Tuesday, October 11, 2016



தலித்துக்கள் இந்துக்கள் என்றால்?

தலித்துக்கள் இந்துக்கள் என்றால்
நவராத்திரி விழாக்காலங்களில்
அவர்களும் கொலு வைத்து
கடவுளை வழிபாடு செய்து
வணங்காதது ஏன்?

//சாதனை பெண்களுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி///
உன்னையை கட்டிக்கிட்டு இன்னும் உன்னை தன் புருஷனாக கருதி வாழ்கிறாளே
அந்த பெண்ணிற்கு முதலில் தலை வணங்கு அதன் பின் ஊரில் உள்ள பெண்களுக்கு தலை வணங்கு.


சிவாஜிக்கு
நினைவு மண்டபம் கட்டணும்
என்று குரல் கொடுப்பவர்கள்
மனோராமாவிற்கும்
அதே மாதிரி குரல் கொடுக்காதது ஏன்?
சிவாஜியின் நடிப்பைவிட
மனோரம்மாவின் நடிப்பு
எந்த விதத்திலும் குறைந்தது இல்லை
என்பது உண்மைதானே


இந்த கால குழந்தைகளிடம்
சிவாஜிபடம் போட்டு காண்பியுங்கள்
இதெல்லாம் ஒரு நடிப்பா என்று சொல்லி ஒடிவிடுவார்கள்
ஆனால் அதே நேரத்தில் மனோரம்மாவின் படத்தை போட்டு காண்பியுங்கள்
பார்த்து சிரித்து மகிழ்வார்கள்

சரஸ்வதி பூஜை அன்று
எல்லா புக்கையும் பூஜையில் வைத்து வழிபட்டவர்கள்
இந்த முகநூலையும் வைத்து பூஜை செய்யாதது ஏன்?

அப்படி  முகநூலை வைத்து
பூஜை செய்யாதவர்களின் முகநூல்
அக்கவுண்ட் எல்லாம் இனிமே புட்டுக்கும்


இப்படிக்கு மதுரைத்தமிழானந்தா

கொசுறு : I'm currently boycotting any company that sells items I can't afford.

6 comments:

  1. சிரித்து, ரசித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  2. சிவாஜியையும் மனோரமாவையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதே மிக அபத்தம். மனோரமா ஒரு நகைச்சுவை நடிகை. அதனால் இன்றைய குழந்தைகளுக்கு அவரைப் பிடிப்பதில் ஆச்சர்யங்கள் இல்லை. சிவாஜியை பிடிப்பதற்கு கொஞ்சம் அடுத்த நிலைக்கு வர வேண்டும். குழந்தைகளால் அது முடியாது.

    ReplyDelete
  3. முகநூல் வாட்ஸ்அப் இற்றைகளைப் பகிர்ந்தீர்கள் என நினைத்தேன்.

    உங்கள் சரக்கா?

    ரசனை.

    ReplyDelete
  4. manorama ji had acted in many irrelavant cheap roles during her initial stages of acting...
    later on she concentrated on good roles
    however gandhimathi another talented actress was not utilised by many tamil film producers....

    ReplyDelete
  5. ஹஹஹஹஹ்ஹ் மதுரைத் தமிழானந்தாவின் வாய்மொழிகளை ரொம்பவே ரசித்தோம்!! மதுரைத் தமிழானந்தாவும் பிற சுவாமிஜிகளைப் போல் அமெரிக்காவில்தான் மடம் நடத்துகிறார்...ம்ம்ம்ம் ஏதோ ஒரு சுவாமிஜி முகத்தையே காட்டியதில்லை என்று சொல்லுவார்களே அது போல் மதுரைத்தமிழானந்தா சுவாமியும்!!!! நாங்கள் கண்டோம் என்பது வேறு... சரி போனால் போகிறது...

    ------ இருவரும்

    கீதா: மதுர சகோ இப்போ உங்கள் முதல் கருத்து.... ஒரு சிலர் கொலு வைக்கிறார்கள். பொருளாதாரத்தில் நடுத்தரவர்கத்திற்கும் சற்றுக் கீழாக இருப்பவர்கள். வெளியில் அவர்கள் யார் என்று தெரியாது. யாரும் கேட்பதுமில்லை. ஒரு வேளை இது நகரம் என்பதாலோ என்னமோ.. நான் இம்முறையும் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.