Wednesday, November 9, 2016



avargal unmaigal
President Trump

அமெரிக்காவின் தேர்தல் முடிவு பற்றி சில வார்த்தைகள்

உலகமே உற்று நோக்கிய ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவின் தேர்தல்.. இந்த தேர்தல் முடிவுகள் உலகின் தலையெழுத்தையே மாற்றும் முடிவாகத்தான் இருக்கிறது இந்த மாற்றம் எப்படி பல நாடுகளை பாதிக்கும் என்பது வரும் காலங்களில் டொனல்ட் டொனல்ட் ட்ரம்ப் எடுக்கும் முடிவுகளில்தான் இருக்கிறது,


இவரின் வெற்றி பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது அதிலும் அமெரிக்காவின் ஈஸ்ட் கோஸ்ட் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள மக்களுக்கு காரணம் இங்குதான் பல நாட்டை சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கிறார்கள் இவர்கள் அமெரிக்கர்கள் என்ற போதிலும் பல நாட்டில் இருந்து இங்கு வந்து அமெரிக்கர்களாக மாறிய போதும் தங்களின் தாய் நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால் தாங்கள் வசிக்கும் அமெரிக்கா வளர வேண்டும் என மனதாரா நினைக்கும் வேளையில் கூட தங்கள் தாய்நாட்டிற்கு பாதகம் ஏதும் நிகழ கூடாது என்று நினைத்து அதற்கு ஆதரவாக ஹில்லாரிசெயல்படுவார்  என்று அவர் மீது அதிகம் நம்பிக்கை வைத்தனர். அதனால்தான் இந்த பகுதியில் ஹில்லாரியின் பார்ட்டி அதிகம் வெற்றி பெற்றது
 

ஆனால் இந்த ஈஸ்ட் கோஸ்ட் மற்றும் வெஸ்ட் கோஸ்ட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் அதிகம்  டிகிரி படிக்காத ப்ளூகாலர் வெள்ளை  இனத்தவர்கள் வசிப்பதால், அவர்கள் டொனால் ட்ரம்ப்பை வாக்குறுதியை அதிகம் நம்பினார்கள். அவர்களுக்கு தேவை முதலில் வேலை வாய்ப்பு அதனால் டொனால்ட் ட்ரம்ப்   ஒருவர்தான் ஆட்சிக்கு வந்தால்  சீனா, மெக்சிகோவுக்கு தொழிற்சாலைகள் கொண்டு செல்லபடுவதை தடுத்து இங்கு வேலைவாய்ப்பை பெருக்குவதாக உறுதியளித்தார்.இது அந்த பகுதிமக்களை மிக வெகுவாக கவர்ந்தது. ஹில்லாரி மிடில் க்ளாஸ் மக்களுக்காக செயல்படுபவர் என்று ஊடகங்கள் சித்தரித்து காட்டினாலும் அவர் உலகமய மாக்கலுக்கு ஆதரவாகவே அவரின் திட்டங்கள் இருந்தன. ஆனால் அதே நேரத்தில் ட்ரம்ப் கோடீஸ்வரர் என ஊடகங்கள் சித்தரித்த போதிலும் அவரின் பேச்சு மண்ணின் மைந்தன் பேச்சு  போல இருந்ததால் இப்பகுதிமக்கள் அவருக்கும் அதிக அளவு ஆதரவு கொடுத்துனர். ஆனால் இந்த ஆதரவு ஊடகங்களால் மறைக்கபபட்டு இருந்த போதிலும் தேர்தலின் முடிவில் உண்மை வெளிவந்துவிட்டது என கருதலாம்.


அடுத்தாக அமெரிக்கர்கள் என்னதான்  பெண்ணுரிமை அது இது என்று பேசினாலும் அமெரிக்கர்கள் ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருக்க முடியாது என மனதில் நினைப்பவர்கள். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லுவதில்லை. அதனால் அவர்களால் ஒரு பெண் பிரசிடண்ட் ஆவதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்று அடித்து சொல்லாம். டிரம்ப் நடத்தையையும் அவரின் பேச்சு முறையையும்  ஊடகங்கள் அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டாலும் அமெரிக்கர்கள் அதை கண்டுகொள்ளவில்லை காரணம் பொதுவாக அமெரிக்கர்கள் கேஷுவலாக அநாகரிமான  கெட்டவார்த்தைளை சேச்சினுடே பயன்படுத்துவதால் அது அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை அதனால் அவரின் பாலியல் நடத்தைகளை ஊடகங்களும் ஹில்லாரியும் தொடர்ந்து எடுத்துரைத்தும் அது அவர்களை பாதிக்கவில்லை என்பது உண்மையே

மேலும் ஹில்லாரி எல்லா நாட்டும் மக்களையும் கவர பேசிக் கொண்டிருந்தார் ஆனால் ட்ரம்ப் அமெரிக்க மக்களை கவரமட்டுமே பேசினார்.மேலும் குடியேற்றப்பிரச்சனைகளில் டிரம்ப் கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டவிரோத குடியேற்றத்தைம்  தடுத்து நிறுத்துவதாக அறிவித்தார். முஸ்லிம்களை எளிதில் நுழைய விட மாட்டேன், மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவேன்; இந்தியாவிற்கு செல்லும் வேலைகளை தடுத்து நிறுத்துவேன்; நட்பு நாடுகளுக்கு நட்பை தக்க வைக்க பணம் கொடுப்பதை தடுப்பேன். சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவேன் என்று பேசியது பல நாட்டவர்களுக்கு வெறுப்பை அள்ளிதந்து பயமுறுத்தினாலும்   இது சராசரி அமெரிக்கர்களின் மனதில்  இந்த பேசு சந்தோஷத்தை கொடுத்தது என்றால் மிகையாகாது. இப்படிப்பட்ட பலகாரணங்களால்  ஹில்லாரி வெற்றி வாய்ப்பை இழந்தும் ட்ரம்ப் வெற்றி வாய்ப்பையும் பெற்றார் என்றும் சொல்லாம்.


ஆனால் ஒன்று உறுதி ட்ரம்ப் வெற்றி பெற்றதனால் பல மாற்றங்கள் ஏற்படும் என கனவுகள் காண வேண்டாம் அல்லது அழிவுகள் ஏற்படும் என நினைக்க வேண்டாம் அவர் பிரசிடெண்ட் பதவியை பெறத்தான் இவ்வளவு வாக்குறுதியை தேர்தல் பிரசாரத்தில் கொடுத்தாலும் அந்த வாக்குறுதிகளை பதவிக்கு வந்தபின் மற்ற அரசியல் வாதிகளைப் போலத்தான் இவரும் செயல்படுத்த போவதில்லை. உலக வரலாற்றில் இப்படி வாக்குறுதிகளை தந்த எவரும் அப்படியே நிறைவேற்றிய தலைவர்கள் யாருமில்லை இவரும் அதற்கு விதிவிலக்கு அல்ல


ஒருவேளை இவர் மற்ற அரசியல்வாதிகள் போல அல்லாமல் சற்று விதிவிலக்காக இருந்தால் வரலாற்றில் இவரின் பெயர் என்றும் நிலைத்திருக்கும் அப்படி ஏதாவது செய்து மாற்றம் கொடுப்பாரா என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. நல்ல அலசல் .
    நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் தன கையில் வைத்து கொண்டு அரசியலை துணை அதிபரிடம் கொடுத்தார் என்றால் அடுத்த நான்கு வருடம் பொற்காலம் தான்.

    ஆனால் ஐவரும் அரசியல்வாதியாகிவிட்டால் ... அம்போ தான்.

    எப்படி இருந்தாலும்.. அடுத்த நான்கு அல்லது எட்டு வருஷம் தான். 95 வரை சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ... எனக்கு வாக்கு அளியுங்கன்னு சொல்லி நம்ம பிராணனை வாங்க மாட்டார்.

    ReplyDelete
    Replies
    1. விசு! அங்க சுத்தி எங்க சுத்தியும் ரெங்கனை மறக்க மாட்டீங்க போல (95?)

      Delete
    2. 95 வயது நபர் ஆட்சியில் இல்லை
      அப்பறம் எப்படி உங்க வாதம் எடுபடும் இதில் உமது கெட்ட எண்ணம் தான் உள்ளது ்வி்சு்வி்சு நீங்கள் பொய்யர்

      Delete
    3. ஆட்சி கிடைக்கவில்லை. தலைமையை விடவில்லை. இதில் கெட்ட எண்ணம் யாருக்கு நண்பரே? விசு பாவம் அப்பாவி...

      Delete
    4. கம்யூனிஸ்டு களால் வாதம் தான் பன்னமுடியும் அதற்க்கு மேல் சக்தியை
      செலவழித்தால் பக்கவாதம் வரும்
      புதுக்கோட்டை அம்மன் சல்லி காசு மதிப்பை பெறதாவர்கள் .அரசியல் அனாதைகள் இதனால் திமுகவுக்கு எந்த தீமையை வராது நடத்துங்க
      .....

      Delete
  2. How hillary clinton managed to lose an election to a candidate as divisive and unpopular as donald trump will baffle observers and agonise democrats for years to come
    Once the shock wave passes some glimpses of rational explanation may become visible..
    America faces a bitterly divided four years and the world faces a profoundly narrow washington that will base its politics on isolationism...
    god save america ... .

    ReplyDelete
  3. சரியான தெளிவான அலசல் ம.த.அவர்களே!
    இங்கு வந்த ஊடகச் செய்திகளால் நான் கூட ட்ரம்ப் வெற்றிபெறுவார் என்று நினைக்கவே இல்லை! சுதேசி உணர்வைத் தொட்டுவிட்ட செய்தி உங்கள் பதிவைப் படித்த பிறகே புரிந்தது. ஆண் மனநிலை பற்றிய சந்தேகம் எனக்கும் இருந்ததுதான்... தெளிவான அலசல். நீங்கள் அமெரிக்காவில்இருக்கவும், தமிழராக வாழவும் தகுதியானவர்தான்.

    ReplyDelete
  4. மண்ணின் மைந்தன் பேச்சு - சரியாகவே சொன்னீர்கள்.

    ReplyDelete
  5. Neenga yaarku vote poteenganu sollavae illayae ji ??

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.