தது எல்லாம் கறுப்பு எம்.ஜி.ஆர்.தான்.பல கோடி மக்களை நடுரோட்டில் லோ,லோ என அலைய விட்டு விட்டு "மன்கிபாத்"எனச் சவடால் அடிக்கும் அவரையும் ஒரு கூட்டம் சந்திரன்,இந்திரன் என மதி மயஙகித் திரிகிறது.மோடிஜியிடம் சரக்கு இல்லை எனத் தெளிவாகி விட்டது.வார்த்தை ஜாலம் நீண்ட காலம் நீடிக்காது.

  ReplyDelete
 7. அடுத்த திட்டம் வருவதற்குள், எல்லாப் பழியும் மோடிக்கு என்று, அவரது கட்சிக்காரர்களே, அவரை இறக்கி விட வாய்ப்புகள் இருக்கின்றன.

  ReplyDelete
 8. ஹஹ்ஹ்ஹா ஆனா ஒண்ணு இன்னிக்கி ஏழைகள் எல்லாம் பணக்காரர்கள் மதுரைத் தமிழன்! மாடிவீட்டுக்காரங்க எல்லாம் அலைஞ்சாங்கல்லா...பணம் இல்லாம..ஏன்னு கேட்டீங்கனா அவங்ககிட்ட 10, 20, 100 இருக்கும்? இருந்துச்சு எல்லாமே பெரியனோட்டுல்லா....எங்க வீட்டுப் பக்கத்துல கூட பாதிப்பேர்கிட்ட சில்லறையே இல்ல. எல்லாமே நோட்டுத்தான்....அடுத்தாப்புல இருக்க இஸ்திரி போடறவர்கிட்ட கூட அடுக்கடுக்கா துணி கொடுக்க கார்லதான் போவாங்கனா பார்த்துக்குங்க..அதுக்குமே நோட்டுதான் நீட்டுவாங்க... கார்ல போற கேசுங்க அன்னைக்கு அலைஞ்சாங்க பாருங்க...இஸ்திரி தேய்க்கறவரு அவங்ககிட்ட 100 ஆ கொடுத்தா தேய்க்கறேனு சொல்லிட்டாரு...அவரு இப்ப ஜாலியா இருக்காரு...இவங்கதான் பாவம்....நோட்டை வைச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம ..அவ்வளவு நாள் பாவம் அந்த இஸ்திரிகாரர என்ன பாடு படுத்தினாங்க இப்ப அவரு பணக்காரரு எந்தக் கவலையும் இல்ல..அவரு மட்டுமில்ல..பூக்காரமா, பால் போடுரவரு...வண்டில காய் விக்கறவரு...இப்படி ரோட்டுல அலைஞ்சு விக்கறவங்கள எங்க வீட்டுப்பக்கத்துல இருக்கற கார் வாசிங்க பணத்திமிர்ல பாடா பாடு படுத்துவாங்க..ஒரு வாரம் எல்லாம் அடங்கிபோனாங்க...இப்பவும் சில்லறைக்கு அலையறாங்க..இதுக்காக நான் சத்தியமா நன்றி சொன்னேன் சகோ....

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog