உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 31, 2016

தமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ?தமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ?


தமிழகத்தில் நடைபெறவிருக்கிற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா அல்லது   திமுக. வெற்றி பெறுமா என்பதுதான் பலரின் கேள்வி...இப்படி கேள்விகள் மக்கள் மனதில் இருக்கும் சமயத்தில் களத்தில் பாமக, தேமுதிகவும் இறங்கியுள்ளன. அதிகார துஷ்பிரயோகம்  அடாவடித்தனம் என்று ஆளும் கட்சியினரும்  மற்றும் பண பலத்துடன் எதிர்கட்சியும்  என இரு பெரும் கட்சிகளும் இறங்கி செயல்பட்டு கொண்டிருக்கும் போது இவர்கள் இங்கு இறங்கி என்ன செய்துவிட போகிறார்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் இந்த இரண்டு சிறிய கட்சிகளின் முக்கிய நோக்கம்  திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான்


அப்படி அவர்கள் நினைக்க காரணம் தங்களின் துணையின்றி இனிமேல் திமுக வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் தளபதிக்கு உணர்த்தியாக வேண்டும் என நினைக்கிறார்கள் போல அப்படி செய்தால்தான் எதிர்கால அரசியலில்  அவர்கள் இடம் பிடிக்க முடியும்.

ஆனால் ஸ்டாலினுக்கோ இந்த தேர்தல் தன் தலைமையை மீண்டும் நிருபிக்க கிடைத்த சான்ஸ் இதில் அவர் தோற்றுவிட்டால் எதிர்காலம் அவருக்கு மிக எளிதாக அமையாது..அதுமட்டுமல்ல இந்த தேர்தல் ஜெயலிதா ஸ்டாலினுக்கு கிடையான தேர்தல் அல்லாமல் சசிகலா ஸ்டாலினுக்கு இடையேயான தேர்தலாகத்தான் கருதப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தல் சசிகலா தன்னை அடுத்த தலைமுறை அதிமுக தலைவராக வர செய்யும் களமாக இது இருப்பதால்  அதிமுக  இப்போது முன்னிலும் தீவிரமாக பணபலத்தையும் ,அரசு எந்திரங்களையும், காவல் துறையையும் பயன்படுத்துகிற வாய்ப்பு அமைந்திருக்கிறது. யார் ஒத்துக் கொண்டாலும் இல்லையென்றாலும் அதிமுகவில் சசிகலா  கைதான் ஓங்கி இருக்கிறது. அவரால் எதையும் சாதிக்க முடியும். முதல்வர் முழுமையாக உடல் நலம் பெற்று வந்தாலும் இனிமேல் சசிகலா இல்லாமல் ஒன்றும் நடக்காது என்பதுதான் உண்மை. சசிகலா இடத்தை இனிமேல் ஜெயலலிதா நினைத்தாலும் வேறோருவரை கொண்டு அவ்வளவு எளிதாக  பூர்த்தி செய்ய முடியாது

இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் எதிர்காலத்தில் ஸ்டாலின் மாற்று கட்சியினரை கலைஞர் போல அரவணைத்து போகாவிட்டால் அவர் முதல்வர் ஆகும் கனவுகள் வெறும் கானல் நீர்தான்.

ஒரு வேளை ஜெயலலிதா மறைந்துவிட்டால் நாம் எளிதில் முதல்வர் ஆகலாம் என கனவுகள் காணலாம் அப்படி ஒன்று நடந்தால் பாமக தேமுதிக போன்ற கட்சிகள் அதிமுக பக்கம் அதாவது சசிகலா பக்கம் சாய வாய்ப்புக்கள் அதிகம் காரணம் இந்த கட்சி தலைவர்களுக்கு ஜெயலிதாதான் எதிரி அதிமுக இல்லை அதனால் சசிகலா தலைமையிலான அதிமுகவிற்கு இவர்கள் ஆதரவு தருவார்கள் இதற்கெல்லாம் மறைமுகமாக செயல்படும் அந்த நடராஜன் மிகவும் உதவியாக இருப்பார்.சசிகலாவிற்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை சொத்து குவிப்பு வழக்கு மட்டுமே அதில் இருந்து அவர் வெளிவாரவிட்டால் மட்டுமே ஸ்டாலினுக்கு சிறிது சான்ஸ் கிடைக்க வாய்ப்பு உண்டு ஆனால் அந்த சான்ஸை நடராஜன் தட்டி பறிக்க வாய்ப்புக்கள் அதிகம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments :

 1. பொருத்திருந்து பார்ப்போம் நண்பரே
  த.ம.1

  ReplyDelete
 2. true
  dmdmk pmk kongu nadu parties might try to align with aiadmk minus jayalalitha...
  stalins stiff necked attitude in dealing with other parties might again land him in trouble... again

  ReplyDelete
 3. தனித்து நின்று தி மு க ஜெயிக்க முடியாது என்பது சட்டசபை தேர்தலின் போதே நிரூபணம் ஆகிவிட்டதே :)

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog