உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 3, 2016

ஓபாமாவும் இதை படித்தால் இப்படிதான் சிரிக்க செய்வார் (படித்ததில் பிடித்தது & சிரித்தது


ஓபாமாவும் இதை படித்தால் இப்படிதான் சிரிக்க செய்வார்
(படித்ததில் பிடித்தது & சிரித்தது )

தமிழ்நாடை தனி நாடாக ஆக்கனும்னு ஒரு க்ரூப் தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருந்தாங்கலாம்.அதுல ஒருத்தன் சப்போஸ் நாம தனி நாடாயிட்டா. அப்புறம் பொருளாதார வளர்ச்சி,முன்னேற்றம் எல்லாம் எப்படி  கொண்டுவர்ரதுன்னு அறிவுப்பூர்வமா ஒரு கேள்வி கேட்டான்

அதுக்கு இன்னொரு அறிவாளி பதில் சொன்னான்..

அதாவது.. 'நாம அமெரிக்காவோட போர் அறிவிச்சிருவோம்

எப்படியும் நாம போர்ல கண்டிப்பா தோத்துருவோம்!

அப்புறம் நம்மள அமெரிக்காகாரங்கதான் ஆட்சி செய்வாங்க..

கிரீன் கார்ட், விசா எதுவுமே இல்லாம நாம அமெரிக்கா குடிமகன் ஆயிறலாம்.. அப்புறம் முன்னேறுறது ரொம்ப ஈசிதான!"

இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்த இன்னொரு பெரிய அறிவாளி ஒரு சூப்பர் கேள்வி

கேட்டான்..என்னன்னா....

"அதெல்லாம் சரி..ஒருவேளை நாம போர்ல ஜெயிச்சிட்டா அமெரிக்காவ என்ன பண்றது?"


ஹா ஹா ஹா


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. மதுர.. எப்படி ஒட்டு மொத்த தமிழரகளையும் இப்படி தொபுக்கடீர்ன்னு கீழே போட்டுடீங்க?

  அப்படி போரில் ஜெயிச்சிட்டா அமெரிக்காவை என்ன பண்றது.

  குவார்ட்டர் - கருணாநிதி குடும்பம்
  இன்னொரு குவார்ட்டர் - மாறன் பிரதர்ஸ்
  இன்னொரு குவார்ட்டர் - கார்டன் ( அதுல இருந்து அவங்க ம ந கூ க்கு அவங்க மனசு படி கொடுப்பாங்க.
  மீதி - மன்னர் குடி.

  ReplyDelete
  Replies
  1. கவலையே வேணாம் உடனே அம்மா! ரீகா ன்னு பேர மாத்திடுவோம். விசு அண்ணே ரீகா தெரியும்தானே.

   Delete
 2. அமெரிக்காவை வைத்துக்கொண்டு என்ன செய்வது. குழப்பம்தான்.

  ReplyDelete
 3. ஹஹாஹ்ஹ் நல்லா கேட்டான் கடைசிக் கேள்வி..அமெரிக்காவை வைச்சுக்கிட்டு நாம என்ன பண்ணுவோம் சொல்லுங்க..சரி அப்படியே கிடைக்குதுனு வையுங்க ஒரு பேச்சுக்கு....அமெரிக்காவும் ஜாதி மாவட்டங்களாக்கிடுவாங்க.ஒவ்வொரு கட்சியும்..அப்புறம் அதுலயும் நம்மாளுங்கள் எல்லைப் பிரிவுக்குச் சண்டை போடுவாங்க...விளங்கினாப்புலதான்.

  ReplyDelete
 4. ஹாஹா... நல்ல கேள்வி தான்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog