உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 4, 2016

சின்ன சின்ன நையாண்டி ஸ்டேடஸ்சின்ன சின்ன நையாண்டி ஸ்டேடஸ்

அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்த்து ரிட்டையர்டு ஆன ஒரு ஆண்மகனின் நிலைமைதான் மோடிக்கு இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படும் ரிட்டையர்ட் ஆனவர்களுக்கு வீட்டிலும் செல்வாக்கு இருக்காது வெளியிலும் இருக்காது


என்னதான் தன்னை வீரனாக மோடி காண்பித்து கொண்டாலும் அவர் அதானி அம்பானிக்கு  அடிமையாகத்தான் இருக்க வேண்டும் அது எழுதப்படாத சட்டம்

மோடி எப்போதும் அம்பானிக்கும் அதானிக்கும் மட்டுமே உதவிகிறார் என்பவர்களே உங்களுக்கு தெரியுமா ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர மோடி இப்போது உழைக்க மற்றும் உதவ தொடங்கி இருக்கிறார் என்றுமோடி செய்யும் தவறுகளை கண்மூடிக் கொண்டு பிஜேபியினர் ஆதரிப்பதன் மூலம் தாங்களுக்கு தாங்களாவே அவர்கள் குழிப் பறித்து கொள்வது போலத்தான் எனக்கு தோன்றுகிறது

கறுப்பு பணத்தை ஒழிக்க நாட்டில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை அரசுமயமாக்கிவிட்டால் பாதி கறுப்புபணம் சம்பாதிக்கும் வழிகளை அடைத்த மாதிரிதான். மோடி தான் செய்த தவறுக்கு பிராயசித்தமாக இதை செய்ய முன்வருமா?

500 1000 மட்டுமல்ல பாஜாகவும் செல்லாக் காசாகத்தான் ஆகிகொண்டிருக்கிறது


தங்க கட்டுப்பாடு மக்களுக்கு மட்டும்தானா கோவிலில் இருக்கும் சாமிக்கு கிடையாதா?

மோடி படத்தை விளம்பரத்திற்காக உபயோகித்தற்கு 500 ரூபாய் அபராதமாம் அப்ப மோடியின் மதிப்பு 500 ரூபாதானா? எங்க வூரு வடிவேலுவின் மதிப்பு இதற்கும் மேலேதான்

Cash Less திட்டம் இந்தியாவில் Use  Less திட்டமாகத்தான் இருக்கும்


விளம்பரங்களில் பிரதமரின் படத்தை உபயோகப்படுத்தியதால் ரிலையன்சுக்கு 500 ரூபாய் அபராதம் தீர்ப்பை கேட்டதும் அம்பானி கதறி அழுதார் இனிமேலாவது அடிமையின் படத்தை உபயோகப் படுத்துவதில் அம்பானி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்

படபிடிப்பில் காலில் அடிபட்ட ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார் இது வரலாற்று சிறப்பு மிக்க பரபரப்பு செய்தி
பணம் மாற்ற சென்ற முதியவர் மயங்கி விழுந்து பிணமாக வீட்டிற்கு சென்றார். மோடியின் கருப்பு பண ஒழிப்பு திட்டத்திற்காக இப்படி சில இழப்புகள் இருக்கத்தான் செய்யும் அதனால் இதெல்லாம் சாதராண செய்தி

தளபதி தலைவராக குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.... #விகடன்...செய்தி..!
இதுதான் ஜனநாயக முறைப்படி நடத்து உட்கட்சி தேர்தலா?

கௌரி சங்கர் பேஸ்புக்கில் எழுதியது

ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காணப்பட வேண்டும்-ஸ்டாலின்
இவரு ஒழிஞ்சுக்குவாராம் நாம கண்டுபுடிக்கனுமாம் ஐஸ் நெம்பர் வெளையாடர வயசாயா உனக்கு..!!அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இவையெல்லாம் எனது பேஸ்புக் தளத்தில் என்னால் வெளியிடப்பட்டவை...விருப்பம் உள்ளவர்ள் எனது பேஸ்புக் கணக்கை தொடர இங்கே களிக் செய்யவும் https://www.facebook.com/avargal.unmaigal

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog