Friday, October 28, 2016



தீபாவளி பற்றி நீங்கள் அறியாத புதுக்கதை?

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என்று இந்தியர்களிடம் கேட்டால்  நார்த் இண்டியன்ஸ் ஒரு கதையும் செளத் இண்டியன் ஒரு கதையும் சொல்லுவார்கள். இப்படி ஆளுக்கொரு கதை சொல்லுகிறார்களே என்று  தோழி ஒருத்தி மதுரைத்தமிழனிடம் எது சரியென்று கேட்டார்.

அதற்கு இந்த மதுரைத்தமிழன் இந்த இரண்டும் தவறு சென்று சொல்லி ஒரு புதுக்கதையை சொன்னார்.

உங்களுக்கு எல்லாம் தெரிந்தது நரகாசுரனை கடவுள் அழித்தால் தீபாவளி கொண்டாப்படுகிறது என்று பலர் சொல்ல கேள்விபட்டு இருப்பீர்கள் ஆனால் நரகாசுரன் நம்மை அழித்து அவன் கொண்டாடிய நாளைத்தான் நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்பதை  இந்தியர்கள் அறியாமல் இருக்கிறார்கள்



எல்லோருக்கும் தெரியும் பிரிட்டிஷார் நம்மை அடிமை படித்தி ஆட்சி செயதது என்பது. அவர்கள் ஆட்சியின் இறுதிகாலத்தில் நம் நாட்டை  நன்றாக சுரண்டி திவாலாக்கிவிட்டு அதை கொண்டாடினார்கள் அந்த நாளைத்தான் மக்கள் இப்போது தீபாவளி என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள் திவால் என்று ஆங்கிலத்தில் சொன்னதை தீபாவளி  என்று மக்கள் தவறாக உச்சரித்து கொண்டிருக்கிறார்கள் (Diwali is a shrtened form..kind of slang)  (diwal = bankrupt)

இப்படி தவறாக உச்சரித்தாலும் பெண்கள் மிக சரியாக புரிந்து கொண்டுதான் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். அதனால்தான் தீபாவளி நாட்களில் ஆண்களின் பர்ஸில் உள்ள பணம் எல்லாம் காலியாகி தீபாவளியின் போது திவலாகிவிடுகிறார்கள். அதை பற்றி அவர்கள் மனைவியிடம் ஏதாவது பேசலாம் என்றால் அவர்கள் மைசூர் பாகு அல்லது அல்வா செய்து பல நாட்கள் ஆண்களை பேசவிடாமல் ஆக்கிவிடுகிறார்கள்

மக்களே இனிமேல் தீபாவளியின் போது திவாலாகி விடாமல் தீபாவளியை கொண்டாட வாழ்த்துகிறேன்...

என் வலைத்தளம் வரும் அனைவருக்கும் பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்களின் இன்பாக்ஸில் வாழ்த்துக்கள் குவிந்து கிடப்பதால் நானும் அதில் என் வாழ்த்தை தனியாக சேர்க்காமல் அனைவருக்கும் பொதுவாக இங்கேயே தெரிவித்து கொள்கிறேன்

எல்லாம் பலகாரத்தை பேஸ்புக்கில் சேர் செய்கிறர்கள் ஆனால் அதற்கு பதிலாக எனது பேஸ்புக் ஸ்டேடஸ்களை இங்கே உங்களுக்கு சேர் செய்கிறேன் படித்து என்சாய் பண்ணுங்கள்

அந்த காலத்துல தீபாவளிக்கு எங்க வீட்டுல செஞ்ச பலகாரம் என சொல்லி கொடுத்து மகிழ்வாங்க. ஆனால் இந்த காலத்துலேயோ எங்க வீட்டுல செஞ்ச பலகாரம்  என போட்டோ எடுத்து பேஸ்புக்குல போட்டு அதுல வேற தாராளமாக எடுத்துகோங்க என்று அவங்க பெருந்தன்மையா சொல்லுறாங்க....என்ன கொடுமைடா சரவணா

எழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுத்தே ஆயுதம் அரசியல்வாதிகளுக்கு அவர்கள் பேச்சே ஆயுதம் அது போல பேஸ்புக் பெண் பேராளிகளுக்கு அவர்கள் செய்யும் தீபாவளி பலகாரங்கமே ஆயுதம்

உங்களை கட்டிக்க போற  என் பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ" என்று  பொண்ணுவீட்டுகாரங்க சொல்லுறதுல அர்த்தம் மறைஞ்சு கிடக்கும் ஆனால் அது கல்யாணத்திற்கு அப்புறம்தான் மனைவி  நம்ம பாக்கெட்டில் இருந்து பணத்தை உருவும்போதுதான் புரியும்

நீங்க நீங்களாகவே இருங்க யாருக்காகவும் அல்லது வேற யாராகவும் மாற வேண்டாம் காரணம் எல்லோருக்கும் ஒரிஜனல்தான் புடிக்கும் டூப்ளிகேட் அல்ல

தெரியாத பொண்ணுங்ககிட்ட ஹாய் சொல்லுறதும் மிகவும் விரும்பிய பொண்ணுகிட்ட குட்பை சொல்லுறதும்தான் ஆண்களுக்கு மிக கடினமானது


மனைவியிடம் மன்னிப்பு கேட்பதால் நீ செய்தது தவறு, மனைவி செய்தது சரியென்று அர்த்தமில்லை  உன் ஈகோவைவிட உறவுதான் பெரிது என்று  நீ கருதுவதாகத்தான் அதற்கு அர்த்தம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. ji your interpretation of DIWALI is interesting and thought provoking too...

    ReplyDelete
  2. இததான் உண்மையான வரலாறு !இதுக்குத்தான்,வரலாறு ரொம்ப முக்கியம் என்று சொல்வது :)

    ReplyDelete
  3. முடிவில் சொன்ன தத்துவம் அருமை நண்பரே திவாலி (DIWALI) வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ஹஹஹஹ புதுக் கதையையும் ரசித்தோம்....திவால் ஹஹஹ் சரிதான். அது சரி உங்க வீட்டுல அல்வாவா இல்லை மைசூர்பாகா??!!!

    படமும் அதில் உள்ளதும் அருமை. ரசித்தோம்.

    அது சரி உங்க சன்னி செல்லம் அமெரிக்காவுல இருக்கறதுனால தப்பிச்சுருச்சு அதான் திவால் வெடிச் சத்தத்திலிருந்து. என் வீட்டுச் செல்லங்கள் ரெண்டும் எதுவும் சாப்பிடாம நடுங்கிக்கிட்டு ரெஸ்ட்லெஸ்ஸா கிடக்குதுங்க. பாவம். அதிலும் ஒருத்தி கண்னழகி என்னுடனேயே என் காலடியில்தான் இருக்கிறாள்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.