உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, November 22, 2016

கலைஞரின் வாரிசு ஸ்டாலினா இல்லையா?கலைஞரின் வாரிசு ஸ்டாலினா இல்லையா?

தொடர் தோல்விகளை ஸ்டாலின் திமுக கட்சிக்கு பெற்று தரும் போது எனக்கு  அவர் கலைஞரின் வாரிசா அல்லது கஜினி முகம்மதுவின் வாரிசா என்று சந்தேகம் வருகிறது. இப்படி எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சந்தேகம் வரக் கூடும் அது இயல்பே

தமிழக தேர்தல் முடிவு சொல்லுவது இதுவே : தமிழக இடைதேர்தல் முடிவை பார்க்கும் போது அதிமுகவும் பிஜேபியும் வெற்றி பெற்று இருக்கிறது. திமுக அதிமுகவிடமும் தேமுதிக பிஜேபியிடமும் தோற்று இருக்கின்றனஅது மட்டுமல்ல ஸ்டாலின் தற்போதைய அதிமுக அரசு செயல்படாத அரசு என்று மக்களிடம் தொடர்ந்து எடுத்து சொன்னாலும் மக்களை பொறுத்தவரை செயல்படும் திமுக அரசைவிட செயல்படாத அதிமுக அரசே பெட்டர் என்று கருதுகிறார்கள்.


திமுகவில் உள்ள உள்கட்சி பிரச்னை கட்டுக்குள் அடங்காமல் போவதுதான் அந்த திமுகவை காவு வாங்கிவிட்டது என்று சொல்லாம். திமுக தலமை மக்களை சந்திக்கும் முன் முதலி தன் கட்சி தொண்டர்களை சந்தித்து அவர்களின் மன நிலையை அறிந்து புரிந்து அதேற்கேற்றவாறு நடந்தால் மட்டுமே இனிமேல் திமுக உயிர் பிழைக்கும் அதைவிட்டுவிட்டு ஆதிக்க போக்கு தலை தூக்கினால்  ஸ்டாலின் கஜினிமுகம்மதுவின் வாரிசாக மாறுவதை தவிர வேறு வழியில்லை
 

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments :

 1. ஸ்டாலின் கலைஞர் வாரிசுன்னுதான் ஊருக்குள்ளே பேசிக்கிட்டாங்க... நண்பரே

  ReplyDelete
 2. இதெல்லாம் அவர்களுக்கும் தெரியும். இந்த குறைகளைக் களையாமலேயே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற நப்பாசை தான் அவர்களது தொடர் சறுக்கல்களுக்கு காரணம். அகில இந்திய அளவில் காங்கிரஸ் போன்றே, தமிழக அளவில் திமுக obsolete ஆகிவிட்டது என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 3. tamilnadu people know well that DMK IS A DANGEROUS DIABOLICAL DESTRUCTIVE DEJECTED DISAPPOINTING WICKED CUNNING CUTTHROAT PARTY..
  so they still prefer aiadmk with its many failures...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog