உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, September 20, 2016

மோடிக்கு உப்பு அனுப்புங்கடாமோடிக்கு உப்பு அனுப்புங்கடா


தீவிரவாதிகளின் நடவடிக்கைக்கு நமது மோடி அரசு எடுக்கும் பதில் நடவடிக்கை

மோடியை போய் வீராதி வீரர் என நினைத்த இந்திய மக்களே அவரின் அதி வீர நடவடிக்கைகளை கொஞ்சம் படியுங்கள் அதன் பின் சிரியுங்கள் இல்லையென்றால் உங்கள் தேர்வை நினைத்து தலையில் அடித்து கொள்ளுங்கள்


காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், ராணுவ தளபதி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். டில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்நிலையில், இன்று, இந்த சம்பவம் தொடர்பாக, ராஜ்நாத் மீண்டும், ஜெட்லி, பாரிக்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாரிக்கர், பிரதமர் மோடியை சந்தித்து உரி சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தார். பின்னர் பிரதமர் மோடி, தனது இல்லத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, பாரிக்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், .நா., பொதுச்சபையிலும் இந்த சம்பவத்தை எழுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும், பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில்,

* பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க ஐ.நா.,வை வலியுறுத்துவது.

* பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக இந்திய பார்லிமென்டில் அறிவிப்பது.(அப்ப இதுவரை நீங்க நட்புநாடாகத்தான் நடத்தினீங்களோ? )

* சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பாக்.,கை புறக்கணிக்க செய்வது.( ஆமாய்யா இவரு சொன்னா உடனே எல்லோரும் அப்படியே கேட்டுடுவாங்க் )

* ஊடுருவல்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துதல்.(ஆமாம் நம்ம வீரர்களுக்கு பெல்ட் வாங்கி கொடுத்துடுங்க தீவிர வாதிகள் பக்கத்தில் வந்தவுடன் பெல்ட்டால் அடித்து நொறுக்கிவிடுவோம்)

* பாகிஸ்தான் முகத்திரையை கிழிக்க நடவடிக்கை எடுப்பது.( என்னது தீவிரவாதிகள் முகத்திரை அணிந்து வருகிறார்களா வெட்கம் கெட்ட பசங்க )

* பாகிஸ்தானிடம் மீண்டும் ஆதாரங்களை வழங்கக்கூடாது.( ஆமாம் பேசாம இந்திய நீதிபதிகளிடம் கொடுத்துவிடுவோம்)

* பாகிஸ்தானுடனான பொருளாதார உறவுகளை குறைப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (ஏலே மடப்சங்களா குறைப்பதற்கு பதிலாக நிறுத்துங்கடா )

17 வீரர்களின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளாததைவிட மோடி அப்படி என்னதான் செய்கிறார்?

அன்புடன்
மதுரைத்தமிழன்


பிஜேபி  உறுப்பினர் இப்படி ஒரு தகவலை பேஸ்புக்கில் பதிந்து இருந்தார்..
///// காஷ்மீரில் இருக்கும் இராணுவ முகாம்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் .இராணுவ வீரர்களுக்கும் பாதுகாப்பு படையினர்களுக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நவீன ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசு பயங்கரவாதிகளையும், துணை போகிறவர்களையும் கூண்டோடு அழிக்க தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். காஷ்மீர், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் இவர்களுக்கு துணை போகின்ற பாகிஸ்தான் கைக் கூலிகளுக்கும், மதவெறி பிடித்த காட்டுமிராண்டிகளுக்கும் சுடுகாடாக மாற வேண்டும்.//////

இதை படித்த பின் மோடி ஆட்சி செய்யும் லட்சணத்தை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு நாட்டின் ராணுவத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எவ்வளவு கேவலமாக இருக்கிறது

1 comment :

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog