Monday, November 21, 2016




avargal unmaigal
 மானங்ககெட்ட தமிழக தலைவர்களே உங்களுக்குகெல்லாம் எதுக்கைய்யா வெள்ளை வேட்டி சட்டை?


போலி மருத்துவர்களே தன்னிடம் வரும் நோயாளிகளிடமிருந்து நூற்றுக் கணக்காக பணத்தை பறிக்கும் நேரத்தில் உண்மையாகவே மருத்துவம் படித்து பட்டம் பெற்ற டாக்டர் இந்த காலத்திலும் 20 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் காசு இல்லை என்று சொல்லுபவர்களுக்கும் இல்லையென்று சொல்லாமல் மருத்துவம் அளித்தது மட்டுமில்லாமல் மருந்துக்களையும் இலவசமாகவே கொடுத்து வந்திருக்கிறார்  இந்த டாக்டர் கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர். பால சுப்பிரமணியம். ஆவாரம்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்தார்.


மருத்துவமனை என்றால் என்னவோ வானுயர்ந்த கட்டிடம் என்று நினைத்து விடாதீர்கள். பத்துக்கு பத்து அடி அறைதான் அந்த மருத்துவமனை.  ஆரம்பத்தில்  சிகிச்சையளிக்க இவர் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய்தான். நாளைடைவில் பணத்தின் மதிப்பு குறைய குறைய தனது பீஸ் தொகையை உயர்த்தினார். அப்படி உயர்த்தி உயர்த்தி 20  ரூபாய்க்கு கொண்டு வந்தார். இதுதான் சிகிச்சை அளிக்க இவர் வாங்கிய அதிக பீஸ். 

இப்படி இவர் செய்ததற்கு கோவை நகரில் பல மருத்துவர்களும் பாலசுப்பிரமணியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறைமுக இடையூறுகளையும் ஏற்படுத்தினர். ஆனால், டாக்டர் பாலசுப்ரமணியம் மாறவில்லை மசியவில்லை. கடைசி வரை 20 ரூபாய்தான் வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்தார்.


அப்படி பட்ட அவர் நேற்று மரணமடைந்துவிட்டார். அதை அறிந்த அந்த பகுதிகமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து அவரின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து தங்களது வேதனையை பகிர்ந்திருக்கின்றனர்.


இந்த செய்தி மீடியாக்கள் அனைத்திலும் சமுக வலைதளங்களிலும் வந்து மக்கள் தங்கள் வேதனையை பகிர்ந்து இருக்கின்றனர். ஆனால் இப்படி பட்ட உயர்ந்த குணத்தை கொண்டவரின் இழப்பை பற்றி தமிழக தலைவர்கள் ஒருவர் கூட இரங்கல் செய்தி தரவில்லை என்று அறியும் போது நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தலைவர்கள் பற்றி நினைக்கும் போது மிகவும் கேவலமானதாகத்தான் இருக்கிறது.


நமக்கு வாய்த்த தலைவர்களுக்கு சினிமா நடிகர்களின் திரைப்பட வெற்றிக்கும் பிறந்தநாள் தினத்திற்கும் வாழ்த்து சொல்லத்தான் முடிகிறது அல்லது திரைப்பட நடிகர் நடிகைகள் இறந்துவிட்டால் அவர்களின் இழப்புக்கள் பெரும் இழப்பு என்று இரங்கல் அறிக்கைமட்டும் விட தெரிகின்றது ஆனால் சுயநலமற்ற இந்த டாக்டரின் இழப்பு  அவர்களின் மனதை தொடக்கூட செய்யவில்லையா என்ன? ஒரு வேளை இந்த டாக்டர் இவர்களைப் போல ஊரை ஏமாற்றி சம்பாதிக்கததால் இவரை மோசமான ஆள் என்று கருதிவிட்டார்களா என்ன?

மானங்ககெட்ட தமிழக தலைவர்களே உங்களுக்கு எல்லாம் எதுக்கைய்யா வெள்ளை வேட்டி சட்டை.......த்தூ......

மருத்துவத்தை சேவையாகச் செய்தால் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு நிகழ்காலச் சான்று. # கோவை 20 ரூபாய் மருத்துவரின் இறுதி ஊர்வலம்.




அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி : இந்த பதிவு எழுதுவரை ஒரு சிறு தலைவர்கள் கூட  அறிக்கைதரவில்லை. இவர்கள்தான் மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார்களாம்.. ஹும்ம்ம்

8 comments:

  1. தங்களின் உள்ளக் குமுறல் சரிதான் தமிழரே!
    ஆனால் “அவன் இவன் என்ற ஏக வசனம்” வேண்டாமே? அது உங்கள் தரத்தைக் குறைக்குமே அன்றி, அவர்களின் நிலைமாற்றத்திற்கு உதவாது.

    ReplyDelete
  2. Ellam Kasu Pannam Thudu money mayam Aagivittathu

    ReplyDelete
  3. Engal kudumpathin Aazhtha varuthangal

    ReplyDelete
  4. தங்களது கோபம் நியாயமானதே இவர்களைப் போன்றவர்களால்தான் மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது
    சகல செல்வங்களையும் அனுபவித்து வயது முதிர்ந்த நிலையில் நாளையே ஒரு சினிமா நடிகன் இறக்கட்டும் இமயம் சரிந்து விட்டது என்று ஊடககாரர்கள் எழுதுவார்கள் பல கிறுக்கங்கே... பஸ்ஸை தீ வைத்து கொளுத்துவாங்கே...

    ReplyDelete

  5. நியாயமான் கோபம், சீற்றம்.மனிதநேயம் மிக்க டாகர் திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் இழப்பு சமுதயத்துக்கு பெரிழப்பு.
    அவர் மறைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்

    அன்புடன் ருத்ரா

    ReplyDelete
  6. இவரைப்பற்றி இந்த செய்தியை நானும் படித்தேன். இவரைப்பற்றி முன்னர் எங்கள் ப்ளாக் பாஸிட்டிவ் செய்திகள் பகுதிகளிலும் பகிர்ந்த நினைவு. நல்ல மனிதர்கள் மக்கள் மனதில் என்றும் நிற்பார்கள்.

    சென்ற வாரம் (நவம்பர் 12 ) இதே போல இன்னொரு மருத்துவரைப் பற்றியும் (மருத்துவர் ஜெயச்சந்திரன்) பகிர்ந்திருந்தேன். இரண்டு ரூபாய் மட்டுமே வாங்கும் இவர் இலவசமாக மருந்துகளும் நோயாளிகளுக்குத் தருகிறார்.

    ReplyDelete
  7. உங்களின் கேள்வி சரியானதே! ஆனால் யாராவது அறிக்கை விட்டிருந்தால், 'அரசியல்வாதியான நீங்கள்
    கெட்டவர்கள்உங்களுக்கு அறிக்கை விடத் தகுதி இல்லை' என எழைதியிருப்பீர்கள்.


    விளம்பரத்தை விரும்பாத அந்த மருத்துவர் ஐயாவை வாழ்த்தப் பலகோடி பேருண்டு. அவர் சேவையை நாமும் வாழ்த்துவோம். இதில் அடுத்தவனைக் குறைகூறும் வெட்டி விளம்பரம் எதற்கு??

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.