உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, September 18, 2016

ராம்குமார் Vs சங்கராச்சாரியார்ராம்குமார் Vs சங்கராச்சாரியார்

சிறையில் இருந்த #ராம்குமார் தற்கொலை செய்ய வசதி செய்து தந்தவர்கள் காஞ்சியில் உள்ள பெரியவர் சிறையில் இருக்கும் போது இது மாதிரியான வசதிகள்  செய்துதரப்படாதது ஏன்?

#ராம்குமார் சாவில் மர்மம்னு இன்னும் யாரும் ஆரம்பிக்கலை காரணம் இது சிறைத்துறை அதிகாரிகளால் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை  என்று மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறதுதவறுகளுக்கு தண்டனையை  நீதிபதிகள் அறிவிக்கும் முன்னர் சிறை அதிகாரிகள் நிறைவேற்றுவதுதான் தமிழகத்தின் இன்றைய டிஸைன் #ராம்குமார் சிறையில் தற்கொலை

பாதுகாப்பான சிறைக்குள் ஒருத்தனால் தற்கொலை செய்யும் வசதி தமிழக சிறைத்துறையில் மட்டும் செய்து தரப்பட்டு இருக்கிறது #ராம்குமார் தற்கொலை

தமிழக அதிகாரத்தின் கோரக் கரங்களை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது. வருங்காலத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இப்படி  நிகழலாம். ராம்குமார் கொலையாளியா இல்லையா என்கிறதெல்லாம் இரண்டாம் பட்சம். சிறை பாதுகாப்பானது என்கிற பொய்யை எத்தனை நாள் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்?

ராம்குமாரின் ஆவியையும் தற்கொலை செய்ய வைக்கும் திறமை தமிழக அதிகாரிகளிடம் உண்டு


இனிமேல் கர்நாடக தமிழர்களை பற்றி நாங்கள் பேச போவதில்லை காரணம் எங்களுக்கு ராம்குமார் தரற்கொலைப் பற்றி பேசவே நேரம் இருக்காது # இப்படிக்கு டமிலர்கள்


தமிழகத்தில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது என்று எதிர்கட்சிகள் இனிமேலாவது குறை சொல்லாமல் இருக்கவேண்டும் #ராம்குமார் சிறையில் உள்ள மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை

ராம்குமார் மரணம் குறித்து உயர்மட்ட நீதி விசாரணை வேண்டும். #கொலை செய்ய உத்தரவு இட்டவர்களுக்கு நீதி விசாரணையை எப்படி முடிக்க வேண்டும் என்று தெரியதா என்ன? போங்க்ய்யா போய் வேற வேலையைப் போய் பாருங்க

அம்மா சசிகலா புஷ்பா நீ எங்க தங்கி இருந்தாலும் வயர்  இல்லாத ரூமில் தங்கும்மா இல்லைன்னா நீயும் ராம்குமார் மாதிரி வயரை கடித்து தற்கொலைன்னு செய்தி வர சான்ஸ் அதிகம்மா

எல்லையில செத்த 17 பேருக்கு தமிழக அரசியல் கட்சிகள் கூட இத்தனை பேட்டி கொடுக்கல ஆனால ஜெயில்ல செத்த ஒரு பையனுக்கு இவ்வளவு ஒப்பாரி

ராம்குமார் பல்லால் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீஸுக்கு எப்படி தெரியும். அவன் தற்கொலை செய்வதை அவர்கள் பார்த்து கொண்டிருந்தார்களா என்ன?அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments :

  1. BRO AN EXAGGERATED REPORT TAMILNADU POLICE HAS NO NEED TO ELIMINATE RAMKUMAR FROM THE WORLD YOU CAN CALL IT AN INEFFICIENT INCOMPETENT CORRUPT POLICE ,,,,,,,

    ReplyDelete
  2. புதிய செய்தியாக இருக்கிறதே...இன்னும் பார்க்கவில்லை உங்கள் செய்தி பார்த்துத்தான் தெரிந்தது...ம்ம்ந்டக்கலாம் தான் நீங்கள் இங்கு சொல்லியிருப்பது போல்..

    ReplyDelete
  3. மர்மம் நிறைந்திருகிறது!

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog