உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, December 7, 2016

ஹலோ இது போலீஸ் ஸ்டேஷனா?ஹலோ இது போலீஸ் ஸ்டேஷனா?

ஆமாம் இது போலீஸ் ஸ்டேஷந்தான் என்ன வேணும் உங்களுக்கு?

சார் சார் என் புருஷன் தற்கொலை பண்ணப் போகிறார் அவரை நீங்கதான் காப்பாற்றனும்.

எந்த செல்போன் டவர்ல அவர் ஏறி நிற்கிறார்

அவர் செல்போன் டவர்ல இல்லை சார்

அப்ப எந்த தண்டவாளத்தில் படுத்திருக்கிறார்?

அவர் எந்த தண்டவாளத்திலும் படுக்கவில்லை சார்


வீட்டிற்குள் தூக்கு மாட்டி சாகப் போகிறாரா?

சார் அப்படி செய்தால் நானே கதவை உடைத்து காப்பாற்றி இருப்பேனே?

அப்ப எங்கதான் போயிருக்கிறார் என்று சொல்லுங்கம்மா நாங்கள் உடனே போய் காப்பாற்றுகிறோம்

சார் சார் அவர் அப்போலோ ஹாஸ்பிடல் போயிருக்கிறார்

அம்மா இனிம அவரை எங்களால் காப்பாற்ற முடியதும்மா ....போய் கடவுள்கிட்ட முறையிடம்மா.....  ஆனால் அந்த கடவுளாள் கூட அவரை காப்பாற்ற முடியுமா என்று தெரியலைம்மா


சார் சார் என்னை என் புருஷன் கொலை செய்ய போகிறார் என்னை காப்பாற்றுங்கள் ப்ளீஸ்

விலாசம் சொல்லுங்க இப்பவே நாங்க வந்து உங்களை காப்பாற்றுகிறோம்

சார் அப்போலோவுக்கு சீக்கிரம் வாங்க சார் அங்கதான் என் புருசன் என்னை தூக்கிட்டு போகிறார்


காவிரியை நம்பிய விவசாயிகள் செத்தனர் ஆனால் காவிரியை நம்பிய கலைஞர் மட்டும் பிழைத்து இருக்கிறார்


அப்போலோ ஹாஸ்பிடலில் யாராவது அட்மிட் ஆனால் மட்டும் கலைஞர் பார்க்க செல்வார் ஆனால் அப்போலோவில் மட்டும் அட்மிட் ஆக மாட்டார்#கலைஞர் சாணக்கியன்டா

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. உங்களுக்கு என்ன நடந்தது என்பதை ஊகிக்க தெரியும் ...
  இவ்வளவுக்கு பின்னரும் அப்பலோ வம்பு தேவையா ..
  தம +

  ReplyDelete
 2. வைரமுத்து அப்பல்லோவில் அனுமதின்னு ஒரு செய்தி படித்தேன்

  ReplyDelete
 3. ஹஹ்ஹஹ்ஹஹ்...அதான் வாட்ஸப்பில் வருதே பலர் அங்கு சென்று ....அதனால் கட்டுமரம் காவேரியில் என்று..

  மகன் சொன்னான்...எப்போது ஜெஜெ அவர்கள் வென்டிலேட்டரில் அப்போலோவில் என்று தெரியவந்ததோ அன்றே முடிந்தது என்று சொன்னான்.

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog