உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 31, 2016

ஸ்டாலின் முதல்வராக வர ஆசைப்படுவது ஏதற்க்காக?ஸ்டாலின் முதல்வராக வர ஆசைப்படுவது ஏதற்க்காக?
எனது பேஸ்புக்கில் வெளிவந்த தகவல்கள்

கொஞ்சம் சமுகம் :

அடுத்தவர்களின் மதத்தை அல்லது சாதியை கிழ்த்தரமாக நினைக்கும் அல்லது பேசுபவனுக்கு அவன் மதம் அல்லது சாதி நல்ல விஷயத்தை கற்று கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. .நிலமை அப்படி இருக்க அவன் மதம் அல்லது சாதி எப்படி உசத்தியாக இருக்க முடியும்.


வெளிநாட்டில் சம்பாதிக்கும் கணவனும் இந்தியாவில் செலவழிக்கும் மனைவியும் இருந்துவிட்டால் வாழ்க்கையில் இருவரும் அதிக காலம் சேர்ந்து இருக்க முடியாது. வெகேஷன் தினங்களில் மட்டும் பார்த்து குடும்பம் நடத்த முடியும்

கொஞ்சம் தீபாவளி :


தீபாவளி என்பது காசை கரியாக்குபவர்களுக்கும் கரியை காசாக்குபவர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு சிறு விளையாட்டு அந்த விளையாட்டு டிராவில் முடிஞ்சிடுச்சு

மக்களே தீபாவளி முடிஞ்சிருச்சி இனிமே அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்காமல் சட்டுபுட்டுன்னு ஜல்லிகட்டு விவகாரத்திற்கு வருமோம்...#இப்படிக்கு பேஸ்புக் போராளிங்க

விலையுர்ந்த தீபாவளி வெடி சாம்சங் கேலக்சி செல்போன் தான்

தீபாவளிக்கு பலகாரங்கள் செய்து பல பெண் தோழிகள் போட்டோ போட்டிருந்தாங்க நல்லவேளை அதோட நிறுத்திட்டாங்க... அதை மட்டும் அவங்க அனுப்பி வைச்சு இருந்தா என் நிலமை இப்ப எப்படி இருக்கும்..கடவுளே உனக்கு மிகவும் நன்றி (போட்டோ போட்ட தோழிங்க  அதை அனுப்பி வைக்கலன்னா இப்படிதான் நாம புலம்ப வேண்டியிருக்கு....)

கொஞ்சும் பெண் :

அழகான டிரெஸ் போட்டு விதவிதமாக போட்டோ போடும் பெண்களே நீங்கள் அப்படி டிரெஸ் போடாமல் போட்டோ போட்டாலும் நாங்களும் ரசிப்போம்ல ......


நான் சொல்ல வந்தது அழகில்லாத டிரெஸ் போட்டு வந்தாலும் ரசிப்பேன் என்றுதான் அதனால் அரைகுறையாக புரிஞ்சுகிட்டு சண்டை போட வர வேண்டாம்

கொஞ்சம் ஸ்டாலின் அரசியல் :

திமுகதான் ஆட்சியில் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் - தளபதி - விகடனில்
முத்திருச்சு என நான் நினைக்கிறேன்

செய்தி ஊடகங்களில் இப்போது பேசப்படும் ஒரு பொருளாக ஸ்டாலின் இருக்கிறார் என்று சமுகதள உடன்பிறப்புக்கள் சந்தோஷபடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஞாபகமறதி போல... இப்படிதானய்யா விஜயகாந்தும் கோமாளியாக பேசபபடும் பொருளாகத்தான் இருந்தார் அதை மறந்துட்டாங்கய்யா மறந்துட்டாங்க

ஸ்டாலின் முதல்வராக வர ஏன் ஆசைப்படுகிறார்?
கலைஞர் ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைச்சிருக்கிறதா சொல்லுறாங்க ஆனால் அதற்கு அடுத்து வரும் தலைமுறைகள என்னாவது என்ற கவலையினால்தான் ஸ்டாலின் முதல்வராக வர ஆசைப்படுகிறாராம்.கொஞ்சம் அதிமுக அரசியல்:

அதிமுக அமைச்சைர்கள் கடந்த ஒரு மாத காலம் தலை நிமிர்ந்து நடப்பதற்கு காரணமே ஜெயலலிதா படுத்திருப்பதால்தான்


அன்புடன்
மதுரைத்தமிழன்4 comments :

 1. எல்லாம் நல்லா இருந்துச்சு. ரசித்தேன்

  ReplyDelete
 2. அட்டகாசம்! அதுவும் கடைசி பஞ்ச் ரொம்ப ரொம்ப ரசித்தேன்! வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 3. கதம்பம் மணத்தது நண்பரே அனைத்தும் ஸூப்பர்
  த.ம.1

  ReplyDelete
 4. JI even when he was the deputy chief minister stalin had not shown any efficiency...
  all land grabbings were done by dmk goondas under his nose only
  all theatre owners distributors producers were threatened by dmk men and sun tv/people
  a lady dmk councillor was murdered by dmk men whom stalin know
  now stalin pretends .... day dreaming... not a good choice for cm post...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog